தனி ஒருவன் – திரைப்பார்வை!

“இப்படத்தில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே!, நிஜத்தில் வருவது போன்று கொடூரமானவையல்ல”- என்ற டிஸ்க்ளெய்மருடன்தான் படமே ஆரம்பமாகிறது!

ஹீரோவுக்கென்று ஃப்ளாஸ்பேக் வைத்து பழகிய தமிழ் சினிமாவில், வில்லனின் ஃப்ளாஸ்பேக்குடன், அதுவும் ஒரு பெரும் கட்சியின் தலைவராக வரும் நாசரையே தடுமாறச் செய்யும் காட்சியுடன் அரவிந்த் சாமியின் வாழ்க்கையும், திரைப்படமும் ஆரம்பமாகிறது!

தனி-ஒருவன்-படத்திற்காக-ஒரு-மாதம்-பயிற்சி-எடுத்த-’சித்தார்த்-அபிமன்யு’

காட்சிகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகள், பின் திடீரென பெரியதொரு ட்விஸ்ட் என்று படம் முழுக்க நம்முடைய சுவாரசியத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.

டீசர்களுக்கு கூட விமர்சனம் வைக்கின்ற, அதுவும் போஸ்டர் பார்த்தே கதையைச் சொல்கின்ற சோஷியல் மீடியா காலத்தில், நாளை வெளியாகும் படத்தின் நடிகர் ந்டிகைகளை கூட்டி வந்து, முந்தைய நாளே படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட வைத்து, அந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்து, இடையிடையே கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று படத்தின் கதையையும், முக்கியக் காட்சிகளையும் காட்டிவிடும் ஊடகங்கள் இருக்கும் காலத்தில் த்ரில்லர், விறுவிறுப்பான படங்களைக் கொடுப்பதே ஒரு சாகசம்தான்!

ஏனெனில் படம் முடிந்து சில நாட்கள் கழித்துச் சென்று படம் பார்க்கும் நபர்களுக்கு, அந்த சுவாரசியத்தில் பலதைக் கெடுத்து விடுவார்கள். நானெல்லாம் படம் பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டால், படம் பார்க்கும் வரை அதன் ப்ரமோஷன் காட்சிகள், அந்த படக்குழுவின் பேட்டிகள், முக்கியமாக படத்தின் திரை விமர்சனம் என எதையும் பார்க்க மாட்டேன்! படத்தையும், பெயர் போடுவதற்க்கு முன்பிருந்தே பார்க்க வேண்டும், இல்லாவிடின் கடுப்பாகிவிடும். அப்படி ஒரு வியாதி நமக்கு!

படம் பார்த்து முடிந்தவுடன் தோன்றியது, கனக்கச்சிதமான க்ரைம் நாவல் போல் இருக்கிறதே? என்றுதான். சுபா அல்லது பிகேபி போன்ற ஆட்கள் யாருடைய பங்காவது இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது! ஆனாலும், டைட்டிலில் அவர்கள் யாருடைய பெயரையும் பார்த்த ஞாபகம் இல்லை. கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றில் மோகன் ராஜாவின் பெயரே இருந்தது! பின் செய்திகளில் படித்தபின் தான் தெரிந்தது, சுபாவின் பங்கும் படத்தில் இருந்திருக்கிறது!கச்சிதமான பங்களிப்பு! மிக விறுவிறுப்பான திரைக்கதை இப்படத்தின் இன்னொரு ஹீரோ!

ஏறக்குறைய பேராண்மை கெட்டப்பில் ஜெயம் ரவி! ஆக்‌ஷன் படங்களில் ஒன்று ஹீரோ அல்லது வில்லன் கத்தவேண்டும் அல்லது பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்கிற விதியை மீறி, அந்தந்த கேரக்டர்களாகவே வரும் அரவிந்தசாமியும், ஜெயம் ரவியும் படத்தின் பெரும் பலம்! ‘ஏய்’ என்ற டயலாக்கே படத்தில் இல்லை!

நயந்தாராவிற்கு வருடங்கள் கூடக் கூட, அழகும், மார்க்கெட்டும் கூடிக் கொண்டே போகின்றது!

jayam1-600x300

வழக்கமான டூயட்டுக்காக மட்டுமான அல்லது லூசுத்தனமாக மட்டுமே நடந்துகொள்வதற்கான ஹீரோயினாக இல்லாமல், ஜெயம் ரவியின் உறுதுணையாக நிற்கின்றார்! அதிலும், ஜெயம் ரவி மனமுடைந்திருக்கும் சமயத்தில் வரும் காட்சியிலும், ப்ரபோஸ் பண்ணும் காட்சியிலும் அள்ளுகின்றார்! அறிமுகக் காட்சியில், ஜெயம் ரவியை விட அதிகம் கைத்தட்டுகள் அவருக்குதான்!
ஜெயம் ரவியின் நண்பர்களுக்கும் சரி, தம்பி ராமையாவிற்கும் சரி, ஏறக்குறைய படத்தில் எல்லாருக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது!

மோகன் ராஜா இத்தனை நாளாக, புளி சோற்றில் முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றியிருந்திருக்கிறார்! இப்பொழுது கச்சிதமான மசாலாவுடன், மொகல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்! கண்டிப்பாக, தெலுங்கு, ஹிந்தியில் இதற்கு கடும் கிராக்கி உண்டு! அரவிந்தசாமி மற்றும் ஜெயம் ரவி எந்தளவு இந்தப்படத்திற்கு பலமோ, அதைவிட பெரும் பலம் மோகன் ராஜா! அதுவும் வசனங்கள் அட்டகாசம்! மிகவும் சின்சியரான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்! பாராட்டுக்கள்!

TO10

நயந்தாரா மற்றும் ஜெயம் ரவி கேரக்டரைசேஷன் அருமை என்றால், அரவிந்த்சாமியின் கேரக்டரைசேஷன் மிக அருமை! கம்போஸ்டு வில்லன்! வாய்ஸ் மாடுலேஷன்களில் நயந்தாராவும், அரவிந்த்சாமியும் மனதைக் கவர்கிறார்கள்!

”உன் நண்பன் யார்னு தெரிஞ்சா உன் கேரக்டர் தெரியும், ஆனா உன் எதிரி யார்னு தெரிஞ்சாதான் உன் கெப்பாசிட்டி தெரியும்”, வணிகச் செய்தி என்னமோ ஒரு பக்கம்தான், ஆனா அந்த ஒரு பக்கம்தான் மத்த எல்ல பக்கச் செய்திகளுக்கும் காரணம்”,” பணம் இருக்குற இடத்துல எல்லாம் குற்றம் கண்டிப்பா இருக்கும், வாழ்க்கை முழுக்க குற்றங்களைத் தேடி போறவன் நான், வாழ்க்கை முழுக்க பணத்தைத் தேடிப் போறவன் அவன், அதுனால நாங்க கண்டிப்பா சந்திப்போம்” போன்ற ஹீரோவுக்கான வசனமாகட்டும்…

”காதலி சுட்டால், எதிரி மடியில் மரணம்”, “நீ கொடுத்த வாழ்க்கையை நான் எடுத்துக்கலை, ஆனா, நீ கேட்ட வாழ்க்கையை, நான் உனக்கு கொடுக்குறேன், நாட்டுக்காகல்லாம் இல்ல, உனக்காக, எடுத்துக்கோ”, ‘அவ, உலகத்தையெல்லாம் சுத்த வேணாம், என்னச் சுத்தி வந்தா போதும்”, போன்ற, கடைசி வரை கெத்து குறையாத, வில்லன் வசனமாகட்டும், எதையும் பஞ்ச் டயலாக்காக வைக்காமல், இயல்பாக பேசியதுதான் படத்திற்கு பெரிய பில்டப் கொடுக்கிறது!

நகைச்சுவையும் மிக இயல்பாக படத்துடன் வருவது படத்தின் இன்னொரு பலம்! நம்மூரில், அறிவுஜீவிகள் என்ன பண்றாங்கங்கிற வசனம் க்ளாஸ்!

படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், ஆர்கனைஸ்டு க்ரைம் பற்றி பேசியிருப்பதுதான்! – எல்லாச் சின்னச் சின்னக் குற்றங்களுக்கு பின்னாடியும் ஒரு பெரிய காரணம் இருக்கனும்னு அவசியமில்ல, ஆனா ஒவ்வொரு ஆர்கனைஸ்டு க்ரைமுக்கு முன்னாடியும் இதுமாதிரியான சின்னச் சின்ன குற்றங்களை வெச்சு திசை நம்மை திருப்பிட்டிருக்காங்க!
நாம் செய்தித்தாள்களில் படித்திருக்கும், எதோ ஒரு தீ விபத்து, எங்கோ நடக்கும் சாலை விபத்து, சாதாரண கடத்தல் போன்ற சம்பவங்களின் பின்புலம் வேறொன்றாகவும் இருக்கக் கூடும்! செய்தித் தாளின் வெவ்வேறு செய்திகளுக்கிடையே இருக்கக் கூடிய தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இத்திரைப்படம்! இப்பொழுதும், ஏதேனும் மத்திய அரசு அல்லது மாநில அரசு அலுவலகத்தில் தீ விபத்து ந்டந்தது, உயிரிழப்பு இல்லை, ஆனாலும் மதிப்பு மிக்க ஆவணங்கள் தீயில் அழிந்தன என்ற செய்தியின் பிண்ணனி வெறெதுவுமாகவும் இருக்கக் கூடும்!

சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாத ஆக்‌ஷன் படம், நாயகன் ஜெயம் ரவியை விட அதிகம் அபிமானத்தை ஏற்படுத்தும் வில்லனாக அரவிந்த்சாமி, பஞ்ச் டயலாக் இல்லாமலேயே கொடுக்கும் பில்டப்புகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நகைச்சுவை, நாயகனின் காதலுக்காக இல்லாமல், அவனின் கொள்கைக்காக உதவும் நண்பர்கள் கூட்டம் என்று, தனி ஒருவன், தனித்து நிற்கிறான்!

Don’t miss it!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

ஏனெனில், இவர்கள் மாணவர்கள்!

Because

ஈழப் போராட்டத்தின் போது, இதற்கும் அதிகமான கல்லூரிகள், மாணவர் அமைப்புகளும், வராது வரும் விருந்தாளியாக சில பல பொறியியல் கல்லூரிகளும் கூட இணைந்து போராடிய சமயத்திலேயே அதனை எப்படி அடக்கினர், நீர்த்துப் போகச் செய்தனர் என்பதெல்லாம் எல்லாரும் நேரில் பார்த்த ஒன்றே!

ஈழப்போராட்டங்களில், எல்லாக் கட்சிகளை விடவும், எந்த வித எதிர்பார்ப்புமின்றி, சுய நேர்மையாக, அக்க‌றை என்ற ஒற்றைபுள்ளியில் எல்லாரும் இணைந்து நின்றனர்.

அவர்களுடைய போராட்டம் வெற்றியடையாம‌ல் போயிருக்கலாம், அவர்களுல் பலருக்கு ஈழத்தின் முழு வரலாறும் கூட தெரிந்திருக்காது, இந்திய, மாநில‌ அரசுகளினுடய‌ அரசியல் முழுமையாக புரிந்திருக்காது. ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து நின்றதற்கான காரணதிலோ, அந்த நேர்மையின் மேலோ எந்த வித சிறுமையும் படுத்திவிட முடியாது!

அப்படி ஒரு இணைப்பு, அந்த நேர்மை, எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் உவப்பானதாக இருக்க முடியாது! அதனாலேயே அவர்களுடைய போராட்டங்களை நீர்த்துபோகச் செய்வதில் எல்லாக் கட்சிகளுமே மறைமுகமாக இணக்கம் காட்டுவார்கள்!

அந்தக் கூட்டத்தையே கலைத்தவர்களுக்கு, போராட்டத்தை நீர்த்துப் போக வைத்தவர்களுக்கு இப்பொழுது மாணவர்கள் எடுக்கும் போராட்டத்தை கலைப்பது ஒன்றும் கடினமான விஷயமாக இருக்க முடியாது!

வருடந்தோறும் மாணவர்கள் மாறுவார்கள்! ஆனால், காலம் முழுக்க, ஆட்சியாளர்களும், அரசு எந்திரங்களும், அவர்களது சிந்தனைகளும் மாறப் போவதேயில்லை. ஈழப்போராட்டம் முதல், ஏற்கனவே நடந்த போராட்டங்களிலேயே, ஜனநாயக அடக்குமுறைக்கான பாதையை கண்டறிந்திருப்பார்கள்!

ஒரு பக்கம், போராடக்கூடிய மாணவர்களின் யோக்கியதையை அவர்கள் கேள்விக்குள்ளாக்குவார்கள்.

மாணவர்கள், போராட்டத்தினூடே பாட்டில்களை அள்ளுவதாகவோ, அவர்களே குடித்துவிட்டுதான் போராடுவதாகவோ காட்சிகள் பரப்பப்படும். இன்னொரு புறம் அவர்களை ஒடுக்க, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கும். காவல்துறை அவர்களை கைது செய்யும் அல்லது பயமுறுத்தும்.

இன்னொரு புறம் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், போராடலாமா, வன்முறையைக் கையில் எடுக்கலாமா? என்பது போன்ற கேள்விகளை பொதுமக்கள் வாயிலாக கேட்க வைக்கும்!

இதில் இரண்டு விதக் கூட்டம் இருக்கிறது. ஒரு கூட்டம், எந்தப் போராட்டத்தையும் தவறு என்று பேசும். சாதீயப் பாகுபாடை பேசும் சமூகத்தில் வளர்ந்து, ஒழுக்கத்தைப் பேசாத கல்வி அமைப்பில் கற்று, மனித நியதிகள் எண்ணாத நிறுவனங்களில் சம்பாதிப்பது மட்டுமே முன்னேற்றம் என்று பேசும். எந்த இடத்திலும் கேள்வி கேட்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும்!

இன்னொரு கூட்டம், போராட்டம் தன் சார்புக் கட்சி, அமைப்பு, மதம், சாதிக்கு எதிராக என்றால் அதன் நியாயத்தை பேசாமல், முழுக்க புறம் கூறும். அவர்களை கேவலப்படுத்தும். அதே, தமக்கு ஆதரவாக என்றால், அவர்களை தலைக்கு மேல் தூக்கி வைக்கும்!

ஆனால், எல்லா இடங்களிலும் மாணவர்கள், அதே பக்குவமற்ற, முறையான திட்டமிடல் இல்லாத, முழுச் சித்தாந்த புரிதலற்ற போராட்ட முறையையே மேற்கொண்டிருப்பார்கள்!

ஆளானப்பட்ட, போர்களிலும் சரி, நிர்வாகப் பாடங்களிலும் சரி, வெற்றியடையும் வரை, தோல்விகள் கூட படிப்பினைகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவை வெறும் தோல்விகள் மட்டுமே!

ஆம், வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஏனெனில் இவர்கள் மாணவர்கள். எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள். முழு முதிர்ச்சி இல்லாதவர்கள் (?), விழுந்தாலும், திமிறி எழுவதே வெற்றி என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள். தூண்டிவிடத் தோதானவர்கள்.

ஏனெனில், சாதீய பாகுபாடு, மதத் தீவிரவாதம், மோசடி, மூடநம்பிக்கைகள் என்று சமூகத்தின் புரையோடிப் போன பிரச்சினைகளினூடே வளர்ந்தாலும், மாணவக் காலத்தில் மட்டுமே இதைத் தாண்டிய ஒற்றுமை சாத்தியம் என்பதை உணர்ந்து, அதனை நோக்கி நகரத்துவங்கியிருப்பவர்கள்.

ஏனெனில், இதைத் தேர்தல் உத்தியாகவோ, வாக்குவங்கி அரசியலாகவோ பார்க்கத் தெரியாதவர்கள். வெறும் பிரச்சினையாக மட்டும் பார்ப்பவர்கள். இதற்கான, முழுமையான தீர்வு கூட இவர்களிடம் இருக்காது. பூரண மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்ற நிதர்சனம் இவகளுக்கு புரிந்திருக்காது.

ஏனெனில், ஒரு அரசியல் கட்சியினைப் போல, ஒவ்வொரு கட்டமாக போராட்டத்தைக் கொண்டு செல்லும், பிரச்சினையினை உயிர்ப்புடனே வைத்திருக்கும், அதன் மூலம் எந்தளவு அரசியல் ஆதாயம் அடையமுடியும் என்ற திட்டமிடல் இல்லாதவர்கள்!

ஏனெனில், அறப்போராட்டத்தை வன்முறையாகவோ, வன்முறையே நடந்திருந்தாலும் அதை அறப்போராட்டம் என்று மாற்றக் கூடிய கலையையோ, செல்வாக்கையோ, அதிகாரத்தையோ முழுமையாகக் கொண்டிராதவர்கள்!

ஏனெனில், இவர்களின் யாருடைய உறவினர்களும், சொந்தங்களும் மதுபான ஆலையையோ, ஏன் கடையயோ வைத்திருக்காதவர்கள். மாறாக பெரும்பாலும், மதுவால் பாதிக்கப்பட்டவர்கள். ஏன், நேற்று வரை அது சம்பந்தமான பிரக்ஞையற்றவர்களாய் கூட இருந்திருப்பர். முந்தைய வார இறுதியில் கூட தண்ணியடித்திருப்பார்கள்! அடுத்த வார இறுதியில் தண்ணியடிக்க, எப்படி காசு தேற்றுவது என்ற யோசனையில் இருப்பவர்கள்.

ஏனெனில், கேவலம் ஊழலுக்காக கைதானாலும், நீதிமன்றமே தீர்ப்பு அளித்தாலும், அதை ஏற்க்காமல், வன்முறையை தொடர்ந்து வன்முறைகளை கட்டவிழ்த்த கட்சிகளையும், தொண்டர்களையும், அதனை அனுமதிக்கும் அரசு எந்திரத்தையும் பார்த்தே வளர்ந்தவர்கள். அவர்கள்தான் சொல்லித் தந்தார்கள், வன்முறையை கையில் எடுப்பதே கவனத்தை ஈர்க்கும் என்று! அது ஒன்றும் பெரிய தவறு இல்லை என்று!

ஏனெனில், இவர்கள் வெறும் மாணவர்கள்!

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,

வாய்க்கப் பெற்றவர்கள்!

corruption

முன்பெல்லாம் ஊரிலும் சரி, பொதுத் தளங்களிலும் சரி, கட்சிக்காரர்கள் குறைவாக இருப்பார்கள்! பொதுமக்கள் அதிகமாக இருப்பார்கள்! அவர்களுக்கும் சில சார்பு நிலை இருந்தாலும், அவை முழுக்க தேர்தல் சமயத்தில் மட்டுமே வெளிப்படும்!

இப்பொழுதோ நிலைமை தலைகீழ்! அரசியல்வாதிகளை விட இவர்கள் எந்நேரமும் அரசியல் பேசுகிறார்கள்.

ஆதாயத்திற்க்காகவோ, ஆதர்சத்திற்காகவோ, ஒரு பெருங் கூட்டமே இன்று, சார்பு நிலையை நோக்கி நகர்ந்து விட்டது! நீதி, நியாயம் எல்லாம் சார்பு நிலைக்கு அப்புறம்தான்!

எஞ்சியிருக்கிற சொச்சமும், தப்பு, தப்பே இல்லை என்கிற மனநிலைக்குதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்பட்டு வருகிறது!

‘அயன் ராண்ட்’ படி, சுய நலம் அப்படி ஒன்றும் தவறான செயல் இல்லைதான்! ஆனால், இங்கு ஒரு பெருங்கூட்டமே, மற்றவர்க்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, தம் நலன் முக்கியம் என்ற மனநிலைக்கு மாறிக் கொண்டே வருகின்றது!

வெட்டியாக சம்பளம் வாங்கிக் கொண்டு, அதற்கு ஈடான உழைப்பில் பாதி கூட கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு சற்றும் இல்லை பல அரசு துறைகளில்! கேவலம் தெருவில் சற்றேனும் யார் மேலாவது மோதிவிட்டால், சாரி சொல்லவோ அல்லது அப்படி சொன்ன சாரியை ஏற்கும் பக்குவமோ கூட இல்லை!

ஊரில், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இருக்க, கைப்பற்றிய புறம்போக்கு நிலத்தை பிடுங்காமல் இருக்க, மாட்டிக் கொண்ட வழக்கு, பிரச்சினையில் இருந்து தப்பிக்க, போன்ற காரணங்களுக்காகவே, ஒரு கூட்டம் கட்சியை நோக்கி நகர்ந்திருக்கிறது!

வாரம் குறைந்தது இரண்டு, மூன்று முறை தண்ணி அடிப்பவர்கள் கூட விஜயகாந்த் குடிகாரர் என்று நக்கல் அடிக்கிறார்கள்! நடிகை என்பதனாலேயே, குஷ்புவைப் பற்றி வக்கிரமான கமெண்ட்டுகளை பகிர்கிறார்கள்! ஜாலிக்குதான் என்று சொல்லி தொடர்ந்து யாருடனாவது, யாரையாவது இணைத்து எழுதப்படும் கமெண்டுகளுக்கு லைக்கிடுகிறார்கள்!

தன் ஆதர்சத்திற்க்காக, எவ்வளவு வன்மம் கக்க முடியுமோ, அவ்வளவு வன்மமும் கக்கி விட்டு, இனி நாடு எப்படி முன்னேறும் என்று கவலைப் படுகிறார்கள்!

பத்திரிக்கை அலுவலகத்தை எரித்தவர்களும், பேருந்தை எரித்தவர்களும் மோதிக் கொள்கிறார்கள்!

குடி தவறு என்று சொல்லுபவர்கள், குடியிருக்கும் காலணியையே எரிக்கிறார்கள்!

நீதியரசரை மதிக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் வக்கீல்கள், காவல்துறையை உதாசீனப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்!

உண்மையான வாழ்க்கை நெறிமுறை, எங்கள் மதம் என்று சொல்லும் அடிப்படைவாதிகள்தான், இயற்கைச் சீற்றத்திற்கு காரணமே மதக் கோட்பாட்டை மீறியதுதான் என்கிறார்கள்!

சிலை கடத்தியவர்களும், கள்ளச் சாராயம் காய்ச்சியவர்களும், நிலத்தை அபகரித்தவர்களும் கல்வித் தந்தையாய் ஆராதிக்கப்படுகிறார்கள்!

அரசியல்வாதிகளே மோசம் என்று சொல்லிக் கோண்டே, இந்த முறை ஓட்டுக்கு எவ்வளவு என்று பேரம் பேசுகிறார்கள்!

இந்தக் கூட்டத்திற்கு மீண்டும் காமராசரோ, பெரியாரோ, அம்பேத்காரோ கிடைத்து விட முடியுமா என்ன??? சல்மான்கான்களும், சஞ்சய்தத்துகளையும் வெற்றி நாயகர்களாய் வலம் வருவதற்கு ஏற்ற, தகுதி வாய்ந்த கூட்டம் இது!

வாய்க்கப் பெற்றவர்கள் கொஞ்சமேனும், இந்த அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்கிக் கொள்ள உழையுங்கள். வாய்க்கப் பெறாதவர்கள், வாய்க்கப் பெற்றவர்களாய் மாறுவதற்கு உழையுங்கள்!

நாடு நாசமாகப் போனால் நமக்கென்ன! கொஞ்சமேனும் நம் குடும்பம் நன்றாக இருப்பதற்கு பாடுபடுவோம்!

பிரிவுகள்:Uncategorized

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்!

சத்தமேயில்லாமல் ரெண்டு பேர் குழு அறிக்கையை சமர்பித்திருக்கிறது!  அக்னி நட்சத்திரம் படத்தில் வருவது போல் எத்தனை பிரச்சினை வந்தாலும் நேர்மையான அறிக்கையை சமர்பிக்கும் அதிகாரியை சினிமாவில் பார்ப்பதே அரிதாகிக் கொண்டு வரும் நிலையில்,  நேரில் சாத்தியமா என்ன???

கிரிக்கெட்டில் ஊழல், அடுத்து என்ன,விவாதம் அது இது என்று பொங்கிய ஊடகங்கள் எதுவும் இந்த அறிக்கையை இதுவரை கண்டுகொள்ளவேயில்லை!

வண்ணாந்துறையில் பாவாடை காணமல் போனதற்கும், பேருந்து பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கும் காவல் துறையிடம் விட்டுவிட்டு பெரிய கொலை வழக்குகளுக்கு உள்ளூர் செக்யூரிட்டி சர்வீசிடம் விடுவது போல், ஸ்ரீசாந்தையெல்லாம் போலீசிடம் விட்டுவிட்டு, பிசிசிஐ என்ற பெரிய மலை விழுங்கியை கண்காணிக்க இரண்டு பேர் கொண்ட குழு? அதுவும் ஏன் தேவையில்லாம் பெரிய விவகாரமாக்குகிறீர்கள் என்று வேறு சீனிவாசன் பொங்குகிறார்!

இறந்த மனிதனுக்கு வைத்தியம் செய்வது போன்று, 13 வருடம் கழித்து குரோனியே மேல் சார்ஜ் சீட் பதிவு செய்ததற்கு டெல்லி காவல்துறையை எல்லாரும் கிண்டல் செய்தாயிற்று!

ஆனாலும், ஏற்கனவே இந்த விஷயத்துல அடிப்பட்டிருந்தாலும், ஐபிஎல்லிலேயே ஏற்கனவே லலித் மோடி ஆட்டம் காட்டியிருந்தாலும், இந்த வருடமும் பெரிய அளவில் பிரச்சினைகள் வெடித்திருந்தாலும், இன்னமும் இது போன்ற விளையாட்டுகளில் இருக்கும் அரசியலை களையும், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் நடை முறை எதுவும் இல்லாத நிலையில், இது போன்ற குற்றங்களுக்கு சரியான வழிகாட்டுதலோ அலல்து சட்டங்களோ இல்லாத நிலையை வைத்திருக்கும் முக்கிய பிரமுகர்களின் மேலோ, அமைப்புகளின் மேலோ எந்த விமர்சனமோ நடவடிக்கையோ இருப்பதில்லை!

இப்பொழுது மீண்டும் பழைய நிலையே வந்தாயிற்று. சீனிவாசன் திரும்ப பதவியேற்றாயிற்று. பிசிசிஐயும் இன்னமும் அதே நாதாரித்தனத்தை நாசூக்காய் செய்யும் அமைப்பாகவே இருக்கும்! யார் கண்டார்கள்? எங்களது ஆட்சியில் ஏழைகள் குறைந்திருக்கிறார்கள் என்ற காங்கிரசின் சாதனையைப் போல, சூதாட்டத்திற்கெதிரான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்று கூட அறிக்கைகளை வெளிவரக் கூடும்!

பை தவே, இன்னிக்கு அடுத்த மேட்சுல்ல? ஸ்கோர் என்ன?

பிரிவுகள்:கிரிக்கெட்

IPL 2013 – Review

ஏறக்குறைய முக்கால்வாசி போட்டிகள் முடிந்தாயிற்று! ஆச்சரியப்படும் படியாக, சென்னை அடுத்தகட்டத்திற்கு நகருமா என்ற சஸ்பென்ஸ்கள் இல்லாமல், பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது! அணியின் ஃபார்மினை வைத்து பார்க்கும் போதும் சரி, விஜய் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற நிலையிலும் சரி, சென்னை அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேற அதிக வாய்ப்புகள்! அடுத்தகட்டத்திற்கு நகருமா என்ற சஸ்பென்ஸ் இல்லாததினாலோ என்னமோ, ஒவ்வொரு போட்டியிலும் கடைசி ஓவர் வெற்றிக்கான சஸ்பென்சினை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்! கிரிக்கெட், ஒரு சினிமா என்றால், சென்னை, மிக அதிகமான மசாலா வெற்றிப்படங்களை கொடுத்த பட்டியலில் கட்டாயம் இடம் பெறும்!

ஆனால், இந்த முறை சத்தமில்லாமல் சாதிக்கும் அணிகள் என்றால் ராஜஸ்தான் ராயல்சும், சன் ரைசர்சும் தான்! எப்பொழுதுமே அர்ப்பணிப்பிற்கும், குழுவாக வேலை செய்வதிலும் பிரகாசிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், இந்த முறை டிராவிட், வாட்சன், ரகானேயின் துணையுடன் இன்னும் முன்னேறியிருப்பது ஆச்சரியமூட்டினாலும், அவர்கள் அதற்கு தகுதியானவர்களே என்கிற எண்ணத்தியே அதிகம் ஏற்படுத்தியிருக்கிறது! இன்னும் சொல்லப்போனால், எந்த அணிக்காகவும் நிலைப்பாடு எடுக்காதவர்களின் மத்தியில், ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு அபிமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது! அதுவே ஒருவித நிலைப்பாட்டிற்கும் வழிவகுத்திருக்கிறது!

ஆனால், பட்டியலில் 5வது இடத்தில் இருந்தாலும், புள்ளிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையை சன்ரைசர்ஸ் எப்படி எட்டியது என்பது எல்லார் மனதிலும் இருக்கும் பெரிய ஆச்சரியமே! ஏனோ தமிழ்நாட்டு ஆட்களுக்கு அந்த ஆச்சரியம் சற்று குறைவாக இருக்கலாம்! இத்தனைக்கும் அணியின் கேப்டன் இன்னமும் ஃபார்முக்கு வரவில்லை! ஏற்கனவே வெற்றிகளை குவித்த அணிக்கு, தவானின் வரவு இன்னொரு பலம்! ஆனாலும், இன்னமும் அணியால் 160 ரன்களை சேஸ் செய்ய முடியாது என்ற கமெண்டுகள் இல்லாமல் இல்லை! எப்படியிருந்தாலும், சத்தமேயில்லாமல் வெளிவந்து வசூலை வாரிக் குவிக்கும் படங்கள் ராஜஸ்தானும், சன்ரைசர்சும்!

Gayle-175-not out-24April2013

பெண்களூர் அணி தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆனாலும் அணி பேட்டிங்கில் கெயில், கோலி, டிவில்லியார்ஸ் என்ற மூவரை மட்டுமே பெரிதும் நம்பி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பல அணிகள் ஸ்டாடிஸ்டிக்கலாக வலுவான பேட்டிங் லைன் அப் வைத்திருக்கும் நிலையில், பெண்களுர் மேலோட்டமான லைன் அப்பையே வைத்திருக்கிறது! இந்த வீக்னெஸ்ஸை எக்ஸ்ப்ளாய்ட் செய்யும் போட்டிகள் பெண்களூருக்கு தோல்வியைத் தருகிறது! ஏறக்குறைய எல்லா போட்டிகளிலும், 5 பவுலர்களை வைத்து விளையாடும் அணியில், அருண் கார்த்திக் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது வலுவற்ற தோற்றத்தையே ஏற்படுத்தினாலும், மேலே சொன்ன மூவரின் ஃபார்மும், ஐந்து பவுலர்களை வைத்து விளையாடுவதால், வலுவான பந்துவீச்சும், அணிக்கு தொடர் வெற்றிகளைத் தந்து கொண்டிருக்கிறது! அதிக பட்ஜெட்டில் வெளிவந்து நல்ல வசூலைத் தரும் மசாலா படம் ராயல் சேலஞ்சர்ஸ்!

ஓவர் பில்டப் கொடுத்து விட்டு சுமாரான வெற்றியைத் தரும் படங்கள் வகையைச் சார்ந்தது மும்பையும், கோல்கத்தாவும் என்றால் மிகப்பெரிய ப்ளாப்பினைத் தரும் படங்கள் டெல்லியும், புனேவும்! அதுவும் புனேயின் பேட்டிங் லைன் அப்புக்கு, அவர்கள் ஸ்கோரினைப் பார்க்கும் போது, அவர்களை விட அந்த ஓனர்களின் மேல்தான் பரிதாபம் வருகிறது! எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்களோ! தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா புண்ணியத்தால் மும்பை தப்பி பிழைக்கிறது! சச்சின், பாண்டிங், யுவராஜ், சேவாக், கில்கிறிஸ்ட், பதான் என இந்த ஐபிஎல் முக்கிய வீரர்களுக்கு கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொஞ்ச நஞ்சமல்ல!

பஞ்சாப், லோ பட்ஜெட்டில் வெளிவந்துள்ள சுமாரான வெற்றிப்படம்! கோல்கத்தாவிற்கெதிரான ஒரே ஒரு வெற்றியைத் தவிர்த்து மற்ற வெற்றிகள் எல்லாமே டெல்லி மற்றும், புனேவிற்கு எதிராகத்தான்!

ஏறக்குறைய செமிக்கான போட்டி முழுக்க சென்னை, பெண்களூர், ராஜஸ்தான், ஹைதராபாத், மும்பைக்கிடையேதான்! கோல்கத்தாவிற்கும், பஞ்சாபிற்கும் மிகக் குறைவான வாய்ப்புகள்!

சென்னை:
ஏற்கனவே 18 புள்ளிகள்! அணியும் நல்ல ஃபார்மில்! மீதமுள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் வாய்ப்புகள் மிக அதிகம். இரண்டில் வெற்றி என்றால் ஏறக்குறைய கண்டிப்பாக இடம் உண்டு! ஆனால், இங்கே கவனிக்க வேண்டிய விஷயம், சென்னை பெறும் வெற்றி, இன்னொரு அணியின் செமி ஃபைனல் கனவை தகர்க்கக் கூடும்!

பெண்களூர்:
5ல் ஒன்று டெல்லியுடன், இரண்டு பஞ்சாப்புடன் . மற்ற இரண்டும் கோல்கத்தா, சென்னை உடன்! அணி இருக்கும் ஃபார்மிற்கு, டெல்லி, ப்ஞ்சாப்புடனான போட்டிகளை வெற்றி பெற அதிகம் வாய்ப்பு! அது அணிக்கான அரையிறுதி வாய்ப்பையும் தரும்!

மும்பை:
14 புள்ளிகள் . மீதமுள்ள 5 போட்டிகளில் ஒன்று புனேயுடனும், இன்னொன்று பஞ்சாப்புடனும்! மீதி மூன்றும் சக போட்டியாள்ர்களுடன்! புனே, பஞ்சாப்பின் வெற்றியை விட, இந்த மூன்றில் பெரும் வெற்றி, அவர்களை முன்னிறுத்தும், மற்றவர்களை பின் தள்ளும்!

ராஜஸ்தான்:
5ம் டெல்லி, பஞ்சாப், சென்னை ஹைதராபத், மும்பை உடன் போட்டி! எல்லாமே நல்ல போட்டியை ஏற்படுத்தும் ஆட்டங்களாக இருக்கும்! வெற்றி பெற்றால் உண்டு வாழ்வு!

ஹைதராபாத்:
ஏறக்குறைய ராஜஸ்தான் நிலைமையே, ஹைதராபத்துக்கும்! பஞ்சாப், சென்னை, மும்பை, ராஜஸ்தான், கோல்கத்தா என எல்லாவற்றிலும் வெற்றி பெற பெரிய முயற்சிகள் வேண்டும்!

பஞ்சாப்:
மேலே சொன்ன அணிகள் எல்லாம் பெறும் வெற்றியை விட இரு மடங்கு வெற்றியினைப் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு வாய்ப்பு! 6 போட்டிகளும், மேலே சொன்ன போட்டியாளர்களுடன் என்பதால் எந்த வெற்றியும் ஓரளவு சாதகமளிக்கக் கூடியதே! போன முறை சென்னைக்கு ஒரு நெருக்கடியினைக் கொடுத்தது போல், இந்த முறை யாருக்கேனும் தருவார்களா என்பதே பெரிய கேள்வி!

கோல்கத்தா:
சமயங்களில் ஓனர் கிரிக்கெட் விளையாடுகிறார், வீரர்கள் நடிக்கிறார்களோ என்ற கணக்கில் ஆட்டத்தை தரும் அணி! ரொம்ப நாள் கழித்து பெற்ற வெற்றிக்கு கூட மைதானத்தை வலம் வருகின்றனர்! இவர்களுக்கு என்ன பிரச்சினை அல்லது இவர்களேதான் பிரச்சினையா என்பது இன்னும் முழுமையாக விளங்கவில்லை! அணியின் ஒரே நம்பிக்கை, மீதமுள்ள 5 போட்டிகளில் இரண்டில் புனேயுடன்! மீதி மூன்று மும்பை, பெண்களூர், ஹைதராபாத்துடன்! ஆகவே எப்படியாவது இந்த மூன்றில் வெற்றி பெற்றால், மீதமுள்ள இரண்டில், புனே அணியே வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற கனவில் இருக்கிறது அணி!

டெல்லி:
இழக்க ஒன்றுமில்லை! ஸ்பாய்லர் கேம் வேண்டுமானால் கொடுக்கலாம்!

புனே:
யுவராஜ் போன்றோர் தங்களுடைய பேட்டிங் திறமையை மேம்படுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு மீதமுள்ள மேட்சுகள்!

இந்த ஐபிஎல் சில விஷயங்களை உறுதி செய்திருக்கிறது! சேவாக், யுவாராஜ் போன்றோர் தங்களுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம். அதிலும் சேவாக் இனி இந்திய அணிக்கும் திரும்ப முடியுமா என்பது கேள்விக்குறியே! காம்பீர், கோலி போன்றோரின் சிறுபிள்ளைத் தனமான நடவடிக்கைகள், தோனி என்ற கேப்டன் இந்திய அணியை வழி நடத்த ஏற்படுத்தி வைத்திருக்கும் ஸ்டாண்டர்டு என்ன என்கிற வியப்பு! ஒரு வகையில் இவர்கள்தான் இப்படியேதான் இருப்பார்களா என்கிற ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது! ரோகித் சர்மாவின் இன்னொரு திறன் வெளிப்படுத்தும் தொடர் இது, கூடுதலாக அணியினை வழி நடத்தும் பண்பும் கூட! ஆனாலும், பயபுள்ளை இந்திய அணிக்காக மட்டும் இப்படி ஆடுவதில்லையே என்கிற ஆதங்கம்! எல்லாவற்றிற்கும் மேலாக விடா முயற்சிக்கும், அடம் பிடிப்பதற்குமுள்ள வித்தியாசத்தை உணராத சச்சினின் மேல் ஏற்படும் பரிதாபம்!

கட்டுரை அதீத்தத்தில் வெளிவந்துள்ளது: http://www.atheetham.com/?p=4825

பிரிவுகள்:கிரிக்கெட்

ஐ.பி.எல் 2013 – ஒரு முன்னோட்டம் – 2

முந்தைய பாகம்: http://wp.me/pl9S3-bw

Inline image 3

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஃபேர் ப்ளே அவார்டு மட்டுமே வாங்க முடிந்த அணி! ராகானேயின் திறமையை இந்தியாவிற்கு உணர்த்திய அணி! போன முறையோடு அவ்வளவுதான் என்று நினைத்திருந்த டிராவிட்டின் ஆட்டத்தை இந்த முறையும் தரக் கூடிய அணி! அவருக்கு அடுத்து காப்டனாக இருக்கலாம் என நினைத்த போத்தா, அணி மாறிவிட்டாலும், போன முறை அவருடைய பங்களிப்பு பெரிதாக இல்லை! அணிக்கு நம்பிக்கை தரும் முக்கிய விஷயம், வாட்சன் ஆரம்பம் முதலே அணிக்காக விளையாடுவார் என்பதே!

பெரும்பாலும் ஸ்டார் வால்யூ இல்லாமல் களமிறங்கும் அணி, இந்த முறையும் அப்படியே! வாட்சனைத் தவிர்த்து, மற்ற இடங்களுக்கு, டெய்ட், ஓவிஸ் ஷா, ஹோட்ஜ், ஹாக்,எட்வர்ட்ஸ், ஃபல்குனர், கெவான் கூப்பர், சாமுவேல் பத்ரி என 8 பேர் போட்டி! 40 வயது டிராவிட்டும், 42 வயது ஹாக்கும் ஒரே அணியில்! இது தவிர ரகானே, மனேரியா, பின்னி,ஸ்ரீசாந்த் த்ரிவேதி ஆகியோர் மட்டுமே தெரிந்த முகங்கள்! பேட்டிங்கிற்கு வாட்சன், ரகானே,மனேரியா, டிராவிட், பின்னி மட்டுமே என்பதால் வெளிநாட்டு ஆட்டக்காரர்களில் இன்னொரு பாட்ஸ்மேனாக ஷா  விளையாடுவது அணியின் மத்திய வரிசையை பலப்படுத்தும்! அதே சமயம், பந்து வீச்சிலும் அணியில் பெரிய ஆட்கள் இல்லை என்பது இதன் பெரிய பலவீனம்!

யூசுஃப் பதான், ஜடேஜா முதல் ரகானே வரை பலரை இந்திய அணிக்குக் கொடுத்த அணி,பெரும்பாலும் ஆச்சரியங்களை ஏற்படுத்தும் அணி, இந்த முறை என்ன செய்யப் போகிறது என்பது முக்கிய சில ஆட்டக்காரர்களின் கையில் இருக்கிறது!

கிங்ஸ் லவன் பஞ்சாப்

உண்மையாகவே கிங்கோ இல்லையோ, ஆனாலும் ஒரு குயினினுடைய அணியாகத் திகழ்கிறது! முதல் சீசனைத் தவிர்த்து பெரியதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை! வலுவற்ற அணியாகவும், தொடர் தோல்விகளையும் போனத் தொடரின் ஆரம்பத்தில் சந்தித்தாலும், திடிரென்று பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியது! கில்லிதான் இன்னமும் காப்டன்! பழைய கில்லி இல்லையோ என்று போன முறை சந்தேகித்த சூழலில், திடிரென பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்! அதே ஆட்டம் இந்த முறை வெளிப்படாவிடின், அணிக்கு சுமையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது!

கில்லி தவிர, போன முறை கலக்கிய அசார் மகமூத், ஹாரிஸ், டேவிட் ஹஸ்ஸி, ஷான் மார்ஸ், மில்லர், பாம்பர்பாஸ், மாஸ்கரானஸ் என மொத்தமே எட்டு ப்ளேயர்கள்! பந்துவீச்சுக்கு போன முறை ஆச்சரியப்படுத்திய அவானாவுடன், ப்ரவீன் இருக்கிரார்! ப்ரீத்தி போன்றே ஆரம்பத்திலிருந்தே அணியில் இருக்கும் உள்ளூர் ப்ளேயர் பியூஸ் சாவ்லாதான் (ஷான் மார்சூம் கூட!). இது தவிர ஹர்மீத் சிங், கோனி, பட் இருப்பதால், வெளிநாட்டு வீரர்களில் பாட்ஸ்மேன்கள் அலல்து ஆல்ரவுண்டர்களை அதிகம் எடுக்கலாம்! இப்போதைக்கு கில்லி,அசார், மார்ஷ், ஹஸ்ஸிக்கு வாய்ப்புகள் அதிகம்! ஹஸ்ஸி, அசாரின் ஆல்ரவுண்ட் திறமை அணிக்கு பலம்!

ஆனால் பாட்டிங்கில் அணி பலவீனமாகவே உள்ளது! பெரிய நம்பிக்கையைக் கொடுத்த வால்தாட்டி போன் முறையே சோபிக்கவில்லை! போன ஐபிஎல்லுக்குப் பின்பு ஏதாவது அணியில் விளையாடுகிறாரா என்பது கூட தெரியவில்லை! மண்டீப் சிங் மற்றுமே ஓரளவு தெரிந்த முகம்! ஸ்டாடிஸ்டகலி சற்றே பலவீனமான அணியே! ப்ரீத்தி மறுபடி ஃபீல் பண்ணுவதை அதிகம் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம்!

ராயல் சாலஞ்சர்ஸ் பெண்களூர்!

ஏகப்பட்ட ஸ்டார்கள் இருப்பது மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது என்பதற்கு சரியான உதாரணம்! ஆரம்பத்தில் அதிரடி விளையாட தில்சன், கெயில், நடுவில் ஆங்கர் ரோலுக்கு கோலி, மத்தியில் அடித்தாட டிவில்ல்யர்ஸ், திவாரி என பல ஸ்டார்கள்! பந்துவீச்சிலும் முரளிதரன், ஜாகீர்கான், வினய் குமார், ராம்பால், எனப் பலர் இருந்தும் அணி ஐந்தாவது இடத்தையே பிடித்தது போன முறை!

இந்த முறை விட்டோரிக்கு பதில் கோலி காப்டன் என்பது நல்ல மாற்றமே! 4 வெளிநாட்டு வீரர்களின் இடத்திற்கு, கெயில், தில்சன், டி வில்லியர்ஸ், பார்ன்வெல், கிரிஸ்டியன்,ஹென்ரிக்ஸ், மெக்டொனால்ட், முரளிதரன், ராம்பால், வெட்டோரி என 10 பேர் போட்டி! ஏறக்குறைய எல்லாருமே நல்ல வீரர்கள் என்பது அணியின் தேர்வுக்குழுவுக்கு தலைக்கனமா அல்லது தலைவலியா என்பது அவர்களுக்கே வெளிச்சம்! மிஞ்சிப்போனால் கண்டிப்பாக ஒரு வெளிநாட்டு பவுலர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்!

மீதமுள்ள 3 இடங்கள் பாட்ஸ்மேன்களே! இது தவிர கோலி என்பது பெரிய பலம்! புஜாராவின் ஃபார்ம் அவரையும் விளையாட வைக்கக் கூடும். ஆனாலும், அப்படி ஆடவைக்கப்படும் பட்சத்தில் வெளிப்படும் அவருடைய ஆட்டம், இந்திய அணியின் ஒருநாள், 20-20 அணிக்கான பாதையாக இருக்கும்! இது இல்லாமல் மான்யக் அகர்வால், திவாரி ஆகியோர் இருக்கின்றனர்!

பேட்ஸ்மேன்களைப் போன்றே எந்த பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வது என்பதும் பெரிய தலைவலியே! ஜாகீர், வினய், மிதுன், ஆர்பி எங், உங்கட், பரமேஷ்வரன், பங்கஜ் சிங், மிதுன் முரளி கார்த்திக் என கண்ணுக்குத் தெரிந்து அணியில் பல முன்னாள், இந்நாள் இந்திய பந்துவீச்சாளர்கள்! வீரர்களை வைத்து பார்க்கும் பொழுது மிக பலமான அணியாக இருந்தாலும், அது மட்டுமே அணிக்கு வெற்றியைத் தந்துவிடாது என்பதும் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்! தவிர கோலியின் காப்டன்ஷிப், அவரை இந்திய அணியின் எதிர்கால தலைமைக்கு பழக்கக் கூடும்!

மும்பை இண்டியண்ஸ்

பாண்டிங் தலைமையில் களமிறங்குகிறது மும்பை அணி! மிகப் பெரும் ஜாம்பவான்களான சச்சினும், பாண்டிங்கும் ஒரே அணியில்!!! பாண்டிங்கின் வரவு மட்டுமல்ல, அவரை காப்டனாக்கியது, இன்னமும் பலம் வாய்ந்த அணியாக காட்சியளிக்கிறது! பாண்டிங் தவிர்த்து,ப்ளிசார்டு, கவுண்ட்டர் நில், ஃப்ராங்க்ளின், ஹியூக்ஸ், ஜான்சன், மலிங்கா, மாக்ஸ்வெல், ஓரம்,போலார்டு, ஸ்மித் என அள்ளிக் குவித்திருக்கின்றனர்! பாண்டிங், மலிங்கா உறுதி என்ற சூழலில், மீதமுள்ள இரு இடத்திற்கு 9 பேர் போட்டி! இதில் போலார்டுக்கு அதிக வாய்ப்பு என்ற சூழலில். எதற்காக இத்தனை பேரை அள்ளியிருக்கின்றனர் என்பது புரியாத புதிர்!

இதில் ஹியூக்ஸ் ஆஸியின் முக்கிய வீரர் என்ரால், ஃப்ராங்க்ளின், ஸ்மித் ஆகியோர் போன முறையே மும்பையின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் இருந்தவர்கள்! இந்த லட்சணத்தில்,மாக்ஸ்வெல்லுக்கு எதற்கு அவ்வளவு விலை கொடுத்து எடுக்க வேண்டும் என்பதும் புரியவில்லை! உள்ளூரில் ஆட்களிலும் ஸ்டார் பட்டாளங்கள்! ஏறக்குறைய பலர் கண்டிப்பாக இருப்பவர்கள்! சச்சின், ரோகித், ராயுடு, தினேஷ் கார்த்திக் உடன் பந்து வீச்சில் ஹர்பஜன்,ஓஜா, முனாஃப், படேல், தவால் குல்கர்னி எனப் பலர் உள்ளனர்!

பல ஸ்டார்கள் இருந்தாலும், அணியாக பார்க்கும் பொழுது சற்றே குழப்பமாகவே இருக்கிறது! போன முறை இருந்த லெவி, கிப்ஸ் இந்த முறை இல்லை! ஆகையால் ஓபனிங்கிற்காகவே ஸ்மித் இருக்க வேண்டும்! அல்லது புதிய மாற்றமாக தினேஷ் கார்த்திக்கை ஓபனிங் ஆக்க வேண்டும்! இல்லாவிடின் கொடுத்த காசுக்கு ஹியூக்ஸ் அல்லது மாக்ஸ்வெல்லுகு வாய்ப்பு கொடுத்து பரிட்சிக்க வேண்டும்! அவர்களைத் தொடர்ந்து பாண்டிங், ரோகித், ராயுடு, கார்த்திக்,போலார்டு என மத்திய வரிசை இருப்பது அணியின் பெரிய பலம்!

பந்து வீச்சிலும் மலிங்கா உடன் குல்கர்னி அல்லது படேல் அல்லது இருவருமே இருக்கும் சூழலில், ஹர்பஜன் / ஓஜா தவிர ஆல்ரவுண்டர்கள் என கைவசம் எப்பொழுதும் ஏகப்பட்ட சாய்சினை வைத்திருக்கும் அணி! இந்த முறையும் பலத்த போட்டியைக் கொடுக்கக் கூடிய அணியாக இருக்கும்!

Inline image 2

டெல்லி டேர்டெவில்ஸ்

ஏறக்குறைய சென்னைக்கு இணையாக தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் மற்றொருஅணி! இருந்த போதிலும்  இன்னமும் கோப்பை கைவசமாகவில்லை ஒரு முறைகூட!ஸ்டாடிஸ்டக்கலி, போன முறையை விட இந்த முறை இன்னமும் பலம் குறைவான அணியாகக்காட்சியளிக்கிறது! ராஸ் டெய்லரை விட்டுக் கொடுத்து நெக்ராவை எடுத்திருக்கிறார்கள், பீட்டர்சன்காயம், அணிக்குள் வந்த ரைடர் கோமாவில், சேவாக் ஃபார்மில் இல்லை, வாரனரும் கூட!ஜெயவர்த்தனே சென்னையில் ஆட முடியாது என ஏகப்பட்ட பிரச்சினைகள் அணிக்கு

மார்னே மார்க்கெல், ஜெயவர்த்தனே, வார்னர் உறுதியாக இருக்கக் கூடும். மீதமுள்ள இடத்திற்கு,போத்தா, ருசல், ஜீவன் மெண்டிஸ், போடி, வாண்டர் மெர்வ் போட்டி! இதில் போத்தாவுக்குவாய்ப்புகள் அதிகம்! ஏற்கனவே வருண் ஆரூண், உமேஷ் யாதவ், இர்ஃபான் பதான் இருக்கும்நிலையில், மார்னே மார்க்கெலும் அதிகம் விளையாடக் கூடிய சூழலில், நெக்ராவை எடுக்க, ராஸ்டெய்லரை விட்டுக் கொடுத்ததன் மர்மம் அணியினருக்கே தெரியும்! இதில் ஏறக்குறைய எல்லாபவுலர்களும் காயத்திலிருந்து இப்பொழுதுதான் வருகிறார்கள்!

பந்துவீச்சு ஓரளவு பலமாக இருந்த போதிலும், பாட்டிங், சேவாக், வார்னர், ஜெயவர்த்தனே உடன்உம்குந்த் சந்த், போத்தா, ஜாதவ், பதான் ஆகியோரை நம்பியே இருக்கிறது! ஐபிஎல், சேவாக்கிற்கும்கூட ஒரு முக்கியமான தொடரே! தன்னை நிரூபித்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் அவர்இருக்கிறார்!

சென்னை சூப்பர்கிங்ஸ்

பெயருக்கேற்ற ராஜாக்கள் எப்பொழுதுமே! தொடர்ந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி!எப்படி என்றே யாருக்கும் புரிபடாவிட்டாலும், யாருமே நல்ல ஆட்டத்தைக் கொடுக்காவிட்டாலும்,கடைசி கட்டத்துக்கு வந்துவிடும் அணி! இப்பொழுது இன்னும் வலுவான நிலையில்!

டூ ப்ளசிஸ், மைக் ஹஸ்ஸி, ஆல்பி மார்கெல், ப்ராவோ, ஹில்ஃபெனாஸ், போலிங்கர், குலசேகராஎல்லாம் பத்தாது என்று பந்து வீச்சிற்கு நான்ஸ், லாஃப்ளின், ஹோல்டர் ஆகியோரும்,ஆல்ரவுண்டர் இடங்களுக்கு கிரிஸ் மோரிஸ் மற்றும் தனஞ்செயா ஆகியோர் உள்ளேவந்திருக்கிறார்கள்! குலசேகரா, தனஞ்செயா அணியில் ஆடமுடியாதது, தேர்வுக் குழுவின்வேலையை சுலபமாக்கியது! ஹஸ்ஸி, டூப்ளசில் கண்டிப்பாக இருப்பார்கள்! ப்ராவோவும்அப்படியே! மீதமுள்ள ஒரு இடத்திற்குதான் இத்தனை அக்கப்’பே’ர்கள்! கண்டிப்பாக பவுலர்தான்!

விஜய் வேறு ஃபார்மில் இருக்கிறார்! ஜடேஜா அசத்தியிருக்கிறார்! டூப்ளசிஸ், விஜய் ஓபனிங்!ரெய்னா, பத்ரி, தோனி, ஹஸ்ஸி அல்லது கிறிஸ் மாரிஸ் அல்லது மார்கல், ப்ராவோ, ஜடேஜா,அஸ்வின், ஹில்ஃபெனாஸ் / நான்ஸ், இன்னொருவர் என அணி நல்ல லைன் அப்பில் இருக்கிறது!

ஒவ்வொரு முறையும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணி என்பது போன்றே, பலசமயங்களில் சொதப்பி, அடித்து பிடித்தோ அல்லது உள்ளே நுழைய வேறு ஒருவருடையதயவிலோ இருப்பதும் வாடிக்கையான ஒன்றே! இந்த முறையாவது அதை தகர்க்குமா???

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

அடிச்சு புடிச்சு போன முறை கோப்பையை வென்றுவிட்டார்கள்! அதற்கு கண்டிப்பாக ஒருவர் காரணமல்ல. பிஸ்லா முதற்கொண்டு எல்லாரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாகச் செய்தார்கள்!

இந்த முறை அணியில் பெரிய மாற்றங்கள் இல்லை. 4 இடங்களுக்கு, ஹாடின், ப்ரட் லீ, கல்லிஸ், மெக்கல்லம், மெக்லேரன், மார்கன், நரைன், பாட்டின்சன், ஷாகிப் அல் ஹாசன், டென் டாஸ்ட்சே, செனாயகே என 11 பேர் போட்டி! பல ஆல்ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலம். நரைன் கண்டிப்பாக இருப்பார். மீதி மூன்று இடங்களுக்கு இன்னொரு பவுலர், அது பெரும்பாலும் ப்ரட் லீயாக இருக்கலாம். கல்லிசின் ஆல்ரவுண்ட் திறமை மற்றும் தொடர்ந்து அணியில் இருப்பதால் அதிக முன்னுரிமை இருக்கலாம். மெக்கல்லமின் சமீபத்திய ஃபார்மும், அவருடைய அதிரடியும் அவருக்கு வாய்ப்பினை அதிகப்படுத்துகிறது!

உள்ளூர் ஆட்களில், காம்பீருடன், மனோஜ் திவாரியும், பதானும், பிஸ்லாவும் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் பாலாஜி, ஷாமி அகமது இருக்கிறார்கள். பிஸ்லா, கல்லீஸ், காம்பீர், மெக்கல்லம், பதான், மனோஜ் திவாரி, அப்துல்லா / பாடியா, பாலாஜி, ப்ரட் லீ, நரைன், ஷாமி அகமது / சுக்லா என்ற லைன் அப் இருக்கலாம்!

ஆல்ரவுண்டர்களுக்கு வெளிநாட்டு வீர்ர்களையே நம்பி இருப்பது இதன் பலவீனம். பதான் போன்று இன்னொரு பேட்டிங் ஆல்ரவுண்டர் இருந்திருந்தால் அணி இன்னும் வலுவாக இருக்கும். பதானுக்கு கல்யாணம் ஆன பின்பு வரும் தொடர் இது!

சேவாக்கைப் போன்றே, காம்பீருக்கும் இந்த்த் தொடர், அவரை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயமாக இருக்கிறது! மீண்டும் ஒரு முறை கோப்பையை வென்றூ காட்டுவதும், அதற்கு முக்கியக் காரணமாக இருப்பதுமே, இந்திய அணியில் அவருடைய எதிர்காலத்தை முடிவு செய்வதாய் இருக்கும்!

——————————————————————————–

தற்போதைக்கு தேசப்பற்றை மட்டுமல்ல, ஐபிஎல் சமயங்களில் இனப்பற்றை ஊட்டுவதற்கும் கிரிக்கெட் பெரும் பங்கு வகிக்கிறது! நாளை தொடங்கும் போட்டி, ஆரம்பத்தில் பெரிய வரவேற்பையும், நடுவில் தொய்வாகவும், இறுதியில் த்ரில்லிங் ஃபினிஷிங்கை கொடுக்க கூடியதாகவே முடியும்! கைதேர்ந்த மசாலா பட இயக்குநரின் ஆக்கத்தில், முண்ணனி நடிகர்கள் பலருடைய பங்கேற்பில் வெளிவரும் ஒரு திரைப்படத்திற்கான அனைத்து அமசங்களையும், வெற்றியையும் இந்த ஐபிஎல்லும் பெறக் கூடும்!!!

கட்டுரை அதீதம் மின்னிதழில் வெளிவந்துள்ளதுhttp://www.atheetham.com/?p=4546

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:

ஐ.பி.எல் 2013 – ஒரு முன்னோட்டம் – 1

ஏப்ரல் 2, 2013 1 மறுமொழி

கிரிக்கெட்டில் சூதாட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க, ஏறக்குறைய ஐபிஎல் போட்டி முறையே, ஒரு சூதாட்டத்தைப் போன்றுதான் காட்சியளிக்கிறது! சில வீரர்களை அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுப்பது சரியான தேர்வா அல்லது ஒரு கேம்பிளா என்ற வார்த்தை சர்வ சாதாரணமாக புழங்குகின்றன!

எனக்கு சூதாட்டக் கிளப் என்றாலே ஞாபகத்திற்கு வருவது, சில பல பழைய தமிழ் படங்களும், ஜேம்ஸ் பாண்ட் படங்களும்தான்! அரைகுறை உடைகளுடன் பெண்கள், அவர்கள் நடனம், எளிதில் புழங்கும் மதுபானங்கள், கோடிக்கணக்கில் புரளும் பணம், நடத்துபவர்களின் பெரிய பின்புலம் என்று இரண்டிற்குமே சில பல ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன!

IPL-2013-Schedule

2013ன் ஐபிஎல் சீசன் ஆரம்பிக்கப் போகிறது! ஐபிஎல்லின் வெற்றியைக் கண்ட பலரும் அதே போன்றதொரு தொடரை அவரவர் நாடுகளில் நடத்த ஆரம்பித்தாலும், ஐபிஎல்லுக்கு இருக்கும் மவுசு தனிதான்! அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா எப்பொழுது வல்லரசாகுமோ, ஆனால் கிரிக்கெட்டில் இந்தியா ஒரு பெரும் வல்லரசாகிவிட்டதன் இன்னொரு அடையாளம், ஐபிஎல்லின் தொடர் வெற்றி! இந்த சீஷனில் மட்டும்தான் காம்பீர் பெங்காலி ஆகின்றார், கோலி கன்னடராகிறார், சமயங்களில் வெளிநாட்டுக்காரர்கள் கூட உள்ளூர் தலைவர்களாகி விடுகின்றனர்!

நாட்டின் முக்கியத் தலைவர்கள், அமைச்ச்சர்கள் எல்லாம் பிசிசிஐயின் முக்கிய பதவியில் இருந்தாலும், அரசியலையும், விளையாட்டையும் ஒன்றாக பார்க்கக் கூடாது என்று சொல்லும் காமெடிகள் அரங்கேறும் சூழலில், உருப்படியாக, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்ற கருத்துக்கு தமிழகத்தில் பெருத்த வரவேற்பு!

வெற்றி பெற்றவர்களைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசும் சூழலில், போன தொடரில் கடைசி 4 இடங்களைப் பிடித்த அணிகளின் பங்கு இந்த முறை எப்படி இருக்கப் போகிறது?

புனே வாரியர்ஸ்

போன தொடரில் கடைசி இடம்! பல மாற்றங்கள் அணியில்! போன முறை தாதா காப்டன்! இந்த முறையோ, தாதா தாத்தாவாகிப் போனதை ஏற்றுக் கொண்டு ஆடவில்லை அல்லது ஆட விடவில்லை. அதைவிட பெரிய மாற்றம், போன முறை ட்ரீட்மெண்டில் இருந்த யுவராஜ், இந்த முறை அணிக்கு முக்கிய பலம்! ஓரளவு நல்ல வீரர்களைக் கொண்டிருந்தும், கடைசி இடம் பிடிக்க வேண்டிய அளவிற்கு அதன் ஆட்டம் இருந்தது பெரிய புதிர்! இந்தமுறை மாத்யூஸ் கேப்டன்! ஆச்சரியம் என்னவென்றால் போன முறை இவர் விளையாடியதும் குறைவான ஆட்டங்களே, தவிர பங்களிப்பும் சுமாரே!

க்ளார்க் இருந்திருந்தால் கேப்டனாகியிருப்பாரோ என்னமோ! ஆனால் இப்போதைக்கு மாத்யூஸ்தான் கேப்டன்! நல்லதொரு ஆல்ரவுண்டர் என்பதும் ப்ளஸ். மீதமுள்ள மூன்று வெளிநாட்டு ஆட்டக்காரர்கள் இடத்திற்கு, பல நல்ல வீரர்கள் உள்ளனர்! ராஸ் டெய்லர், சாமுவேல்ஸ், தமிம் இக்பால், ஸ்டீவன் ஸ்மித், லுக் ரைட், கேன் ரிச்சர்ட்சன், வேய்ன் பார்னல், மிட்சல் மார்ஸ், ஆரூன் ஃபின்ச், என ஒன்பது பேர் உள்ளனர். ஸ்மித்தின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் 20-20 போட்டியில் அனுபவம், சாமுவேல்சின் ஆல்ரவுண்ட் திறமை, தமிம் இக்பால் மற்றும் ராஸ் டெய்லரின் அதிரடி ஆட்டம் என ஏறக்குறைய பலரும் நல்ல வீரர்கள்!

உள்ளூர் ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரை, யுவராஜின் வரவு பெரிய பலம். இந்தியாவின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் புவனேஷ் குமார் பந்துவீச்சுக்கு பலம். இன்னொரு இந்திய பந்து வீச்சாள்ரான திண்டாவும் பந்து வீச்சிற்கு பலம் சேர்க்கிறார்! சுழற்பந்துக்கு ராகுல் சர்மா! இதைத் தவிர தெரிந்த ஆட்கள் உத்தப்பா, மணீஷ் பாண்டே, அபிஷேக் நாயர், சமீப காலங்களில் புதிய கண்டுபிடிப்பாகக் கருதப்படும் ஆல்ரவுண்டர் ரசூல் எனப் பலர் உள்ளனர்! கண்டிப்பாக போன முறையை விட நன்கு பலமான அணியாகவே தோன்றுகிறது! மிக மிக மோசமான பங்களிப்புதான் போன்ற முறை என்ற சூழலில், இந்த முறை நல்லதொரு பங்களிப்பையும், போட்டியையும் ஏறபடுத்தும் அணியில் ஒன்றாக மாறலாம்!

டெக்கான் சார்ஜர்ஸ் (எ) சன்ரைசர்ஸ்

ஐபிஎல் சென்னையில் கூடாது என்பதை வரவேற்கும், ஈழத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த மாறன் குடும்பத்திற்கு, அணி கைமாறிய பின்பு நடக்கும் முதல் போட்டி! எந்த இலங்கையை குற்றம் சாட்டுகிறோமோ, அந்த அணியின் முக்கிய வீரரான சங்ககராதான் காப்டன்      அணிக்கு இப்பொழுதும்! புதிய வரவுகளாக, டாரன் சாமி, நாதன் மெக்கல்லம், மெக்கே, பெரேரா ஆகியோர். சங்ககரா எல்லாப் போட்டிகளுக்கும் என்ற சூழலில், மீதமுள்ள இடங்களுக்கு, திஷாரா பெரேரா, சாமி, மெக்கல்லம், டும்னி, ஸ்டெயின், டி காக், மெக்கே, காமரூன் வொயிட், லின் என இங்கேயும் 9 பேர் போட்டி! சங்ககராவைத் தவிர்த்து மற்ற யாரும் தனிப்பட்ட முறையில் பெரிய ப்ளேயர்கள் இல்லை என்பது சாதகமா அல்லது பாதகமா என்பது தொடர் சொல்லிவிடும்!ஸ்டெயினின் பந்து வீச்சு அவருக்கு அதிக வாய்ப்பளிக்கும் சூழலில், மீதமுள்ள இடங்களுக்கு சாமி, பெரேரா, மெக்கல்லம், வொயிட், டும்னி இடையே கடும் போட்டியைக் கொடுக்கும்! மெக்கல்லமின் சமீபத்திய ஃபார்ம் அவருக்கு பலம்!

உள்ளூர் ஆட்களில், போன முறை அணி சில வெற்றிகளைப் பெறக் காரணமாயிருந்த தவான் பலம் என்றாலும், காயம் காரணமாக, ஆரம்பப் போட்டிகளில் அவர் விளையாட முடியாது!  ஸ்டெயினுடன், இஷாந்த் பந்து வீசுவது ஓரளவு பலம் சேர்க்கிறது! இது தவிர தெரிந்த முகங்கள் பர்தீவ் பட்டேல், அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி மட்டுமே! எப்படிப் பார்த்தாலும், அணி போன முறையைப் போன்றே வெளிநாட்டு வீர்ர்களை நம்பியே பெரிதும் இருக்கிறது! இன்னும் சொல்லப் போனால் டொமஸ்டிக் போட்டிகளில் கூட ஹைதராபாத் அணி என்பது சற்றே பலவீனமான அணியாகவே இருக்கிறது!

இருப்பினும், மிகச் சாமர்த்தியமான வியாபாரியின் கைகளுக்கு அணி சென்றிருக்கிறது! அணியை வாங்கியவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்களில்லை! எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எதற்கு அமைதி காக்க வேண்டும் என்ற வித்தையை கைவரக் கற்றவர்கள்! ஈழத்திற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துக் கொண்டே, அணிக்கு இலங்கை வீரரை கேப்டனாக நீடிக்க வைத்திருப்பவர்கள். நித்தியானந்தா விவகாரத்தை பெரிது படுத்திவிட்டு, தன்னுடைய செய்தி ஆடிட்டரின் செய்தியினை வெளியேயே கொணராமல், பாதிக்கப்பட்ட பெண்ணை நீக்கியவர்கள்! இவை எல்லாவற்றையும் விட மொக்கைத் திரைப்படமான மாசிலாமணியையே அகில உலக வெற்றிப் படமாக காட்டியவர்கள்! அவர்களுடைய ஆளுமைக்கு கீழுள்ள அணியில் எதுவும் சாத்தியமே!

கட்டுரை அதீதம் இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது: http://www.atheetham.com/?p=4440

தொடரும்…

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:

வொயிட்வாஸ் என்கிற கரிபூசுதல்!

இந்தத் தொடர், விஜய்க்கோ, அஸ்வினுக்கோ, தவானுக்கோ மட்டுமல்ல தோனிக்கும், ஒட்டு மொத்த இந்திய அணிக்குமே மிகப் பெரிய திருப்பு முனையாக அமையுமென்று சொல்லியிருக்கிறது! தொடர் ஆரம்பிக்கும் முன்போ, தோனி டெஸ்ட் அணியில் இருக்க வேண்டுமா என்ற அளவிற்கு விவாதங்கள் எழுந்தன! இப்பொழுதோ 2019 வரை தோனிதான் கேப்டன் என்று முழக்கங்கள் கேட்கின்றன! உலகக் கோப்பைக்குப் பின்பு, ஆர்பரித்துக் கொண்டாட வேண்டிய இன்னொரு வெற்றியை இந்திய அணி பெற்றிருக்கிறது!

Cricket - India v Australia 4th Test Day 3

வெற்றியைத் தந்த அணியில், சச்சின் மட்டுமே மூத்த வீரர்! பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி கோலோச்சியவர்கள் எல்லாரும் அணிக்குப் புதியவர்களே! இன்னும் சொல்லப்போனால், சச்சினுடைய பங்களிப்பு இந்தத் தொடரில் பெரியளவு இல்லை!

இந்திய அணி தேடிக்கொண்டிருந்த பல கேள்விகளுக்கான பதில் இந்தத் தொடர் தந்திருக்கிறது! ஓபனிங் தொடர்ந்து சொதப்புகிறது! விஜயும், தவானும் நம்பிக்கையூட்டுகின்றனர். காம்பிர் பேக் அப்பில் இருக்கிறார். டிராவிட் ரிடயர்டு. புஜாரா இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில், டிராவிட் அளவிற்கு வருமா என்ற சந்தேகத்திற்கு, ஏறக்குறைய அவருடைய பாணியிலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்! லக்ஸ்மண் ரிடயர்டு. கோலி இருக்கிறார். இந்தியாவின் பலமான ஸ்பின் எடுபடவில்லை! அஸ்வின், ஓஜா மட்டுமல்ல, ஜடேஜா கூட ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் அளவிலேயே பந்து வீசினார்! புவனேஷ்குமார், இஷாந்தும் பங்களிப்பை நன்றாகவேச் செய்தனர்! இது தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சிற்கு 3 மித வேகப் பந்துவீச்சு, அஸ்வின், ஜடேஜா என்ற கூட்டணிக்கு அடிப்படையாக அமையலாம்!

தற்போதைய ஒரே யோசனை, இந்த பதில்கள் தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது மட்டுமே! ரகானே பெரிய அளவு சோபிக்காவிட்டாலும், ஒரு போட்டியை வைத்து முடிவு செய்துவிடமுடியாது! அணியின் செயல்களை வைத்துப் பார்க்கும் பொழுது, ஏறக்குறைய சச்சினின் இடத்திற்கு அவரைத் தயார் செய்வதாகவே தோன்றுகிறது! தென் ஆப்பிரிக்காவிலும் நல்லதொரு ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்துமாயின், ஆஸி, இங்கிலாந்திற்கெதிரான தோல்விகள் அணியின் ட்ராசிஷன் பீரியட் என எடுத்துக் கொள்ளலாம்!

புதுமுகங்களான தவானும், புவனேஷ்குமாரும் மட்டுமல்ல, திறமையிருந்தும் பல முறை சோபிக்காத முரளி விஜய் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்! தமிழ்நாட்டின் அஸ்வின், தொடரில் அதிக விக்கட்டுகளை எடுத்தாரென்றால், விஜய் அதிக ரன்களை எடுத்திருக்கிறார்! தவான், விஜய், ஜடேஜாவின் ஆட்டம் டெஸ்ட்டிற்கு மட்டுமல்ல, ஒரு நாள் போட்டிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடும்! இது புஜாராவிற்கும் பொருந்தும்!

4 போட்டிகளில், அனைத்திலும் டாசில் தோற்றாலும், ஒரே ஒரு முறைதான் முதலில் இந்தியா பேட்டிங் செய்திருக்கிறது! அதிலும் இன்னிங்ஸ் வெற்றி! மற்ற போட்டிகளிலும் பெரிய வெற்றிகள்! ஏறக்குறைய எல்லா இன்னிங்சிலுமே இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது!

ஆஸி அணிக்கோ இது போதாத கால கட்டம்! திடிரென்று பார்க்கும் பொழுது ஸ்டார், சிடில் எல்லாம் ஆல்ரவுண்டர்கள் போல் தோன்றூகிறது! ஹஸ்ஸியே திரும்ப வந்தால் வரவேற்போம் என கோச் பேட்டி கொடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருப்பது கண்கூடு! கோவன், ஹியூக்ஸ் என நல்ல ஆட்டக்காரர்கள் இருந்தும் அனுபவமின்மை அணியை ரொம்பவே ஆட்டிவிட்டது! மிக மோசமான தோல்வி என்பதைத் தாண்டி, இதை மாற்ற அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதே அணியினருக்கு புரியவில்லை! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வார்னேயைக் கொடுத்த ஒரு அணியால், நல்ல ஸ்பின்னரைக் கொடுக்க முடியவில்லை! மெக்ராத், ப்ரெட்லீ போன்ற கன்சிஸ்டண்ட் வேகப்பந்து வீச்சாளர்களை அவர்களால் உருவாக்க முடியவில்லை! ஜாம்பவான்கள் செல்லல்ச் செல்ல சிறுது சிறிதாக ஏற்பட்ட வெற்றிடம் , தற்பொழுது அணிக்கு ப்ரு பெரும் வெற்று வெளியையே ஏற்படுத்தியிருக்கிறது!

ஒரு கட்டத்தில் இளம் வீரர்கள் வேண்டும் என்பதற்காக கேடிச், கில்கிறீஸ்ட் முதற்கொண்டு பலரையும் ஃபார்மில் இருக்கும் போதே தூக்கிய அணி இப்பொழுது தத்தளித்துக் கொண்டிருக்கிறது! ஹாஸ்ஸியோ இதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தூக்கும் முன்பே தான் ரிடயர் ஆகி விட்டதாக்ச் சொல்கிறார்! மார்ஸ், கவாஜா, ஹென்ரிக்ஸ், வோக்ஸ், பெய்லி, என ஒரு நாள் போட்டிகளில் சிலர் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், அணி புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்! பழைய, எல்லாப் போட்டிகளிலும், எப்பொழுதும் கோலோச்சுகின்ற ஆஸி அணியை உருவாக்க அவர்கள் போக வேண்டிய தூரம் மிக அதிகம் அல்லது இனி அவர்களால் உருவாக்க முடியாது என்பதே!

அதே மென்புன்னகையுடன், பழிவாங்குதல் என்பதெல்லாம் தேவையற்ற வார்த்தைகள் எனப் புறந்தள்ளுகிறார் தோனி, தோனியின் பல முடிவுகளில் விமர்சனங்கள் உண்டு என்றாலும், வெற்றியையும், தோல்வியையும் ஏறக்குறைய சமமாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பாணியை பாராட்டுவதா அல்லது கேள்வியெழுப்புவதா என்று நம்மை சற்று திகைக்கவே வைக்கிறார்! எப்படியிருந்தாலும் அணியின் கேப்டனாக அவர் சாதித்துக் கொடுத்திருக்கும் பல வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்!

பி.கு.
2011 ஐபிஎல்லுக்கு முன்பு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது! இப்பொழுது ஆஸிக்கெதிரான தொடரில் அவர்களை வொயிட்வாஸ் செய்துள்ளது! இந்த இரு பெரும் வெற்றிகளை விடவே மகிழவான செய்தியாக இருக்ககூடிய ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது! அது, இந்த ஐபிஎல் லில் சென்னை போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் விளையாடப் போவதில்லை என்ற செய்தியே! சென்னைப் போட்டிகளில் மட்டும்தானா என்ற ஏக்கம் இருந்தாலும், இந்த முடிவும் மகிழ்ச்சியூட்டுவதாகத்தான் இருக்கிறது! விளையாட்டினில், அரசியல் வேண்டாம் என்பவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்! முதலில் அரசியலையே விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்களை தட்டிக் கேட்டுவிட்டு வாருங்கள்!

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:

அடிச்சாச்சு ஹாட்ரிக்!

இந்தத் தொடர், விஜய்க்கோ, அஸ்வினுக்கோ, தவானுக்கோ மட்டுமல்ல தோனிக்கும், ஒட்டு மொத்த இந்திய அணிக்குமே மிகப் பெரிய திருப்பு முனையாக அமையுமென்று சொல்லியிருக்கிறது! தொடர் ஆரம்பிக்கும் முன்போ, தோனி டெஸ்ட் அணியில் இருக்க வேண்டுமா என்ற அளவிற்கு விவாதங்கள் எழுந்தன! இப்பொழுதோ 2019 வரை தோனிதான் கேப்டன் என்று முழக்கங்கள் கேட்கின்றன! உலகக் கோப்பைக்குப் பின்பு, ஆர்பரித்துக் கொண்டாட வேண்டிய இன்னொரு வெற்றியை இந்திய அணி பெற்றிருக்கிறது!
 Cricket - India v Australia 4th Test Day 3
வெற்றியைத் தந்த அணியில், சச்சின் மட்டுமே மூத்த வீரர்! பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி கோலோச்சியவர்கள் எல்லாரும் அணிக்குப் புதியவர்களே! இன்னும் சொல்லப்போனால், சச்சினுடைய பங்களிப்பு இந்தத் தொடரில் பெரியளவு இல்லை!
இந்திய அணி தேடிக்கொண்டிருந்த பல கேள்விகளுக்கான பதில் இந்தத் தொடர் தந்திருக்கிறது! ஓபனிங் தொடர்ந்து சொதப்புகிறது! விஜயும், தவானும் நம்பிக்கையூட்டுகின்றனர். காம்பிர் பேக் அப்பில் இருக்கிறார். டிராவிட் ரிடயர்டு. புஜாரா இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில், டிராவிட் அளவிற்கு வருமா என்ற சந்தேகத்திற்கு, ஏறக்குறைய அவருடைய பாணியிலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறார்! லக்ஸ்மண் ரிடயர்டு. கோலி இருக்கிறார். இந்தியாவின் பலமான ஸ்பின் எடுபடவில்லை! அஸ்வின், ஓஜா மட்டுமல்ல, ஜடேஜா கூட ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் அளவிலேயே பந்து வீசினார்! புவனேஷ்குமார், இஷாந்தும் பங்களிப்பை நன்றாகவேச் செய்தனர்! இது தென் ஆப்பிரிக்காவில் பந்துவீச்சிற்கு 3 மித வேகப் பந்துவீச்சு, அஸ்வின், ஜடேஜா என்ற கூட்டணிக்கு அடிப்படையாக அமையலாம்!
தற்போதைய ஒரே யோசனை, இந்த பதில்கள் தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது மட்டுமே! ரகானே பெரிய அளவு சோபிக்காவிட்டாலும், ஒரு போட்டியை வைத்து முடிவு செய்துவிடமுடியாது! அணியின் செயல்களை வைத்துப் பார்க்கும் பொழுது, ஏறக்குறைய சச்சினின் இடத்திற்கு அவரைத் தயார் செய்வதாகவே தோன்றுகிறது! தென் ஆப்பிரிக்காவிலும் நல்லதொரு ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்துமாயின், ஆஸி, இங்கிலாந்திற்கெதிரான தோல்விகள் அணியின் ட்ராசிஷன் பீரியட் என எடுத்துக் கொள்ளலாம்!
புதுமுகங்களான தவானும், புவனேஷ்குமாரும் மட்டுமல்ல, திறமையிருந்தும் பல முறை சோபிக்காத முரளி விஜய் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்! தமிழ்நாட்டின் அஸ்வின், தொடரில் அதிக விக்கட்டுகளை எடுத்தாரென்றால், விஜய் அதிக ரன்களை எடுத்திருக்கிறார்! தவான், விஜய், ஜடேஜாவின் ஆட்டம் டெஸ்ட்டிற்கு மட்டுமல்ல, ஒரு நாள் போட்டிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடும்! இது புஜாராவிற்கும் பொருந்தும்!
4 போட்டிகளில், அனைத்திலும் டாசில் தோற்றாலும், ஒரே ஒரு முறைதான் முதலில் இந்தியா பேட்டிங் செய்திருக்கிறது! அதிலும் இன்னிங்ஸ் வெற்றி! மற்ற போட்டிகளிலும் பெரிய வெற்றிகள்! ஏறக்குறைய எல்லா இன்னிங்சிலுமே இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது!
ஆஸி அணிக்கோ இது போதாத கால கட்டம்! திடிரென்று பார்க்கும் பொழுது ஸ்டார், சிடில் எல்லாம் ஆல்ரவுண்டர்கள் போல் தோன்றூகிறது! ஹஸ்ஸியே திரும்ப வந்தால் வரவேற்போம் என கோச் பேட்டி கொடுக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருப்பது கண்கூடு! கோவன், ஹியூக்ஸ் என நல்ல ஆட்டக்காரர்கள் இருந்தும் அனுபவமின்மை அணியை ரொம்பவே ஆட்டிவிட்டது! மிக மோசமான தோல்வி என்பதைத் தாண்டி, இதை மாற்ற அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதே அணியினருக்கு புரியவில்லை! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வார்னேயைக் கொடுத்த ஒரு அணியால், நல்ல ஸ்பின்னரைக் கொடுக்க முடியவில்லை! மெக்ராத், ப்ரெட்லீ போன்ற கன்சிஸ்டண்ட் வேகப்பந்து வீச்சாளர்களை அவர்களால் உருவாக்க முடியவில்லை! ஜாம்பவான்கள் செல்லல்ச் செல்ல சிறுது சிறிதாக ஏற்பட்ட வெற்றிடம் , தற்பொழுது அணிக்கு ப்ரு பெரும் வெற்று வெளியையே ஏற்படுத்தியிருக்கிறது!
ஒரு கட்டத்தில் இளம் வீரர்கள் வேண்டும் என்பதற்காக கேடிச், கில்கிறீஸ்ட் முதற்கொண்டு பலரையும் ஃபார்மில் இருக்கும் போதே தூக்கிய அணி இப்பொழுது தத்தளித்துக் கொண்டிருக்கிறது! ஹாஸ்ஸியோ இதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தூக்கும் முன்பே தான் ரிடயர் ஆகி விட்டதாக்ச் சொல்கிறார்! மார்ஸ், கவாஜா, ஹென்ரிக்ஸ், வோக்ஸ், பெய்லி, என ஒரு நாள் போட்டிகளில் சிலர் நம்பிக்கை ஏற்படுத்தினாலும், அணி புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்! பழைய, எல்லாப் போட்டிகளிலும், எப்பொழுதும் கோலோச்சுகின்ற ஆஸி அணியை உருவாக்க அவர்கள் போக வேண்டிய தூரம் மிக அதிகம் அல்லது இனி அவர்களால் உருவாக்க முடியாது என்பதே!
அதே மென்புன்னகையுடன், பழிவாங்குதல் என்பதெல்லாம் தேவையற்ற வார்த்தைகள் எனப் புறந்தள்ளுகிறார் தோனி, தோனியின் பல முடிவுகளில் விமர்சனங்கள் உண்டு என்றாலும், வெற்றியையும், தோல்வியையும் ஏறக்குறைய சமமாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பாணியை பாராட்டுவதா அல்லது கேள்வியெழுப்புவதா என்று நம்மை சற்று திகைக்கவே வைக்கிறார்! எப்படியிருந்தாலும் அணியின் கேப்டனாக அவர் சாதித்துக் கொடுத்திருக்கும் பல வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்!
பி.கு.
2011 ஐபிஎல்லுக்கு முன்பு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது! இப்பொழுது ஆஸிக்கெதிரான தொடரில் அவர்களை வொயிட்வாஸ் செய்துள்ளது! இந்த இரு பெரும் வெற்றிகளை விடவே மகிழவான செய்தியாக இருக்ககூடிய ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது! அது, இந்த ஐபிஎல் லில் சென்னை போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் விளையாடப் போவதில்லை என்ற செய்தியே! சென்னைப் போட்டிகளில் மட்டும்தானா என்ற ஏக்கம் இருந்தாலும், இந்த முடிவும் மகிழ்ச்சியூட்டுவதாகத்தான் இருக்கிறது! விளையாட்டினில், அரசியல் வேண்டாம் என்பவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்! முதலில் அரசியலையே விளையாட்டாக எடுத்துக் கொள்பவர்களை தட்டிக் கேட்டுவிட்டு வாருங்கள்!
பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்:

இரண்டாவது டெஸ்ட்டிலும் பாஸ்!

PU-Vi

ஒரு வருடம் முன்பு ஆஸ்திரேலியா டூரின் போது இந்தியா எந்த நிலையில் இருந்ததோ, ஏறக்குறைய அதே நிலையில் இப்பொழுது ஆஸ்திரேலியா இருக்கிறது! நம்முடைய பேட்ஸ்மேன்களால் அதிக ஸ்கோரினை எடுக்க முடியவில்லை! பவுலர்கள் 10 விக்கெட்டுகளை எடுத்து முடிக்கும் முன் எதிர் அணியினர் குறைந்தது 450 ரன்களை கடந்திருப்பார்கள்! ஓரிரு சமயம் அவர்களாகப் பார்த்து டிக்ளேர் செய்தனர்! இப்பொழுது இந்தியா திருப்பிக் கொடுக்கிறது! இதுவரை தான் சந்தித்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கண்டுபிடித்துவிட்ட ஒரு தற்காலிக சந்தோஷத்தில் இந்திய அணியும் எஞ்சாயுகிறது! தொடர் இப்பொழுது நம் கையில், அதிக பட்சம் ஆஸி தொடரினைச் சமன் செய்யலாம், ஆனாலும் அணியின் நிலையைப் பார்க்கும் பொழுது, தொடர் நமக்கு என்றே தோன்றுகிறது, வேதாளம் மறூபடி முருங்கை மரம் ஏறாவிடின்!

இந்தப் போட்டி முடிந்தபின், அடுத்த இரு போட்டிக்கான தேர்வு நடைபெறும்! அடுத்து, தெனாப்பிரிக்காவுடனான போட்டி இருக்கும் நிலையில், அடுத்த இரு போட்டிகள், அதற்கான அஸ்திவாரமாகவே அமையும்! மிக முக்கிய தேர்வு ஓபனிங் யார் என்பதிலேயே! சேவாக்கின் இடம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், விஜயின் சதம் அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் ஏற்படுத்தியிருக்க, அவருடன் இணையப் போவது சேவாக்கா, காம்பீரா, அல்லது ஏற்கனவே இடம்பிடித்துள்ள தவானா அல்லாது ரகானேயா? ஒரு வேளை திடிரென்று வாசிம் ஜாஃபரை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! காரணம் விடை காணவேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன!

எப்பொழுதுமே தென் ஆப்பிரிக்கத் தொடர் இந்தியாவிற்க்கு ஒரு சத்திய சோதனையாக இருக்கும் நிலையில், முழுக்க முழுக்க அனுபவம் குறைந்த இரு ஓபனிங் பாட்ஸ்மேன்களை அனுப்ப இந்தியா தயாரா? இந்திய பிட்சில் பெரும் வெற்றி மட்டும் பேட்ஸ்மேனை கணிக்க போதுமா? ரகானேயை மிடில் ஆர்டருக்கு மட்டும் பயன்படுத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ஓபனிங்கிற்கு இந்தியாவின் அஃப்ஷன்ஸ் இப்பொழுது விஜய், தவான், காம்பீர், ரகானே, சேவாக், ஜாஃபர் மட்டுமே (இதில் கடைசி மூன்று பேருக்கு வாய்ப்பு குறைவு(?)) அடுத்த இரு போட்டிகளில் விஜய் மீண்டும் சொதப்பினால் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது சற்று சுவாரசியத்தைக் கூட்டவேச் செய்கிறது!

சொல்லப்போனால், கடந்த வருடத் ஆஸித் தொடரில் இந்திய அணி இன்னும் பலம் வாய்ந்த அணியே! டிராவிட்டும், லக்ஸ்மணனும் ரிட்டயராகியிருக்க வில்லை! பந்துவீச்சில் ஜாகீர்கான் இருந்தார்! இருந்தும் நாம் வாங்கிய அடி சாதாரண அடி இல்லை! இந்தியா இப்பொழுது நம்பிக் கொண்டிருப்பது, புஜாராவும், கோலியும் தங்களுடைய இடத்தை ஓரளவு நிரப்பிக் கொண்டது மட்டுமல்லாமல், இதே ஆட்டத்தைத் தொடர்வார்கள் என்பதுமே! ஆனாலும், இந்தத் தொடரில் நான் கண்ட இன்னொரு மிக முக்கியக் மாற்றம், வெற்றிக்கான காரணம், தோனி தன் இடத்தை மட்டுமல்ல, ஆட்டத்தையும் முன்னேற்றியிருப்பதுமே!

போனப் போட்டியைப் போலல்லாமல், புவனேஷ் குமாரின் ஆரம்ப விக்கட்டுகள்தான், ஆஸி அணியின் சரிவுக்கு காரணம்! ஆஸிக்கு அது பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியது என்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்தது! போனப் போட்டியில் ஏற்படுத்திய நம்பிக்கையை, இந்தப் போட்டியில் ஜடேஜா உறுதிபடுத்தியிருக்கிறார்! ஹர்பஜனுடைய பந்து வீச்சு முழுமையாக இல்லா விட்டாலும், ஓரளவு முன்னேறி இருந்தது! இஷாந்துக்கு தொடரில் முதல் விக்கெட், அது மிக முக்கிய திருப்பு முனையும் கூட! விஜய், புஜாராவின் பார்ட்னர்ஷிப், டெஸ்ட் போட்டியின் இலக்கணம் சொல்வதாய் அமைந்தது! ஆக மொத்தத்தில் இந்திய அணிக்கு இந்தப் போட்டி அதனுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கான வழியையும் ஓரளவு காட்டியிருக்கிறது! அணியின் ஒரே எதிர்பார்ப்பு, இது தொடரவேண்டும் என்பதே!

ஆஸி அணிக்கு இது ஒரு முக்கிய கட்டம்! ஏறக்குறைய வார்னே, மெக்ராத் போன்ற ஜாம்பவான்கள் போன பின் அணி பந்து வீச்சில் கண்ட சரிவை, இப்பொழுது பாட்டிங், பவுலிங், கீப்பிங் என ஒட்டு மொத்த துறைகளிலும் சந்திக்கிறது! வார்னர், வாட்சன், க்ளார்க் என மூவர் மட்டுமே அச்சுறுத்தக் கூடியவர்களாகத் தெரிகின்றனர்! லியானை விட்டு தோகர்ட்டியை தேர்வு செய்தது ஆஸியின் பெரிய தவறு! மாக்ஸ்வெல்லின் ஆஃப் ஸ்பின், அதை ஈடு செய்யும் என நினைத்திருந்தாலும், தோகர்ட்டியால் ஜடேஜா அளவிற்கு கூட பந்து வீச முடியவில்லை! அடுத்து என்ன செய்வது என்பது அவர்களுக்கே தெரியுமா என்பது தெரியவில்லை! இருந்தாலும், மோதுவது ஆஸியுடன் என்பதால், எதுவும் நடக்கலாம்!

ஆனாலும் அடுத்த இரு போட்டிகளில் இந்திய அணி முடிவு செய்யவேண்டிய விஷயம் சிலவை இருக்கின்றன! அடுத்த இரு போட்டிகள் தென் ஆப்பிரிக்காவிற்கெதிரான போட்டிக்கான அஸ்திவாரம் என்றால், இந்திய அணி இதே இரு ஸ்பின்னர்கள், இரு மிதவேகப் பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் (ஸ்பின்) காம்பினேஷனிற்கான வாய்ப்பு மிகக் குறைவு! கண்டிப்பாக மூன்று மிதவேகப் பந்துவீச்சினை இறக்க வேண்டி வரும், ஒரே ஸ்பின்னராக அஸ்வினும் இருப்பார்கள். ஜடேஜாவை வைத்துதான் இந்தியா களமிறாங்குமா? ஏனெனில் ஜடேஜா இன்னும் பேட்டிங்கில், நிரூபிக்க வேண்டியது நிறைய உள்ளது! அப்படி ஜடேஜா இல்லாவிடின், வெறுமனே நான்கு பந்து வீச்சாளர்கள் உடன் இறங்குவது சரியா? மூன்றாவது பந்துவீச்சாளர் யார்? ராகானேயை நேரடியாக தெ. ஆப்பிரிக்காவில் பரிட்சிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலினை அடுத்த இரு போட்டிகளின் முடிவில் இந்திய அணி கண்டுபிடிக்குமா என்பது போகப் போகத் தெரியும்…

பிரிவுகள்:கிரிக்கெட் குறிச்சொற்கள்: