இல்லம் > சாதனை > சாதனை மங்கை – கிம் கிளிஸ்டர்ஸ்

சாதனை மங்கை – கிம் கிளிஸ்டர்ஸ்

டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் போட்டி  என்னதான் மிகப் பெரிய ஒன்றாக இருந்தாலும், வருடா வருடம் நடைபெறும் போட்டி என்பதால் அதில் யாராவது ஒருவர் வெற்றி பெறுவதென்பது ஒரு சாதாரண நிகழ்வே. நேற்று (14.09.09) நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் வென்று இந்த வருடக் கோப்பையை கிம் கிளிஸ்டர்ஸ் கைப்பற்றியதும் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்திருக்கக் கூடும்…..

கிளிஸ்டர்ஸுக்கு இந்த வெற்றி ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே 2005ல் இதே யுஎஸ் ஓபன் கோப்பையை வென்றவர்தான். ஆனால் இந்த இரண்டு வெற்றிகளுக்கும் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஏன் இதுவரை நடந்த அத்தனை போட்டிகளையும், சாதனைகளையும் விட இந்த வெற்றிக்கு பின் ஒரு பெருந் தனிச்சிறப்பு இருக்கிறது. ஆம், இந்த போட்டியின் வென்றதன் மூலம் 1980 க்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ‘அம்மா’ என்கிற வார்த்தைதான் இந்த வருட வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் தனிச் சிறப்பு (முதல் வைல்டு கார்டு சேம்பியனும் கூட)

எந்த ஒரு ஆணுடைய வாழ்விலும் திருமணமோ, இல்லற வாழ்வில் சம பங்கு வகித்தாலும், குழந்தைகளின் வரவோ அவனது முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை திருமணம் என்கிற விஷயமே பலரது வாழ்வில் தடைக் கல்லாக இருக்கக் கூடிய சமூக அமைப்புதான் நிலவுகிறது. இந்த அமைப்புதான் சினிமா போன்ற துறைகளில், தனக்கு பேத்தியோ அல்லது பேரனோ வந்தாலும் அந்த ஆணை இன்னொரு பெண்ணுடன் டூயட் பாடவைத்து அழகு பார்க்கும் சமூகம், 18 வயதிலேயே திருமணம் செய்தால் கூட, பெண்ணை துறையை விட்டே விலக்கிவைக்கிறது.

திருமணம் என்கிற விஷயமே இந்த நிலையில் இருக்கும் போது, குழந்தை விஷயத்தைச் சொல்லவா வேண்டும். தகவல் தொழில் நுட்பம் போன்ற நிறுவனம் சார்ந்த வேலைகளுக்குச் செல்லக் கூடிய பெண்கள் கூட, இயற்கையின் இந்த படைப்பு முறையின் மூலம் தங்களது கேரியர் வாழ்க்கையில் சின்னச் சின்னச் தியாகங்களோ அல்லது ஒட்டு மொத்தமாக விட்டுக் கொடுக்கவேண்டியச் சூழலே இருந்து வருகிறது. அந்தக் காலத்தைப் போன்று பெண்கள் பலசாலிகளாக இல்லை (அந்தக் காலத்தைப் போன்று ஆண்களும் பலசாலிகளாக இல்லையெனினும், அதை யாரும் சொல்வதில்லை) என்ற அங்கலாய்ப்புகளை கேட்கின்ற அதே சூழலில்தான் தனது ஒன்பதாவது மாதம் வரையிலும் வேலைக்குச் சென்று கொண்டும், குழந்தை பெற்ற பின்பு மிகக் குறைந்த காலத்திலேயே அலுவலகத்திற்கு திரும்பி, அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் இடையே மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் பெண்களையும் காணமுடிகிறது….

இப்படி சமூகமும், இயற்கையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் முட்டுக்கட்டைகளுக்கு நடுவில், டென்னிஸ் போன்ற உடல் வலு அதிகம் தேவைப்படுகின்ற ஒரு துறையில் கலந்து கொண்டு, அதுவும் குழந்தை பிறந்த இரண்டு வருடங்களிலேயே இந்தக் கோப்பையை வென்றது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய சாதனைதான். தனது அப்பா ஒரு கால்பந்து வீரராகவும், அம்மா ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையாகவும் இருந்ததாலேயே, கால்பந்து வீர்ர்களின் உறுதியான கால்களும், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களின் வளைந்து கொடுக்கும் உடலமைப்பும் கொண்டுள்ளார் என்று புகழப்பட்ட கிளிஸ்டர்ஸ், அதே உத்வேகத்தை குழந்தை பெற்ற பின்பும் கொண்டு வந்திருப்பது அரிய விஷயமே!!!!

கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)

கிளிஸ்டர்ஸ் (திருமணத்திற்கு முன்னும் பின்னும்)

ஏற்கனவே 2003ல் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், 2005ல் யுஎஸ் ஒபன் முதற்கொண்டு, திருமணத்திற்கு முன் 34 கோப்பைகளை வென்றிருந்தாலும், குழந்தை பெற்ற பின் தனது விளையாட்டுத் திறனையும்,  வாழ்க்கையையும் பூஜ்யத்திலிருந்துதான் அவர் ஆரம்பிக்கவேண்டியிருந்தது. அதிலும் தனது இரண்டாவது வாழ்வை ஆரம்பித்த முதல் 15 முதல்தர போட்டிகளுக்குள்ளேயே இந்த பதக்கத்தை அவர் வென்றிருக்கிறார்….

இந்தப் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் மோதும் போது கிளிஸ்டர்ஸ், தர வரிசைப் பட்டியலிலேயே இல்லை. ஆனால் இந்தக் கோப்பையைப் பெற, தர வரிசைப் பட்டியலில் முதல் 20 இடத்திற்குள் இருக்கும் 5 பேரை அவர் தோற்கடிக்க வேண்டியிருந்தது. இரண்டாவது சுற்றில் 14ஆம் இடத்தைப் பெற்ற மேரியன் பர்டோலியையும், நான்காம் சுற்றில் உலகின் மூன்றம் இடத்திலுள்ள வீனஸ் வில்லியம்சையும், காலிறுதியில் 18வது இடத்திலுள்ள நா லி யையும், அரையிறுதியில் இரண்டாம் இடத்திலுள்ள செரீனா வில்லியம்சையும், இறுதிப் போட்டியில் 9 ஆம் இடத்திலுள்ள கரோலினையும் வென்றுள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்சின் கோபமும், நடுவரிடம் நடந்து கொண்ட முறையும், போட்டியை விட்டு வில்லியம்சை வெளியேற வைத்தது போன்ற செயல்கள்  கிளிஸ்டர்சின் விளையாட்டுத்திறனை பத்திரிக்கைகள் கவர் செய்யாமல் மறைத்தது எனலாம். ஏனெனில் அந்த போட்டியில் கிளிஸ்டர்ஸ் வெற்றிபெறக் கூடியச் சூழலில்தான் (6–4, 7–5) இருந்தார். ஒரே போட்டிச் சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகள் இருவரையும் வென்ற முதல் பெண் இவரே என்ற பெருமையையும் பெற்றுள்ளார்!!!! யு எஸ் ஒப்பன் போட்டி வரலாற்றில் முதல் வைல்டு கார்டு சேம்பியன் என்ற பெருமையையும் பெற்றார்.

இயற்கை பெண்களுக்கு மட்டும் அளித்திருக்கும் நிர்ப்பந்தமா அல்லது நிகரற்ற அற்புதமா என்று எளிதில் சொல்லிவிட முடியாத ஒரு நிதர்சனம்தான் இந்த குழந்தையைப் பெறக் கூடிய உடலமைப்பு முறை. பெரும்பாலும் வரமாகவும், கிடைத்தற்கரிய பேறாகவும் கருதப்பட்டாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சமூக அமைப்புகளும் இதையே சாபமாகவும் சிலருக்கு மாற்றியதுண்டு. எந்த ஒரு ஆணும் தன் வாழ்விலோ, துறையிலோ வெற்றி பெற, சமூகம் முதற்கொண்டு பல காரணிகளை எதிர் கொண்டு போராடுகிறான் என்றால், ஒரு பெண் வெற்றி பெறவோ இவை எல்லாவற்றையும் தவிர இயற்கையையும் சேர்த்து எதிர்கொண்டு போராட வேண்டியிருக்கிறது…..

அப்படிப்பட்ட ஒரு சூழலில் கிம் கிளிஸ்டர்ஸ் அடைந்திருக்கும் வெற்றி மிகப்பெரிய வெற்றி மட்டுமல்ல, பலருக்கு முன்னுதாரனமும் கூட (இதே பெல்ஜியத்தைச் சேர்ந்த, தர வரிசையில் முதலிடத்தில் இருந்த, ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த ஜஸ்டின் ஹெனினும் மீண்டும் விளையாட வரக்கூடும் என்கிற பேச்சு நிலவுகிறது)………

வாழ்த்துக்கள் கிம் கிளிஸ்டர்ஸ்………………………

பின்குறிப்பு:

என்னதான் போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும், வெற்றி பெற்ற பின் கிளிஸ்டர்ஸ் அடைந்த மகிழ்ச்சி நமக்கும் பரவினாலும், போட்டியைக் காண வந்திருந்த ஒரு சிறப்பு விருந்தினர்தான் எனது கவனத்தை மட்டுமல்ல, அங்கிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தார். போட்டி முடிந்த பின் காமிராக்கள் அவரை பல முறை காட்டினாலும், அவரையோ அல்லது அல்லது கிளிஸ்டர்ஸையோ காட்டும் போது அவர் காட்டிய உற்சாகம் நம்மையும் தொற்றியது. வெறுமனே பார்வையாளர் கூட்டத்தில் மட்டுமே இருக்காமல், கிளிஸ்டர்ஸ் கோப்பையை வாங்கிய பின் மைதானத்திற்கு வந்து கிளிஸ்டர்சுடன் வெற்றியையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது கண்கொள்ளாக் காட்சி….

அந்த சிறப்பு விருந்தினர் இவர்தான் (Jada Ellie)…..

Kim with kid

நான் வேணுமா? கப்பு வேணுமா?

குழந்தையின் உற்சாகம்

குழந்தையின் உற்சாகம்

இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!

இனி நான் உனக்கு சொல்லித் தருகிறேன்!!!!

உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு

உனக்கு ஃபோட்டோவுக்கு போஸே கொடுக்க தெரியலை, என்னை மாதிரி கொடு

எனக்கு வெக்கமா இருக்கு!!!!

எனக்கு வெக்கமா இருக்கு!!!!

பிரிவுகள்:சாதனை குறிச்சொற்கள்:
 1. 11:33 முப இல் செப்ரெம்பர் 15, 2009

  நல்ல பார்வை.
  வழமையில் நானும் விளையாட்டைப் பார்ப்பேன்.
  இம்முறை உடல்நலம் நன்றாயிராததால் பார்க்கவில்லை.

  உங்கள் விமர்சனத்தைப் பார்த்த பின் தவறவிட்டதற்காக வருத்தமாகவும் இருக்கிறது.

 2. 12:20 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

  மிக்க நன்றிகள் சந்திரவதனா!!!!

  போட்டியின் இறுதி நிமிடங்கள் மிக உணர்வுப் பூர்வமானவை!!!!

 3. ennamopo
  1:49 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

  //எந்த ஒரு ஆணுடைய வாழ்விலும் திருமணமோ, இல்லற வாழ்வில் சம பங்கு இருந்தாலும், குழந்தைகளின் வரவோ அவனது முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருந்ததில்லை. ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை திருமணம் என்கிற விஷயமே பலரது வாழ்வில் தடைக் கல்லாக இருக்கக் கூடிய சமூக அமைப்புதான் நிலவுகிறது. இந்த அமைப்புதான் சினிமா போன்ற துறைகளில், தனக்கு பேத்தியோ அல்லது பேரனோ வந்தாலும் அந்த ஆணை இன்னொரு பெண்ணுடன் டூயட் பாடவைத்து அழகு பார்க்கும் சமூகம், 18 வயதிலேயே திருமணம் செய்தால் கூட, பெண்ணை துறையை விட்டு விலக்கிவைக்கிறது.//

  என்ன திடீர்ன்னு விளையாட்டை பத்தி பதிவு எழுதியிருகன்னு படிச்சேன், அதுலயும் சில சமுதாய வழக்கங்களை சொல்லி இருக்குற மாதிரி இருக்குது.

  நம் நாட்டில் சினிமா நடிகைகள் மட்டும் தான் கல்யாணத்திற்கு பிறகு நடிப்பு திறமை(?) காட்ட வருவார்கள்.

  மற்றபடி நானும் பார்க்க தவறி விட்டேன். நேற்று federer தோற்றது வருத்தமளிக்க கூடிய விஷயம் தான்.
  என்னை மிகவும் ஆர்வமாக டென்னிஸ் பார்க்க வைத்த பிளேயர் – goran ivanisevic…

 4. 3:27 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

  நன்றி செந்தில்….

 5. 5:59 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

  வாவ், மிக அழகான தெளிவான பதிவு நண்பா, நானும் இந்த போட்டியை கண்டேன், என்னே நேர்த்தியான திருப்பு அடிகள்( reverse shorts ) . புகைப்படம் அருமை தங்களின் பதிவை போலவே.

  அழியாத அன்புடன்
  அடலேறு

 6. 8:05 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

  மிக்க நன்றிகள் அடலேறு!!!

 7. 8:13 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

  அற்புதமான தெளிவான நீரோடை போன்ற பதிவு.

  பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  எந்த நிலையிலும் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்று நம்மெல்லோருக்கும் முன்னோடியாக இருக்கும் இவரை வாழ்த்துவோம். இதே சமயத்தில், இன்னமும் ஜொலிக்கும் டெண்டுல்கர் மற்றும் லியாண்டரையும் வாழ்த்த விரும்புகிறேன்.

  வாழ்த்துக்கள்!

  நன்றி.

 8. Mageshwaran S
  11:00 பிப இல் செப்ரெம்பர் 15, 2009

  ” Form is temporary,class is permanent ” Proved twice this week.Clijsters & Sachin…Good post.

 9. 9:17 முப இல் செப்ரெம்பர் 16, 2009

  நன்றி மேக்ஸிமம் இந்தியா!!!! கண்டிப்பாக இது ஒரு முன்னுதாரணமான நிகழ்வே!!!!

  நன்றி மகேஷ்!!!!

 10. 9:13 முப இல் செப்ரெம்பர் 22, 2009

  அருமையான பதிவு நரேஷ்

 11. Karthikeyan
  10:04 பிப இல் செப்ரெம்பர் 30, 2009

  உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது நரேஷ்.
  இந்தப் பதிவும் நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.

 12. 7:07 பிப இல் ஒக்ரோபர் 1, 2009

  மிக்க நன்றி கார்த்திகேயன்….

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: