இல்லம் > நிர்வாகப் பாடங்கள் > மகாபாரதப்போர் – சில நிர்வாகப் பாடங்கள் (நிறைவு)

மகாபாரதப்போர் – சில நிர்வாகப் பாடங்கள் (நிறைவு)

போர்களின் தன்மையும், மகாபாரதப் போரில் அறிவியலும்

மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள் (பாகம் -1)

மகாபாரதப் போரில் நிர்வாகப் பாடம் (போருக்கான தூண்டுதல், ஆயத்தம், துணைகள்)

மகாபாரதப் போர் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் – 2)

மகாபாரதப் போரில் நிர்வாகப் பாடம் (தலைமைப் பண்பு, குழு மனப்பான்மை, குறிக்கோள்கள், பெண்ணுரிமை)

குருசேத்ரம்நிர்வாகப் பாடங்கள் (பாகம் மூன்று)

நிர்வாகப் பாடம் தொடர்கிறது……

7. அர்ப்பணிப்பு (Commitment)

ஏற்கனவே சொன்னது போல் கவுரவர்களின் நான்கு முக்கிய தளபதிகள் (பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், ஷல்யா) போரை விரும்பாததாலும், பாண்டவர்கள் மீதிருந்த பாசத்தாலும் முறையான அர்ப்பணிப்பைத் தரவில்லை…..இன்னும் சொல்லப் போனால் பாண்டவர்களுக்கு ஓரளவு உதவியும் செய்தனர்

 • பீஷ்மர் வெறுமனே வீரர்களை மட்டும் கொன்று நாட்களை கடத்திக் கொண்டிருந்தது போக பாண்டவர்களிடம் தன்னைக் கொல்லக் கூடிய ரகசியத்தை தானாகவே ஒப்புவித்தார். தான் தலைமை தாங்கும் வரையில் கர்ணன் போரில் ஈடுபடக் கூடாது என்றதன் மூலம் பாண்டவர்களுக்கு சுமையைக் குறைத்தார்
 • தன் கையில் ஆயுதம் இருக்கும் வரை தனக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்கிற ரகசியத்தை துரோணரும் தானாகவே பாண்டவர்களுக்கு தெரிவித்தார். அந்த ரகசியம் தெரிந்ததனாலேயே, அவரது மகன் அஸ்வத்தமா இறந்தான் என்கிற தவறானச் செய்தியைப் பரப்பி, துரோணரின் ஆயுதத்தை கீழேப் போட வைத்தனர் பாண்டவர்கள்
 • கர்ணனோ தருமனையும், பீமனையும் கொல்லக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தும் அதனைச் செய்ய வில்லை. தவிர போருக்கு முன்பே தனது கவச குண்டலத்தை தானம் செய்தது, பல சமயங்களில் போரில் அடிப்பட்டு அவனை ஓய்வெடுக்க வைத்தது. துச்சாதனனை பீமன் கொல்லும் போதும் கூட கர்ணனால் காப்பாற்ற முடியவில்லை
 • ஷல்யாவோ கர்ணனைப் போர்க்களத்தில் தொடர்ந்து அவமானப் படுத்திக் கொண்டே இருந்தான்…

மொத்தத்தில் ஏறக்குறைய அது ஒரு துரோகிகளின் கூடாரமாகத்தான் இருந்த்து

பாண்டவர்களின் அர்ப்பணிப்போ அளப்பறியதாக இருந்த்து. போரில் சில இடங்களில் அவர்கள் தோற்றாலும், சிலர் உயிரிழந்தாலும், உயிரிழக்கும் போதும் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றவர்களை எழுச்சி கொள்ளவும், தூண்டும் வகையிலும் அமைந்தது

 • 16 வயதே நிரம்பிய அபிமன்யு தனி ஆளாக சக்கராயுத வியுகத்தினுள் சென்றது மிக வீரம் வாய்ந்தச் செயலாகவும், எதிரி அணியினராலேயே மதிப்புடனும் பார்க்க வைத்தது. தற்கொலைக்குச் சமமான இந்தச் செயலில், அபிமன்யு உயிரிழந்தாலும் தனி ஆளாக பல வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல், பல இடை மட்டத் தலைவர்களைக் கொன்றான் (துரியோதனனின் மகன் லட்சுமன், ஷல்யாவின் இளைய சகோதரன், ஷல்யாவின் மகன், திருகலோச்சனா, சுஷேனா என்று பல…..). வில் வித்தையில் அர்ஜுனனைப் போலவே திறமை பெற்றிருந்த அபிமன்யு, கர்ணனையே காயப்படுத்தி சிறிது நேரம் போர்க்களத்தை விட்டு துரத்தியடித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு பிரமித்து போய், கவுரவர்களின் ஒட்டுமொத்த வீரர்களையும் வைத்து அபிமன்யுவை தாக்கச்செய்தாலும், அதுவும் முடியாமல் கர்ணனால் பின்னாலிருந்து தாக்கப்பட்டு (போர் விதியை மீறி) வில்லை இழந்த பின்னும் கையில் கிடைத்த ஆயுதங்களின் மூலமாக போராடினான். கடைசியில் மீண்டும் போர்விதியினை மீறி துச்சாதனனின் மகன் மூலமாக இறந்தாலும் இறக்கும் தருவாயிலும் அவனையும் கொன்று விட்டுதான் உயிரை விட்டான்
 • பீமனின் மகனான கடோத்கஜன் கர்ணனின் கையால் உயிரை விட்டாலும், கவுரவர்களின் படையில் பெரும்பாலானோரைக் கொன்றான். சாகும் போது கூட தன் உருவத்தை பல மடங்கு பெரிதாக்கி அவர்கள் மேல் விழுந்தன் மூலம் மேலும் பலரைக் கொன்றான். தவிர அர்ஜூனனைக் கொல்வதற்காகவே கர்ணன் வைத்திருந்த திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதத்தை உபயோகப்படுத்த வைத்ததன் மூலம், இனி அர்ஜுனனுக்கு ஆபத்தில்லை என்றச் சூழலை உருவாக்கினான். இன்னும் சொல்லப் போனால் கர்ணன் கடோத்கஜனைக் கொன்ற பின் கிருஷ்ணரே சற்று நிம்மதியடைந்தார் எனலாம்
 • எல்லாராலும் மதிக்கப்பட்ட கிருஷ்ணரே, இரண்டு முறை போரில் ஈடுபடமாட்டேன் என்கிற சத்தியத்தையும் தாண்டி, தனது ஆயுதத்தை ஏந்தி போரில் இறங்க முற்பட்டாலும், அர்ஜுனனால் தடுத்து நிறுத்தப்பட்டார் (பாண்டவர்கள் மேல் அவருக்கிருந்த பாசத்தை அனைவருக்கும் உணர்த்தினார்)
 • தருமரோ கர்ணனை வெல்ல முடியாது என்று தெரிந்த போதும், ஒரு கட்டத்தில் அவனை எதிர்த்துப் போரிட்டார்

இப்படிப் பல சூழல்களில் பாண்டவர்களில் ஒவ்வொருவரும் தங்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தனர். சரியான அர்ப்பணிப்பு இல்லாத தலைமையைக் கொண்டிருந்தது கவுரவர்களின் அழிவிற்கு வித்திட்டது மட்டுமல்லாமல், அபிமன்யுவைக் கொல்வதற்காக கவுரவர்களின் ஒரு முறை போர் விதியை மீறியச் செயலால், பாண்டவர்கள் அடைந்த கோபம்தான், விதிகளை மீறி கர்ணன், துரோணர், துரியோதனன் ஆகியோரின் மரணங்களுக்கு காரணமாக அமைந்தது.

இங்கு அபிமன்யுவும், கடோத்கஜனும் வீர மரணம் அடைந்தாலும் அவர்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு (living by example) எல்லாரையும் வெறி கொள்ளச் செய்தது. ஒரு வேலைக்கு தகுதி வாய்ந்தவர் என்பது வெறுமனே சரியான திறமை வாய்ந்தவர் என்பது மட்டுமல்ல, உயர்ந்த அர்ப்பணிப்பும் கொண்டிருக்கக் கூடியவரே (The best man for a Job is not the one with the best capabilities but one with the greatest commitment). ஒரு குழுவின் தனிப்பட்ட ஒருவரின் விருப்பங்களும் கிடைக்கக் கூடிய நலன்களும் அந்த ஒட்டு மொத்தக் குழுவின் நலனையும் விருப்பத்தையும் மீறி அமைதல் கூடாது (The interests of the Individual should never exceed the Team interest)

8. சரியான நிர்வாகமும் தந்திராத்மமான செயல்களும் (Right management and strategies)

ஏற்கனவே பல தலைப்புகளில் பாண்டவர்களின் வேறுபட்ட தந்திராத்மமான செயல்களைக் கண்டிருந்தோம்.

கிருஷ்ணரைப் போன்ற ஒரு மிகச் சிறந்த சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய நிர்வாகியை (Greatest Crisis Manager) நாம் கண்டிப்போமா என்பது சந்தேகமே!!!! அபிமன்யுவைக் கொன்றதற்காக அடுத்த நாள் போர் முடிவதற்கு முன்னர் ஜெயத்ரதனைக் கொல்வேன் என்ற அர்ஜூனனின் சபதத்தை நிறைவேற்ற கிரகணத்தை கொண்டு வந்து கவுரவர்களை தவறாக கணிக்க வைத்ததாகட்டும், துரியோதனன், காந்தாரி மூலமாக யாராலும் வெல்ல முடியாத சக்தியைப் பெறக் கூடிய நிலை வந்த போது அவனைச் சற்றே திசை திருப்பியதாகட்டும், துரோணரைக் கொல்ல திட்டமிட்டதாகட்டும் என்று பல சிக்கல்களை தீர்த்தது கிருஷ்ணர்தான்….

தருமரோ, போர்கலையில் அர்ஜூனன், பீமனை விட திறன் குறைந்தவராக இருந்தாலும், அவர்செய்த உளவியல் ரீதியான செய்கைகள் மிகுந்த அர்த்தம் பொதிந்தவை!!! முதல் நாள் போர் ஆரம்பிக்கும் முன்பு நிராயுதபாணியாய் எதிர் படைக்குச் சென்று மூத்தவர்களிடம் ஆசியை வாங்கியதன் மூலம் அவர்களுக்கிருந்த குற்ற உணர்ச்சியை மறைமுகமாகத் தூண்டினார், அவர்களுடைய நன்மதிப்பை அதிகரித்துக் கொண்டதன் மூலம் மறைமுகமாக ஒவ்வொருவருடைய உதவியும் பாண்டவர்களுக்கு கிடைக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தினார்……திரும்ப வரும் போது மிகவும் யோசித்து அவர் செய்த ஒரு அறிவிப்பு (Calculated risk) யாரும் எதிர்பார்த்திராதது, அதாவது எந்த ஒரு பக்கத்திலிருந்தும் தனது நிலையை மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் எதிரணிக்குச் செல்லலாம் என்று அறிவித்ததன் மூலம், கவுரவர்களின் பக்கமிருந்து யுயுட்சுவை (10,000 வீர்ர்களை ஒரே சமயத்தில் எதிர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த 11 பேரில் ஒருவனாக கருதப் பட்டவனும், துரியோதனனுக்கு இளையவனும், மற்ற கவுரவர்களுக்கு மூத்தவனுமானவன்) தங்கள் பக்கம் வரவைத்தார் (ஆரம்பத்திலிருந்தே யுயுட்சு கவுரவர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தும், பாண்டவர்கள் மேல் அன்பாகவும் இருந்தவன். இதற்குப் பலனாக போர் முடிந்த பின்பு தருமர் அஸ்தினாபுரத்தில் முடி சூண்ட போது, யுயுட்சி இந்திர பிரஸ்தத்தின் மன்னனாக முடி சூட்டப்பட்டான்)

இங்கு தருமர் செய்த அறிவிப்பு ஏற்கனவே படைபலத்தில் குறைந்திருந்த பண்டவர்கள் பக்கமிருந்து யாராவது கவுரவர்கள் பக்கம் சென்று இன்னும் பாண்டவர்களின் திறனைக் குறைத்திருக்கக் கூடும், மாறாக தமது படையின் அசாத்திய ஒற்றுமையையும், எதிரணியில் இருந்த பலவீனத்தையும் நன்கு உணர்ந்ததாலேயே நன்கு யோசித்து இந்த அபாயகரமான முடிவில் அவர் ஈடுபட்டார். தமது குழுவின் பலத்தையும், எதிரியின் பலவீனத்தையும் முழுதாக உணராமல் எந்தச் செயலிலும் யாராலும் வெற்றியடைய முடியாது என்பதைக் காட்டினார் (Know your enemies weaknesses and exploit them, Take Calculated risks, Inspire, invigorate, counsel your own team in moments of need)

9. அடிப்படை (The Root)

கவுரவர்கள் ராஜகுமாரர்கள். வாழ்வின் பெரும்பகுதி மாளிகைகளிலும், அதிகாரத்தின் நிழலிலுமே வாழ்ந்தவர்கள் (குரு குலத்தைத் தவிர). அடித்தர மக்களின் வாழ்வு நிலை, உண்மை நிலை (Ground reality) என்று எதையும் அறிந்திருக்கவில்லை

பாண்டவர்கள் வாழ்வில் 13 வருடங்கள் வறுமையிலும், காட்டிலும் செலவளித்தார்கள். குழந்தைப் பருவமோ இமாலய மலைகளிலும், குருகுல வாழ்க்கையிலும் கழிந்தது. உண்மை நிலையை (Ground reality) நன்கு உணர்ந்திருந்தார்கள். முனிவர்கள், ஆச்சார்யர்கள், பிராமணர்கள், அடித்தட்டு மக்கள் என்று சமூகத்தின் பல்வேறு பட்ட மக்களிடமும் பழகியிருந்தனர். ராட்சஸ்ர்கள், காந்தர்வர்கள், அப்சரா, நாகர்கள், தேவர்கள் என்று பல்வேறு சமூகத்தாரிடமும் பழகியிருந்தனர் (horizontal and vertical levels). எல்லாரிடமும் ஒரு சகோதரத்துவத்தை பகிர்ந்திருந்தார்கள்…..

வாழ்வின் எந்த ஒரு கல்வியும் அனுபவத்திற்கு ஈடாகாது என்பார்கள்….எந்த ஒரு நிறுவனத்திலும் அடிமட்ட நிலை வரை (Ground reality) உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு வெற்றியை அடைதல் எனபது மிகக் கடினமே. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு, அந்நிறுவனத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் தங்களது கருத்துக்களை பகிர்தல் என்பது மிக மிக முக்கியகரமானச் செயல் (Share your ideologies)

பின்குறிப்பு

மகாபாரதப் போர் உண்மையிலேயே நடைபெற்றதா, நடை பெற்றிருக்கக் கூடுமா, நடந்தது என்றால் எந்தக் காலக் கட்டத்தில் நடந்த்து என்றெல்லாம் பல ஆய்வுகளும் விவாதங்களும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கதையோ, நிகழ்வோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் அதிலிருந்து கற்க்க் கூடிய விஷயங்களை கற்பதற்கு அதன் படைப்பு நிலை என்ன என்பது நமக்கு தேவையில்லை. அனுபவம் தரும் பாடம் போன்று வேறு எதுவும் இல்லை என்பார்கள், அதே போல் எல்லாப் பாடங்களும் நம்முடைய சொந்த அனுபவத்தில் பட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை (Its always better to learn from other’s experience). வெறும் ’அன்பு’ என்று மூன்றெழுத்து வார்த்தைக்குப் பஞ்சம் வந்ததன் விளைவுதான் குருஷேத்ரம் என்ற மாபெரும் போரும் அதில் நடந்த மாபெரும் மனித அவலங்களும். போருக்கு முன்னும், பின்னும் பல விளைவுகள் ஏற்பட்டாலும், அதிலிருந்து பல விஷயங்களை நாம் கற்றாலும், ஒட்டு மொத்தப் போரும் ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக் கொடுக்கிறது. அது எல்லாரையும் அன்பு செய்யுங்கள் என்பதுதான், ஏனோ அதைத்தான் தனி மனிதனும் சரி, நாடுகளும் சரி புரிந்து கொள்ள மறுக்கின்றன.

உதவிய தளங்கள்

பிரிவுகள்:நிர்வாகப் பாடங்கள் குறிச்சொற்கள்:
 1. 8:17 முப இல் ஓகஸ்ட் 31, 2009

  இரண்டுமே கனமான பாடங்கள். அழகாக இணைத்து, ஒப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

 2. 8:17 முப இல் ஓகஸ்ட் 31, 2009

  இதைப் பற்றி எழுத தூண்டியது எது?

 3. 8:53 முப இல் ஓகஸ்ட் 31, 2009

  மிக்க நன்றி சரவணகுமரன்…..

  எழுதத் தூண்டியது என்றால், அப்போது நான் எம்பிஏ படித்துக் கொண்டிருந்த நேரம், ஒரு பேராசிரியர் ஒருவர்தான், செமினார் ஒன்றில் இந்த மகாபாரதத்திலிருந்து கற்கக் கூடிய நிர்வாகப் பாடங்களை கொஞ்சம் விளக்கினார், என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது அந்த செமினார், அது எனக்கு ஒரு மாற்றுப் பார்வையைத் தந்தது எனலாம்…

  அதில் அவர் விவரித்த விதம், சொன்ன கருத்துக்கள்தான் எனக்கு பெரிய வியப்பை ஏற்படுத்தியது எனலாம்….கண்முன் உள்ள ஒரு விஷயத்திலிருந்து எப்படி ஒரு நிர்வாகப் பாடம் கற்கலாம் என்று அவர் சொன்னதுதன் இப்போது என்னை எழுதத் தூண்டியிருக்கிறது….

 4. 10:16 முப இல் ஓகஸ்ட் 31, 2009

  தவிர தமிழில் பல எல்லைகளை நாம் தொட்டாலும் இன்னும் தொழில் நுட்பம், நிர்வாகம், பொருளாதாரம் போன்ற துறை சார்ந்த விஷயங்களில் நாம் பயணிக்க வேண்டியது மிக அதிகம் இருக்கிறது…

  பொருளாதரத்தைப் பொறுத்தவரை நண்பர் சந்தை நிலவரத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது எனினும், நிர்வாகத் துறையில் இது போன்று சில சின்ன விஷயங்களை ச்ய்ய முயல்கிறேன்… அதுதான் எனது நேனோ பதிவிற்கும் காரணமாய் அமைந்தது….

 5. Sudharsan
  11:19 முப இல் ஓகஸ்ட் 31, 2009

  Dear Sir,

  Congrats, good job. You are giving a new perspective to Mahabharath, which
  will surely be eye-opener for many readers.

  From my childhood days, I am quite fascinated by Mahabharath, I have read countless times, Vyasar Virundhu.

  The points you have mentioned in the posts, I remember very clearly still, but never co-related them to our day-to-day activities. Infact, the points you have mentioned is general purpose, related to any field of life, like IT, mechanical, finance.. And the information which is dervied from Mahabharatham is very much applicable for our success in every activity.

  Please continue to post more, my appreciations for your thought provoking posts..

  By the by, I have read in Thuglak that Kaliyuga runs for 4,32,000 years.. And we are currently in 5000+ odd year.. still we have so many years to go.

  When did Mahabharath happened in your viewpoint?. An approximate period and also the countries involved in current namescopes?.. Can you provide those details?. Today’s Asthinapuram, Magatha Naadu etc?.

  I read in net that Mathura is still there, below sea.. I am interested in Archelogy too 🙂

  Sudharsan

 6. 6:51 பிப இல் ஓகஸ்ட் 31, 2009

  வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி சுதர்சன்!!!!

  உண்மையில் மகாபாரதத்தை நான் கரைத்துக் குடித்தவன் கிடையாது…இந்தப் பதிவிற்காக நான் கூகிளாண்டவரை அதிகம் கேட்டு அதை வைத்துதான் பதிவிட்டேன்…

  மகபாரதத்தின் கால கட்டத்தை பொறுத்தவரையில், அதைப் பற்றி பல சர்ச்சைகள் நிலவுகின்றன , இன்னும் சொல்லப் போனால் கலியுகம் எப்போது பிறந்தது என்பதிலேயே வெவ்வேறு கருத்துகள் நிலவுவதாக கூறுகின்றனர்…

  “கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது” என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார்.

  “கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது” – என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார்.

  அதேபோல் மகாபாரதத்தைப் பற்றியே முரணான செய்திகள் வருகின்றன…பல சம்பவங்களைக் கேட்கும் போது நடந்திருக்கக் கூடுமா என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது…..

  என்னைப் பொறுத்தவரை மகாபாரதம் மறுக்கப் படமுடியாத உண்மை என்பதோ, கண்டிப்பான நிகழ்வோ என்பதல்ல!!! கதையோ காவியமோ அதிலிருந்து நாம் பெறக்கூடிய சில நல்ல விஷயங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளலாம் என்பது மட்டுமே!!!!

  //When did Mahabharath happened in your viewpoint?. An approximate period and also the countries involved in current namescopes?.. Can you provide those details?. Today’s Asthinapuram, Magatha Naadu etc?. //

  பாகம் இரண்டில் துணைகளிலும், பாகம் ஒன்றில் கண்டுபிடிப்பு பகுதியிலும் சொல்லியிருக்கிறேன்…

  மீண்டும் ஒரு முறை நன்றி!!!!

 7. அகமது சுபைர்
  6:53 பிப இல் ஓகஸ்ட் 31, 2009

  //தருமரோ கர்ணனை வெல்ல முடியாது என்று தெரிந்த போதும், ஒரு கட்டத்தில் அவனை எதிர்த்துப் போரிட்டார்//

  இது எப்படி அர்ப்பணிப்பாகும்?? தோல்வியை தவிர்க்க முயற்சி எடுக்காமல், வாழ்வை எதிர்நோக்குவது முட்டாள்தனம் (நான் நிர்வாகவியல் பத்தி பேசுறேன் ராசா..)

  //கிருஷ்ணரைப் போன்ற ஒரு மிகச் சிறந்த சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய நிர்வாகியை (Greatest Crisis Manager) நாம் கண்டிப்போமா என்பது சந்தேகமே!!!!//

  கிருஷ்ணனை ஏன் சாமி கண்டிக்கணும்???

  //தமது குழுவின் பலத்தையும், எதிரியின் பலவீனத்தையும் முழுதாக உணராமல் எந்தச் செயலிலும் யாராலும் வெற்றியடைய முடியாது என்பதைக் காட்டினார் (Know your enemies weaknesses and exploit them, Take Calculated risks, Inspire, invigorate, counsel your own team in moments of need)//

  வாவ்… இப்படிக்கூட யோசிக்கலாம்ல.. நான் படிச்ச போது இதெல்லாம் புரியவேயில்லை 😦

  //வாழ்வின் எந்த ஒரு கல்வியும் அனுபவத்திற்கு ஈடாகாது என்பார்கள்….எந்த ஒரு நிறுவனத்திலும் அடிமட்ட நிலை வரை (Ground reality) உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு வெற்றியை அடைதல் எனபது மிகக் கடினமே. ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு, அந்நிறுவனத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் தங்களது கருத்துக்களை பகிர்தல் என்பது மிக மிக முக்கியகரமானச் செயல் (Share your ideologies)//

  நரேஷ், பாராட்டுகள்.. Organizational Behaviour பாடத்தை என்னால் இவ்வளவு சிம்பிளா சொல்ல முடியாது..

  //பின்குறிப்பு
  மகாபாரதப் போர் உண்மையிலேயே நடைபெற்றதா, நடை பெற்றிருக்கக் கூடுமா, நடந்தது என்றால் எந்தக் காலக் கட்டத்தில் நடந்த்து என்றெல்லாம் பல ஆய்வுகளும் விவாதங்களும் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கதையோ, நிகழ்வோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் அதிலிருந்து கற்க்க் கூடிய விஷயங்களை கற்பதற்கு அதன் படைப்பு நிலை என்ன என்பது நமக்கு தேவையில்லை.

  அனுபவம் தரும் பாடம் போன்று வேறு எதுவும் இல்லை என்பார்கள், அதே போல் எல்லாப் பாடங்களும் நம்முடைய சொந்த அனுபவத்தில் பட்டுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை (Its always better to learn from other’s experience). வெறும் ’அன்பு’ என்று மூன்றெழுத்து வார்த்தைக்குப் பஞ்சம் வந்ததன் விளைவுதான் குருஷேத்ரம் என்ற மாபெரும் போரும் அதில் நடந்த மாபெரும் மனித அவலங்களும். போருக்கு முன்னும், பின்னும் பல விளைவுகள் ஏற்பட்டாலும், அதிலிருந்து பல விஷயங்களை நாம் கற்றாலும், ஒட்டு மொத்தப் போரும் ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக் கொடுக்கிறது. அது எல்லாரையும் அன்பு செய்யுங்கள் என்பதுதான், ஏனோ அதைத்தான் தனி மனிதனும் சரி, நாடுகளும் சரி புரிந்து கொள்ள மறுக்கின்றன.//

  இது நரேஷ் டச்சா?? கலக்குற நரேஷ்.. என் சிஷ்யனா இருந்து இம்புட்டு நல்லவனா இருக்கியேன்னு நினைச்சா எனக்கே பொறாமையா இருக்கு 🙂

  வாழ்த்துகள்

 8. 6:55 பிப இல் ஓகஸ்ட் 31, 2009

  //இது எப்படி அர்ப்பணிப்பாகும்?? தோல்வியை தவிர்க்க முயற்சி எடுக்காமல், வாழ்வை எதிர்நோக்குவது முட்டாள்தனம் (நான் நிர்வாகவியல் பத்தி பேசுறேன் ராசா..) //

  இடைக்கால வெற்றிகள் என்பது முழுமையான வெற்றியாகாதல்லவா!!! கர்ணன் அர்ஜூனனைத் தவிர யாரையும் கொல்ல மாட்டான். அதே சமயம் வேறு வழியில்லாமல் கர்ணனுடன் மோத வேண்டிய சூழல் வரும் போது தப்பி ஓடினால், எண்ணிக்கையில் பலம் குறைந்த ஒரு படையினருக்கு அது எவ்வாறு தூண்டுதலை ஏற்படுத்தும்????

  அதே சமயம் கர்ணனுடன் போரிட்டு அவனை தடுத்து நிறுத்தும் போது வேறு யாரேனும் உதவிக்கு வரலாம்….ஆனால் அஞ்சி ஓடியிருந்தால் அது பெரிய இழுக்காகவே இருக்கும், அதனால்தான் போரிட்டார்…தோல்வி உறுதி என்ற பின்னும் சண்டையிடக் கூடாது என்றால், அபிமன்யு சக்கர வியூகத்தினுள் நுழைந்ததே கூடாதுதான். அதில் அபிமன்யு கொல்லப்பாட்டாலும், அவன் காட்டிய வீரம், அழித்த வீரர்களின் எண்ணிக்கை (ஏறக்குறைய 1அக்குரோணி என்கிறார்கள்), இடைமட்டத் தலைவர்கள் பலரைக் கொன்றது என இவை எல்லாவற்றையும் சேர்த்தால் அபிமன்யு அடைந்தது பெரிய வெற்றியாகத்தான் தோன்றுகிறது…

  இன்னொன்று தருமர் விஷயத்தில் living by example என்பார்கள்…என்னுடைய பழைய நிறுவனத்தில் நிர்வாக மேம்பாட்டிற்கான பயிலரங்கு, நிறுவனத்தின் மூத்த தலைமைக் குழுவிற்கும், உயர்மட்டக் குழுவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…அதில் நடந்த ஒரு விஷயம், ஒரு சமயம் பயிற்சியாளர் ஒரு மிக எளிய பயிற்சியைச் செய்யச் சொல்கிறார். அதாவது அவர் ரெடி, ஒன், டூ, த்ரீ, ஒகே என்று ஓகெ சொன்னவுடன் அனைவரும் கையை மேலே தூக்கி தலைக்கு மேல் கொண்டுச் சென்று தட்ட வேண்டும் சரியா என்று இரண்டு மூன்று முறை கேட்டு அனைவரும் புரிந்து கொண்டபின், நானும் உங்களுடன் சேர்ந்து செய்வேன் சரியா என்று கேட்கிறார். எல்லாரும் சரி என்கிறார்கள். அவரும் ரெடி, ஒன், டூ, த்ரீ என்றுச் சொன்னவுடன் கையை மேலே தூக்கிச் சென்று தட்டுகிறார். சொல்லி வைத்தாற் போன்று அனைவரும் அவரைபார்த்து கையைத் தட்டுகின்றனர். ஒருவர் கூட இதில் தப்பவில்லை…அதற்கப்புறம்தான் பயிற்சியாளர் கேட்கிறார், நான் ரெடி, ஒன், டூ, த்ரீ, கடைசியாக ஓகே என்று சொன்னவுடன்தானே கையைத் தட்டச் சொன்னேன், நீங்கள் ஏன் ஓகே சொல்லும் முன்பே முன்பே தட்டினீர்கள் என்று கேட்கிறார்…

  சொல்லி வைத்தாற்போன்று அனைவரும் நீங்கள் தட்டீனிர்கள், அதனால்தான் என்கிறார்கள்..அதற்கு அவர் சிரித்துக் கொண்டேச் சொல்கிறார், நீங்கள் எல்லாரும் இந்நிறுவனத்தில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள், ஒவொருவரும் சில பல குழுக்களை வழி நடத்திச் சென்ற அனுபவம் வாய்ந்தவர்கள், இன்றும் வழி நடத்துகிறீர்கள், ஆனால் இன்று உங்களை வழி நடத்துபவன் நான்தான்…நான் பல முறை எப்படி, எப்பொழுது கையைத் தட்ட வேண்டும் என்று கூறினேன், எல்லாருக்கும் புரிந்தது என்றீர்கள், ஆனால் நீங்கள் தவறுதலாக நடந்து கொள்ளக் காரணம் நான் சரியாக, சொன்ன படி நடந்து கொள்ள வில்லை என்பதுதான்…என்னைப்பார்த்து உங்களில் சிலர் தவறு செய்தார்கள், அதைப்பார்த்து மற்றவர்கள் என்று தவறுகளுக்கு காரணமாய் அமைந்தது என் செயல்தான்….நீங்கள் ஆயிரம் முறை ஒரு விஷயத்தை படித்துப் படித்து சொன்னாலும், ஒரே ஒரு முறை உங்களுடைய விதிகளை மீறிய நடத்தை எல்லாவற்றையும் தலைகீழாக்கும் வல்லமை கொண்டது…

  நிறுவனங்களில் சில சமயங்களில் நிறுவன விதிகளை தொழிலாளர்களோ மீறுவதற்கு மறைமுகமாக நாமும் ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம்…ஆகையால் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள் (living by example), அதுவே மற்றவர்களை தூண்டச்செய்யும் என்றார்….

  //கிருஷ்ணனை ஏன் சாமி கண்டிக்கணும்???//

  கண்டிருப்போமா என்று வந்திருக்கணும் சுபை, தவறு நேர்ந்து விட்டது :)))))

  கருத்துகளுக்கு மிக்க நன்றி சுபைர்….

 9. Mageshwaran S
  9:56 பிப இல் ஓகஸ்ட் 31, 2009

  Good effort..Nice post.Expecting more from you.

 10. அகமது சுபைர்
  6:17 முப இல் செப்ரெம்பர் 1, 2009

  //நீங்கள் ஆயிரம் முறை ஒரு விஷயத்தை படித்துப் படித்து சொன்னாலும், ஒரே ஒரு முறை உங்களுடைய விதிகளை மீறிய நடத்தை எல்லாவற்றையும் தலைகீழாக்கும் வல்லமை கொண்டது…//

  வெல் செட் நண்பா…

  உன் கிட்ட நிறைய கத்துக்கணும்..

 11. 6:18 முப இல் செப்ரெம்பர் 1, 2009

  நன்றி மகேஷ் மற்றும் சுபைர்…..

 12. வெ.இராதாகிருஷ்ணன்
  10:00 பிப இல் செப்ரெம்பர் 1, 2009

  //வெறும் ’அன்பு’ என்று மூன்றெழுத்து வார்த்தைக்குப் பஞ்சம் வந்ததன் விளைவுதான் குருஷேத்ரம் என்ற மாபெரும் போரும் அதில் நடந்த மாபெரும் மனித அவலங்களும். போருக்கு முன்னும், பின்னும் பல விளைவுகள் ஏற்பட்டாலும், அதிலிருந்து பல விஷயங்களை நாம் கற்றாலும், ஒட்டு மொத்தப் போரும் ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக் கொடுக்கிறது. அது எல்லாரையும் அன்பு செய்யுங்கள் என்பதுதான், ஏனோ அதைத்தான் தனி மனிதனும் சரி, நாடுகளும் சரி புரிந்து கொள்ள மறுக்கின்றன//

  விரைவில் அனைத்தையும் நிதானமாகப் படித்துவிட்டு கருத்திடுகிறேன். இந்த வரிகள் போதும் ஐயா, மிகவும் அருமை. ஏன் அந்த கடவுளின் அவதாரமே இதைப் புரிந்து கொள்ளவில்லை?

 13. 6:58 முப இல் செப்ரெம்பர் 2, 2009

  மிக்க நன்றி இராதாகிருஷ்ணன்!!!

 14. 10:39 பிப இல் செப்ரெம்பர் 22, 2009

  மிகவும் அருமையான கட்டுரை, படிக்க படிக்க ஆனந்தம்.

  மகாபாரதத்தை வேறு விதமாக விவரித்த விதம் அழகோ அழகு.

  Computer Strategies Games அதிகம் விரும்பி விளையாடுவேன், இக்கட்டுரையை எழுதிய விதத்தை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கலை.

  இன்னும் இதே போன்ற பல கட்டுரைகள் எழுத என் வாழ்த்துகள்.

  தொடருங்கள்…

 15. 10:17 முப இல் செப்ரெம்பர் 23, 2009

  மிக்க நன்றிகள் ஸ்டாலின், பரஞ்சோதி!!!

  மிகுந்த ஊக்கத்தைத் தருகிறது உங்களது வார்த்தைகள்

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: