தொகுப்பு

Posts Tagged ‘உண்மை’

நான் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

  1. நடிகைகளிடம்: நீங்க குடிக்கிற பால்ல ஆடை இருந்தா குடிப்பீங்களா இல்லை தூக்கிப் போட்டுடுவீங்களா?
  2. வில்லன்களிடம்: நல்லா பயங்கரமா உடம்பை வளத்துட்டு குச்சி மாதிரி இருக்கிற ஹீரோகிட்ட அடி வாங்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?
  3. நடிகர்களிடம்: ‘பஞ்ச் டயலாக் பேசும் போது வரும் சிரிப்பை எப்படி கட்டுப் படுத்துறீங்க? (சொல்லிக் கொடுத்தீங்கன்னா அதே டெக்னிக்கை, அந்த சீன் வரும் போது நாங்களும் பயன்படுத்துவோம்!!!)
  4. இசை அமைப்பாளர்களிடம்: முன்னனாச்சும் இங்கிலீசு பாட்டையோ அல்லது வேறெதோ தெரியாத பாட்டையோ யாருக்கும் தெரியாம சொந்த சரக்கு மாதிரி கொடுத்தீங்க, ஆனா இப்ப அது இல்லாம, பழைய தமிழ் பாட்டையே ரீ மிக்ஸ் பண்ணிட்டு, டைட்டில்ல இசைன்னு உங்க பேரை போட்டுக்கறீங்களே அது எப்படி?
  5. மேக்கப் மேன்களிடம்: நடிகைகளுக்கு மேக்கப் போட எவ்ளோ நேரம் செலவாகுது, எவ்ளோ பவுடர் செலவாகுது?
  6. பாடலாசிரியர்களிடம்: பொட்டிக்கடை யக்கா யக்கா மாதிரியான பாடல்களை எழுதும் போது உங்கள் சொந்தங்களை நினைச்சுப் பாத்திருக்கீங்களா?
  7. இயக்குநர்களிடம்: ஒரே ஒரு பாட்டுக்கு வர்ற நடிகைக்கும், படம் முழுக்க வர்ற நடிகைக்கும் என்ன வித்தியாசம் சார்?
  8. தமிழக அரசிடம்: என் புருஷனும் பக்கத்து வீட்டுப் பொண்ணும்”, மாமனாரின் இன்ப வெறி இதெல்லாம் தமிழ் பேருதானே. இப்டி எல்லாம் பேரு வெச்சாலும் வரி விலக்கு கொடுப்பீங்களா சார்?
  9. வெளி ஆட்களில்
    1. சுஹாசினி போன்ற திரை விமர்சகர்களிடம்: எப்ப திரை விமர்சனம் பண்ணுவீங்க?
    2. பேட்டி எடுக்கும் நிருபர்களிடம்: நடிக்க வாராட்டி என்ன ஆயிருப்பீங்க, சினிமாக்கு வராட்டி என்ன ஆயிருப்பீங்கன்னு கேக்கறீங்களே, நடிக்க வந்ததால, சினிமாக்கு வந்ததால மக்கள் என்ன ஆனாங்கன்னு என்னிக்காச்சும் கேட்டுருக்கீங்களா?
  10. மக்களிடம்: ஒரே வேலையை ரெண்டு பேர் செய்யும் போது, ஒருத்தரை மட்டும் ஹீரோன்னும், இன்னொருத்தரை வில்லன்னும் சொல்றீங்களே, அது ஏன்?
பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:,