தொகுப்பு

Posts Tagged ‘சினிமா’

தனி ஒருவன் – திரைப்பார்வை!

“இப்படத்தில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே!, நிஜத்தில் வருவது போன்று கொடூரமானவையல்ல”- என்ற டிஸ்க்ளெய்மருடன்தான் படமே ஆரம்பமாகிறது!

ஹீரோவுக்கென்று ஃப்ளாஸ்பேக் வைத்து பழகிய தமிழ் சினிமாவில், வில்லனின் ஃப்ளாஸ்பேக்குடன், அதுவும் ஒரு பெரும் கட்சியின் தலைவராக வரும் நாசரையே தடுமாறச் செய்யும் காட்சியுடன் அரவிந்த் சாமியின் வாழ்க்கையும், திரைப்படமும் ஆரம்பமாகிறது!

தனி-ஒருவன்-படத்திற்காக-ஒரு-மாதம்-பயிற்சி-எடுத்த-’சித்தார்த்-அபிமன்யு’

காட்சிகளில் ஆங்காங்கே சின்னச் சின்ன ட்விஸ்ட்டுகள், பின் திடீரென பெரியதொரு ட்விஸ்ட் என்று படம் முழுக்க நம்முடைய சுவாரசியத்தை கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.

டீசர்களுக்கு கூட விமர்சனம் வைக்கின்ற, அதுவும் போஸ்டர் பார்த்தே கதையைச் சொல்கின்ற சோஷியல் மீடியா காலத்தில், நாளை வெளியாகும் படத்தின் நடிகர் ந்டிகைகளை கூட்டி வந்து, முந்தைய நாளே படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட வைத்து, அந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்து, இடையிடையே கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்று படத்தின் கதையையும், முக்கியக் காட்சிகளையும் காட்டிவிடும் ஊடகங்கள் இருக்கும் காலத்தில் த்ரில்லர், விறுவிறுப்பான படங்களைக் கொடுப்பதே ஒரு சாகசம்தான்!

ஏனெனில் படம் முடிந்து சில நாட்கள் கழித்துச் சென்று படம் பார்க்கும் நபர்களுக்கு, அந்த சுவாரசியத்தில் பலதைக் கெடுத்து விடுவார்கள். நானெல்லாம் படம் பார்ப்பது என்று முடிவெடுத்து விட்டால், படம் பார்க்கும் வரை அதன் ப்ரமோஷன் காட்சிகள், அந்த படக்குழுவின் பேட்டிகள், முக்கியமாக படத்தின் திரை விமர்சனம் என எதையும் பார்க்க மாட்டேன்! படத்தையும், பெயர் போடுவதற்க்கு முன்பிருந்தே பார்க்க வேண்டும், இல்லாவிடின் கடுப்பாகிவிடும். அப்படி ஒரு வியாதி நமக்கு!

படம் பார்த்து முடிந்தவுடன் தோன்றியது, கனக்கச்சிதமான க்ரைம் நாவல் போல் இருக்கிறதே? என்றுதான். சுபா அல்லது பிகேபி போன்ற ஆட்கள் யாருடைய பங்காவது இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது! ஆனாலும், டைட்டிலில் அவர்கள் யாருடைய பெயரையும் பார்த்த ஞாபகம் இல்லை. கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றில் மோகன் ராஜாவின் பெயரே இருந்தது! பின் செய்திகளில் படித்தபின் தான் தெரிந்தது, சுபாவின் பங்கும் படத்தில் இருந்திருக்கிறது!கச்சிதமான பங்களிப்பு! மிக விறுவிறுப்பான திரைக்கதை இப்படத்தின் இன்னொரு ஹீரோ!

ஏறக்குறைய பேராண்மை கெட்டப்பில் ஜெயம் ரவி! ஆக்‌ஷன் படங்களில் ஒன்று ஹீரோ அல்லது வில்லன் கத்தவேண்டும் அல்லது பஞ்ச் டயலாக் பேசவேண்டும் என்கிற விதியை மீறி, அந்தந்த கேரக்டர்களாகவே வரும் அரவிந்தசாமியும், ஜெயம் ரவியும் படத்தின் பெரும் பலம்! ‘ஏய்’ என்ற டயலாக்கே படத்தில் இல்லை!

நயந்தாராவிற்கு வருடங்கள் கூடக் கூட, அழகும், மார்க்கெட்டும் கூடிக் கொண்டே போகின்றது!

jayam1-600x300

வழக்கமான டூயட்டுக்காக மட்டுமான அல்லது லூசுத்தனமாக மட்டுமே நடந்துகொள்வதற்கான ஹீரோயினாக இல்லாமல், ஜெயம் ரவியின் உறுதுணையாக நிற்கின்றார்! அதிலும், ஜெயம் ரவி மனமுடைந்திருக்கும் சமயத்தில் வரும் காட்சியிலும், ப்ரபோஸ் பண்ணும் காட்சியிலும் அள்ளுகின்றார்! அறிமுகக் காட்சியில், ஜெயம் ரவியை விட அதிகம் கைத்தட்டுகள் அவருக்குதான்!
ஜெயம் ரவியின் நண்பர்களுக்கும் சரி, தம்பி ராமையாவிற்கும் சரி, ஏறக்குறைய படத்தில் எல்லாருக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது!

மோகன் ராஜா இத்தனை நாளாக, புளி சோற்றில் முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றியிருந்திருக்கிறார்! இப்பொழுது கச்சிதமான மசாலாவுடன், மொகல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்! கண்டிப்பாக, தெலுங்கு, ஹிந்தியில் இதற்கு கடும் கிராக்கி உண்டு! அரவிந்தசாமி மற்றும் ஜெயம் ரவி எந்தளவு இந்தப்படத்திற்கு பலமோ, அதைவிட பெரும் பலம் மோகன் ராஜா! அதுவும் வசனங்கள் அட்டகாசம்! மிகவும் சின்சியரான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்! பாராட்டுக்கள்!

TO10

நயந்தாரா மற்றும் ஜெயம் ரவி கேரக்டரைசேஷன் அருமை என்றால், அரவிந்த்சாமியின் கேரக்டரைசேஷன் மிக அருமை! கம்போஸ்டு வில்லன்! வாய்ஸ் மாடுலேஷன்களில் நயந்தாராவும், அரவிந்த்சாமியும் மனதைக் கவர்கிறார்கள்!

”உன் நண்பன் யார்னு தெரிஞ்சா உன் கேரக்டர் தெரியும், ஆனா உன் எதிரி யார்னு தெரிஞ்சாதான் உன் கெப்பாசிட்டி தெரியும்”, வணிகச் செய்தி என்னமோ ஒரு பக்கம்தான், ஆனா அந்த ஒரு பக்கம்தான் மத்த எல்ல பக்கச் செய்திகளுக்கும் காரணம்”,” பணம் இருக்குற இடத்துல எல்லாம் குற்றம் கண்டிப்பா இருக்கும், வாழ்க்கை முழுக்க குற்றங்களைத் தேடி போறவன் நான், வாழ்க்கை முழுக்க பணத்தைத் தேடிப் போறவன் அவன், அதுனால நாங்க கண்டிப்பா சந்திப்போம்” போன்ற ஹீரோவுக்கான வசனமாகட்டும்…

”காதலி சுட்டால், எதிரி மடியில் மரணம்”, “நீ கொடுத்த வாழ்க்கையை நான் எடுத்துக்கலை, ஆனா, நீ கேட்ட வாழ்க்கையை, நான் உனக்கு கொடுக்குறேன், நாட்டுக்காகல்லாம் இல்ல, உனக்காக, எடுத்துக்கோ”, ‘அவ, உலகத்தையெல்லாம் சுத்த வேணாம், என்னச் சுத்தி வந்தா போதும்”, போன்ற, கடைசி வரை கெத்து குறையாத, வில்லன் வசனமாகட்டும், எதையும் பஞ்ச் டயலாக்காக வைக்காமல், இயல்பாக பேசியதுதான் படத்திற்கு பெரிய பில்டப் கொடுக்கிறது!

நகைச்சுவையும் மிக இயல்பாக படத்துடன் வருவது படத்தின் இன்னொரு பலம்! நம்மூரில், அறிவுஜீவிகள் என்ன பண்றாங்கங்கிற வசனம் க்ளாஸ்!

படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு மிக முக்கிய விஷயம், ஆர்கனைஸ்டு க்ரைம் பற்றி பேசியிருப்பதுதான்! – எல்லாச் சின்னச் சின்னக் குற்றங்களுக்கு பின்னாடியும் ஒரு பெரிய காரணம் இருக்கனும்னு அவசியமில்ல, ஆனா ஒவ்வொரு ஆர்கனைஸ்டு க்ரைமுக்கு முன்னாடியும் இதுமாதிரியான சின்னச் சின்ன குற்றங்களை வெச்சு திசை நம்மை திருப்பிட்டிருக்காங்க!
நாம் செய்தித்தாள்களில் படித்திருக்கும், எதோ ஒரு தீ விபத்து, எங்கோ நடக்கும் சாலை விபத்து, சாதாரண கடத்தல் போன்ற சம்பவங்களின் பின்புலம் வேறொன்றாகவும் இருக்கக் கூடும்! செய்தித் தாளின் வெவ்வேறு செய்திகளுக்கிடையே இருக்கக் கூடிய தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இத்திரைப்படம்! இப்பொழுதும், ஏதேனும் மத்திய அரசு அல்லது மாநில அரசு அலுவலகத்தில் தீ விபத்து ந்டந்தது, உயிரிழப்பு இல்லை, ஆனாலும் மதிப்பு மிக்க ஆவணங்கள் தீயில் அழிந்தன என்ற செய்தியின் பிண்ணனி வெறெதுவுமாகவும் இருக்கக் கூடும்!

சண்டைக்காட்சிகள் அதிகம் இல்லாத ஆக்‌ஷன் படம், நாயகன் ஜெயம் ரவியை விட அதிகம் அபிமானத்தை ஏற்படுத்தும் வில்லனாக அரவிந்த்சாமி, பஞ்ச் டயலாக் இல்லாமலேயே கொடுக்கும் பில்டப்புகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நகைச்சுவை, நாயகனின் காதலுக்காக இல்லாமல், அவனின் கொள்கைக்காக உதவும் நண்பர்கள் கூட்டம் என்று, தனி ஒருவன், தனித்து நிற்கிறான்!

Don’t miss it!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

ஆபாவாணன் – ஒரு பன்முகக் கலைஞன்

90 களில் நடந்த சம்பவம் இது. வெறும் பள்ளி ஆண்டு விழாதான் அது. வருடா வருடம் நடக்கும் விழாவைப் போலவே, அந்த வருடமும் எம் பள்ளியில் அந்த விழா கொண்டாடப்பட்டது. ஆனாலும் அந்த வருடம் மட்டும் கட்டுக்கடங்கா கூட்டம் பள்ளி வளாகத்தில். பெற்றோருக்கும், மக்களுக்கும் அனுமதி தரும் விழா அது ஒன்றுதான் என்றாலும், இந்த முறை இந்தளவு கூட்டம் என்பது அனைவரையும் சற்றே ஆச்சரியப்படுத்தினாலும், ஓரளவு அதை முன்னரே ஊகித்து வைத்திருந்தனர் எம் பள்ளியில். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்தான் என்றாலும், அவருடைய அப்போதைய நிலை பொதுமக்களின் ஆர்வத்திற்கு பெரிதும் காரணமாக இருந்ததுமில்லாமல், வழமையாக கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் கலைந்து விடும் கூட்டம், அன்று விழா முடியும் வரையும் இருந்து, அந்த சிறப்பு விருந்தினரை கண்டு பேசி, ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு சென்றது. விருந்தினர் சினிமாத் துறையைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணமே, மக்களின் கவனத்தை இழுக்கும் எனும் போது, இவருடைய சில படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமில்லாமல், திரைத்துறையில் ஒரு அலையையும் கிளப்பி விட்டது எனில், மக்களின் ஆர்வத்திற்குச் சொல்லவா வேண்டும்??? அந்தப் பள்ளியின் பெயர்: நிர்மலா மேல்நிலைப் பள்ளி, கொளத்தூர், சேலம் மாவட்டம். அந்த சிறப்பு விருந்தினரின் பெயர்: ஆபாவாணன்

80 களின் பிற்பகுதி அது. தமிழ் சினிமாவின் பொற்காலமாகக் கருதப்படும் 70 மற்றும் 80களின் ஆரம்பத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் ஆகியோரிடமிருந்து மிகச் சிறந்த கலை(தை)யம்சமுள்ள படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. கமர்ஷியங்கள் படங்களா, கலைப்படங்களா எனத் தன் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு கமலும் கூட சற்று திணறும் வகையில் ராஜ பார்வை, சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை என்று எல்லாம் கலந்து படங்கள் வந்து கொண்டிந்தன. ரஜினியும் கூட பாயும் புலி, தாய் வீடு போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும், நெற்றிக்கண், புதுக்கவிதை போன்ற சற்றே வித்தியாசமான படங்களிலும் நடித்து வந்தார்… அந்தக் காலக்கட்டத்தில் நடை பெற்ற மிக முக்கியமான அறிமுகங்கள் என்றால் பாண்டியராஜன் (இயக்குநராக), தொடந்து சட்டம் சம்பந்தமான திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், அவரது பெரும்பான்மை படங்களின் நாயகனான விஜயகாந்த் (முன்பே அறிமுகமாகி இருந்தாலும், இயக்குநர்களும், ரஜினி, கமல் ஆகியோர் ஆக்கிரமித்திருந்த அந்த காலகட்டத்தை நன்றாகவே தாக்குபிடித்தார்) ஆவர். ஆனாலும் இவர்கள் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் மிக முக்கிய அறிமுகம் மைக் மோகனும். ஜெயமாலினியும்தான் 🙂

ஆரம்பத்தில் கலை, பின்பு மெல்ல மெல்ல கமர்ஷியல் என ட்ரெண்ட் மெல்ல மாறினாலும் 86 ல்தான் அந்த பெரியதொரு அலை உருவானது. புதிய தொழில்நுட்ப அலையாக மட்டுமல்லாமல், அதுவரை ஆங்கிலப்படங்களில் மட்டுமே கண்டுவந்த ஒரு அனுபவத்தை தமிழ் சினிமாவில், ரசிகர்களுக்கு ஒரு திரைப்படம் கொடுத்தது மட்டுமல்லாமல், ஓரளவு தாக்குப்பிடித்து வந்த விஜயகாந்திற்கு தனது பாணி என்ன என்பதையும் புரியவைத்தது மட்டுமில்லாமல், அதுவரை மக்கள் அதிகம் அறிந்திருக்காத திரைப்படக் கல்லூரியின் முகவரியையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது அந்தத் திரைப்படம். அதன் பெயர் “ஊமை விழிகள்”. வெறும் கதையில் மட்டுமல்ல, காட்சியமைப்பிலும் சரி, பாடல் வரிகளிலும் சரி, இசையிலும் சரி என எல்லாவற்றிலும் புதியதொரு உணர்வுகளை பரப்பியது ஊமை விழிகள். விஜயகாந்த், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், சந்திரசேகர், சரிதா, அருண் பாண்டியன் என ஒரே ஸ்டார் பட்டாளமாக இருந்தாலும், ரவிச்சந்திரன் முதற்கொண்டு அனைவருக்குமே ஒரு பேர் சொல்லும் படமாகவே அது அமைந்தது. தனது முதல் படத்திலேயே, மிக வித்தியாசமாக மட்டுமின்றி, மிக தைரியமான ஒரு படத்தைக் கொடுத்த ஆபாவாணன் என்ற பெயர் தமிழக மக்களிடையே மிக ஆர்வமாக பார்க்கப்பட்டது.

மைக் மோகனின் படங்களின் மூலம் இசைஞானி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தப்படத்தின் இசையமைப்பாளர்கள் மட்டுமல்ல, இசையும் கூட மிகப் புதிதாய் இருந்தது மக்களுக்கு. அதுவும் ”தோல்வி நிலையென நினைத்தால்” பாடல் ஏற்படுத்திய அதிர்வுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, ஈழத்திலும் கேட்டது. இத்திரைப்படத்தின் வெற்றிதான் பின்னாட்களில் ஆர்.கே செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் முதற்கொண்டு பல திரைபடக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவில் கால்பதிக்க காரணமாய் அமைந்தது.

அந்தக் காலகட்டத்தில் வந்த மிக முக்கியமான இந்தத் திரைப்படத்திற்குப் பின்பு ஆபாவாணன் மூலமாக வந்த வெற்றிப்படங்கள் பல இருந்தாலும், முதல் படத்திற்கு இணையான அதிர்வை மற்ற படங்கள் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஆனாலும், ஏறக்குறைய முதற்படத்திற்கு இணையான ஸ்டார் பட்டாளத்தைக் கொண்டு அவர் கதை மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு மிகப் பெரிய வெற்றிப் படம் ’செந்தூரப் பூவே’. தொழில்நுட்பத்திலும், கதைக்களனிலும் ஏதாவாது வித்தியாசமாகவே முயற்சி செய்யும் ஆபாவாணன், இந்தப்படத்தில் சிறப்பு சப்தங்களை (ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்) இணைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் வரும் தொடர்வண்டி காட்சிகளில் சிறப்பு சப்தங்களைக் கொடுக்க செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் வரும் போது ஏற்படும் சத்தத்தை பதிவு செய்து இந்தப் படத்தில் பயன்படுத்தினார். இது போன்ற முயற்சிகள்தான் தமிழ் திரை உலகம் சிறப்பு சப்தங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த காரணமாய் அமைந்தது. ஏன், சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் என்ற ஒருவரை அதிகம் தமிழ் படங்களில் பயன்படுத்த ஆரம்பித்ததே ஆபாவாணனுக்கு பிறகுதான்.

செந்தூரப்பூவே படத்தை பார்த்த, அப்போது இயக்குநராகியிராத ராம்கோபால் வர்மா இவரை சந்தித்து தொழில் நுட்ப விஷயங்கள் பெரிதும் கவர்ந்ததாக சிலாகித்ததோடு இல்லாமல் தெலுங்கில் இதனை டப் செய்தால் மிகப் பெரும் வெற்றியடையும் என்று அன்னபூர்ணா ஸ்டூடியோவில் சொல்லியிருக்கிறார். அவர்கள் முடியாது என மறுத்தாலும், வேறொரு தயாரிப்பாளர் அதனை டப் செய்து வெளியிட்டு தெலுங்கில் மிகப் பெரிய ஹிட் (200 நாட்களுக்கும் மேல்) ஆனது படம். படத்தின் வெற்றியை தெளிவாக ஊகிக்க முடிந்ததாலேயே, ராம்கோபால் வர்மாவிற்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அதே அன்னபூர்ணா ஸ்டூடியோ வாய்ப்பு கொடுத்தனர். அப்படி அவர்கள் கொடுத்த படம்தான் ‘சிவா’.

இரண்டு படங்களில் இருக்கும் ஸ்டார் பட்டாளங்களுக்கு, படம் வெற்றியடைந்ததில் பெரிய ஆச்சரியமில்லாமல் போகலாம். ஆனால் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் நடிகைகளை கொண்டு அவர் கொடுத்த படம்தான் ‘இணைந்த கைகள்’. இன்றளவும் எனக்கு மிகப் பிடித்த படமாக இது இருக்கிறது. சிறுவயதில் முதன் முதலில் இந்தப்படத்தைப் பார்த்த போது அதிகம் பார்த்தறியாத ஆங்கிலப்படங்களுக்கு இணையாக அதன் காட்சிகள் இருந்தது அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். மும்பை ட்ரைவ் இன் தியேட்டரில் இந்தப்படம் வெளியான போது ஏற்பட்ட தள்ளு முள்ளு, அந்தத் தியேட்டரையே மூடும் நிலையை உண்டாக்கியது. கோவை சாந்தி தியேட்டரில் இந்தத் திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இந்தப் படத்தியில் ஆபாவாணன் பெயர் டைட்டிலில் வரும்பொழுது ரசிகர்கள் சில்லறை காசுகளை வீசி ஆர்பரித்தனர். அந்தளவிற்கு ஒரு பெருமையை சம்பாதித்திருந்தார். இந்தப்படத்தில் வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த புது உணர்வினை உண்டாக்கின. வெளிநாடுகளில் ஒரே நேரத்தில் ஒரு தமிழ்படத்தை வெளியிடுவது இந்தப்படத்தின் வெற்றியின் மூலமே ஆரம்பிக்கப்பட்டது. இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்கு இந்தக் குழு செலவிட்ட 40 நாட்களை தமிழ் திரையே அப்போது ஆச்சரியமாக பார்த்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இவரது ஆதர்சன நாயகனாக கருதப்பட்ட அருண்பாண்டியன் படித்ததும் அதே எம் நிர்மலா மேல்நிலைப் பள்ளி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது கூட அவர்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணமாக இருக்கக் கூடும்…

இவருடைய பங்களிப்பில் வந்த மற்ற சில படங்கள் தாய் நாடு, உழவன் மகன், முற்றுகை, காவியத் தலைவன், கருப்பு ரோஜா. இது இல்லாமல் கங்கா யமுனா சரசுவதி என்ற நெடுந்தொடரையும் தந்திருக்கிறார். ஏற்கனவே ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், சவுண்ட் ரெக்கார்டிஸ்டின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஆபாவாணனால், கருப்பு ரோஜாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, டிடிஎஸ் ஒலி நுட்பம் தமிழ் சினிமாவில் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. படம் உண்மையில் ஒரு தோல்வியே என்றாலும், ப்ளாக் மேஜிக்கை மையமாக வைத்து வெளிவந்த படம் எனக்குத் தெரிந்து இதுதான். வெளி வரும் படங்களும் ஒன்று ஜமீன் கோட்டை வகையறாவாக இருக்கிறது அல்லது பேய் படங்களாக இருக்கிரது. கதாநாயகி ஆரம்பத்திலேயே இறந்து விட, மிக வித்தியாசமான கதை மாந்தர்களோடு, ஸ்டார் வேல்யூ இல்லாத நாயகனோடு, முழுக்க முழுக்க ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இது போன்றதொரு படம் எடுக்க உண்மையிலேயே ஒரு துணிவு வேண்டும்….

தான் பள்ளியில் படிக்கும் போதே ’சித்திரக் குள்ளர்கள்’ என்ற நூலை எழுதி சொந்தமாக பதிப்பித்து விற்ற ஆபாவாணன், தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் என்ற தொழில் நுட்பம் உருவாகி வளர்வதில் பெரும் பங்கு வகித்தார்.

கதை, இயக்கம், திரைக்கதை என பல தளங்களில் சிறந்திருந்த இவர் இசையையும் விட்டுவைக்கவில்லை. தனக்குப் பிடித்த மெட்டுக்களை கொடுத்து விட்டு மிக நல்ல பாடல்களை இசையமைப்பாளர்கள் (பெரும்பாலும் மனோஜ் கியான்) மூலம் உருவாக்கிக் கொடுத்த ஆபாவாணன் பெயரை சில இடங்களில் இசை உதவி என்ற இடத்தில் பார்த்திருக்கலாம். இசை உதவி என்றிருந்தாலும், இவரது திறன் பார்த்து இசைஞானியே கேப்டனிடம், அவருக்கு நன்றாக இசையமைக்க வருகிறது, தனியாக இசையமைக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்திருக்கிறார். தவிர, நான் அதிகம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததில்லை, ஆனால் இந்தப்படத்தின் பிண்ணனி இசைக்காக நான்கு முறை சென்று பார்த்திருக்கிறேன் என இவரது இணைந்த கைகள் படத்தைப் பார்த்துவிட்டு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் வியந்திருக்கிறார். ஆபாவாணனின் இசையமைப்பில் பங்கேற்ற சில நபர்களின் பெயர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், தினா, சபேஷ் – முரளி (எங்கியோ கேட்ட மாதிரி இருக்குல்ல?). ஒரு சமயத்தில் இவருக்கு 44 படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தாலும் தொடர் பணி காரணமாக இசையமைக்கவில்லை.
பள்ளியிலேயே சொந்தமாக நாடகங்களை எழுதி அரங்கேற்றிய ஆபாவாணன், இசையமைப்பில் பங்கேற்றதுமில்லாமல் பல பாடல்களை எழுதியதுமில்லாமல், சில பாடல்களை பாடியுமிருந்திருக்கிறார்.. மனம் சோர்ந்து கிடக்கும் போதோ, வெறுமையாக உணரும் போதோ, அவர் எழுதிய அந்தப்பாடலைக் கேளுங்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். இந்த சக்தி உணரப்பட்டதால்தானோ என்னமோ, ஈழத்தில் இந்தப் பாடல் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அந்தப் பாடல்…

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பி.பி. ஸ்ரீனிவாசை வைத்து பாடிய இந்தப் பாடலில் அனைவரும் சேர்ந்து பாடும் தருணத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் என் உடல் சிலிர்க்கும். இதே போன்று நீண்ட இடைவேளைக்கு டிஎம்எஸை வைத்து தாய்நாடு படத்தில் எல்லா பாடல்களையும் பாடவைத்தாரென்றாலும், அதே போராட்ட உணர்வை மையப்படுத்தி எழுதிய பாடல், http://www.inbaminge.com/t/t/Thai%20Naadu/Naan%20Muthan%20Muthal.vid.html

சிறுவயதில் எனக்குத் தெரிந்து எல்லா பள்ளி கல்லூரி மேடைகளிலும் இரு பாடல்கள் எப்பொழுதும் நடனத்திற்கு தயாராக இருக்கும். எப்பொழுதும் பெண்களின் நடனத்திற்காகவே எழுதப்பட்டதாக தோன்றும் அந்தப் பாடல்கள் ’பூ பூக்கும் மாசம் தை மாசம்’ மற்றும் ’சின்னச் சின்ன வண்ணக் குயில்’. இதற்கடுத்து ஓரளவு அந்த இடத்தைப் பிடித்தது, அதுவும் ஆண்களால் அதிகம் விரும்பப்பட்டது ’சிக்கு சிக்கு புக்கு ரெயிலே’ தான். இதே வரிசையில் எல்லா பள்ளி, கல்லூரி மேடைகள் மட்டுமல்ல, எல்லா தொலைக்காட்சி சான்ல்களின் போட்டியிலும் தவறாமல் பங்கேற்கும் ஒரு பாடல் இவர் பாடியதுதான். கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு ஏற்கனவே பிடித்த பாடலாக இது இருக்கும். http://www.inbaminge.com/t/r/Rendu%20Per/Varan%20Varan.eng.html

இவர் இயக்கமாக இல்லாவிட்டாலும், இவருடைய சிஷ்யரின் இயக்கத்தில் வெளிவந்த தம்பி அர்ஜூனா படத்தில் வரும் ஒரு பாடலையும் இவர் பாடியிருக்கிறார். எப்படி ’தோல்விநிலையென நினைத்தால் பாடல்’ போராளிகளுக்காவே எழுதப்பட்டது என்ற செய்தி வந்ததோ, அதே போன்று இந்தப் பாடலும் புலிகளை மையப்படுத்தி எழுதியதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கேட்டுப்பாருங்கள்.
http://www.inbaminge.com/t/t/Thambi%20Arjuna/Puligal%20Konjam%20ii.eng.html

ஒரு அலையை உருவாக்கிய இந்த திறமைசாலியின் ஆரம்பமும் தற்போதைய நிலையும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. முதன் முதலில் இவர் தர விரும்பிய படம் ‘இரவுப்பாடகன்’ ஆனால் அது வெளிவரவே இல்லை. இதே போல் விஜயகாந்தை வைத்து இவர் தர நினைத்த மூங்கில் கோட்டையும் வெளிவரவே இல்லை. இறுதியாக இவர் தர நினைத்த ’இரண்டு பேர்’ திரைப்படமும் வெளிவராமலே போய்விட்டது. வித்தியாசமாகவே தர நினைத்தாலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய நட்டத்தினை அடைந்தார். இறுதியாக இவர் பங்களிப்பில் வெளி வந்தது கங்கா யமுனா சரசுவதி நெடுந்தொடரே. எனக்குத் தெரிந்து பாலச்சந்தரின் நாடகத்திற்குப் பின்பு, சன் டிவி நெடுந்தொடரில் காலோச்சிய காலத்தில் ராஜ் டிவியில் வந்து ஓரளவு வெற்றியடைந்த தொடரும் அது ஒன்றே! இவருடையது மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் கூட ஏனோ இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கொடுத்ததில் பாதி வெற்றிப்படங்கள், பாதி தோல்வியாக இருந்தாலும், தன் படங்களின் மூலம் ஏற்படுத்திய, அதிர்வுகளையோ, அதில் தொனித்த வித்தியாசங்களையோ, பிண்ணனியிலுள்ள திறமை கலந்த உழைப்பையோ எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது….

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

அங்காடித் தெரு – திரைப் பார்வை

திரைப்படம் என்பது வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டும் அல்ல. நம் திரைப்படங்கள் சற்றே தரத்துடனும், பன்முகத் தன்மையும் கொண்டிருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்போ, விருப்பமோ கொண்டிருப்பவர்களா நீங்கள்??? அப்படியெனில் எந்த ஒரு விமர்சனத்தையும், விளம்பரக் காட்சிகளையும் கவனிக்காமல் தைரியமாக அங்காடித் தெரு படத்திற்குச் செல்லுங்கள்!!! ஏனெனில், மிகப் புதிதாய் படத்தின் காட்சிகளைக் காணும் போது ஏற்படு(த்து)ம் அதிர்வுகள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை!!!

************************************************************************************************************

இவர்கள், தான் படித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய அடுத்த வேளை சோற்றுக்கு தந்தையை எதிர்பார்த்திருந்து காத்திருந்தாலும், பார்த்தவுடன் ஏற்பட்டு விடும் காதலுக்காக 50 ரவுடிகளை அடித்து துவைக்கக் கூடிய மாவீரர்கள் இல்லை!!! சமூகத்தில் புரையோடிப் போன அக்கிரமங்களைக் கண்டு வெகுண்டு, வில்லினின்று புறப்பட்ட அம்பாக ஓரிரு வாரங்களில் எல்லா ரவுடிகளையும், அரசியல்வாதிகளையும் தீர்த்து சொர்க்க பூமியைப் படைக்கும் பராக்கிரமசாலிகளும் இல்லை!!! ஆனால் இவர்கள் நாயக, நாயகியர்கள்!!!

இவர்களுக்கு வாழ்வில் பெரிய குறிக்கோள்கள் இல்லை, வாழ்வதைத் தவிர! வாழ்வின் அழகியலைப் ப(டி)டைக்க காதலன், காதலி அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இல்லை, அந்தக் காதல் மட்டும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்!!! சிறுவயதில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்படும் மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை என்ற கேள்விக்கான விடை தேடலிலேயே தம் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவு செய்பவர்கள்!!! இத்தனைக்கும் நடுவில் இவர்கள் மகிழ்ச்சியைக் காண்பவர்கள்!!! இவர்களே நாயகர்கள்!!!

சற்றே நிறைவான சம்பளமோ, கட்டமைக்கப்பட்ட ஏட்டுக் கல்வியோ, ஏதோ ஒன்றின் காரணமாக நம்மால் சற்றே அசுவாரசியத்துடனோ, சிலரால் முகச் சுளிப்புடனோ எளிதில் கடந்து செல்ல முடிகின்ற அல்லது கவனிக்க மறுத்த கடை நிலை மக்களைப் பற்றிய பதிவு இது!!! சினிமா என்பது வெறுமனே வண்ணக் கனவுகளை உருவாக்குபவையோ அல்லது நம்முடைய கற்பனையையோ, நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத காட்சிகளைக் கூடவோ நம் கண் கொண்டு வருபவை மட்டும் அல்ல!!! சில மற(றை)க்கப்படுகின்ற உண்மைகளை, உண்மைகளாகவே காட்டவேண்டுபவையும் கூட என்பதை உணர்த்தும் படம்!!! புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை, உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ள படம்!!! முகத்திற்கு நேரெதிராக நின்று பளீரென்று அறைகின்ற உண்மையின் வெப்பம் இவ்வளவு சூடாகத்தான் இருக்கும் போல!!!

அங்காடித் தெரு

படத்தின் கதையென்று ஒன்று தனியாக இருந்தாலும், அனாயசமாக, போகிற போக்கில் வரும் காட்சிகள் வெளிப்படுத்தும் க(வி)தைகள் பல!!! காதலாக, ஒருவர் காலினை ஒருவர் மிதித்து விளையாடும் காட்சியில் ஆரம்பித்து, அதே காதலாக, கால் போன பின் வாழும் வாழ்க்கையில் முடிகிறது திரைப்படம்!!! படத்தில் எங்கும் எதற்கும் தீர்வினைச் சொல்லிவிடவில்லை இயக்குநர்!!! உன்னுடைய ஊரின் முழு உருவம் எது என்று நீ பார்த்துக் கொள் என்று காட்டியிருக்கிறார், அவ்வளவே!!! சென்னையை மட்டும் முன்னிருத்தி இதுதான் தமிழகம் என்று பழகிப் போன மனதிற்கு தெற்கு மாவட்டங்களின் வாழ்க்கையை நமக்கு காண்பித்திருக்கிறார்!!!

அஞ்சலி, பாண்டி தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள்(?)! ஒட்டுமொத்தமாக எல்லாரும் வாழ்ந்திருக்கிறார்கள், ஒரிரு காட்சிகளில் மட்டும் வந்தாலும் சரி, படம் நெடுக வந்தாலும் சரி!!! அத்தனை பேரையும் மீறி அஞ்சலியின் நடிப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நாமல்லாம் வாழுறதுக்கே யோசிக்கனும், விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன், இங்க சிலருக்கு கையில்ல, காலில்ல ஆனா எல்லாருக்கும் வாயும், வயிறும் இருக்கு, இருட்டு குடவுனிலிருந்து ஏசி ஹாலுக்கு செல்வது ’ப்ரமோஷன்’ என சொல்வது என பல இடங்களில் போகிற போக்கில் சொல்லும் வசனங்கள், கருத்துக்கள் மிக அருமை!!! பெரும்பாலும் வேதனைகளை பதிவு செய்திருந்தாலும், ஆங்காங்கு வெளிப்படும் மனிதம், மகிழ்வான தருணங்கள் எல்லாம் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

படத்தில் குறைகள் இல்லாமலில்லை. இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வு, சற்றே அதிகப்படியான பாடல்கள், எடிட்டிங் என்று பல இருந்தாலும் ஒட்டுமொத்தப் படைப்பின் முன் அவை ஒன்றும் இல்லாமல் போய்விடுகின்றன!!!

மிகச் சாதாரணமாக நமக்கு காட்டிவிட்டாலும், இந்தக் கூட்டத்திற்கு நடுவில் காட்சிகளை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற சந்தேகமும் அதற்காக ஒட்டு மொத்தக் குழுவும் எந்த அளவு உழைத்திருக்கும் என்ற எண்ணமும் ஏற்படுத்தும் பிரமிப்பு கொஞ்ச நஞ்சமன்று!!! ஒளிப்பதிவு, இசை, நடிகர் நடிகையர்கள் தேர்வு, வசனம் என பல்துறையும் மிக்க் கடுமையாக உழைத்திருப்பதை உணர முடிகிறது. ஒட்டு மொத்தக் குழுவிற்கும் மிகப் பெரிய வணக்கங்கள்!!!

படம் என்னைப் பல விதங்களில் பாதித்திருக்கிறது…

·         முன்பு போல அந்தக் கடைக்கு மனுஷன் போவ முடியாது, கஸ்டமர்சை மதிக்கவே மாட்டாங்க, சேல்ஸ்ம்மேனுங்க என்று முன்பு போல சொல்ல முடிவதில்லை…

·         ரங்கநாதன் தெரு போன்ற தெருக்களை சற்றே வித்தியாசமாக பார்க்க வைத்திருக்கிறது…

·         படத்தை மறுபடி பார்க்க வேண்டும் என்ற உந்துதலுக்கும், ஏன் பார்த்தோம் என்ற நிம்மதியின்மைக்கும் இடையே சிக்கி தவிக்க வைத்திருக்கிறது!!!

பிடித்திருக்கு, பிடிக்கவில்லை, கமர்சியல் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் தாண்டி, படத்தின் ஒருகாட்சியாவது பார்ப்பவர் மனதில் மெல்லிய சலனத்தையாவது ஏற்படுத்தாமல் விட்டுவிடாது!!! என்னுடைய ஒரே விருப்பம் இது சரவணா ஸ்டோர் போன்ற ஒற்றை அல்லது சில கடைகளில் மட்டுமோ அல்லது, அண்ணாச்சி போன்ற ஒற்றை மனிதர்களின் குரூரம் மட்டுமோ இல்லை. இந்தக் கட்டமைப்பின் பின்னே அரசு எந்திரம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகம், முதலாளிகள் ஏன் சில தொழிலாளிகள் என எல்லாரும் தெரிந்தோ, தெரியாமலோ காரணமாய் இருக்கிறார்கள் என்பதை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே!!!

அசாமுக்கு வேலைக்கு செல்லும் சிறு பெண்ணின் தைரியம், அண்ணன் வேலை பார்க்கும் கடையின் பையை சாமி ஃபோட்டோவிற்கு அருகே மாட்டியிருப்பது, பாலியல் தொந்தரவுக்கிற்கு உள்ளானதற்கு அப்புறம் மிகச் சாதாரணமாக துணி விற்பனையில் ஈடுபடும் நாயகி என அதிர்வுகளை ஏற்படுத்தும் காட்சிகளைச் சொல்ல ஆரம்பித்தால் ஏறக்குறைய முக்கால் படத்தை சொல்ல வேண்டியிருக்கும்!!!

வசந்தபாலன் சார், தலைவணங்குகிறேன். உங்களுக்கு என் வணக்கங்களும் மரியாதைகளும்!!!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

வேட்டைக்காரனும், தமிழ்ப் படமும்!!!

மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!


மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர் திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றதுஎன்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!


இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம்.


இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ ஆச்சரியத்துடன் யாராவது ஆஹாசினி கேட்கும் போது நமக்கும் வாவ், சட்டே மேலே எத்னே பட்டன் என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!


பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனைப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!!


வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் “அதையும் தாண்டி புனிதமானது என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!


படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும் என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன் என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!!


இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!


கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!

*********************************************************************************

வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே தமிழ் படம் என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே “அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த சி.எஸ் அமுதன் என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த ‘தமிழ் படம்!!! சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!

செந்தூரப் பூவே சிவா

தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், “இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்கஎனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!


ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்….அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து…இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்…


ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!


மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!! வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் ‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன் பாடல்!!! ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!!

சுனாமியின் பினாமி,

ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே,

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில,

ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!!


இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!

சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்… ஆனால் ஓ மகசீயா பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்…)

http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html


குத்துவிளக்கு பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும்,

தூண்டில் போட்டு யானை பிடிப்போம்

சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்

வாழும்போதே செத்து முடிப்போம்

இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்

வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!

படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் “சூறாவளி பாட்டில் தெரிந்து கொள்ளலாம்…

“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது”!!!!

இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்

மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது யாராவது, எங்காவது விஜய் படம் நன்றாக இல்லை எனும் போது!!! சொன்னது யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் சுற்றி நோட்டமிடும் கண்களை கட்டுக்குள் கொண்டுவர சமயங்களில் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கின்றது!!! விஜய் படம் பார்ப்பதற்கென்று ஒரு முறை இருக்கின்றது!!! அதை விடுத்து மற்ற படங்களோடு ஒன்றாக நினைத்து எப்போது டிக்கட் கிடைக்கிறதோ அப்போது போகலாமென்று போய் பார்த்தால் சற்றே ஏமாற்றம் கிடைப்பதற்குத்தான் வாய்ப்பு அதிகம்!!!

மனது நிர்சலனமாக இல்லாமல், கட்டுக்கடங்கா சந்தோஷத்தில் ததிங்கினத்தோம் போடும் போதோ, நீண்ட நாட்களாக டாவடிக்கும் ‘சுமாரான ஃபிகர் திடீரென உங்களை திருப்பி டாவடிக்கத் தொடங்கின வருத்தத்தின் உச்சியில் இருக்கும் போதோ, மொத்தத்தில் சாதாரண மனநிலையில் இல்லாமல் சற்றே பிறழ்வுகளின் உச்சத்தில் இருக்கும் போது பார்ப்பதே முறையானது. அப்படியும் மீறி சாதாரண மனநிலையில் பார்க்கையில், படம் முடிந்து வருகையில் கண்டிப்பாக அந்த நிலையைக் கடந்திருப்போம் என்ற உறுதி மொழியை யாராலும் தரமுடியும்!!! அதிலும் படம் வந்த புதிதிலேயே பார்க்காமல், ரசிகப் பட்டாளங்கள் ஓய்ந்திருக்கும் தருவாயில், அதே சமயம் தியேட்டர்களில் படம் ‘ஓட்டப்படுகின்றதுஎன்ற நிலையை அடைவதற்கு முன்னரும் கண்டிப்பாக பார்த்து விடவேண்டும்!!!

இந்தக் குறிப்பிட்டக் காலத்தைக் கணிப்பதென்பது, கைதேர்ந்த பெயரியல் பேராசாண்களுக்கோ, எண்ணியல் மாமேதைகளுக்கோ கூடச் சற்று கடினமான காரியமே!!! நீங்கள் பரீட்சையில் தவறுவதற்கு, உங்கள் வீட்டின் பாத்ரூம் வீட்டின் வலது மூலையில் இருப்பதுதான் காரணம் என்று கண்டு பிடிக்க முடிந்தவர்களுக்கே இது கடினம் என்றால் இதன் கடினத்தை புரிந்து கொள்ளலாம்.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறப்புக் காட்சிகளையோ, புரையோடிப் போன திரைப் பார்வையையோ பார்க்காதிருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்காதிருக்கும்!!! அதிலும் சில சமயங்களில் இந்தப் படம் முழுக்க நீங்க பனியன் போட்டு சட்டை போட்டிருக்கீங்களாமே, வெயில் காலத்துல எப்படி இவ்ளோ கஷ்டப்பட்டீங்க என்று கதாநாயகனையோ அல்லது எல்லாரும் அழகாக் காட்டும் அனுஷ்காவையே மொக்கையாக் காட்டியிருக்கீங்களே இவ்ளோ திறமை உங்களுக்கு எப்படி வந்த்து என்று இயக்குநரையோ ஆச்சரியத்துடன் யாராவது ஆஹாசினி கேட்கும் போது நமக்கும் வாவ், சட்டே மேலே எத்னே பட்டன் என்று ஆச்சரியங்கள் கூடினாலும், மேலே சொன்ன, படத்தின் சில அருட்பெரும் ரகசியங்கள் முன்கூட்டியே  தெரிந்து விடுவதால் திரைப்பார்வைகளை தவிர்த்துவிட்டு படத்தைப் பார்க்கச் செல்வதே சாலச் சிறந்ததாகும்!!!

பெருமுயற்சிகளுக்குப் பின் அப்படிப்பட்ட ஒரு காலகட்ட்த்தில், நான் சொன்ன மனநிலையோடு சென்று பார்த்த்தில் ‘வேட்டைக்காரனைப் பிடித்துப் போனதில் பெரிய ஆச்சரியமொன்றும் இல்லை!!!

வழக்கமான விஜய் படமாகத்தான் இருக்கும் என்று புளங்காகிதப்பட்டு வந்த விஜய்யின் தீவிர ரசிகனான என்னுடைய நண்பனே, விஜய் +2 படிக்கிற பையன் என்று சொன்ன போது இந்தப்படம் “அதையும் தாண்டி புனிதமானது என்ற உண்மை அவனுக்கு உரைத்த்து!!! உலகமயமாக்கலின் வேகத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பவருடன் பேசக் கூட விரும்பாமல், அலைபேசிகளிலும், ஐ-பாடுகளிலும் தங்களது உலகை இனங்கண்டு, பழையதை திரும்பிப் பார்க்காமல் செல்லும் இந்தக் காலத்தில், பாரம்பரியத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம், தன்னுடைய பழைய படங்களின் காட்சியையே திருப்பி வைத்திருக்கும் நுண்ணறிவாகட்டும், ஒட்டு மொத்த படமும் 20 வருட்த்திற்கு முன்பு வந்திருக்க வேண்டும்(?) என்ற எண்ணத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதிலும் இயக்குநர் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்!!! பழசை யாரும் மறந்துடாதீங்க மகா ஜனங்களே!!!!

படத்தில் சில பாடல் காட்சிகளினிடையே பாடலிலேயே ரசிகர்கள் ஆராவாரம் செய்வது போன்ற சத்தம் வரும் போது வடிவேலு சொல்லும், எதையுமே ப்ளான் பண்ணி தெளிவா பண்ணனும் என்ற வசனந்தான் ஞாபகத்துக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டின் போதே ‘கலாநிதிமாறன் என்ற சொல் வரும் போதெல்லாம் ரசிகர்கள் கைதட்டுவதாக எடிட் செய்த சன்டிவியின் படத்தில் இது கூட இல்லாட்டி எப்படி??? படத்தில் இங்க வித்தியாசமா இருக்கும், இங்க ஏதாவது நடக்கும் என்று படம் முழுக்க ஒரு எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டு, கடைசி வரை எதையும் செய்யாமல் முடிக்கும் போது அங்க கொண்டு போயி வெச்சிருக்காருய்யா ட்விஸ்ட்ட என்று இயக்குநரின் நுண்ணறிவை வியாக்காமல் இருக்க முடிவதில்லை!!!

இதுவரை தமிழ் சினிமா தொடாத புது பரிமாணமான, வில்லன் திருந்துவதற்கு அவனுடைய சின்ன வீட்டைக் கரெக்ட் பண்ணவேண்டும் என்ற ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் விசில் தூள் பறக்கிறது. கோமாவில் இருந்து எழுந்தவுடன் நல்ல திடகாத்திரமாக இருக்கிறார் என்ற இடத்திலும், முகத்தில் தழும்புகளுடன் வரும் வில்லனிடம் சயாஜி சிண்டேயின் சின்ன வீடு காதலில் மயங்குவதாக காட்டும் இடத்திலும் இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் தோன்றினாலும், கதாநாயகன் மூஞ்சியைப் பாத்துமட்டும் காதல் வருதுல்ல என்று தெளிவு பெறும் போது, காட்சிகளில் ஒளிந்திருக்கும் பின்நவீனத்துவம் நம்மைப் பார்த்து கெக்கலிக்கிறது!!!

கவிதைகளில் மட்டும் காணப்பட்ட படிமங்களை ஒரு படத்தில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் வெளிவரும் போது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறார்கள்!!! சன் டிவிகிட்ட விஜய் சிக்கினாரா இல்லை விஜய்கிட்ட சன் டிவி சிக்கிச்சா என்று!!!

http://www.youtube.com/watch?v=QcFn4erIeGA

*********************************************************************************

வேட்டைக்காரன் படம் பார்க்கிற மிதப்பில் இருக்கையிலேயேதான் அந்த ட்ரெய்லரைப் பார்க்க நேர்ந்தது! படத்தின் பெயரே தமிழ் படம் என்பது மட்டுமல்ல, ட்ரெயிலரின் ஆரம்பமே “அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்த்து!!! தயாநிதி அழகிரி தயாரிப்பில், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்த சி.எஸ் அமுதன் என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் படம்தான் இந்த ‘தமிழ் படம்!!! சிவா, திஷா பாண்டே, மனோபாலா, பாஸ்கர், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன் ஒன்று மட்டும் புரிந்தது!!! படம் செம அழிச்சாட்டியம் என்று!!! அதிலும் படத்தில் இவர்கள் எல்லாம் காலேஜ் ஸ்டூடண்ட்சாம்!!

?ui=2&view=att&th=12604e774642d2cc&attid=0.1&disp=attd&realattid=ii_12604e774642d2cc&zw

தொடர்ச்சியாக வரும் ட்ரெயிலரில் காக்க காக்க, ரன், நாயகன், பாய்ஸ், தசாவதாரம், சென்னை 28 என்று பல காட்சிகள் வந்து போனாலும், புஷ்ஷே, அமெரிக்காவே உங்களை நம்பிதான் இருக்கு என்ற இடத்திலும், சிவாஜி படத்தில் வருவது போல் இரு கைகளாலும் கையெழுத்து போடும் இடத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்!!! ட்ரெய்லரில் ஒரே இட்த்தில்தான் சிவா பேசுகிறார், “இவங்க சொல்றதுல்லாம் எனக்கு புரியுது, ஆனா இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றாங்கஎனும் இட்த்தில் சிவாவின் டயலாக் டெலிவரி அழிச்சாட்டியத்தின் உச்சகட்டம்!!!

ட்ரெய்லரைப் பார்த்து முடித்தவுடன் லொல்லுசபாவையும், கவுண்டமணியும்தான் நினைவிற்கு வந்தார்கள்!!! அந்தளவுக்கு அழிச்சாட்டியம்….அராஜகம் பண்றதுன்னு முடிவா ஒரு க்ரூப் கிளம்பியிருப்பது நமக்கு மிகத் தெளிவாக தெரிந்த்து…இப்படி பல ப்ளஸ்கள் இருந்தாலும், பார்க்கும் போதே இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதை உணர்த்தியது காட்சிகள்!!! எனக்கு தோன்றியதும், லோ பட்ஜெட் என்பதோடு மொக்கை காமெடிகளையே பெரிதும் நம்பியிருப்பது போல் படம் இருந்ததால் கொஞ்சம் சொதப்பினாலும் படம் எடுபடாதே என்றுதான்…

ஆனால், கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான படத்தின் பாடல்களைப் பார்த்தவுடன் (கேட்டவுடன்) படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது!!! அங்கு கிளம்பின கூட்டமும் ஒன்றும் சாதாரண கூட்டம் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது!!! பாடல்களைக் கேட்டதும் இசையமைப்பாளர் யார் என்பதை விட பாடலை எழுதிய புண்னியவான் யார் என்றுதான் முதலில் கேள்வி எழும்பியது??? இசை புதுமுகம் கண்ணன், பாடல்கள் சி எஸ் அமுதன், சந்த்ரு மற்றும் தியாரூ!!!

மொத்தம் 4 பாடல்கள், ஒரு தீம் மியுசிக்!!! வழக்கமான கம்ர்ஷியல் படங்களில் வரும் பில்டப் சாங்தான் ‘பச்சை மஞ்சள் கருப்புத் தமிழன் பாடல்!!! ஆனால் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தம் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது!!!

சுனாமியின் பினாமி,

ஏழைகளை ஏற்றிவிடும் லிஃப்ட்டே,

சந்திப்போண்டா போடா நாம சட்ட சபையில,

ஒபாமாவை இழுத்து வந்த இறைவன் நீ!!

இதெல்லாம் கோஷம் இல்லீங்க பாடல் வரிகள் என்றால் நம்ப முடிகிறதா??? பில்டப் பாடல்களுக்கே உரிய கோரஸ்களின் ஆராவரத்துடன் ஆரம்பித்து, கதாநாயகனின் தமிழனும் நான், தலைவனும் நான் என்ற வழக்கமான உற்சகத்துடன், நடு நடுவே த்த்துவங்களுடன் பயணிக்கிறது பாடல்!!! பெரிய நடிகர்களின் பாடல்களுக்கு கொஞ்சம் குறையாத வகையில் இசையமைப்பு கனக் கச்சிதமாக அமைந்துள்ளது!!!

?ui=2&view=att&th=12604e6b345a31d3&attid=0.1&disp=attd&realattid=ii_12604e6b345a31d3&zw

சாதாரண பில்டப் பாடல்களைப் போல ஒரு பாடலை எளிதில் அமைத்து விடலாம்… ஆனால் ஓ மகசீயா பாடலில், இதுவரை தமிழ் சினிமாவில் வந்த புரியாத வார்த்தைகளை மட்டுமேக் கொண்டு முழு பாடலை அதுவும் முழு மெலடியாக வெற்றிகரமாக அமைத்திருக்கிறார்கள்!!! இந்த பாடலுக்கு மட்டும் பாடலாசிரியர்கள் ஏகப்பட்ட பேர்!!! இந்தப் பாட்டின் வரிகள் வேண்டுமானால் கீழ்கண்ட இணைப்பைத் சொடுக்குங்கள் (டைப் பண்ணது கண்டிப்பா பெரிய விஷயந்தான்…)

http://thenkinnam.blogspot.com/2010/01/blog-post_05.html

குத்துவிளக்கு பாடல் வழக்கமான குத்து பாடல் டைப்தான் என்றாலும்,

தூண்டில் போட்டு யானை பிடிப்போம்

சுடுகாட்ட்டுக்குளே ஆவி பிடிப்போம்

வாழும்போதே செத்து முடிப்போம்

இதுதான் வாழ்க்கைன்னு சொல்லி அடிப்போம்

வரிகளெல்லாம் அநியாயத்தின் உச்சகட்டம். உஜ்ஜயினியின் குரலில் தெரியும் வசீகரம் காந்தமாக இழுக்கிறது!!!

படத்தின் அழிச்சாட்டியத்தை ஒற்றை வரியில் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் “சூறாவளி பாட்டில் தெரிந்து கொள்ளலாம்…

“இவன் எடுக்கும் முடிவுகளில் இந்தியா ஒளிருது”!!!!

இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கு!!! வாழ்த்துக்கள்


பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

மை நேம் ஈஸ் கான் (My name is Khan)

திசெம்பர் 18, 2009 5 பின்னூட்டங்கள்

மிக யதேச்சையாகத்தான் அந்த ட்ரெய்லரை பார்க்க நேர்ந்தது!!! மழையின் தாக்கம் சென்னை முழுதும் பீடித்திருக்க, பேட்டரி வேலை செய்யாததால் ரிமோட்டின் மீது கடுப்பேறி வேறு வழியில்லாமல் ஒரே சானலை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் விஜய் டிவியை பார்க்க நேரிட்ட்து. சுமார் பத்து மணி அளவிதான் அந்த ட்ரெய்லரும் ஒளிபரப்பப் பட்டது!!!

தமிழ் சானலில், இந்தி நிகழ்ச்சிகள் என்றுமே ஒளிபரப்பப்படாத நிலையில், ஷாருக்கான் தொடர்ச்சியாக இந்தியில் 2 நிமிடங்கள் பேசிய போது இந்தி தெரியாத காரணத்தினால், முதலில் மத்திய அரசின் ஏதாவது செய்தி விளம்பரமாக இருக்கலாம் என்றுதான் தோன்றியது. ஆனால் அதன்பின்தான் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தின் ட்ரெய்லர் என்று சொல்லப்பட்டது.

சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே அந்த ட்ரெய்லர் ஓடியது. ஆனால் அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகள், சிந்தனைகள் நீண்ட நேரம் மனதில் நின்றன. தவிர, அந்த ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கம், அந்தப்படத்தின் மற்ற விஷயங்களைத் தேடிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது!!!
இந்தி அதிகம் தெரியாத காரணத்தினால் இந்தி சினிமாவின் புதுவரவுகளிலோ, படைப்புகளிலோ நானாக அதிக ஆர்வம் காட்டியதில்லை. இதனாலேயே இந்தப்படத்தின் பெயரை ட்ரெயிலரில் சொன்ன போது எனக்கு அதனைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்க வில்லை. அந்தப் படத்தின் பெயர் “மை நேம் ஈஸ் கான்”.

My name s Khan

ஷாருக்கான் பேசி முடித்த பின்பு, முதலில் தாரே ஜமீன் பரில் வரும் சிறுவனின் சாயலில் ஆட்டிசக் குறைபாடு கொண்ட ஒரு சிறுவனைக் காண்பித்த பொழுது, அமீர்கானைப் போல் ஷாரூக்கானும் அதே மாதிரி படம் எடுக்கிறாரோ என்றுதான் தோன்றியது!!! அந்த சிறுவன்தான் ஷாரூக்கான் என்று காட்டிய பொழுது இதுதான் இரண்டு படத்திற்குமிடையேயுள்ள ஒரு வித்தியாசமோ என்று தோன்றியது. அன்றலர்ந்த மலராக திடீரென்று கஜோல் திரையில் வந்த பொழுது, வயதாக ஆக இவர் மட்டும் எப்படி அழகாகிக் கொண்டே செல்கிறார் என்று தோன்றினாலும், வழக்கமான கமர்சியல் இந்தி படத்திற்குதான் இவ்ளோ பில்டப்பா என்றே தோன்றியது……

ஆனால் அதன் பின் திரையில் வந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் முற்றிலும் நான் எதிபார்க்காத கோணத்தில் சென்றது. பல்வேறுபட்ட திருப்பங்களைக் கொண்ட படம் இது என்பதை அடுத்த ஒவ்வொரு நொடியும் திரையில் ஓடிய காட்சிகள் சொல்லின. அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் கைது, குண்டு வெடிப்பு, துடிப்பான போலீஸ் அதிகாரிகளின் ஓட்டம் ஆகியவை எல்லா கமர்சியல் படங்களிலும் பார்க்கக் கூடிய ஒன்றெனினும், இது மற்ற படங்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டது என்ற உணர்வை காட்சிகள், அதில் தொக்கி நிற்கும் சில வலிகள் உணர்த்தின. அதிகம் வசனங்களே இல்லாத ட்ரெய்லராக இருந்தாலும், ட்ரெய்லர் முடியும் தருவாயில் இரண்டே இரண்டு வசன்ங்கள் மட்டும் என்னை மெலிதாக உலுக்கியிருந்தன. ஒன்று Why are you going to Washington? And he replies back I want to meet the president and say something. வசனத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரை சந்திக்க முயலும் கானின் பயணம் நம்மையும் அவருடனே அழைத்துச் சென்றது. இறுதியில் கானின் “My name is Khan, and I am not a Terrorist” என்ற வசனத்தோடு முடியும் போது, அந்த ஒற்றை வரி உணர்த்துகின்ற உணர்வுகள், அதில் மறைந்திருக்குள் பொருட்கள் ஏராளம், ஏராளம்.

சமயங்களில் ட்ரெய்லர்கள் கொடுக்கின்ற எதிர்பார்ப்பை படங்கள் கொடுப்பதில்லை என்றாலும், ட்ரெய்லரைப் பார்க்கும் போதே ஒவ்வொரு காட்சிகளும் முந்தைய காட்சிகளை விட பரபரப்பாகவும், வெவ்வேறு அர்த்தங்களைச் சொல்லும் கனமான காட்சியாகவும் அமைந்திருப்பது மிகச் சிறப்பு. ட்ரெயிலரிலேயே யார் கேமிராமேன் என்கிற ஆர்வத்தைத் தூண்டியதைத் தேடிப் பார்த்த போது நம் ரவி.கே சந்திரன் எனும் போது சற்றே பெருமிதமாகத்தான் இருந்த்து. ஆனால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது இது கரண் ஜோகருடைய படம் என்பதுதான்……நல்லவேளை அவர் தயாரிப்போடு நின்றுவிட்டார், இயக்கத்தில் நுழையவில்லை.

இந்த விஷயங்களால் பெரிதும் கவரப்பட்டு சற்று தேடிய போது கிடைத்த செய்திகள் இன்னும் ஆர்வமூட்டின. பழைய பேட்டிகளில் ஷாரூக்கான் இந்தப்படத்தைப் பற்றி சொன்னது, இந்தப்படம் மூன்று முக்கிய விஷயங்களைக் கொண்டுள்ளது, அவை காதல், இஸ்லாம், ஆட்டிஷம்!!!. இந்தப்படம் பேசும் இன்னொரு விஷயம் கடந்த சில வருடங்களாக இஸ்லாமிற்கும், மேறகத்திய நாடுகளுக்குமிடையேயான உறவு மறிய விதம்தான். இது ஒன்றும் ஒரு ஊனமுள்ள மனிதனின், அவனுடைய ஊனத்திற்கெதிரான போராட்டமல்ல, மாறாக ஒரு ஊனமுள்ள மனிதனின், இந்த உலகில் நிரம்பியுள்ள ஒரு ஊனத்திற்கெதிரான போராட்டம். இதில் நாங்கள் எந்த பக்கமும் பேசவில்லை…நாங்கள் சொல்ல வருவதெல்லாம், இந்த உலகில் மொத்தம் இருவர் மட்டுமே!!! நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள். இதில் நல்ல இந்து, கெட்ட இந்து என்றோ, நல்ல கிறித்தவன், கெட்ட கிறித்தவன் என்றோ எதுவும் இல்லை. ஒருவன் நல்லவனாய் இருப்பதற்கும், கெட்டவனாய் இருப்பதற்கும் மதம் அளவுகோல் இல்லை, மனிதாபிமானம் மட்டுமே!!!

படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய தாக்கத்தை விட, இந்த வார்த்தைகள் மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணியது!!! என்னுடைய எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான்…இதுவரை இந்த வலிகளை, உணர்வுகளை இந்திய வர்த்தக சினிமாவில் ஒழுங்காக பதிவு செய்யப்படவில்லை, பதிவு செய்த சில படங்களோ முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை… Khuda ke liye, Ramchand Pakistani, A mighty heart, Train to Pakistan போன்ற படங்களோ முழுமையாக அனைவரையும் போய் சேர்ந்த்தா என்பது சந்தேகமே!!! நியுயார்க், ஃபன்னா மற்ற சில வர்த்தக சினிமாக்களோ சொல்லிய விதமோ சாதாரண பார்வையாளர்களை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க வைத்தது. ஷாரூக்கான் என்ற மிகப்பெரிய பிராண்டின் மூலாமாகவும், கரண்ஜோகர் என்ற பெரிய வெற்றிப்பட வியாபாரியின் மூலமாக வரும் இந்தப்படம் சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா??? பிப்ரவரி 12 வரை பொறுத்திருங்கள்!!! 

பின்குறிப்பு:
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்க சென்ற போதுதான் அமெரிக்க விமான நிலையத்தில் ஷாரூக்கான் மோசமாக நடத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைகள் அனைவருக்கும் ஞாபகம் வரலாம்…தனது படத்தில் வரப்போகும் காட்சியை ஒத்த ஒரு சம்பவம் அங்கே அரங்கேறியது, இந்தப் படத்திற்கான விளம்பரமே என்று கூட சில குரல்கள் எழுந்தன. ஆனால் படமோ, அந்த சம்பவமோ இதன் ஒட்டு மொத்த அடிப்படையாக, ஒரு ஒற்றை பெயர் ஒரு மனிதனின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையையும், மனிதாபிமானத்தையும், அர்ப்பணிப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றால் அந்தச் சூழலை, அவலத்தை என்னவென்று சொல்வது???

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

நினைத்தாலே இனிக்கும் – திரைப்பார்வை

செப்ரெம்பர் 9, 2009 16 பின்னூட்டங்கள்

சன் டிவியின் திரைப்படம் என்றாலே பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடும் நான் துணிந்து அவர்களுடைய ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை பார்க்கச் சென்றேனென்றால் அதற்குக் காரணம் நண்பர் மூலமாக இந்தத் திரைப்படத்தைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கேள்விப்பட்டிருந்ததும், படத்தின் இயக்குநர் கல்யாணராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா போன்ற மிகச் சிறந்த திரைப்படங்களை அளித்த ரங்கராஜன் அவர்களின் புதல்வர் என்பதும், ஏற்கனவே வெளியாகியிருந்த இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பும்தான்…

மற்ற படங்களையும், பாடல்களையும் அப்படியே காப்பி+பேஸ்ட் செய்து விட்டு இயக்குநர் என்ற இடத்திலும், இசையமைப்பாளர் என்ற இடத்திலும் தனது பெயரை போட்டுக் கொள்ளும் ஆட்களுக்கு மத்தியில், படத்தின் பெயர் ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் படம் மலையாளத்தின் ’கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது (பல மாற்றங்கள் செய்து வந்திருந்தாலும்) என்று அறிவித்ததற்காகவே  இயக்குநரை தாராளமாகப் பாராட்டலாம் (எனக்கு தெரிந்து இதுதான் இப்படி வருவது இதுதான் முதல் படம் என்று நினைக்கிறேன்)….

படத்தின் பெயர் போடும் போது, கறுப்பு வெள்ளையில், மென்மையான இசையின் பிண்ணனியில் காமிராக்கள் கல்லூரிக் கட்டிடங்களினூடே மெல்ல நம்மை அழைத்துச் சென்று, இறுதியில் மழைநீரில் மேலிருந்து ஒரு வண்ணப் பூ உதிர்ந்து விழும் இடத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று இயக்குநர் குமரவேல் (முதல் படம்!) என்று பெயர் போடும் போது மெல்லிய புன்னகையையும், சற்றே எதிர்பார்ப்பையும்  ஏற்படுத்துகிறது…

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே இது ஒரு ’லோ பட்ஜெட் படம்’ என்பது மிகத் தெளிவாக உணர்ந்தாலும், ஒளிப்பதிவின் நேர்த்தியும், அழகும் அதனை ஒத்துக் கொள்ளவைக்க மறுக்கிறது. ’இது மாணவர் உலகம்’ பாடலை காட்டும் போதே ஒளிப்பதிவின் நேர்த்தி மனதில் அழுத்தமாகப் பதிகின்றது.

'இது மாணவர் உலகம்; பாடம்

'இது மாணவர் உலகம்; பாடல்

நட்பையும், கல்லூரி நினைவுகளையும் சொல்லும் படமென்றால், கல்லூரி கலாட்டாக்களையும், அட்டகாசங்களையும், நெகிழ்வுகளையும், மென்மையான காதலையும் சொல்லி அசத்தியிருக்க வேண்டாமா??? மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை, முதல் பாதி முழுக்க ஆமை வேகத்திலேயே செல்கிறது. இடைவேளைக்கு சற்று முன்பு வரை படத்தில் கவனத்தை ஈர்க்கும் சம்பவங்களோ, காட்சிகளோ, வசனங்களோ இல்லவே இல்லை….அதிலும் முதல் பாதியில் சில காட்சிகள் ஏனோ ஒரு முழுமையாக இல்லாதது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் திரைப்படம் என்பதனால் இது பராவாயில்லையாகத் தோன்றினாலும், கமலஹாசன், பாலுமகேந்திரா போன்றோரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தவரிடம் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

பாக்யராஜ் வசனம் பேசுவதற்காகவும், சக்திக்கு ஆஸ்துமா இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவே ஒரு கால்பந்து போட்டியை வைத்தது போலிருந்தது, சமீப காலங்களில் இவ்வளவு மோசமாக ஒரு விளையாட்டுப் போட்டியைக் காட்டி நான் பார்த்த்தில்லை….அதற்கு முந்தைய காட்சிகளிலெல்லாம் பயங்கரமாக சண்டை போட்டு விட்டு திடிரென்று கல்லூரி கலாட்டாவின் போது, பிரியாமணியை பிருத்விராஜ் காப்பாற்றியவுடன், அவரது பர்சில் தனது புகைப்படம் இருக்கக் காரணம் தன்னைக் காதலிப்பதுதான் என்று உணர்ந்தவுடன் காதலை ஒத்துக் கொள்ளும் போது ’இந்த மேட்டருல உன் டோடல் ரியாக்‌ஷனே அவ்ளோதானா???’ என்றுதான் பிரியாமணியைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது”…

ஆமை வேகத்தில் செல்லும் திரைக்கதைக்கு மத்தியில் முதல் பாதியிலேயே நான்கு பாடல்கள் வருவது சற்றே சலிப்பை ஏற்படுத்தினாலும், அனைத்து பாடல்களையும் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அழகு…’செக்சி லேடி’ பாடல் (யாருங்க அந்த அம்மிணி???) அருமையாக இருந்தாலும், அந்தப் பாடல் எதற்காக அங்கு வருகிறது என்பது தியேட்டரில் இருக்கும் யாருக்குமே புரியவில்லை… எடிட்டிங் கோளாறா, என்ன பிரச்சினையென்று தெரியவில்லை, முழு படமுமே இரண்டே கால் மணி நேரம்தான் என்றாலும், மூணு மணி நேரம் ஓடிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது…

'அழகாய் பூக்குதே' பாடல்

'அழகாய் பூக்குதே' பாடல்

முதல் பாதியில் ரொம்ப லேசானதாக இருந்த்தாலோ என்னமோ இரண்டாவது பாதியில் வரும் திடுக்கிடும் திருப்பங்களோ, வேகமோ, காட்சிகளோ எதுவுமே மனதில் பதிய மறுக்கிறது. ’அழகாய் பூக்குதே’ பாடல் படமாக்கியிருக்கும் விதம் மிக மிக அருமை என்றாலும், பாடல் வரும் போது தியேட்டரில் பலருக்கு சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இறுதிக் காட்சியில் பாக்யராஜ் அனைவரையும் நிற்க வைத்து வசனம் பேசும் போது நாடக பாணியாகத் தோன்றுகிறது.

இறுதிக் காட்சியில் வரும் ‘உங்க எல்லார்கிட்டயும் நான் ஃப்ரெண்ட்சா பழகுனேன், ஆனா என் பையன்கிட்ட நான் வெறும் அப்பாவா பழகிட்டேன்”, கால்பந்து போட்டியின் போது பேசும் வசனம் என்று சில இடங்களைத் மற்ற இடங்களிலெல்லாம் வசனம் மிகச் சாதாரணம். சன் டிவி படம் என்பதை, பிரித்விராஜ் மற்றும் நண்பர்கள் தியேட்டரில் திருநங்கைகளுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியின் மூலம்தான் நிரூபிக்க வேண்டுமா??? ராம்கி திரைப்படம், ஈரமான ரோஜாவே முதற்கொண்டு இன்னும் எத்தனைக் காலத்துக்கு திருநங்கைகளை அவமானப் படுத்த வேண்டும்????

லோ பட்ஜெட் படமாக இருந்தாலும், காட்சிகளை மிக அழகாக காட்டுவதில் இயக்குநர் பட்ட மெனக்கெடல், நுட்பமாக அமைப்பதில் படவில்லை என்றே தோன்றுகிறது.

கல்லூரி திரைப்படங்கள் என்றாலே, ஒற்றைத் தூணாய் நாயகன், அவனைச் சுற்றி அல்லக்கையாக நண்பர்கள் என்று காட்டும் வழக்கத்தை தாண்டி எல்லாருக்கும் சமமான பாத்திரங்கள் உள்ள திரைப்படமாக இருப்பது பெரிய ஆறுதல். படத்தின் நாயகன் பிரித்விராஜ் என்பதை விட, படத்தின் நாயகர்கள் என அனைவரையும் சொல்லலாம். அந்தளவு பிரித்விராஜை விட நடிப்பில் நம்மைக் கவர்வது சக்தி, புதுமுகம் விஷ்ணு மற்றும் கார்த்திக் தான்.

அமெரிக்க மாப்பிள்ளை, சாஃப்ட் கேரக்டரில் பார்த்து பழகிய கார்த்திக், எதிர்மறை வேடம் என்றாலும், சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தனது வாய்ப்பினை மிக அருமையாக (தப்பு பண்ணிட்டேன்னு பாக்யராஜிடம் வார்த்தைகள் நடுங்கியவாறே பேசுவது அருமை!!!) பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், நல்ல பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்ட சக்தியின் நடிப்பு மிக இயல்பாக இருந்த்து. யாருப்பா இந்த ஆளு என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் நடிப்பு புதுமுகம் விஷ்ணுவுடையது (நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு…..). பிரியாமணியை விட தோழியாக வரும் அனுஜா மிக அழகாக இருக்கிறார், அதிலும் கடைசிக் காட்சியில் பிரித்விராஜிடம் விடை பெற தலையசைக்கும் போது அவர் மட்டுமல்ல, அந்த காட்சியமைப்பும் மிக அழகாக அமைந்துள்ளது….

நாயகர்கள்

நாயகர்கள்

இயக்குநர்கள் முதற்கொண்டு டான்ஸ் மாஸ்டர்ஸ் வரை எல்லாரும் ஹீரோ ரோலுக்கே அலைந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் கேரக்டர் ரோல் செய்வதற்கும், சப்போர்டிவ் ரோல் செய்வதற்கும் ஏற்பட்டிருக்கும் வெறுமையை கார்த்திக், விஷ்ணு போன்றோர் மிக அழகாக நிறைவு செய்யலாம்…

வெறுமனே ஒளிப்பதிவோடு இல்லாமல், வண்ணமயமான காட்சிகளை படம் முழுக்க்க் கொடுத்திருப்பதும், அருமையான பாடல்களை உள்ளடக்கியிருப்பதும், பாடல்காட்சிகளை படமாக்கியிருக்கும் அழகும் படத்திற்கு மிகப் பெரிய பலம் (அழகாய் பூக்குதே பாடல் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு!!!) என்றால், முதல் பாதியின் மிகச் சாதாரணமான காட்சியமைப்புகளும் (இதே திரைப்படம் முதல் பாதியில் கவனமாக கையாளப்பட்டிருந்தால் அடைந்திருக்கும் வெற்றியே வேறு!!!), குறைந்த பட்சம் ஒரு ஐந்து வருடத்திற்கும் முந்திய ‘ஸ்கிரிப்டோ’ என்ற உணர்வைத் தரும் திரைக்கதையும் இதன் பலவீனங்கள்…

மாசிலாமணி போன்ற திரைப்படங்களையே வெற்றிப்படமாக்கிய சன் டிவிக்கு ’நினைத்தாலே இனிக்கும்’ ஒரு நல்ல வெற்றியாக அமையும் என்பதிலோ, லோ பட்ஜெட் படத்தையே அழகாக கொடுத்ததனால் அடுத்த வாய்ப்பு இயக்குநருக்கு எளிதில் கிடைக்கலாம் என்பதிலோ ஆச்சரியப்பட அதிகம் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் தவிர்த்து ஒரு நல்ல இயக்குநர் என்ற பெயரை எடுப்பதற்கு இயக்குநர் நிரூபிக்கவேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது!!!

மொத்தத்தில் சிரிப்பை வரவழைக்கும் பஞ்ச் டயலாக்குகளோ, முகத்தைச் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, அதே சமயம் புருவத்தை உயர்த்த வைக்கும் அற்புதக் காட்சிகளோ இல்லாமல் வெளிவந்திருக்கும் ஒரு சராசரி, வண்ணமயமான திரைப்படம் இந்த ‘நினைத்தாலே இனிக்கும்’.

சன் டிவி பாணியில் சொல்வதென்றால் நினைத்தாலே இனிக்கும் – சுகர் குறைவு!!!!

தொடர்புடைய மற்ற பதிவுகள்

சரவணகுமரன்

பரிசல்காரன்

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

நியுயார்க் – திரைப்பார்வை (இந்தி)

தீவிரவாதத்தைப் பற்றிய அதிர்ச்சியை பலமாக பதிவு செய்யும் இன்னொரு படம் இந்த நியுயார்க்….ஏற்கனவே மும்பை மேரி ஜான், வெட்னஸ்டே போன்ற படங்கள் தீவிரவாதத்தின் வெவ்வேறு பரிணமங்களை படமாக்கியுள்ள நிலையில் வெளிவந்துள்ள படம்தான் இது!!!

இரட்டைக் கோபுரங்கள் தாக்குதல், மும்பை ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் தாக்குதல் என்று சம்பவங்கள் நிறைந்த இந்த உலகில் தீவிரவாததின் இன்னொரு முகத்தை துகிலுரித்துக் காட்டியிருக்கிறது. மங்கிய மாலைப்பொழுதொன்றில் மலர்கள் சொறிய ஒரு கவிதையைப் போல் ஆரம்பிக்கும் இந்தத் திரைப்படம், இறுதியில் விருட்சம் விட்டு ஒரு பூந்தோட்டமாய் மலர்ந்திருக்கிறது. திரைக்கதையே மிகச் சிறப்பாக அமைந்திருக்கையில் நடிப்பு, இசை, கேமிரா என்று எல்லா துறையிலிருந்தும் சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும் போது எப்படிப்பட்ட படமாக மாற முடியும் என்பதற்கு இப்படம் ஒரு சாட்சி!!! எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்தப்படம் இவ்வருடத்தில் வெளிவந்த இந்தியப் படங்களிலேயே மிகச்சிறந்த இடத்தைப் பெறும்…….

ப்படி எல்லாம் ஒரு திரைப்பார்வை எழுதணும்னு எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா??? ஆனா மக்கா, ஏமாத்திட்டானுங்க மக்கா…..சும்மா ரெண்டரை மணி நேரம் கதறக் கதற ரவுண்டு கட்டி அடிச்சானுங்க தியேட்டருல….

ஒரு படத்துக்கு திரைப்பார்வை இருந்துச்சுனா, முடிஞ்ச வரை கதையை சொல்லாம இருக்கணும்னுதான் நினைப்பேன், ஆனா இந்தப் படத்துக்கு முழுக்கதையையும் சொல்லி எழுதலாம்னா கூட எனக்கு கதை கிடைக்க மாட்டேங்குதே அதுக்கு நான் என்ன பண்றது???

படம் ஆரம்பிச்சவுடனே, திடீர்னு ஒருத்தனைப் புடிக்கறாங்க, முடிஞ்சவரை அவனை டார்ச்சர் பண்றேன்னு சொல்லி நம்மளை டார்ச்சர் பண்றாங்க. கடைசியாப் பாத்தா அடிச்சது FBI யாம், அடி வாங்குனது, தீவிரவாதியா இருக்கலாம்னு சந்தேகிக்கறாங்களாம்….அந்த நடிகர்தான் நிதின் முகேஷ்

அவரை சந்தேகப் படக்காரணம், அவரு முன்னாடி படிச்ச காலேஜ்ல நிதினோட ஃபிரண்டா இருந்த ஜான் ஆபிரகாம் பெரிய தீவிரவாதியாம், அதுனாலதான் நிதினையும்  சந்தேகப்பட்டாங்களாம்!!!! இப்ப நிதின் தீவிரவாதி இல்லைங்கறது நிரூபணம் ஆனாலும், திரும்பி நிதின், ஜான் ஆபிரகாம் கூட சேர்ந்து பழகி அவரு உண்மையாலுமே தீவிரவாதிதானா இல்லை திடீர்னு ஜீப்புல ஏறிகிட்டு நானும் ரவுடிதான்னு உதார் உட்டுகிட்டு இருக்காரான்னு போலீசுக்கு சாரி FBI க்கு துப்பு தரணுமாம்….இதுக்கு நடுவுல அப்பவே நிதினுக்கும், ஜான் ஆபிரகாமுக்கும் ஃபிரண்டா இருந்த கேத்ரீனா கைஃப்தான், இப்ப ஜான் ஆபிரகாமோட மனைவியாம்……. இப்படி நட்புக்கும், கடமைக்கும் இடையே நடக்கிற ஒரு பாசப் போராட்டந்தான் கதையாம்…..உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ணைக் கட்டுதே!!!!

இப்படியே போயிட்டிருக்கிற கதையில ஜான் ஆபிரகாம் உண்மையிலியே தீவிரவாதிதான்னு தெரிய வருது, அதுக்கு காரணம் என்னான்னா, செப்டம்பர் 11 பிரச்சனைக்கப்புறம் சந்தேகத்தின் பேருல இவரைப் புடிச்சு கண்ணாபின்னான்னு டார்ச்சர் பண்ணதுனால அவரு இப்படி ஆகிட்டாராம்…..இதையெல்லாம் நிதின் மூலமா கண்டுபிடிக்கிற FBI ஆஃபிசர்தான் இர்ஃபான்கான்…..

New-york
என்னதான் ஒரு நல்ல கருத்து சொல்றேன்னு படம் எடுக்கறேன்னா கூட எப்படி எடுத்தாலும் பாத்துற முடியுமா??? அதுவும் முழு படத்தையும் ஸ்லோ மோஷன்ல எடுத்தா எப்படி பாக்கறது???

எனக்கு தெரிஞ்சு FBIயை இவ்ளோ காமெடியா யாரும் காட்டியிருக்க மாட்டாங்க, அதுவும் க்ளைமாக்ஸ் காட்சில அவங்களை காமிச்சிருக்கற விதம் செம காமெடி!!! ஐயா சாமி நீங்க FBIயைத்தான் ஒழுங்கா காமிக்கலை, இந்த தீவிரவாதிகளைனாச்சும் கொஞ்சம் ஒழுங்கா காமிச்சிருக்கலாம்ல??? அவங்களுக்குன்னு ஒரு மட்டு மரியாதை வேணாம்??? அவனவன் லோக்கல் தாதாக்களையே என்னமோ இண்டர்நேஷனல் கிரிமினல் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து படம் எடுத்துகிட்டு இருக்காங்க, ஆனா இந்தப் படத்துல என்னான்னா தீவிரவாதிகளை என்னமோ லோக்கல் ரவுடியை விட காமெடியா காட்டியிருக்காங்க!!

அமெரிக்காவுக்கு படிக்கப் போனாங்கனு கதையை ஆரம்பிச்சிட்டு, ஒருத்தன் கூட படிக்கற மாதிரி காமிக்கவே மாட்டேங்கிறாங்க, எல்லாரும் ஒண்ணா விளையாடிட்டிருக்காங்க, இல்லாட்டி பார்ட்டிக்கு போறாங்க அதுவும் இல்லாட்டி எல்லாரும் சேந்து பாட்டு பாடுறாங்க!!!

கேத்ரினா கைஃப், ஜான் ஆபிரகாம், நிதின் இவங்கள்லாம் யாரு, இவங்களுக்கெல்லாம் அப்பாஅம்மாவே இல்லியா, இல்லை எல்லாரும் டெஸ்ட் டியூப் பேபியா ஒண்ணும் புரிய மாட்டேங்குது படத்துல!!! ஒருத்தருக்கும் குடும்பம், அப்பா அம்மா, சொந்தம்னு யாருமே இல்லை!!!

படத்துல எல்லாரும் ஏன் இப்படி போட்டி போட்டுகிட்டு நடிக்கறாங்களோ தெரியலை!!! அதுவும் இந்த கேத்ரீனா கைஃப் அம்மணி எப்படித்தான் சோக சீனுக்கும் சரி, லவ் சீனுக்கும் ஒரே மாதிரி உணர்ச்சியை காமிக்கிறாங்களோ தெரியலை!!! ஒருவேளை லவ் பண்ணாலே சோகந்தாங்கிற உண்மைத் தத்துவத்தை தன்னோட நடிப்பின் மூலம் நிரூபிக்கிறாங்களோ என்னமோ??? சும்மாவே அம்மணிக்கு நடிப்புன்னா ஆவாது, அதுலியும் சுத்தி இப்படி போட்டி போட்டு நடிக்கிற ஆளுங்க இருந்து நடிச்சா வெளங்கிடும்….அழகா இருக்குங்கிறதுக்காக ஒரு பொம்மையை கொண்டு வந்து படத்துல நடிக்க வெச்சுடறதா???

மியுசிக் போட்ட புண்ணியவான் யார்னு தெரியலை, ஒட்டு மொத்தமா ஒரு ரெண்டரை மணி நேரம் ஒரு மியுசிக்கை போட்டுட்டு, அப்படியே எடுத்து படத்தோட ஓட விட்டுட்டாங்களான்னு புரியலை, சிச்சுவேஷனுக்கும் அதுக்கும் அப்படி ஒரு ஏகப் பொருத்தம்!!!

படத்தோட டைரக்டர் இனிமேதான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!!! ஒருவேளை  FBI, எங்களை அசிங்கப் படுத்திட்டாருன்னு சொல்லி டைரக்டர் மேல மான நஷ்ட வழக்கு போடலாம், இல்லை எங்களை இவ்ளோ மொக்கையா காமிச்சுட்டியேன்னு யாராவது ஒரு தீவிரவாதியே இவரு மேல காண்டாகி அடிக்க வரலாம், இப்படி பல பிரச்ச்சனைகள் அவருக்கு இருக்கு!!!

கடைசியா என்னதான் சொல்ல வர்றாங்கன்னு தெரியலை!!! நீதான் தீவிரவாதின்னு சந்தேகப்பட்டதுனாலதான் எல்லாரும் தீவிரவாதி ஆகுறாங்ககிறாங்கன்னு சொல்றாங்களா இல்ல வேற என்னன்னு புரியலை!!! ஆனா ஒண்ணு, இன்னும் கொஞ்ச நேரம் அந்த தியேட்டர்ல இருந்திருந்தா நானே தீவிரவாதியா மாறியிருப்பேனோ என்னமோ…

பி.கு.
இதுல யாரை நண்பர்கள் என்பது, யாரை எதிரிகள்னு சொல்றதுன்னு வேற தெரியலை!!! சத்யம்ல இந்தப் படம் பாத்து, இண்டர்வெலுக்கு மேல கடுப்புல, மேல் ஃபுளோர்லதாம்பா இந்த வை ஃபை (Wi Fi) கேம்ஸ்லாம் இருக்காமாம், ஒரு மணி நேரம் அங்க போயி விளையாடிட்டு வந்துடலாம், மத்தவங்க அதுக்குள்ள படம் பாத்து முடிச்சுவாங்கன்னு கேட்டா, எல்லாரும் என்னமோ அந்தப் படத்தை ரசிச்சு பாக்கற மாதிரி வரமாட்டேனுட்டாங்க!!!!

ஆனா ஒண்ணு, மும்பை மேரி ஜான், தாரே ஜமீன் பர் படம்லாம் பாக்கறப்ப அய்ய்ய்யோ எனக்கு இந்தி தெரியலியேன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன், ஆனா இந்தப் படம் பாக்கறப்பதான் நல்லவேளை எனக்கு இந்தி தெரியலைன்னு ரொம்பவே நினைச்சுகிட்டேன்!!! அது ஏந்தான் வேண்டா வெறுப்பா பிள்ளையை பெத்துட்டு காண்டாமிருகம்னு பேரு வெக்குறாங்களோன்னு தெரியலை!!!

பிரிவுகள்:சீரியஸ் குறிச்சொற்கள்:

தோரணை – ஒரு சிறிய திரைப்பார்வை

மச்சான் படத்துக்கு போனியே, எப்டிடா இருந்துது?……………. டேய், அதுக்கு ஏண்டா இப்புடி மொறைக்கிற?

ஓடியே போயிடு, நான் எங்க படத்துக்கு போனேன்???

இல்லடா, தோரணை போனியே அதான் கேட்டேன்

அது தோரணை இல்லைடா, ரோதணை…

டேய் விளையாடாம சொல்லுடா!!!

சத்தியமாதாண்டா சொல்றேன், அதெல்லாம் படம் இல்லை, பாடம்!!!

அவ்ளோ மோசமாவா இருந்துது???

தெரியலைடா, நான்தான் இண்டெர்வல்லியே வந்துட்டேனே …

ஏண்டா?

இல்லை!, முன்னமே வந்திருப்பேன், பைக்கை 4 வது ரோவுல, செண்டர்ல வுட்டுட்டேன், எடுக்க முடியலை, அதான் முன்னாடியே வர முடியலை!

அப்புறம், இண்டர்வல்ல மட்டும் எப்டி எடுத்த?

அதான் எல்லாருமே வண்டியை எடுத்துட்டு வூட்டுக்குப் போயிட்டாங்கள்ல, அதுக்கப்புறம் என் வண்டியை எடுக்க முடியாதா???

பி.கு.

முன்னனாச்சும் பரவாயில்லை, இந்த ஹீரோயினுங்க மட்டும்தான் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வரணும்னா ரொம்ப வெக்கப்படுவாங்க, இப்ப இந்த சிக்ஸ் பேக்னு ஒன்னு வந்ததுல இருந்து இந்த கதாநாயகர்கள் கூட ஆவூண்ணா சட்டையை கழட்டி உடம்பை காமிச்சிர்ரானுங்க….

இதுல ஆனா ஊனான்னா பஞ்ச் டயலாக் பேசிடுறாங்க… பிச்சைக்காரங்ககிட்ட ரெண்டு ரூவா கொடுத்தா கூட மவராசனா இருப்பான்னு ஆசீர்வாதம் பண்னுவாங்க, இங்க என்னான்னா நான் காசு கொடுத்து, அவனுக்கு அவனே பில்டப் கொடுத்துக்கறதை பாக்க வேண்டியதாயிருக்கு….நாட்டுல இந்த கதாநாயகர்கள் தொந்தரவு தாங்க முடியலைப்பா!!!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

பசங்க – திரைப்பார்வை

அவன் பிச்சைக்காரனா இருக்கானேன்னு நீ பாக்குற!

அவன் திருடனாகிடக் கூடாதுன்னு நான் பாக்குறேன்!

இது தப்பா???

இவ்வளவு சீரியசான டயலாக்கை கையாண்டிருந்த விதம்தான் ‘பசங்க’ படத்தை பார்க்க தூண்டியது முதலில். அதிலும் டயலாக்கை கதாநாயகி சொன்னவுடன் பிண்ணனியில் ‘தெண்பாண்டிச் சீமையிலே’ பாட்டுக்கான பிண்ணனி இசை வேண்டுமென்றே போடும் போது ஏற்படுத்துகின்ற சிரிப்பு கொஞ்ச நஞ்சமல்ல!

முதலில் சசிக்குமாரைத்தான் பாராட்ட வேண்டும். சுப்பிரமணியபுரம் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், அடுத்து உடனே படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதும், அதுவும் முழுக்க முழுக்க சிறுவர்களை மட்டும் மையமாகக் கொண்டு, எந்த ஒரு ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் ஒரு படத்தை தயாரித்த தைரியத்தையும் பாராட்டவேண்டும். படத்தின் இயக்குநர் முதல் நடிகர்கள் வரை யாரையும் கேள்விப்பட்டது கூட கிடையாது! எனக்கு இந்த படத்தில் தெரிந்த இரண்டே இரண்டு பெயர்கள் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தயாரிப்பாளர் சசிக்குமார் மட்டுமே.

என்னளவில் இது மிகச் சிறந்த மட்டுமின்றி, வித்தியாசமான படமாகவும் பார்க்கிறேன்,காரணம், காதலை மெயின் ட்ராக்கில் விட்டு, அதைச்சுற்றி, நகைச்சுவையையும், ஆக்‌ஷனையும், மசாலாவையும் பின்னும் வழக்கமான தமிழ் சினிமாவுக்கு மத்தியில் சிறுவர்களை பிரதானப்படுத்தியும், காதலை சைட் ட்ராக்கில் மட்டும் ஓடவிட்டு, அதையே நகைச்சுவையாகவும் கையாண்டிருக்கும் விதமும், மிடில் கிளாஸ் தகப்பனின் பாசத்தை வெளிப்பட்டிருக்கும் விதமும், எல்லவற்றிற்கும் மேலாக படத்தில் எல்லாருமே நடித்திருப்பதும் இப்படி பல விஷயங்களைச் சொல்லலாம்.

இவங்கதான் அந்த பசங்க

இவங்கதான் அந்த ”பசங்க”

இரு பள்ளிக்கூட பசங்கள் (ஜீவா, அன்பு), அவர்களுக்கென்று ஒரு க்ரூப், அதில் ஒரு பையனின் (ஜீவா) அப்பாதான் வாத்தியார், அக்கா நாயகி, இன்னொரு பையனின் (அன்பு) சித்தப்பா நாயகன், அந்தக் குடும்பத்தில் சில பிரச்சனைகள், இருவரது குடும்பமும் எதிரெதிர் வீட்டில் இதைச் சுற்றிதான் மொத்தக் கதையும் நகர்கிறது. பள்ளிக்கூட பசங்களை பிரதானப்படுத்திதான் முழுப்படமுமே என்றாலும், அதனிடயே ஒரு கலாட்டா காதல், மிடில் க்ளாஸ் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், குழந்தைகளின் லூட்டிகள் என ஒரு காக்டெயிலையே அள்ளி கொடுத்திருக்கிறார் இயக்குநர். முதல் படம் என்கிறார்கள் (வாழ்த்துக்கள் சார், தமிழ் சினிமா மீது நம்பிக்கை ஏற்படுகிறது!)

பசங்களின் வாயிலாகவே அவர்களைப்பற்றியும், அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அறிமுகம் கொடுக்கிறார்கள். படத்தின் ஆரம்பக்காட்சிகளிலும், ஜீவாவிற்கு கொடுக்கும் பில்டப்புகளிலும், அவனுடைய ஜால்ராக்களுடனான வசனத்திலும் தமிழ் சினிமாவின் பல்வேறு காட்சிகளையும், வில்லன் பாத்திரங்களையும் கொலை வெறியோடு போட்டுத் தாக்குகிறார்கள் (ஒரு வேளை இதுக்குப் பேருதான் பின்நவீனத்துவ படமோ???)!!!

படம் முழுக்க தெரிகின்ற பாஸிட்டிவ் சென்ஸ், அன்புக்கரசுவின் பாத்திரப்படைப்பு, அப்துல்கலாமின் வரிகள் போன்றவை நம்பிக்கையை ஏற்படுத்துகிறதென்றால், நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே ஏற்படும் காதலும், அன்பு என்ற பையனின் தம்பியாக வரும் குழந்தையின் லூட்டியும் சிரிப்பை வரவழைக்கிறது.

எல்லாருடைய பாத்திரப் படைப்புமே அருமையாக இருந்தாலும் ஜீவாவின் தந்தையாக வரும் சொக்கலிங்கம் என்கிற வாத்தியாரின் பாத்திரப்படைப்பு மிக அருமை. சண்டை போட்டவ்ரிடமே திரும்ப சென்று பிரச்சனையை தீர்க்க முயல்வது, ‘அன்பு’வை ஊக்கப்படுத்துவது, தன் பையனாக இருந்தாலும் க்ளாசில் சமமாக நடத்துவது என்று சொக்கலிங்கம் வாத்தியாரின் பாத்திரப்படைப்பு மனதை அள்ளுகிறது.

இசை ஜேம்ஸ்வசந்தன், சுப்பிரமணியபுரத்தில் ஏற்படுத்திய நம்பிக்கையை இதிலும் ஏற்படுத்தியிருக்கிறார். அதிலும் ஒரு வெட்கம் வருதே வருதே பாடல் இசையும், எடுக்கப்பட்டிருந்த விதமும், பாடல் வரிகளும் மிக அருமை (இந்தப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்ட இந்தப்பாடலும் ஒரு காரணம்). பாடல்களில் மட்டுமின்றி பின்ணனி இசையிலும் பட்டாசு கிளப்பியிருக்கிறார்.

ஒரு வெக்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே

பெயர் போடும் போது, வசனமும், ஒளிப்பதிவும் யார் என பார்க்காமல் விட்டோமே என்ற வருத்தத்தை ஏற்படுத்தச் செய்தது படத்தில் இவர்களுடைய பங்களிப்பு. ஒரு வெட்கம் வருதே பாடலிலேயே ஒளிப்பதிவின் அருமையை புரிந்து கொள்ளலாம் என்றால்,

”நாம சொல்றதை புரிஞ்சுக்குறதுக்கும், ஏத்துக்குறதுக்கும் ஒரு மனசு வேணும், அந்த மனசு உங்ககிட்ட இருக்கு”

ஒருத்தருக்கு ஒண்ணுக்கு வந்தா ஏண்டா எல்லாத்துக்கும் ஒண்ணுக்கு வந்துருது?

“முன்ன பின்ன தெரியாத கஸ்டமர்கிட்ட கடையில் சிரிச்சு பேசறோம், பொண்டாகிட்ட சண்டை போடுறோமே???”

“பாவண்டா அவன், எல்லா வேலையும் அவனே செய்யுறான், ரொம்ப கஷ்டப்படுறான் – யாரா, என்னப்பத்திதாண்டா பேசிட்டிருக்கேன்”

“நாமதான் சார் நம்ம பசங்களோட முதல் ரோல்மாடல்”

இதெல்லாமே ஒரு சில ‘அட’ போட வைக்கும் வசனங்கள். இது மாதிரி படம் முழுக்க பல ‘அட”க்கள்.

கிளாஸில் லீடரை தேர்ந்தெடுப்பது, பேசறவங்க பேரை எழுதி வைக்குறது, ப்ராகரஸ் கார்டு கொடுக்கறது, மெட்ராஸ் ஐ வர்றது, விடியற்காலைல சத்தம் போட்டு படிக்கறது, பிஞ்சு போன ரப்பர் செப்பலை குச்சில தூக்கிட்டு வர்றதுன்னு பல காட்சிகளை பார்க்கும் போது மீண்டும் ஒருமுறை அந்த கள்ளங்கபடமற்ற வாழ்க்கையை வாழ்ந்துபாக்கணுங்கிற ஆசை நம்மை மீறி வருகிறது.

பெற்றோரோ இல்லை சுற்றியிருப்போரோ, அவர்களுடைய செயல்களும், செய்கைகளும் எந்தளவு குழந்தைகளை பாதிக்கும் என்பதை படத்தில் நன்றாகவே சொல்லியிருக்கிறார். உண்மையில் பல காட்சிகள் பெரியவர்கள், குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையில் பசங்க படம் மாணவர்களுக்கு தங்களையே திரையில் காணவும், இளைஞர்களுக்கு தன் மாணவப்பருவத்தை திரும்பிபார்க்கவும், பெரியவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் உலகை புரிந்து கொள்ளவும், சமூதாயத்திற்கு சமூக முரண்பாடுகளை கொஞ்சம் தெரிந்து கொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக சி(ப)ல இயக்குநர்களுக்கு படம் எடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கிறது.

என்னடா இவன் ஓவரா பில்டப் கொடுக்கிறான், படத்துல குறையே இல்லியான்னு கேக்கலாம், அதுவும் இருக்கலாம், ஆனா இந்த ஆண்டில் இதுவரை வந்ததில் ஒரு மிகச் சிறந்த படமாகத்தான் என்னால் பசங்க படத்தை பார்க்கமுடிகிறது.

பின்குறிப்பு (வாலிபப்பசங்களுக்கும்):

குளத்தில இருக்குற பூ வேணுமான்னு நாயகன் கேட்க, வேண்டும் என்பதை கண்புருவத்தை உயர்த்தியே பதில் சொன்ன நாயகியின் அந்த செய்கையை பார்க்கவும் (பாட்டுலியே அது மாதிரி ரெண்டு முறை வரும்), நாயகன் நாயகிக்கிடையேயான காதலை பார்க்கவும், அன்புவின் தம்பியாக வரும் குழந்தையின் குறும்பை ரசிக்கவும் மட்டுமே தாராளமாக ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்…..

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:

ஏ.ஆர். ரகுமானுக்கு நடந்த முதல் பாராட்டு விழா

மார்ச் 2, 2009 1 மறுமொழி

ஆஸ்கார், கோல்டன் குளாப், பாஃப்தா போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், பல உள்ளங்களின் கொள்ளைக்கார்ருமான ஏ.ஆர். ரகுமானுக்கு, ஆஸ்கார் விருது வாங்கிய பின் நடக்கும் முதல் பாராட்டு விழா, திரை இசை கலைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டது. ஏறக்குறைய விருது வாங்கிய பின் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழகத்தில் நடக்கும் முதல் பாராட்டு விழா என்று நினைக்கிறேன்

சென்னை வடபழனியில், கமலா தியேட்டர் அருகேயுள்ள அந்த சங்கத்தினுடைய கட்டிடத்தில் அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவிற்கு ஏறக்குறை தமிழ் இசையுலகின் எல்லாக் கலைஞர்களும் (இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், பாலமுரளி கிருஷ்ணா, ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், யுவன்சங்கர் ராஜா, வித்யாசாகர், தேவா, ஜானகி, மனோ, சித்ரா, சின்மயி, டிரம்ஸ் சிவ மணி, சங்கர் கணேஷ், சபேஷ் முரளி, ஸ்ரீகாந்த் தேவா…..) இன்னும் பலர் வந்திருந்தனர்

விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ஏ.ஆர். ரகுமானை அனைவரும் பாராட்டி பேசினர். இது போன்ற பல பாராட்டுகளுக்கு ஏ.ஆர். ரகுமான் தகுதியானாவர்தான் எனினும், விழாவை நடத்திய முறையில் எனக்கு பல சங்கடங்களும், சந்தேகங்களும் கிளம்பின.

முதலில், இப்படி ஒரு விழா வடபழனியில் நடைபெறுகிறது என்பது, கமலா தியேட்டர் அருகில் தங்கியுள்ள எனக்கே மிக தாமதமாகத்தான் தெரிந்தது, அந்தளவுக்கு விழாஐப் பற்றிய விளம்பரங்களும் செய்திகளும் எதுவுமே இல்லை. தவிர விழாவிற்கு இசைக் கலைஞர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை!!!

சரி இடப்பற்றாக்குறையோ, சரியான திட்டமிடுதலோ இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் இந்த விழாவைப் பற்றிய எந்த ஒரு அறிவிப்போ, செய்தியோ எந்த டிவி சானலிலும் வரவில்லை, இந்த நிகழ்ச்சியையும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை

ஒருவேளை ‘படிக்காதவன் போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களின் ஆடியோ காசட் வெளியிடும் விழா அளவிற்கு இந்த விழா முக்கியத்துவம் பெறவில்லையோ என்ற சந்தேகம் உடனே எழுந்தது அல்லது இந்த விழாவில் எந்த நடிகையும், நடிகரும் ஆடவில்லை என்பது காரணமா என்று புரியவில்லை

மொக்கை விஷயங்களை திருப்பி திருப்பி மறு ஒளிபரப்பு செய்யும் சானல்கள், மொக்கை படத்திற்கு படு பயங்கர விளம்பரங்கள் செய்து படத்தை ஓட்டும் சானல்கள், செய்தித்தாள்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஏன் எதுவும் சொல்லவில்லை அல்லது எந்த நேரடி ஒளிபரப்பும் செய்யவில்லை என்ற கேள்வி என் மனதை குடைகிறது…

சரியாய் அதற்கு முந்தைய தினம்தான் ஏதோ ஒரு ஆங்கில செய்தி சானலில் (ஹெட்லைன்ஸ் டுடே என்று நினைக்கிறேன்), ஏ.ஆர்.ரகுமானின் புகழ் பாடும் அந்த நிகழ்ச்சியில் பல விஷயங்கள், அவருடைய பாலிவுட் பயணத்தைப் பிரதாணப் படுத்தியும், அவருடைய இந்தி பாடல்களில் பல வெற்றி பெற்றதை முன்னிறுத்தியுமே நிகழ்ச்சி அமைந்திருந்த்து.

ஏ.ஆர். ரகுமான் போன்ற இசைக் கலைஞரை மொழியைக் காரணமாக வைத்து அடைத்து வைக்க கூடாது எனினும், தமிழ் மொழியில் அவருக்கு இன்னும் நல்ல முறையில் பாராட்டு நடத்தியிருக்கலாம் என்பதே என் எண்ணம்…

ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கிய பின் தமிழ்நாட்டில் நடக்கும் முதல் பாராட்டு விழா என்பதோடு, ஒட்டு மொத்த இசைக் கலைஞர்களும் கலந்து கொள்ளும் விழா என்பதாலேயே இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது, ஆனால் நிகழ்ச்சியைப் பற்றிய எந்த செய்திகளும் எவற்றிலும் இல்லை

விழாவிற்கும் அவர்களைத் தவிர பொதுமக்களுக்கு வேறு யாருக்கும் அனுமதி இல்லை. ஒரு வேளை அவருக்கு ஒட்டு மொத்த திரையுலகமும் சேர்ந்து ஒரு மிகப் பெரிய பாராட்டு விழா நடத்தும் என்ணம் இருக்கலாம், ஆனால் இசைக்கு விருது வாங்கிய கலைஞனை, எல்லா இசைக் கலைஞர்களும் பாராட்டும் போது அதை மக்களுக்கு கொண்டு சென்றிருக்கலாமே!!!!

விழா முடிந்து கடுப்பில் வீட்டிற்கு வந்தால், சன் மியுஸிக்கில் 2007ல் நடந்த ஃபிலிம்பேர் விழா நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்திருந்தனர், இன்னொன்றில் மானாட மயிலாடவோ என்னமோ ஏ.ஆர். ரகுமான் ஸ்பெசலாம், அதனால் அவருடைய பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவார்களாம்… நல்லா புரோகிராம் குடுக்குறாங்கப்பா.

பின்குறிப்பு.

இளையராஜா ஏ.ஆர்.ரகுமானை மிக சிலாகித்து பேசியதாக நண்பன் சொன்னான்

ஆஸ்கார் மேடையில் தமிழிலும் சில வார்த்தைகள் பேசிய ஏ.ஆர்.ரகுமானை, யுவன்சங்கர் ராஜா முழுதும் ஆங்கிலத்தில் வாழ்த்திப் பேசினார்

சங்கர் கணேஷ் ஏ.ஆர்.ரகுமானை வாழ்த்துகிறேன் என்று யார் யாரையோ வாழ்த்திக் கொண்டிருந்தார்

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்: