இல்லம் > நிர்வாகப் பாடங்கள் > மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள் (பாகம் -1)

மகாபாரதப் போர் – சில நிர்வாகப் பாடங்கள் (பாகம் -1)

எந்த ஒரு நாட்டினுடைய வரலாறும், போர்களின் வன்மத்தால் சற்றே குருதிக்கரை படிந்திருக்கும். அப்படி போர்களாலோ, போராட்டங்களாலோ சிறிதளவேனும் நிரப்ப்படாத பக்கங்களைக் கொண்ட ஒரு வரலாற்றைக் காண்பதென்பது மிக அரிதே.  மனித இனத்தின் ஆரம்பத்திலிருந்தே போர்களுக்கான காரணங்களும், முறைகளும் அதற்கான விளைவுகளும் இருந்து கொண்டும், புதுப்பிக்கப்பட்டுக் கொண்டும்தான் இருக்கின்றன.

முதல் போர் அல்லது சண்டை எங்கு, எப்போது, யாருக்கிடையில் ஏற்பட்டது என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனிதன் குழுவாக பிரிந்து வாழ ஆரம்பித்த்திலிருந்தே இந்த போர்கள் அல்லது சண்டைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றே ஆய்வுகள் சொல்கின்றன. ஒருவேளை, ஒன்றாக இருந்தவர்கள் குழுவாக பிரிந்ததற்கும் கூட, ஒரு சண்டை காரணமாக இருந்திருக்கலாம்

இப்படிப்பட்ட இந்தப் போர்களின் தன்மையே சற்று அலாதியானதுதான். உயிரற்றதாக இருந்தாலும் தனக்கென்று சில குணநலன்களைக் கொண்டவை. தோற்றவர்களை பெரும்பாலும் கெட்டவனாகவும், வென்றவர்களை நல்லவனாகவோ, நியாயமானவனாகவோ காட்டும் இதன் சக்தி இன்றளவும் (ஈழம் வரை) தொடர்கிறது. வரலற்றின் பக்கங்களில் சற்றே சார்புத்தன்மை தென்படுவதற்கும் இந்த போர்களும், போராட்டங்களும் தளங்களாக அமைந்துவிடுகின்றன. பெண்களைப் போன்றே போதையூட்டக் கூடியதாக இருக்கிறதோ என்னமோ, ஆனால் சில போர்கள் ஏற்படுவதற்குக் காரணமே பெண்களாக அமைந்திருப்பதையும் புராணங்களிலோ அல்லது வரலாற்றினிலோ பார்க்க நேரிட்டுள்ளது!

போர்கள்

போர்கள்

இந்தப் போர்களும் அதன் முடிவுகளும் பல பாடங்களை மட்டுமல்ல சில பல சந்தேகங்களையும் என்னுள்ளே ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாவதுதான் போர்களின் வசீகரம்! சாதரண மனிதனிடத்தில் இந்தப் போர்களும், சண்டைகளும் சற்றே வசீகர சக்தியைக் கொண்டுள்ளனவோ என்ற ஐயத்தை என்னுள்ளே ஏற்படுத்தியிருக்கின்றன. என்னதான் அமைதியானவனாகவோ, நல்லவனாகவோ காட்டிக் கொண்டாலும் பல சமயங்களில் மனிதன் சண்டையில் ஈடுபடாமல் போவதற்குக் காரணம் தோற்றுவிடுவேனோ என்கிற ஐயமா அல்லது உண்மையிலேயே அவனது அமைதிக் குணமா என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியிருக்கிறது?

நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை, நம் நாட்டின் பெருமைமிகு வாக்கியமாக “வேற்றுமையில் ஒற்றுமை”  இருப்பதற்கு ஏற்றவாறு பல்வேறு பட்ட மக்கள், பல்வேறு பட்ட கலாச்சாரம், பல்வேறு மதங்கள் கொண்ட சூழ்நிலை நிலவுவதற்கு ஒரு வகைக் காரணமாக இருந்த்து இந்தப் போர்கள்தான் என்ற நிலையைத் தாண்டி, இன்று வேறுபட்ட மதம் என்கிற ஒரு அற்ப காரணம் மனிதர்களுக்குள் பெரிய போர்களை ஏற்படுத்தும் நிலை இருப்பதென்பது மிகப் பெரிய நகை முரண்

நம் நாட்டின் வரலாறு, மதங்கள், அரசியல் ஆகியவற்றின் பக்கங்களில்  இந்தப் போர்களும், போராட்டங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, பல பக்கங்களையும் நிரப்பிச் சென்றுள்ளது. அசோகர், அக்பர், அவுரங்கசீப், கஜினி போன்றோரின் படையெடுப்பைப் பற்றியோ, கலிங்கத்துப் பரணியிலும், புறநானுற்றிலும் தினவெடுத்த தோள்களின் வலிமையையும், ரத கஜ பதாதிகளையும், வீரமரணத்தின் சிறப்பினையும் தமிழில் படிக்காமல் பள்ளியை தாண்டியிருக்க முடியாது. நம் நாட்டில் இரு பெரும் இதிகாசங்களாக கொண்டாடப்படுகின்ற இரு புராணங்களும் கூட போரின் காட்சிகளை பெருமளவு விவரிக்கின்றன.

பொதுவாக மகாபாரதம் போன்ற நூல்கள் மூலமாக சொல்லப்படுகின்ற அறிவுரைகள் அல்லது நல்லுரைகள் அளவிற்கு அதனைப் பற்றிய சர்ச்சைகளும் இல்லாமலில்லை. இது உண்மையா அல்லது கதையா, சாதீய கட்டமைப்புகளைத் தாங்கிபிடிக்கிறது, சில மூட நம்பிக்கைகளை முன்வைக்கிறது என்று பல குற்றச்சாட்டுகள் இந்த புராணங்கள் மேல் இருக்கின்றன.

இருந்தாலும் விஞ்ஞான ரீதியாக, அறிவியல் ரீதியாக என்று பல துறைகளில் அதன் பங்களிப்பும் சாதாரணமானதன்று. தனிப்பட்ட முறையில் மகாபாரதம் பல விஷயங்களுக்கு காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறது. யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் போன்ற கோள்களை கண்டுபிடித்தது, கம்போடியா, கஜகஸ்தான் மற்றும் ஸ்காண்டிநேவியா போன்ற நிலங்களைக் கண்டுபிடித்தது, கணிதத்தில் பத்தின் அடுக்கு 16 முதல் -16 வரை உபயோகப் படுத்தியது, குந்தியின் மூலம் உடலுறவு இல்லாமலே குழந்தை பிறக்க முடியும் என்கிற மருத்துவ உண்மையைக் கொணர்ந்தது என்று பல கண்டு பிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தாலும் குருஷேத்திரப் போரின் மூலம் இவை உணர்த்தும் சில தத்துவங்கள் மேலும் பல ஆச்சரியங்களையும், அதிசியங்களையும் கொண்டிருக்கின்றன.

இந்நாட்டின் ஒரு பெரும்பான்மை மதத்தினருடைய புனித நூலுக்கு அடிப்படையாக இருந்ததும் இந்தப் போர்தான். குருஷேத்ரப் போருக்கு முன்பு கிருஷ்ணர் நடத்திய உபதேசமே பகவத்கீதையாக உருவெடுத்திருக்கிறது. எங்கோ நடக்கும் குருஷேத்திரப் போரை தன் மனக் கண்ணால் கண்டு திருதராஷ்டிரனிடம் சொல்லிய முறைதான் இன்றைய தொலைக்காட்சி முறைகளுக்கு அடிப்படை என்று கருதப்படுகிறது. மகாபாரதப் போரில் உபயோகப்படுத்தியதாக வர்ணிக்கின்ற ராணுவ தந்திரங்களும், போர் முறைகளும், ஆயுதவர்ணனைகளும் இன்றைய நவீன போர் முறைகளையும், ஆயுதங்களையும் (அணு ஆயுதம், வேதியியல் ஆயுதங்கள் உட்பட) ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது

மகாபாரதப் போரில் இரு வகை ஆயுதங்கள் உபயோகப்படுத்தப்பட்டன, ஒன்று ஆஸ்ட்ராஸ் எனப்படும் தாக்கும் ஆயுதங்கள், இன்னொன்று சாஸ்ட்ராஸ் எனப்படும் தடுப்பு உபகரணங்கள். நவீன அணுஆயுதங்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆபன்ஹீமர் (Oppenheimer) கூட மகாபாரதப் போரில் பயன்படுத்திய ஆயுதங்கள் பல இன்றைய நவீன அணுஆயுதங்களின் சக்தியையும் செயலையும் ஒத்திருந்தன என்று சிலாகிக்கிறார் (மகாபாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட பிரம்மாஸ்திரம் இன்றைய அணுகுண்டுகளை ஒத்திருக்கின்றன என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன). திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதங்கள் கடவுள்களிடமிருந்தும், மற்ற மகான்களிடமிருந்தும் பெறப்படுவதும், மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதமுமாகும். எப்படி இன்றைய நவீன ஆயுதங்களை செயல்படுத்த கடவுச் சொல் (Password) போன்றோ அல்லது லாஞ்ச் கீ (Launch Key) போன்று ஒன்று தேவைப்படுகிறதோ அதே போல் இந்த திவ்யாஸ்ட்ராஸ் ஆயுதங்களைச் செயல்படுத்தவும் மந்திரங்கள் தேவைப்படுகின்றன. அவை இல்லாமல் இந்த ஆயுதங்களை செயல்படுத்த முடியாது.

வெறுமனே செயல்படுத்த மட்டுமல்லாமல் ஒரு சில ஆயுதங்களை ஏவியபின்பும் திருப்ப அழைத்துக் கொளளவும் மந்திரங்கள் (நவீனயுகத்தில் புரோகிராம்கள்) இருக்கின்றன. அதே சமயம் ஜேம்ஸ்பாண்ட் படம் முதற்கொண்டு பல படங்களில் காண்பது போல் ஒருவர் ஏவிவிட்ட ஆயுதத்தை இன்னொருவர் இலக்கை விட்டு திருப்பி விடவும் மந்திரங்கள் உள்ளன. அணுகுண்டின் கதிர்வீச்சைக் கூட தடுக்கும் முறை இருப்பது போல் பிரம்மதண்டா போன்ற தடுக்கும் முறை (பிரம்மாஸ்திரத்தின் தாக்குதலில் இருந்து கூட தப்பிக்க முடியும்) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆயுதங்களை பெரும்பாலும் குதிரைகள் பூட்டிய தேர்களிலிருந்து இயக்கியிருப்பதை பார்க்கலாம். ஒருவகையில் இவற்றை போர் விமானங்கள் அல்லது ஸ்பேஸ் ஷிப் (விண்கலம்?) உடன் ஒப்பிடலாம். பழங்கலத்தில் குதிரைகள், இப்போது குதிரை சக்தி (Horse Power (HP)) கொண்ட இயந்திரம், மகாபாரதப் போரில் சில தேர்கள் பறக்கக் கூடியவை, நிலத்திலும், வானத்திலும் பயணிக்க்க் கூடிய வாகனங்களை நாம் கண்டுபிடித்திருக்கிறோம், போரின் போது சில தேர்கள் திடிரென்று விண்ணில் மறைந்த விந்தையையும், திடிரென்று எங்கிருந்தோ வந்து தோன்றும் விந்தையையும் காணலாம். ஸ்டீல்த் (Stealth) வகை விமானங்களை கண்டு ஆச்சரியப்படும் நமக்கு இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியும் அல்லவா???

ஒரு வேளை திப்பு சுல்தானின் காலத்தின் போது, ஆங்கிலேயர்களை  தாக்குவதற்கு திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் ஆயுதங்கள்தான் இன்றைய ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்பட காரணம் என்று அப்துல்கலாம் அக்னிச்சிறகுகளில் சிலாகிப்பது போல் மறைமுகமாக இன்றைய நவீன ஆயுதங்களின் கண்டுபிடிப்புகளுக்கு காரணகர்த்தாவாகவும் இந்த மகாபாரதப் போரின் ஆயுதங்கள் இருக்கலாம். சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் போர்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உயரிய குறிக்கோளை அடைய எதிர்படும் தடைகளையும், தீய சிந்தனைகளையும் எதிர்கொள்ள இந்த திவ்யாஸ்ட்ராஸ் மற்றும் சாஸ்ட்ராஸ் வகை  ஆயுதங்கள் என்கிற குணநலன்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த விஷயங்களை அடைவதற்கும் அந்த குணநலன்களை கொண்டிருப்பதற்கும் அதிக கவனமும், முயற்சியும், பொறுமையும், அர்ப்பணிப்பும் தேவை. இந்த ஆயுதங்களை நம் வாழ்வில் உபயோகிக்கிறோமோ இல்லையோ ஆனால் இவற்றைக் கொண்டிருப்பதென்பதே நம் வெற்றிக்கு மிக முக்கியமானது (‘You may or may not use your weapons in the war. But it is VERY IMPORTANT that you possess them’!)

வெறுமனே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், பேரழிவு ஆயுதங்களின் கான்செப்ட்டிற்கும் மட்டும் இந்தப் போர்கள் வித்திடவில்லை. நிர்வாகரீதியாக கண்டறியப்பட்ட, கொண்டாடப்படுகின்ற பல நிர்வாகப் பாடங்களையும், தலைமைப் பண்பு தத்துவங்களையும் கூட இந்த குருஷேத்திரப் போரும் மற்ற சில போர்களும் தன்னுள்ளே கொண்டுள்ளது. அப்படி மகாபாரதப் போர் உணர்த்தும் நிர்வாகப் பாடங்கள் என்னென்ன – அடுத்த இழையில்…

போர்கள், போராட்டங்கள், சண்டைகள்…

எந்த ஒரு நாட்டினுடைய வரலாறும், போர்களின் வன்மத்தால் சற்றே குருதிக்கரை படிந்திருக்கும். அப்படி போர்களாலோ, போராட்டங்களாலோ சிறிதளவேனும் நிரப்ப்படாத பக்கங்களைக் கொண்ட ஒரு வரலாற்றைக் காண்பதென்பது மிக அரிதே. மனித இனத்தின் ஆரம்பத்திலிருந்தே போர்களுக்கான காரணங்களும், முறைகளும் அதற்கான விளைவுகளும் இருந்து கொண்டும், புதுப்பிக்கப்பட்டுக் கொண்டும்தான் இருக்கின்றன.

முதல் போர் அல்லது சண்டை எங்கு, எப்போது, யாருக்கிடையில் ஏற்பட்டது என்பதை யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. மனிதன் குழுவாக பிரிந்து வாழ ஆரம்பித்த்திலிருந்தே இந்த போர்கள் அல்லது சண்டைகள் ஏற்பட்டிருக்கலாம் என்றே ஆய்வுகள் சொல்கின்றன. ஒருவேளை, ஒன்றாக இருந்தவர்கள் குழுவாக பிரிந்ததற்கும் கூட, ஒரு சண்டை காரணமாக இருந்திருக்கலாம்

இப்படிப்பட்ட இந்தப் போர்களின் தன்மையே சற்று அலாதியானதுதான். உயிரற்றதாக இருந்தாலும் தனக்கென்று சில குணநலன்களைக் கொண்டவை. தோற்றவர்களை பெரும்பாலும் கெட்டவனாகவும், வென்றவர்களை நல்லவனாகவோ, நியாயமானவனாகவோ காட்டும் இதன் சக்தி இன்றளவும் (ஈழம் வரை) தொடர்கிறது. வரலற்றின் பக்கங்களில் சற்றே சார்புத்தன்மை தென்படுவதற்கும் இந்த போர்களும், போராட்டங்களும் தளங்களாக அமைந்துவிடுகின்றன. பெண்களைப் போன்றே போதையூட்டக் கூடியதாக இருக்கிறதோ என்னமோ, ஆனால் சில போர்கள் ஏற்படுவதற்குக் காரணமே பெண்களாக அமைந்திருப்பதையும் புராணங்களிலோ அல்லது வரலாற்றினிலோ பார்க்க நேரிட்டுள்ளது!

இந்தப் போர்களும் அதன் முடிவுகளும் பல பாடங்களை மட்டுமல்ல சில பல சந்தேகங்களையும் என்னுள்ளே ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாவதுதான் போர்களின் வசீகரம்! சாதரண மனிதனிடத்தில் இந்தப் போர்களும், சண்டைகளும் சற்றே வசீகர சக்தியைக் கொண்டுள்ளனவோ என்ற ஐயத்தை என்னுள்ளே ஏற்படுத்தியிருக்கின்றன. என்னதான் அமைதியானவனாகவோ, நல்லவனாகவோ காட்டிக் கொண்டாலும் பல சமயங்களில் மனிதன் சண்டையில் ஈடுபடாமல் போவதற்குக் காரணம் தோற்றுவிடுவேனோ என்கிற ஐயமா அல்லது உண்மையிலேயே அவனது அமைதிக் குணமா என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியிருக்கிறது?

நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரை, நம் நாட்டின் பெருமைமிகு வாக்கியமாக “வேற்றுமையில் ஒற்றுமை இருப்பதற்கு ஏற்றவாறு பல்வேறு பட்ட மக்கள், பல்வேறு பட்ட கலாச்சாரம், பல்வேறு மதங்கள் கொண்ட சூழ்நிலை நிலவுவதற்கு ஒரு வகைக் காரணமாக இருந்த்து இந்தப் போர்கள்தான் என்ற நிலையைத் தாண்டி, இன்று வேறுபட்ட மதம் என்கிற ஒரு அற்ப காரணம் மனிதர்களுக்குள் பெரிய போர்களை ஏற்படுத்தும் நிலை இருப்பதென்பது மிகப் பெரிய நகை முரண்

நம் நாட்டின் வரலாறு, மதங்கள், அரசியல் ஆகியவற்றின் பக்கங்களில் இந்தப் போர்களும், போராட்டங்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமின்றி, பல பக்கங்களையும் நிரப்பிச் சென்றுள்ளது. அசோகர், அக்பர், அவுரங்கசீப், கஜினி போன்றோரின் படையெடுப்பைப் பற்றியோ, கலிங்கத்துப் பரணியிலும், புறநானுற்றிலும் தினவெடுத்த தோள்களின் வலிமையையும், ரத கஜ பதாதிகளையும், வீரமரணத்தின் சிறப்பினையும் தமிழில் படிக்காமல் பள்ளியை தாண்டியிருக்க முடியாது. நம் நாட்டில் இரு பெரும் இதிகாசங்களாக கொண்டாடப்படுகின்ற இரு புராணங்களும் கூட போரின் காட்சிகளை பெருமளவு விவரிக்கின்றன.

பொதுவாக மகாபாரதம் போன்ற நூல்கள் மூலமாக சொல்லப்படுகின்ற அறிவுரைகள் அல்லது நல்லுரைகள் அளவிற்கு அதனைப் பற்றிய சர்ச்சைகளும் இல்லாமலில்லை. இது உண்மையா அல்லது கதையா, சாதீய கட்டமைப்புகளைத் தாங்கிபிடிக்கிறது, சில மூட நம்பிக்கைகளை முன்வைக்கிறது என்று பல குற்றச்சாட்டுகள் இந்த புராணங்கள் மேல் இருக்கின்றன.

இருந்தாலும் விஞ்ஞான ரீதியாக, அறிவியல் ரீதியாக என்று பல துறைகளில் அதன் பங்களிப்பும் சாதாரணமானதன்று. தனிப்பட்ட முறையில் மகாபாரதம் பல விஷயங்களுக்கு காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறது. யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் போன்ற கோள்களை கண்டுபிடித்தது, கம்போடியா, கஜகஸ்தான் மற்றும் ஸ்காண்டிநேவியா போன்ற நிலங்களைக் கண்டுபிடித்தது, கணிதத்தில் பத்தின் அடுக்கு 16 முதல் -16 வரை உபயோகப் படுத்தியது, குந்தியின் மூலம் உடலுறவு இல்லாமலே குழந்தை பிறக்க முடியும் என்கிற மருத்துவ உண்மையைக் கொணர்ந்தது என்று பல கண்டு பிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தாலும் குருஷேத்திரப் போரின் மூலம் இவை உணர்த்தும் சில தத்துவங்கள் மேலும் பல ஆச்சரியங்களையும், அதிசியங்களையும் கொண்டிருக்கின்றன.

இந்நாட்டின் ஒரு பெரும்பான்மை மதத்தினருடைய புனித நூலுக்கு அடிப்படையாக இருந்ததும் இந்தப் போர்தான். குருஷேத்ரப் போருக்கு முன்பு கிருஷ்ணர் நடத்திய உபதேசமே பகவத்கீதையாக உருவெடுத்திருக்கிறது. எங்கோ நடக்கும் குருஷேத்திரப் போரை தன் மனக் கண்ணால் கண்டு திருதராஷ்டிரனிடம் சொல்லிய முறைதான் இன்றைய தொலைக்காட்சி முறைகளுக்கு அடிப்படை என்று கருதப்படுகிறது. மகாபாரதப் போரில் உபயோகப்படுத்தியதாக வர்ணிக்கின்ற ராணுவ தந்திரங்களும், போர் முறைகளும், ஆயுதவர்ணனைகளும் இன்றைய நவீன போர் முறைகளையும், ஆயுதங்களையும் (அணு ஆயுதம், வேதியியல் ஆயுதங்கள் உட்பட) ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மகாபாரதப் போரில் இரு வகை ஆயுதங்கள் உபயோகப்படுத்தப்பட்டன, ஒன்று ஆஸ்ட்ராஸ் எனப்படும் தாக்கும் ஆயுதங்கள், இன்னொன்று சாஸ்ட்ராஸ் எனப்படும் தடுப்பு உபகரணங்கள். நவீன அணுஆயுதங்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்ற ஆபன்ஹீமர் (Oppenheimer) கூட மகாபாரதப் போரில் பயன்படுத்திய ஆயுதங்கள் பல இன்றைய நவீன அணுஆயுதங்களின் சக்தியையும் செயலையும் ஒத்திருந்தன என்று சிலாகிக்கிறார் (மகாபாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட பிரம்மாஸ்திரம் இன்றைய அணுகுண்டுகளை ஒத்திருக்கின்றன என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன). திவ்யாஸ்ட்ராஸ் வகை ஆயுதங்கள் கடவுள்களிடமிருந்தும், மற்ற மகான்களிடமிருந்தும் பெறப்படுவதும், மிகுந்த சக்தி வாய்ந்த ஆயுதமுமாகும். எப்படி இன்றைய நவீன ஆயுதங்களை செயல்படுத்த கடவுச் சொல் (Password) போன்றோ அல்லது லாஞ்ச் கீ (Launch Key) போன்று ஒன்று தேவைப்படுகிறதோ அதே போல் இந்த திவ்யாஸ்ட்ராஸ் ஆயுதங்களைச் செயல்படுத்தவும் மந்திரங்கள் தேவைப்படுகின்றன. அவை இல்லாமல் இந்த ஆயுதங்களை செயல்படுத்த முடியாது.

வெறுமனே செயல்படுத்த மட்டுமல்லாமல் ஒரு சில ஆயுதங்களை ஏவியபின்பும் திருப்ப அழைத்துக் கொளளவும் மந்திரங்கள் (நவீனயுகத்தில் புரோகிராம்கள்) இருக்கின்றன. அதே சமயம் ஜேம்ஸ்பாண்ட் படம் முதற்கொண்டு பல படங்களில் காண்பது போல் ஒருவர் ஏவிவிட்ட ஆயுதத்தை இன்னொருவர் இலக்கை விட்டு திருப்பி விடவும் மந்திரங்கள் உள்ளன. அணுகுண்டின் கதிர்வீச்சைக் கூட தடுக்கும் முறை இருப்பது போல் பிரம்மதண்டா போன்ற தடுக்கும் முறை (பிரம்மாஸ்திரத்தின் தாக்குதலில் இருந்து கூட தப்பிக்க முடியும்) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆயுதங்களை பெரும்பாலும் குதிரைகள் பூட்டிய தேர்களிலிருந்து இயக்கியிருப்பதை பார்க்கலாம். ஒருவகையில் இவற்றை போர் விமானங்கள் அல்லது ஸ்பேஸ் ஷிப் (விண்கலம்?) உடன் ஒப்பிடலாம். பழங்கலத்தில் குதிரைகள், இப்போது குதிரை சக்தி (Horse Power (HP)) கொண்ட இயந்திரம், மகாபாரதப் போரில் சில தேர்கள் பறக்கக் கூடியவை, நிலத்திலும், வானத்திலும் பயணிக்க்க் கூடிய வாகனங்களை நாம் கண்டுபிடித்திருக்கிறோம், போரின் போது சில தேர்கள் திடிரென்று விண்ணில் மறைந்த விந்தையையும், திடிரென்று எங்கிருந்தோ வந்து தோன்றும் விந்தையையும் காணலாம். ஸ்டீல்த் (Stealth) வகை விமானங்களை கண்டு ஆச்சரியப்படும் நமக்கு இந்த விஷயத்தை புரிந்து கொள்ள முடியும் அல்லவா???

ஒரு வேளை திப்பு சுல்தானின் காலத்தின் போது, ஆங்கிலேயர்களை தாக்குவதற்கு திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட் ஆயுதங்கள்தான் இன்றைய ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிக்கப்பட காரணம் என்று அப்துல்கலாம் அக்னிச்சிற்குகளில் சிலாகிப்பது போல் மறைமுகமாக இன்றைய நவீன ஆயுதங்களின் கண்டுபிடிப்புகளுக்கு காரணகர்த்தாவாகவும் இந்த மகாபாரதப் போரின் ஆயுதங்கள் இருக்கலாம். சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் போர்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உயரிய குறிக்கோளை அடைய எதிர்படும் தடைகளையும், தீய சிந்தனைகளையும் எதிர்கொள்ள இந்த திவ்யாஸ்ட்ராஸ் ஆயுதங்களும், சாஸ்ட்ராஸ் போன்ற குணநலன்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த விஷயங்களை அடைவதற்கும் அந்த குணநலன்களை கொண்டிருப்பதற்கும் அதிக கவனமும், முயற்சியும், பொறுமையும், அர்ப்பணிப்பும் தேவை. இந்த ஆயுதங்களை நம் வாழ்வில் உபயோகிக்கிறோமோ இல்லையோ ஆனால் இவற்றைக் கொண்டிருப்பதென்பதே நம் வெற்றிக்கு மிக முக்கியமானது (‘You may or may not use your weapons in the war. But it is VERY IMPORTANT that you possess them’!)

வெறுமனே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், பேரழிவு ஆயுதங்களின் கான்செப்ட்டிற்கும் மட்டும் இந்தப் போர்கள் வித்திடவில்லை. நிர்வாகரீதியாக கண்டறியப்பட்ட, கொண்டாடப்படுகின்ற பல நிர்வாகப் பாடங்களையும், தலைமைப் பண்பு தத்துவங்களையும் கூட இந்த குருஷேத்திரப் போர் தன்னுள்ளே கொண்டுள்ளது. அப்படி மகாபாரதப் போர் உணர்த்தும் நிர்வாகப் பாடங்கள் என்னென்ன – அடுத்த இழையில்…

பிரிவுகள்:நிர்வாகப் பாடங்கள் குறிச்சொற்கள்:
 1. 7:26 முப இல் ஓகஸ்ட் 20, 2009

  நல்ல கட்டுரை நரேஷ்.

 2. 7:59 முப இல் ஓகஸ்ட் 20, 2009

  நன்றி விழியன்…

 3. raja
  10:37 பிப இல் ஜூலை 14, 2012

  நல்ல கட்டுரை நரேஷ். மஹாபாரதம் குறித்த தகவல்களை எங்கே இருந்து திரட்டினீர்கள், அதை பற்றி தெரிவிக்கவும்…

 4. 10:19 பிப இல் ஜூலை 25, 2012

  அன்பின் ராஜா, தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்! வருகைக்கும் பின்னூடத்திற்கும் நன்றி! மகாபாரதம் மற்றும் அதனைச் சுற்றிய தகவல்கள் பெரும்பாலும் கூகிள், என்னுடைய முதுநிலை படிப்பில் நான் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் கிடைத்த தகவல்கள், அந்த தூண்டுதல் ஏற்படுத்திய தேடலில் கிடைத்த தகவல்களே இந்தப் பதிவிற்குக் காரணம்! இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியில் கடைசியில் அந்த இணைப்புகளைக் கொடுத்திருப்பேன் பாருங்கள்!

 1. 6:21 முப இல் ஓகஸ்ட் 25, 2009

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: