இல்லம் > நிர்வாகப் பாடங்கள் > மகாபாரதப் போர் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் – 2)

மகாபாரதப் போர் – நிர்வாகப் பாடங்கள் (பாகம் – 2)

வெறுமனே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், பேரழிவு ஆயுதங்களின் கான்செப்ட்டிற்கும் மட்டும் மகாபாரதப் போர் வித்திடவில்லை. பகவத்கீதையின் ஆரம்பமே இந்தப் போராக இருந்த்து மட்டுமின்றி, நிர்வாகரீதியாக கண்டறியப்பட்ட, கொண்டாடப்படுகின்ற பல நிர்வாகப் பாடங்களையும், தலைமைப் பண்பு தத்துவங்களையும் கூட இந்த குருஷேத்திரப் போர் தன்னுள்ளே கொண்டுள்ளது.

மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள் (பாகம் -1)

பாகம் – 2

 

மகாபாரதப்போரின் பின்ணனியும் போருக்கான தூண்டுதலும்

 

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்குமிடையே நடந்த இந்தப் போரில், கவுரவர்கள்தான் இந்தப் போர் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர். பாண்டவர்களைப் பொறுத்தவரை அவர்கள் போரை வெறுத்தாலும், அது வெறுமனே உரிமைப் போராக மட்டுமல்ல வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமாகவும் இருந்தது…. போரினைத் தவிர ஒரு துளியளவு நிலம் கூட பெற முடியாது என்ற நிலைக்கு பாண்டவர்களைத் தூண்டினார்கள். கடைசி கட்டமாக வெறும் ஐந்து கிராமங்களுக்கு போரினை விட்டுக் கொடுக்க பாண்டவர்கள் தயாராய் இருந்தும், கவுரவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை., அத்தனை அவமானங்கள் நடந்தாலும், உரிமை மீறல்கள் இருந்தாலும் மூத்த மூன்று பாண்டவர்களும் அந்தப் போர் நடப்பதை விரும்பவில்லை.

 

அது மட்டுமன்று, பாண்டவர்களைப் பொருத்த வரை அவர்களுக்கென்று எந்த படையோ, அரசோ கிடையாது. ஏறக்குறைய 13 வருடங்கள் நாட்டை விட்டு பிரிந்து இருந்தனர். அவர்களது அனைத்து சக்திகளும் அவர்களுடைய நண்பர்களையும், உறவுகளையும் (மகத, யாதவ, சேடி நாடுகள்…) மட்டுமே நம்பி இருந்தது. அதேசமயம் கவுரவர்களைப் பொறுத்தவரை 13 வருடங்கள் ஆட்சியில் இருந்தவர்கள். ஹஸ்தினாபுரத்தின் செல்வங்கள் மட்டுமின்றி, பாண்டவர்களால் உருவாக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம் மற்றும் கர்ணனால் துரியோதனனுக்காக கைப்பற்றப்பட்ட பல்வேறு பட்ட நாடுகளின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. இப்படி ஒரு பலமான பிண்ணனியில்தான் அந்தப் போரை கவுரவர்கள் உருவாக்கியிருந்தனர். வீரம், அன்பு, மரியாதை, அடக்கம், பண்பு என்று எல்லா குணங்களிலும் சிறுவயதிலிருந்தே பாண்டவர்கள் அதிக புகழடைந்ததால், கவுரவர்களிடையே ஏற்பட்டிருந்த வெஞ்சினம் அந்தப் போருக்கு வித்திட்டது….

 

படைபலம்

படைபலத்தைப் பொறுத்த வரை கவுரவர்களின் படைபலம் 11 அக்‌ஷகினியாகவும், பாண்டவர்களது படைபலம் 7 அக்‌ஷகினியாக மட்டுமே இருந்தது (ஒரு அக்‌ஷகினி என்பது 21,870 சாரியட்டுகளையும் (chariot), 21,870 யானைகளையும், 65,610 குதிரைகளையும், 109,350 தரை வீரர்களையும் (1:1:3:5 என்ற விகிதத்தில்) கொண்டது. இந்த கணக்கீட்டு முறையும் சரி, விகித முறையும் சரி இன்றைய நவீன போர் யுத்திகளில் கூட சிலாகிக்கப்படுகிறது). இது தவிர ஸ்கவுட் எனப்படும் உதவியாளர்கள், இறந்தவர்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கி போரில் உள்ளவர்களுக்கு கொடுக்க என்பது போன்ற உதவிகளுக்கு ஈடுப்பட்டிருந்தர்கள், இன்றைய ரெட் கிராஸ் போன்று காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும், பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவும் ஆட்கள் ஈடுபட்டிருந்தார்கள். ஆக இந்த எண்ணிக்கையை 11ஆலும் 7ஆலும் பெருக்கிக் கொண்டு வரும் தொகையை, அதனுடன் உதவியாளர்கள், விலங்குகள், வாகனங்கள் என்று அந்த கூட்டத்தை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? பல மைல்களுக்கு இவையே இடத்தை ஆக்கிரமித்திருக்குமென்பதன்றி போரின் போது இந்த கூட்டத்தின் அசைவும், இடம்பெயர்தலும் நினைப்பதற்கே வியப்பை ஏற்படுத்துகின்றதா?

 

கவுரவர்களின் தளபதியாக யாராலும் அழிக்க முடியாத பீஷ்மர், எல்லாருக்கும் போர்கலைகளை கற்றுக் கொடுத்த துரோணர், அர்ஜுனனை வில்லில் எதிர்க்கக் கூடிய ஒரே வீரணான கர்ணன், கதாயுதச் சண்டையில் பீமனுடன் சரிக்குச் சமமாக போரிடக்கூடிய, சாதாரணச் சண்டை விதிகளின் படி சாகடிக்க முடியாத துரியோதணன், இரவில் ஒருவராலும் வெல்ல முடியாதவனும், எட்டு சிரஞ்சீவிகளில் ஒருவனும், குரு துரோணரின் புதல்வனுமான அஸ்வத்தமா, எல்லாருக்கும் குருவாக விளங்கியவரும், எட்டு சிரஞ்சீவிகளில் இன்னொருவருமான கிருபாச்சாரியார், நகுலன், சகாதேவனின் தாய்மாமனும், பாண்டவர்களின் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தாலும் துரியோதனின் தந்திரத்தால் ஏமாந்து வேறு வழியில்லாமல் கவுரவர்களின் பக்கம் நின்ற ஷல்யா என்று மிகச் சிறப்பு வாய்ந்த தளபதிகள் பலர் இருந்தனர். இது தவிர கிருஷ்ணரது படையும் கவுரவர்களுக்கே!

 

பாண்டவர்கள் பக்கம் அர்ஜுனன், பீமன், பீஷ்மரை பழிவாங்கச் சபதமெடுத்த சிகண்டி, திரவுபதியின் சகோதரனும், சிகண்டியின் சகோதரனுமான திருஷ்டதயும்னா, அர்ஜுன்னின் புதல்வன் அபிமன்யு, பீமனின் புதல்வன் கடோத்கஜன், அர்ஜுனனின் உற்ற நண்பணும், கிருஷ்ணருடன் கடைசி கட்ட அமைதி முயற்சியில் ஈடுபட்டவனும், மகாபாரதப் போரின் போது தொடர்ச்சியாக 101 முறை துரோணரின் வில்லை உடைத்தவனுமான சத்யகி ஆகியோர் இருந்தனர். இது தவிர கவுரவர்கள் அலட்சியமாக கருதிய கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார்

 

மகாபாரதப் போர்

மகாபாரதப் போர்

போரின் முடிவு

18 நாட்கள் நடந்தப் போரில் பாண்டவர்கள் பக்கம் அபிமன்யு, கடோத்கஜன், இராவண், துருபதன் என்று பல முக்கியமானவர்கள் இறந்தாலும், கவுரவர்கள் பக்கம் வெறுமனே மூன்று முக்கிய தலைவர்களைத் (அஸ்வத்தமா, கிருபாச்சாரியார், கிரிதவர்மா) தவிர அனைவரும் கொல்லப்பட்டனர்.

 

போரின் படைபலத்தின் எண்ணிக்கையிலோ, சக்தியிலோ, பெறக்கூடிய உதவிகளிலோ உண்மையில் பாண்டவர்களை மிஞ்சியவர்களாகத்தான் கவுரவர்கள் இருந்தனர். இருந்தும் பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது???? பாண்டவர்களின் முக்கிய வீரர்களை சரிக்குச் சமமாக எதிர்க்கக் கூடிய வீரர்கள் கவுரவர்களிட்த்தில் இருந்தும் அவர்கள் தோற்கக் காரணம் என்ன? அவர்களுடைய செயல்களும், இந்தப் போரும் வெறுமனே போரின் முடிவினை மட்டும் தந்திடவில்லை, மறைமுகமாக இன்றைய நிர்வாகத் தத்துவங்களையும், பாடங்களையும் உள்ளடக்கிச் சொல்லியுள்ளது!!!!

 

1. போர் ஆயத்தம் (Preparation)

கவுரவர்களைப் பொறுத்த வரை தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற அதிக நம்பிக்கையில் இருந்தனர். இதற்கு அவர்களிடம் இருந்த அதிக படைபலமும் ஒரு காரணம், இது தவிர துரியோதனுக்காக கர்ணன் பல்வேறு நாடுகளையும், செல்வங்களையும் வென்று அவர்களது படைகளையும் கவுரவர்களுடன் இணைத்தாலும், இந்தப் போர்கள் மூலமாக கவுரவர்களுக்கு படைச் சேதமும், அதிக செலவுகளும் ஏற்பட்டன. பல நாடுகளை வென்றாலும், மறைமுகமாக அவை கவுரவர்களுக்கு, பல புதிய எதிரிகளையும் கொண்டுவந்தது. வென்ற நாடுகளும், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதமான கலாச்சாரமும் பிண்ணனியும் இருப்பது, எண்ணிக்கை அதிகம் கொண்ட படையில் ஒரு ஒருங்கிணைப்பு இல்லாத தன்மையையும் கொண்டு வந்தது.

 

பாண்டவர்களோ, போரை அறவே வெறுத்தவர்களாக இருந்தாலும், தாங்கள் நாட்டை விட்டு வெளியே இருந்த காலங்களில் தங்களது சக்தியை அதிகரித்துக் கொண்டனர். அர்ஜுனன் ஏற்கனவே வில்வித்தையில் மிகத் திறமைசாலியாக இருந்தாலும், பல செயல்களின் மூலம் திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதங்களை அதிகம் பெற்றான் (திவ்யாஸ்ட்ராஸ் பற்றி முதல் பகுதியிலேயே சொல்லியிருப்பேன்), பீமனோ தனது சகோதரனான அனுமனை சந்தித்து ஆசீர்வாதமும் அதிக சக்தியையும் பெற்றான். இது தவிர 13 ஆண்டுகளில் அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட உறவுகளும் நட்புகளும் அவர்களுக்கு போரில் பெருமளவு கைகொடுத்தன. தருமனோ பல்வேறு ரிஷிகளையும், பெரியவர்களையும் சந்தித்து எந்த பகடை ஆட்டம் எல்லாவற்றுக்கும் காரணமாய் அமைந்ததோ, எந்த பகடையில் மனைவி உட்பட அனைவரையும் தோற்றார்களோ அந்த பகடை ஆட்டத்தில் யாராலும் தோற்கடிக்க முடியாதவனாய் மாறினான். ஒருவேளை மீண்டும் பாண்டவர்கள் பகடை ஆட்டத்திற்கு இழுக்கப்பட்டால் அப்போது அவர்கள் கண்டிப்பாக ஜெயித்திருக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கினான்…

 

எந்த ஒரு குறிக்கோளுக்கும் நீங்கள் எந்தளவு உங்களை தயார்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதே உங்களது வெற்றிக்கான முதல்படி. தன்னுடைய பலவீனத்தையும், எதிரியின் பலத்தையும் அறிந்திருக்காத யாராலும் எந்த ஒரு போட்டியிலும் வெல்ல முடியாது. இங்கே பாண்டவர்கள் தங்களது சக்தியை மட்டும் அதிகரித்துக் கொள்ளவில்லை, மாறாக தருமர் செய்தது போன்று தங்களது பலவீனங்களையும் பலங்களாக மாற்றிக் கொண்டார்கள். போரோ, பகடை ஆட்டமோ, சமாதானமோ என்று எந்த ஒரு சூழ்நிலைக்கும் அவர்கள் தயார்நிலையில் இருந்தார்கள்….

 

2. துணைகள் (Allies)

கவுரவர்கள் அந்த காலகட்டத்தின் ஒரு மிகப்பெரிய ஆட்சியாக விளங்கிய போதும், புதிய சக்தி வாய்ந்த துணைகளை ஏற்படுத்திக் கொள்ளத் தவறினார்கள். தவிர கர்ணன் நடத்திய பல போர்கள் புதிய எதிரிகளை உருவாக்கியது. அவர்களுக்கு இருந்த துணையெல்லாம் பழைய துணைகளான சகுனியின் காந்தார நாடு, கம்போடிய நாடு மற்றும் சிந்து அரசு மட்டுமே. இது தவிர அங்கு முடிவெடுக்கும் அதிகாரம் முழுக்க ஒற்றைப் புள்ளியிலேயே முடங்கி கிடந்தது (Centralized power system).

 

பாண்டவர்களுக்கோ, அவர்களுக்கென்று தனி நாடோ பெரிய செல்வங்களோ ஒன்றும் இல்லாவிட்டாலும் பல்வேறு புதிய, பழைய துணைகள் அவர்கள் ஏற்படுத்தி இருந்தனர். திரவுபதியை மணந்ததன் மூலம் கிடைத்த பாஞ்சால அரசின் நட்பு, அர்ஜுன்னுக்கும் சுபத்ராவுக்கும் நடந்த திருமணத்தால் உறவான துவாரகா, சகதேவனின் திருமணத்தால் இணைந்த மகதம், நகுலனின் திருமணத்தால் நட்புற்ற சேடி நாடு, பீமனின் திருமணத்தால் இணைந்த காசி, தருமருக்கும் தேவிகாவுக்கும் நடந்த திருமணத்தால் உறவான கேகய நாடு, அபிமன்யுவின் திருமணத்தால் இணைந்த மட்சயா, ராட்சத குலப் பெண்ணை பீமன் மணந்ததால் அந்த சமூகம் முழுக்க பாண்டவர்களுடன் நட்பு பூண்டது, அர்ஜுனனின் இன்னொரு திருமணத்தால் இணைந்த நாகர்கள் இப்படி பல துணைகளை பாண்டவர்கள் உருவாக்கிக் கொண்டனர். ஏறக்குறை எல்லா நாடுகளுமே இந்தப் போரில் அவர்களுக்கு உதவின. சொல்லப் போனால் நாடே இல்லாத பாண்டவர்களுக்கு 7 அக்‌ஷகினி அளவிற்கு படைபலம் வந்ததே இந்தத் துணையால்தான்!!!

 

தகுந்த துணைகள்தான் ஒரு வெற்றிக்குக் காரணம் என்பது தனி மனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கும் மிகப் பொருந்தும். பல நிறுவனங்கள் தகுந்த துணையுடன் கூட்டுவணிக முறையில் (Partnership program) ஈடுபடுவதால் நல்லதொரு வெற்றியை அடைந்திருக்கின்றன. SAP முதற்கொண்டு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த Partnership program ஐ தங்களது விற்பனை மற்றும் விநியோக ஊடகமாக (Sales channel and Distribution channel) பயன்படுத்தி வெற்றியடைந்திருக்கின்றன. நிறுவன வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கான (ERP) மென்பொருட்களோ, தேவைகளுக்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட மென்பொருட்களோ (custom made or Tailor made)  எந்த வகை பொருட்களையும் அளிக்கும் பல மென்பொருள் நிறுவனங்கள் இந்த துணைகளின் (partners) உதவியுடன்தான் சாதித்திருக்கின்றன….

 

மீதி பாடம் அடுத்த இழையில்…..

பிரிவுகள்:நிர்வாகப் பாடங்கள் குறிச்சொற்கள்:
 1. மகேஷ்வரன் S
  10:04 பிப இல் ஓகஸ்ட் 22, 2009

  வித்தியாசமான முயற்சி.இதை படிக்கும் போது,இதுவும் நியாபகத்திற்கு வருகிறது “War makes robbers, and peace hangs them”

 2. Maximum India
  5:19 பிப இல் ஓகஸ்ட் 23, 2009

  நல்ல பதிவு. விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்.

  புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  நன்றி.

 3. 7:27 முப இல் ஓகஸ்ட் 24, 2009

  நன்றி மகேஷ்!!!

  இந்த பழமொழியை எங்கப்பா படிச்ச?

 4. 7:27 முப இல் ஓகஸ்ட் 24, 2009

  நன்றி மேக்ஸிமம் இந்தியா!!!

 1. 6:24 முப இல் ஓகஸ்ட் 25, 2009

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: