இல்லம் > இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி > இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!!

முகத்தில் அறைந்தார் போன்றே இருந்தது அந்த உண்மை நிகழ்ந்த போது….நிலையின்மை மட்டுமே நிலையானது என்று நன்கு தெரிந்திருந்தாலும், சில நிதர்சனங்கள் நடந்தேறும் போது தாங்கிக்கக் கூடிய மனநிலையோ, திடமோ ஏனோ நமக்கு வாய்க்கப் பெறுவதில்லை….

யாருக்குத்தான் அதிர்ச்சியாய் இருக்காது அந்த செய்தியைப் பார்த்தாலோ கேள்விப்பட்டாலோ???? சன் டிவியின் டாப் டென் நிகழ்ச்சியில் முதலிடத்திலிருந்த மாசிலாமணி திரைப்படம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டதாக போன வாரம் கேள்விப்பட்ட போது யாருக்காவது அதிர்ச்சி ஏற்படாதிருக்குமா???? உலகத்தரமான நடிப்பு, இயக்கம் திரைக்கதை என்று பல தரங்கள் இருந்ததனாலேயே அதன் தராதரம் சாதாரண ரசிகர்களுக்கு தெரியாதிருந்தாலும், வழக்கமாக தரமான படங்களை அரவணைத்துச் செல்லும் சன் டிவி, மாசிலாமணியை அரவணைத்துக் கொண்டதில் வியப்பேதுமில்லைதான்

மற்ற குப்பை படங்களான நாடோடிகள், பசங்க எல்லாம் தேவையில்லா விளம்பரங்கள், பில்டப்புகள் மூலம் எதிர்ப்பார்ப்பையும் வெற்றியையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் மாசிலாமணியோ எந்த வித ஆரவாரமுமின்றி விண்னைத் தொடும் வெற்றியை அடைந்தது.

என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால் சன் டிவி நடுவில் வந்த ஐந்தாம் படை என்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த படத்தையும் ரிலீஸ் செய்யாமல் ஏன் விட்டார்கள் என்பதுதான், இது போன்ற நல்ல தரமான படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்குங்க ஆஃபீசர்!!!!……..

ஆனா ஒண்ணு, உலகத் தரமான படங்களை கொடுப்பது மட்டுமல்ல, திருட்டு விசிடியை ஒழிப்பதிலும் சன் டிவியின் பங்கு அளப்பறியதுதாங்க…சும்மாவா!!!! இவிங்க படம்னா திருட்டு விசிடில வாங்கி பாக்குறதுக்கு கூட பயமா இருக்குன்னா பாத்துக்கோங்களேன்!!!!

——————————————————————————————————————————————————————————————————————

முக்கியமான நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் இந்த பேப்பர்காரங்களுடைய பங்களிப்பை குறைத்து மதிப்பிடவே முடியாது……..

சினேகாவிற்கு குறுஞ்செய்தி மூலம் தொல்லை கொடுத்த ஆளை எப்புடி மடக்கி புடிச்சாங்க, இதே மாதிரி ரம்பா வீட்டுல தகராறு பண்ண ஆளை எப்புடில்லாம் விரட்டுனாங்க, பிரபுதேவாவுக்கும் நயந்தாராவுக்கும் எப்படி அந்த தெய்வீகக் காதல் மலர்ந்தது, சோனியா அகர்வாலுக்கும், செல்வராகவனுக்கும் ஏன் விவாகரத்து நடக்குது இப்படி எல்லாத்தையும் விலாவரியா சொல்றதுனாலத்தான் நாட்டுல மக்களுக்கு ஜெனரல் நாலெட்ஜ்ன்னு ஒண்ணே இருக்கு!!! இவங்க இல்லாமப்போனா நாட்டுல மக்களுடைய நிலையோ, அரிப்போ என்னவாகியிருக்கும்னே சொல்ல முடியலியே????

இதுல தினத்தந்தில கட்டம் கட்டி சில செய்திகளைப் போடுவாங்க பாருங்க, அந்தச் செய்திகள் ஒவ்வொண்ணும் அப்படியே அரிப்புப் (மன்னிக்கவும்) அறிவுப் பொக்கிஷங்கள்……என்னா இதே மாதிரி அந்த பத்திரிக்கைகாரங்க குடும்பத்துலியும் யாரு யாரோட ஓடிப் போனாங்க, யாருக்கு விவாகரத்து நடந்தது, ஏன் நடக்குதுன்னு போட்டாங்கன்னா இன்னும் இண்ட்ரெஸ்ட்டா இருக்கும்

என் சந்தேகம் என்னான்னா, பிரபுதேவா, நயந்தாராவிற்கு இடையே காதல் மலர்ந்தது எப்புடி, அந்தக் காதலோட ஆழம் என்ன, நீளம் என்ன, அகலம் என்னான்னு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சாங்களே எல்லாஞ் சரிதான்…………ஆனா எங்க ஊர்லல்லாம், புருஷனோ, பொண்டாட்டியோ இருக்கறப்பவே, ஒருத்தர் இன்னொரு ஆளு கூட ஊர் சுத்துனா கள்ளக் காதல்னுதான் சொல்லுவாங்க, ஆனா இவனுங்க என்னான்னா, அம்பிகாவதி அமராவதிக்கப்புறம் இதுதான் தெய்வீகக் காதல்ங்கிற ரேஞ்சுக்கு காமிக்குறானுங்க……….

என்னமோ போங்கப்பா, சினிமாவுல வர்ற காதல் ரேஞ்சுக்குதான் இருக்கு பத்திரிக்கைக்காரங்களோட கவரேஜூம்…..

——————————————————————————————————————————————————————————————————————

நடிகர் விஜய்யோட செலக்‌ஷன் எப்பவுமே பிரமாதமாத்தான் இருக்கும், அவருடைய படங்களும் சரி, அதில் வரும் காட்சிகளும் சரி சிறப்பானதாகவே இருக்கும். அவரது திரைப்படங்களில் வரும் காட்சிகளுக்கு சற்றும் குறைவில்லாமல்தான் இருந்தது அந்த சந்திப்புக் காட்சியும். போனவாரம் ராகுல் காந்தி சென்னை வந்தப்ப விஜய் போய் அவரைப் பார்த்திட்டு வந்ததுமில்லாம, அந்தக் கட்சியிலியே சேரப்போறதா பேச்சு வந்ததன் மூலம் தனது செலக்‌ஷன் எப்பொழுதும் ‘சோடை போகாதுன்னு இன்னொரு முறை நிரூபிச்சிருக்காரு….

இந்தப் பேச்சு அடங்கி முடியறதுக்குள்ள விஜய்யோட வேட்டைக்காரன் படத்தை சன் டிவியே ரிலீஸ் பண்ணப் போதுன்னு இன்னொரு அறிவிப்பும் வேற வந்திருக்கு!!! சும்மா சொல்லக் கூடாது ரெண்டு மேட்டருமே குட் காம்பினேஷன்!

விஜய் சார் ஒரே ஒரு வேண்டுகோள், நீங்க பண்ண எல்லாமே சரி, தப்பி தவறி ஒரு ஆசையில உங்களோட ஏதாவது ஒரு படத்தை ராகுல்காந்தி பாத்தே ஆகனும்னு சொல்லி கட்டாயப்படுத்திடாதீங்க, அப்புறம் உங்க பிளான்லாம் வீணாப் போயிடும், உங்க படம் மாதிரியே!!!

————————————————————————————————————————————————————————————

 1. senthil
  10:30 முப இல் செப்ரெம்பர் 2, 2009

  //விஜய் சார் ஒரே ஒரு வேண்டுகோள், நீங்க பண்ண எல்லாமே சரி, தப்பி தவறி ஒரு ஆசையில உங்களோட ஏதாவது ஒரு படத்தை ராகுல்காந்தி பாத்தே ஆகனும்னு சொல்லி கட்டாயப்படுத்திடாதீங்க, அப்புறம் உங்க பிளான்லாம் வீணாப் போயிடும், உங்க படம் மாதிரியே!!!//

  super punch

 2. Thomas Ruban
  12:46 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  //இவிங்க படம்னா திருட்டு விசிடில வாங்கி பாக்குறதுக்கு கூட பயமா இருக்குன்னா பாத்துக்கோங்களேன்!!!!//

  //சினிமாவுல வர்ற காதல் ரேஞ்சுக்குதான் இருக்கு பத்திரிக்கைக்காரங்களோட கவரேஜூம்…..//

  //விஜய் சார் ஒரே ஒரு வேண்டுகோள், நீங்க பண்ண எல்லாமே சரி, தப்பி தவறி ஒரு ஆசையில உங்களோட ஏதாவது ஒரு படத்தை ராகுல்காந்தி பாத்தே ஆகனும்னு சொல்லி கட்டாயப்படுத்திடாதீங்க, அப்புறம் உங்க பிளான்லாம் வீணாப் போயிடும், உங்க படம் மாதிரியே!!!//

  மூன்றும் முத்தான சூப்பர் பன்ஞ்ச்கள், ரசித்தேன், சிரித்தேன்.

  பதிவுக்கு நன்றி.

 3. 1:13 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  நன்றி செந்தில்….

  நன்றி தாமஸ் ரூபன்….

 4. 1:57 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  நரேஷ், கிழி கிழின்னு கிழிச்சிடீங்க… 🙂

 5. karthick prabhu
  3:01 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  arumaiyana padhivu sun tv oda sagaptham mudinju pochu makal ipo ushra irukaanga

  sooriyan evlo nal megathai maraikundhunu parpome

 6. Johan Paris
  3:24 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  Thomas Ruban சொல்வதையே நானும் கூறிகிறேன்.
  அருமை உங்கள் பிடி (அடி) யை மிக ரசித்தேன்.
  அந்த எருமைத் தோலுகளுக்கு உறைக்காது.

 7. 3:49 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  நன்றி சரவணகுமரன்!!!!

  இன்னும் உஷாராக வேண்டியது ரொம்ப அதிகம் இருக்கு கார்த்திக் பிரபு :))) நன்றிஹை!!!

  நன்றி ஜான் பாரிஸ்….

 8. 9:01 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  🙂

 9. Maximum India
  11:04 பிப இல் செப்ரெம்பர் 2, 2009

  பதிவு ரசிக்கும் படியாக நன்றாக இருந்தது.

  நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

 10. 6:17 முப இல் செப்ரெம்பர் 3, 2009

  நன்றி ஸ்டாலின்

  நன்றி மேக்ஸிமம் இந்தியா….

 11. saravnan
  10:15 பிப இல் செப்ரெம்பர் 11, 2009

  super adhvum andha last punch , really true

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: