இல்லம் > காமெடி > அட்டென்ஷன் டூ பீட்டர்ஸ்………..

அட்டென்ஷன் டூ பீட்டர்ஸ்………..

இந்த மடலும், மெயிலில் வந்தது..சும்மா சொல்லக் கூடாது அனுபவிச்சு எழுதியிருக்காங்க…………………..

எழுதிய புண்ணியவானுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
——————————————————————————————————————————————————————————————————————–

எப்ப பாரு, கையில மினரல் வாட்டரை வச்சிகிட்டே திரிவாங்க… (அவங்க சுகாதாரமா இருக்காங்களாமாம்!)

வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு லக்கேஜ் கொண்டு வந்த பேக்கில் உள்ள ஸ்டிக்கரை 4 மாசம் ஆனாலும் கிழிக்க மாட்டாங்க (இந்த டிசிஎஸ், இன்ஃபோசிஸ்னு பெரிய கம்பெனியில வேலை பாக்குறவனுங்க, பரங்கிமலை ஜோதி, விஜயா தியேட்டரு மாதிரி மொக்கை தியேட்டருல கூட டேகை கழட்ட மாட்டாங்களே அந்த மாதிரி!!!!!) ..
(10 லட்ச ரூபாய் லாட்டரி சீட்டு போல, பத்தரமா வச்சிகிட்டு என்ன பண்றாங்களோ?)

கேபின் லக்கேஜ் பேக்கை, நம்ம ஊரு ரோட்டுல உருட்டிகிட்டு அல்லது தள்ளிகிட்டு போறதுக்கு முயற்சி செய்வாங்க..(நம்ம ஊரு ரோட்ல கார் ஓட்டுரதே, சர்கஸ் சாகசம் மாதிரி.. இதுல இதுவேறையா?)

குளிக்கவே தேவையில்லாத மாதிரி சென்ட்டு, டியோட்ரன்ட், பாடி ஸ்பிரே அடிச்சிகிட்டு அலையறது….(பக்கத்துல நின்னு பேசறவங்களுக்கே.. மறுநாள்தான் அந்த வாசனையே போகும்னா பாத்துகோங்களேன்!)

கையேந்தி பவன்ல கூட கிரடிட் கார்டை எடுத்து நீட்டுவாங்க… (மப்புல இல்ல, மேகம் தெளிவா இருக்கும்போதே!)

சுத்தத்தைப் பத்தி அடிக்கடி மறக்காம கருப்பு எம்.ஜி.ஆர் போல பேசிகிட்டே இருப்பாங்க. ரோட்டு கடையில டீ சாப்டுட்டு, கப்பை கரைக்டா குப்பதொட்டியிலதான் போடுவேன்னு அடம் பிடிப்பாங்க! (வீட்டுல சாப்பிட்ட தட்டை எடுங்கப்பா முதல்ல..)

எதைவாங்கினாலும் திர்கம்ஸ்ல, டாலர்ல யோசிச்சி “ஹேய்.. சாப்பாடு 2 திர்கம்ஸ்தான்!, வாவ்.. மட்டன் கிலோ 10 திர்கம்ஸ்தான்”னு ராமானுஜர் ரேஞ்சிக்கு கணக்கு பண்ணுவாங்க.. (ஜெர்ரி கிங் கூட, புக் எழுதும்போது இப்டி யோசிச்சிருக்க மாட்டாரு!)

தும்மலோ.. கொட்டாவியோ.. வந்தா முடிச்சிட்டு “எக்ஸ்சூஸ்மீ” ன்னு சொல்றது...(அப்படி சொல்லும்போது நாம அவங்கள வடிவேலு ரேஞ்சிலதான் பார்போம்ங்கறது வேற விசயம்!!)

“செளக்கியமா”ன்னு கேக்காம.. “ஹாய்”ன்னு சொல்றது, “லட்ச”த்துக்கு பதிலா.. “மில்லியன்ல” சொல்றது, தயிருக்கு பதிலா.. “யோகர்டு”ன்னு சொல்றது, “ஹய்வே”க்கு பதிலா “ஃப்ரீவே”ன்னு சொல்றதுன்னு பீட்டருக்கே பீஸா குடுக்குற ரேஞ்சிக்கு பிரிப்பாய்ங்க! (இந்த பாயின்ட் பெங்களூர் பீட்டர்களுக்கும் பொருந்தும்!)

சாப்பாட்டுல காரம், மசாலா அயிட்டங்களை தவிர்ப்பது. சாப்பிடறப்பவோ.. இல்லனா, சாப்ட்டு முடிச்ச அப்புறமோ.. கண்டிப்பா “கோக்கோ (அ) பெப்சியோ” இருக்கனுமுன்னு அடம்புடிக்கிறது! (சுகாதாரம்..சுகாதாரம்ன்னு சொல்லிட்டு, டாய்லெட் ஆசிட்டை குடிங்கடே!)

சாதா ஹோட்டலுக்கு சாப்பிட போயிட்டு.. “தாபா இருக்கா, ஃபப்பே சிஸ்டம் இல்லியா, குபாக்/குணாஃபா உண்டா” ன்னு சப்ளையருக்கு கொலவெறியை கெளப்புறது! (வீட்ல இதெல்லாம் கேட்டா, சுடுதண்ணியை சுட வைப்பாங்கன்னு தெரிஞ்சிதான்.. ஹோட்டல்ல இந்த அலப்பரை!)

வந்த ஏர்லைன்ஸ்ச பத்தி… அந்த ஃபிளைட்ல சீட்டு சரியில்ல, ஜன்னல் பக்கதுல உக்காரமுடியல, பணிபெண்னுக்கு முக்கு சப்பை, கஞ்சப்பசங்க.. சாப்பிட ஒன்னும் குடுக்கல, ன்னு வந்து சேர்ந்துட்டு 2 மாசமா கொறை சொல்லிகிட்டு சுத்துறது.. (யப்பா.. கொடுத்த பணம், டிராவல் பண்றதுக்கு மட்டும்தான், ஃபிளைடையே உங்க பேருக்கு எழுதி வைக்கல! இதுல வர்றப்பவே ஹெட்ஃபோனு, டிஷ்யூ பேப்பருல்லாம் சுட்டுட்டு வந்துடறது)

நாம இது வரைக்கும் உலக வரைபடத்தில மட்டுமே பார்த்து இருக்கற இடங்களில்ல நின்னு எடுத்துகிட்ட போட்டோகளை ஆர்குட்லயும் ஃபேஸ்ஃபுக்லயும், ஜிமெயில் ஸ்டேடஸ்ல ஊர் பேரையும் போட்டு சீன் போடுவாங்க….

கடைசியா ஆனா நங்குன்னு ஒன்னு…
எதை சொல்ல வந்தாலும்.. “இப்படிதான் துபாய்ல…”, “இப்படிதான் நான் சிங்கபூர்ல இருந்தப்ப… ” ன்னு ஆரம்பிப்பாங்க!!

பிரிவுகள்:காமெடி குறிச்சொற்கள்:
 1. ksmuthukrishnan
  10:07 முப இல் செப்ரெம்பர் 17, 2009

  மிக மிக அருமையான உரை நடை.
  நன்றாக எழுதுகிறீர்கள்.
  வாழ்த்துகள்.

 2. 12:13 பிப இல் செப்ரெம்பர் 17, 2009

  //மிக மிக அருமையான உரை நடை. நன்றாக எழுதுகிறீர்கள்.
  வாழ்த்துகள்.//

  நன்றி முத்துகிருஷ்ணன், எல்லாப் பாராட்டுகளும் அந்த முகம் தெரியாத புண்ணியவானுக்கே உரியவை!!!!

 3. Mageshwaran S
  2:32 பிப இல் செப்ரெம்பர் 17, 2009

  Hey dude!…i lik this.. 🙂

 4. 10:11 பிப இல் செப்ரெம்பர் 17, 2009

  அந்த முகம் தெரியாத மெயிலருக்கு வாழ்த்துக்கள்!

 5. 12:59 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

  ஒரே காமெடி பட்டாளம் தான் . எங்க ஆபிசுல கூட இது மாதிரி தான் ஒரு அஞ்சு ஆறு பேரு எப்பவும் சுத்தீட்டே இருக்கானுக. இந்த கொசு தொல்ல தாங்கலப்பா

 6. 4:06 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

  :))))))))))))))))))))))

 7. 4:06 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

  தமிழாக்கம் நல்லா இருக்கு

 8. 4:25 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

  வருகைக்கு நன்றி மகேஷ், மேக்ஸிமம் இந்தியா, அடலேறு, புதுகைத் தென்றல்…

  எல்லாப் புகழும் அந்தப் புண்ணியவானுக்கே!!!

 9. 11:54 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

  ஆஹா!

  வாய் விட்டு சிரிச்சேன்.

  சில இடங்களில் என்னை தாக்கியது போலவும் இருந்தது 🙂

  எழுதியவருக்கும், இங்கே கொடுத்தவருக்கும் நன்றி.

 10. jayamalini
  5:10 முப இல் செப்ரெம்பர் 25, 2009

  எழுதினவங்க, நாம இது வரைக்கும் உலக வரைபடத்தில மட்டுமே பார்த்து இருக்கற இடங்களில்ல நின்னு எடுத்துகிட்ட போட்டோகளை ஆர்குட்லயும் ஃபேஸ்ஃபுக்லயும், ஜிமெயில் ஸ்டேடஸ்ல ஊர் பேரையும் போட்டு சீன் போடறதை விட்டுட்டார்… நீங்க சேர்த்துக்கோங்க 🙂

  ஜெயா.

 11. 7:17 பிப இல் ஒக்ரோபர் 1, 2009

  //எழுதினவங்க, நாம இது வரைக்கும் உலக வரைபடத்தில மட்டுமே பார்த்து இருக்கற இடங்களில்ல நின்னு எடுத்துகிட்ட போட்டோகளை ஆர்குட்லயும் ஃபேஸ்ஃபுக்லயும், ஜிமெயில் ஸ்டேடஸ்ல ஊர் பேரையும் போட்டு சீன் போடறதை விட்டுட்டார்… நீங்க சேர்த்துக்கோங்க :)//

  சூப்பர் பாயிண்ட்……சேத்துடறேன்….

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: