இல்லம் > நிர்வாகப் பாடங்கள் > குருசேத்ரம் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் மூன்று)

குருசேத்ரம் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் மூன்று)

போர்களின் தன்மையும், மகாபாரதப் போரில் அறிவியலும்

மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள் (பாகம் -1)

மகாபாரதப் போரில் நிர்வாகப் பாடம் (போருக்கான தூண்டுதல், ஆயத்தம், துணைகள்)

மகாபாரதப் போர் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் – 2)

நிர்வாகப் பாடம் தொடர்கிறது……………………………………

3. தலைமை (Leadership)

கவுரவர்கள் தங்களது ஆட்சிக் காலத்தின் போதும் சரி, போரின் போதும் சரி ஒற்றைப் புள்ளி தலைமை முறையிலேயே இயங்கினர் (Centralized leadership). அவர்களுடைய 11 அக்‌ஷகினிகளுக்கும் ஒருவர் மற்றுமே தளபதியாக இருந்தனர். ஒருவர் இறந்தாலோ அல்லது காயம்பட்டாலோ மட்டுமே இன்னொருவர் அந்த இடத்தை நிறைவு செய்தார் அவ்வளவே. 18 நாட்கள் நடந்தப் போரில் பீஷ்மர் – 10 நாட்கள், துரோணர் – 5 நாட்கள், கர்ணன் – 1.5 நாட்கள், தளபதியே இல்லாமல் – 0.5 நாள், ஷல்யா – 1 நாள், 18வது நாள் இரவு (அஷ்வத்தமா) என்று தலைமை தாங்கினர். தனிப்பட்ட முறையிலேயே பீஷ்மர் பாண்டவர்களின் படைக்கு பலத்த சேதத்தை உண்டு பண்ணினாலும் அவரது வீரமோ, கணைகளோ பாண்டவப் படைகளின் முக்கியத் தலைவர்களை நோக்கிப் பாய வில்லை. அதேசமயம் அந்த முக்கிய வீர்ர்களை சந்திக்கக்கூடிய தைரியமும், சந்தர்ப்பத்தையும் எதிர் நோக்கியிருந்த கர்ணனோ, பீஷ்மர் தலைமை தாங்கும் வரை போருக்குள் நுழையக் கூடாது என்ற கட்டளைக்கு உள்ளாகியிருந்தான். இன்றும் பீஷ்மரும், கர்ணனும் இணைந்து நின்று போரைச் சந்திருந்தால் போரின் நிலையே மாறியிருக்கும் என்போரும் உண்டு, ஆனால் அது நடைபெறவில்லை…

பாண்டவர்களோ பொறுப்புகளையும், கடமைகளையும் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு அக்‌ஷகினிக்கும் ஒருவர் என 7 படைத்தளபதிகள் நியமிக்கப்பட்டனர், அவர்கள் அந்தப் படையினை திறம்பட நிர்வாகிக்க வழிவகை செய்தனர். சுப்ரீம் கமாண்டராக அர்ஜூனனும், அர்ஜூன்னுக்கு தேராட்டியாக மட்டுமன்றி முக்கிய ஆலோசகராகவும் கிருஷ்ணர் விளங்கினார். எல்லாராலும் மதிக்கப்பட்டவரும், மிக மூத்தவருமாக தருமன் இருந்தாலும், போர் விஷயங்களில் வல்லமை வாய்ந்த அர்ஜூனனே போரை நடத்தினான்

கடமைகளைப் பகிர்ந்து கொள்வதும், தகுந்த தலைமை அமைவதும்தான் எந்த நிறுவனத்தின் அல்லது குழுவின் வெற்றிக்கும் அடிப்படையாக இருக்க முடியும். பொதுவாக எந்த ஒரு நிறுவனத்தின் தலைமைக்குழுவிற்கும் (Leadership team) நான்கு பண்புகள் தேவைப்படுகின்றன. தந்திராத்மமான செயல்திறன் (Strategic Leadership), வழிகாட்டும் செயல்திறன் (Directive Leadership), குழு முயற்சி வளர்ப்புத்திறன் (Team-building Leadership), இயங்குதிறன் தலைமைப் பண்பு (Operational Leadership). எந்த ஒரு தனிப்பட்ட மனிதனாலும் இந்த நான்கு பண்புகளிலும் சிறந்து விளங்குவதென்பது மிக அரிதான செயலே! ஏனெனில் உளவியல் ரீதியாக இவை நான்கு திறன்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணநலன்களைக் கொண்டவை. இந்தச் செயல்களில் ஏதாவது ஒன்றில் மிக திறன் வாய்ந்த ஒருவர் கண்டிப்பாக மற்றொன்றில் திறன் குறைந்தவராக இருக்கக் கூடும். ஆக இந்த பலவீனங்கள் எப்பொழுது முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டு, அதனைச் சுற்றி, நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு குழு அமைகின்றதோ அந்தக் குழுவே செயல்திறன் கொண்டதாக மாறக் கூடும். எந்த ஒரு நிறுவனத்தின் தலைமைக் குழுவும் அவ்வாறே அமையப்பெறும். பாண்டவர்கள் விஷயத்தில் கிருஷ்ணர் போர் நடவடிக்கைகளில் (Operations) ஈடுபடாவிட்டாலும் போர்திட்டங்களை அமைப்பதிலும், வியூகங்களை அமைப்பதிலும், முக்கிய முடிவுகள் எடுப்பதில் ஆலோசகராகவும் இருந்தார் (Strategic and Directive Leadership). அர்ச்சுனனோ இயங்குதிறனிலும், வழிகாட்டுத் திறனிலும் (operational and Directive leadership) சிறந்து விளங்கினான். தருமன் போன்றவர்கள் குழு வளர்ப்புத் திறனில் ஈடுப்பட்டிருந்தனர்….இங்கு பாண்டவர்கள் தகுந்த தலைமையை அமைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்கும் பொறுப்புகளும் கடமைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன (shared responsibilities), கவுரவர்கள் பக்கமோ எல்லாச் செயல்களும் தலைமை வகித்தவர் மட்டுமே நிர்வாகிக்க வேண்டியிருந்தது மட்டுமின்றி வள நிர்வாகம் (Resource Management) அவர்கள் சரியாகச் செயல்படுத்தவில்லை….

கிருஷ்ணரின் கோபம்

கிருஷ்ணரின் கோபம்

4. குழு மனப்பான்மை (Team Spirit)

கவுரவர்களுக்குள் குழு மனப்பான்மை இருந்ததேயில்லை. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கென்று தனிப்பட்ட வழிமுறைகளை (approach) வைத்திருந்தனர். அஸ்தினாபுரத்திற்கு வரும் ஆபத்து எத்தகையதாக இருந்தாலும் எதிர்ப்பேன் என்று சபதம் செய்திருந்த காரணத்தினால் பீஷ்மரும், அதே உறுதிமொழியைக் கொடுத்திருந்ததால் துரோணர் மற்றும் கிருபாச்சாரியரும், துரியோதனின் தந்திரத்தால் ஏமாற்றப்பட்டதால் ஷல்யாவும் என முக்கிய தளபதிகள் பலர் போரில் விருப்பமில்லாவிட்டாலும் ஈடுபட்டார்கள். கர்ணனோ துரியோதனின் நட்பிற்காகவும், அர்ச்சுனனுக்கெதிராக வில் திறமையை நிரூபிக்க வேண்டியும் மட்டுமே போரில் ஈடுபட்டான். இது தவிர அவர்களுக்குள் பல பூசல்கள் இருந்தன. பீஷ்மருக்கும் கர்ணனுக்குமிடையே இருந்த வெறுப்பு, கர்ணனை பீஷ்மர் இருக்கும் வரையில் போர்களத்திற்குள் அனுமதிக்க வில்லை, பீஷ்மருக்கும் சகுனிக்கும் ஆகாது, கர்ணனுக்கும் சகுனிக்கும் ஆகாது, கர்ணனுக்கும் ஷல்யாவிற்கும் ஆகாது, ஷல்யாவிற்கும் பீஷ்மருக்கும் ஆகாது இப்படி முக்கிய தளபதிகளுக்குள்ளே ஒரு ஒத்துழையாமை இருந்தது…

பாண்டவர்களோ ஓரணி, ஒரே குறிக்கோள் என்று இயங்கினர். கிருஷ்ணரும், தருமரும் சொல்லும் வார்த்தைகள் அங்கே வேதமாகக் கருதப்பட்டது, படை வீரர்களோ அர்ச்சுனன் மற்றும் பீமனின் வீரத்தைக் கண்டு தூண்டப்பட்டிருந்தனர், போரில் ஈடுபட்ட அனைவருமே அதை தங்களுடைய போராகக் கருதினார்கள், தளபதிகள் அனைவரையும் முடிவெடுக்கும் விவகாரங்களில் பங்கேற்கச் செய்தது (Brainstorming) அவர்களுக்குள் நல்ல ஒத்துழைப்பையும், அனைவருக்கும் தூண்டுகோலாகவும் இருந்தது…

எந்த ஒரு நிறுவனத்திலும், தலைமையிலிருந்து அடிமட்ட தொழிலாளி வரை, அமைகின்ற குழுவைப் பொறுத்தே அந்த நிறுவனத்தின் செயல்திறன் அமையும். அப்படியிருக்கையில் அந்தக் குழுவில் குழு மனப்பான்மை இல்லாது போவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தலைமைக் குழுவில் குழு மனப்பான்மை இல்லாவிட்டால், நிறுவனம் முதற்கொண்டு கட்சிகள் வரை முதலுக்கே மோசம் வரும். பெரும்பாலும் இது போன்ற குழுவை நம்பி இயங்குவதால்தான் மென்பொருள் நிறுவனங்கள் முதற்கொண்டு பல நிறுவனங்கள் குழு முயற்சி வளர்ப்பிற்கான (Team building  workshops) பயிற்சிகளை இடைநிலை மேலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குகின்றனர். என்னதான் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களும், செயல்முறைகளும் இருந்தாலும் ஆன்மா இல்லாத ஒரு குழுவைக் கொண்டு சாதிப்பதென்பது மிக மிகக் கடினமே!!!

5. தனிப்பட்ட குறிக்கோள்கள் (Individual targets)

கவுரவப் படையில் இருந்த நான்கு முக்கிய தளபதிகளும் பாண்டவர்களுக்கு எதிராக போரிடவேயில்லை. பீஷ்மரைப் பொறுத்தவரை பாண்டவர்களை தாக்கவே இல்லை, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீரர்களை தாக்குவதில் மட்டுமே முனைந்தார், துரோணரோ தான் பாண்டவர்களை கொல்லப் போவதில்லை என்றும் அவர்களை பிடிக்க மட்டுமே முனைவதாகக் கூறினார், ஷல்யாவோ துரியோதனனால் ஏமாற்றப்பட்ட கோபமும், பாண்டவர்கள் பக்கம் நிற்க முடியவில்லை என்ற வருத்தமும் இருந்ததால் முழு மனதோடு போரில் ஈடுபடவில்லை, இன்னும் சொல்வதென்றால் போர்களத்தில் கர்ணனை அவமானத்திக் கொண்டேயிருந்ததன் மூலம் மறைமுகமாக பாண்டவர்களுக்கு சிறிது உதவியும் செய்தார், கர்ணனோ அர்ஜுனனைத் தவிர மீதிப் பாண்டவர்கள் யாரையும் கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தான்

பாண்டவர்களோ போர் ஆரம்பித்த உடன் பின்வாங்கவோ, தயங்கவோ இல்லை, எல்லாருக்கும் பொதுவான இலக்குகளும், தனித்தனி இலக்குகளும் கொடுக்கப்பட்டன. திருஷ்டாயுதம்னாவிற்கு துரோணரும், சிகண்டிக்கு பீஷ்மரும், அர்ஜூனனுக்கு கர்ணனும், பீமனுக்கு துரியோதனனும் அவனது சகோதர்களும், சகாதேவனுக்கு சகுனியும் அவனது மகன்களும், நகுலனுக்கு கர்ணனின் மகன்களும் இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டனர். அந்த இலக்கை நோக்கியே அவர்களும் செயல்பட்டனர்…

ஒரு தொழிலாளியின் முழுமையான வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சியை பொறுத்தே முழுமையடைகிறது (Growing along with the organization). எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென்று ஒரு பார்வையையும், இலக்கினையும் கொண்டிருக்கின்றன (Vision and mission) , அந்த கொள்கைகளுக்கேற்றவாறே மற்ற துறைகளுக்கும், குழுக்களுக்கும் தனித்தனி இலக்குகளும், செயல்பாதைகளும் நிர்ணயிக்கப் படுகின்றன. பல சமயங்களில் இந்த இலக்குகளே நம்முடைய பாதைகளை அமைத்துத் தந்து விடுகின்றன. சரியான குழு என்பது சரியான தனி மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது (The Right team is made by selecting the Right Individuals. Get the right man for the right job)

6. பெண்ணுரிமை (Women Empowerment)

கவுரவர்கள் ஏறக்குறைய பேட்ரியார்ச்சல் (Patriarchal) முறையை பின்பற்றினர். போரின் போதும் சரி அதற்கு முன்பும் சரி பெண்கள் முடிவெடுக்கும் செயலிலோ, மற்ற முக்கிய விவகாரங்களிலோ  அனுமதிக்கப்படவேயில்லை. கவுரவர்களின் தாயாரான காந்தாரியின் வார்த்தைகள் கூட மதிப்பின்றி தொலைந்துதான் போனது

பாண்டவர்களோ ஏறக்குறைய மேட்ரியார்ச்சல் (Matriarchal)  முறையை பின்பற்றினர். குந்தி சொல்லும் வார்த்தைகள் அங்கே வேதவாக்காகக் கருதப்பட்டது. அதே குந்தியால்தான் கர்ணனிடம் அர்ஜூனனைத் தவிர மற்றவர்களைக் கொல்லக் கூடாது என்று சத்தியமும் வாங்க முடிந்தது. பாண்டவர்களின் எல்லா முடிவுகளின் பின்பும் திரவுபதியின் பங்கு இருந்தது. மற்ற முக்கிய தளபதிகளான அபிமன்யு, கடோத்கஜன், இராவண் ஆகியோரின் வீரம் மற்றும் குண நலன்களின் பின்புலமாக அவரவர்களுடைய தாயாரின் பங்கு பெரிதாக இருந்தது

எந்த ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையடைவதற்கும் பெண்களின் துணை மிக அவசியமாகிறது (Women = Better Half. Any man who doesn’t have women in his side is considered to be unfulfilled, for the Masculine traits of aggression and dominance should be balanced by the Feminine traits of harmony and sustenance)

பிரிவுகள்:நிர்வாகப் பாடங்கள் குறிச்சொற்கள்:
 1. Maximum India
  8:19 பிப இல் ஓகஸ்ட் 25, 2009

  மேலாண்மை குணங்களை திறம்பட விளக்கிய ஒரு அருமையான பதிவு. உங்களுடைய பதிவு பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

  நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

 2. saharathendral
  8:43 பிப இல் ஓகஸ்ட் 25, 2009

  நண்பருக்கு,
  சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்.
  பார்க்கவும். சுட்டி: http://saharathendral.blogspot.com/2009/08/blog-post.html

 3. 9:10 பிப இல் ஓகஸ்ட் 25, 2009

  மஹாபாரதத்தையும் கரைச்சி குடிச்சிருக்கீங்க… மேனேஜ்மெண்ட்டையும் கரைச்சி குடிச்சிருக்கீங்க…

 4. 9:11 பிப இல் ஓகஸ்ட் 25, 2009

  ரொம்ப நல்ல பதிவு தொடர்… தொடருங்கள்…

 5. 5:49 முப இல் ஓகஸ்ட் 26, 2009

  நன்றி மேக்ஸிமம் இந்தியா!!!!

  என்னாலியும் உறுப்புடியா ஒரு காரியத்தை செய்ய முடியும்னு நினைச்சா சந்தோஷமா இருக்கு!!!!

 6. 5:51 முப இல் ஓகஸ்ட் 26, 2009

  நன்றிகள் சகராத் தென்றல்….

  அங்கீகாரம் பெருமையளிக்கிறது….

 7. 5:53 முப இல் ஓகஸ்ட் 26, 2009

  வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சரவணகுமரன்…

 8. 5:55 முப இல் ஓகஸ்ட் 26, 2009

  //மஹாபாரதத்தையும் கரைச்சி குடிச்சிருக்கீங்க… மேனேஜ்மெண்ட்டையும் கரைச்சி குடிச்சிருக்கீங்க…//

  கரைச்சில்லாம் குடிக்கலீங்க… இந்தப் பதிவிற்காக கொஞ்சம் மெனக்கெட்டது, என்னுடைய கருத்தரங்கில் அறிந்தது இவையெல்லாம் சேர்த்துதான் பல விஷயங்களை நானே தெரிந்து கொண்டென்…

  அப்போது நான் எம்பிஏ படித்துக் கொண்டிருந்த நேரம், ஒரு பேராசிரியர் ஒருவர்தான், செமினார் ஒன்றில் இந்த மகாபாரதத்திலிருந்து கற்கக் கூடிய நிர்வாகப் பாடங்களை கொஞ்சம் விளக்கினார், என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது அந்த செமினார், அது எனக்கு ஒரு மாற்றுப் பார்வையைத் தந்தது எனலாம்…

  இங்கு அந்த கருத்தரங்கு சம்பவத்தை நான் நினைவு கூற விரும்புகிறேன்…

  வழக்கமான கருத்தரங்கு என்றால் ரொம்ப மொக்கை போடுவார்கள் (குழுமத்தை விடவா?) என்று கட் அடித்து விடலாம் என்று நண்பர்கள் போட்ட திட்டத்தில் பங்கு கொள்ளாத்தது அன்று மிக நல்லதாகப் போனது…ஏனென்றால் வழக்கம் போல இல்லாமல் அன்று மிக இண்டராக்டிவாகவும் (இதுக்கு தமிழ்ல என்னங்க???) பயனுள்ளதாகவும் இருந்தது….

  இன்னும் சொல்லப் போனால் அன்று அந்த பேராசிரியர் விவரித்த அளவிற்கு நான் முழுமையாக விவரிக்கவில்லை என்கிற குறை எனக்குள்ளே உண்டு…..

  பல நாட்களுக்கு முன்பு பார்த்த ஒரு ஆங்கிலப் படம், அதில் ஒரு காட்சி வரும். சூழ்நிலையின் காரணமாக தன்னுடைய கட்டிடக்கலை வடிவமைப்பு வேலையை தொடரமுடியாத நாயகன், ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகச் சேருவான். அவனுடைய முதல் நாள் பாடம், விளக்குகள் அணைக்கப்பட்ட கருத்தரங்கில், அவனது மாணவர்களை நோக்கி, ஒரு செங்கல்லை எடுத்துக் காட்டி கேட்பான், இது என்ன???

  A brick என்றொரு சத்தம் வரும்

  what else என்று கேட்பான்

  A weapon என்றொரு குரல் வரும்

  சிரித்துக் கொண்டே வேறென்ன என்று கேட்பான்…

  பதிலில்லை

  It may be just a brick, but even a brick wants to be something

  இந்த வார்த்தைகள் சொல்லி விட்டு அந்த even a brick wants to be something என்ற வார்த்தைகளை திரும்பத் திரும்ப மெதுவாகச் சொல்லுவான், இந்தக் காட்சி நகர நகர பிண்ணியில் உள்ள திரைப்படக் கருவியில் (projector) உலகின் மிக உயர்ந்த, அழகான, அதிசியமான கட்டிடங்கள், சில சமாதிகள் என்று காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கும், அதற்கேற்றார் போன்று இசையும் மெதுவாக உச்சத்தைத் தொடும்…

  அந்தக் காட்சியில் பல விஷயங்களை சொன்னதாகப் எனக்குப் பட்டது, ஒரு சிறிய, உயிரற்ற செங்கலாய் இருந்தது, அந்தக் கட்டிடத்தின் அங்கமாய் மாறிய பின் கிடைக்கும் அங்கீகாரம், உயிரற்ற ஒரு பொருளுக்கே இப்படி என்றால் உயிருள்ள மனிதர்கள் செய்ய வேண்டியது, அடைய வேண்டிய நிலைகள், மோடிவேஷன் என்று பல விஷயங்களைத் தொட்டுச் செல்வார்கள்…அந்தப் படம் பெயர் கூட எனக்கு மறந்து விட்டது, ஆனால் இந்தக் காட்சி இன்னும் என் மனதை விட்டு நீங்க வில்லை….

  ஏறக்குறைய அந்த காட்சியில் அந்த மாணவர்கள் அடைந்த உத்வேகத்தை, எங்களது கருத்தரங்கின் முடிவில் நாங்கள் கண்டோம்…

 9. 10:54 பிப இல் ஓகஸ்ட் 26, 2009

  மிக அருமை நரேஷ்

 10. 12:34 பிப இல் ஓகஸ்ட் 27, 2009

  a very interesting post sir…..keep going…

 11. 1:04 பிப இல் ஓகஸ்ட் 27, 2009

  நன்றி ஸ்டாலின் ஃபெலிக்ஸ்…

  நன்றி கமல்காந்த்

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: