இல்லம் > சீரியஸ், மொக்கை > இது ஆண்களின் உலகம்….

இது ஆண்களின் உலகம்….

முன்குறிப்பு: இது சீரியஸா இல்லை மொக்கையா என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. மொக்கையாக எழுத ஆரம்பித்து நடுவில் ஒரு புண்ணியவான் உண்மையத்தாண்டா சொல்ற? இதை ஏன் மொக்கைன்னு சொல்றன்னு கேள்வி கேட்டதாலேயே என்னுள் ஒரு தடுமாற்றம்! ஆகையால் முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்….

இந்த பதிவு, இதையும் யாராவது ஒருவர் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதப்பட்டது. இது பெண்கள் புரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக மட்டுமே…

எங்களைப் பற்றி நாங்களே சொல்லுகிறோம்….எங்களையும் புரிந்து கொள்ளங்கள்!!!!

நாங்கள் ஆண்கள்……

நாங்கள், பெண்களின் உலகத்தை புரிந்து கொள்வதிலேயே வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர்கள். பல சமயங்களில் அவர்களின் புரிந்துணர்வையும், அணுகுமுறையையும் தெரிந்து கொள்வதற்குள் பல விஜய் படங்கள், சிம்பு படங்கள், விஷால் படங்களை ஒன்றாகப் பார்த்த அனுபவத்தைப் பெறுகின்றோம். பல சமயங்களில் அவர்களை புரிந்து கொள்ளும் அவசரத்திலும், அவசியத்திலும் எங்களைப் பற்றியே நாங்கள் அறிந்துகொள்ளாமல் போய் விடுகிறோம்….

 • உங்கள் மனதில் இருப்பதை எல்லா ஆண்களாலும் அப்படியே புரிந்து கொள்ள முடியாது! நீங்களாகச் சொல்லும் வரை…
 • நாங்கள் என்ன ஆச்சு என்று கேட்டு, நீங்கள் ஒன்றுமில்லை என்று சொன்னால், நாங்கள் ஒன்றுமில்லை என்றுதான் நினைப்போம்…
 • நீங்கள் குண்டாக இருப்பது போன்று நீங்கள் கருதினால் ஒருவேளை அது உண்மையாகவே இருக்கலாம், திருப்பி, திருப்பி எங்களிடம் கேட்காதீர்கள்…
 • கல்யாணத்திற்கப்புறம் நாங்களும் பல விஷயங்களை இழக்கிறோம்
 • ஒரு பிரச்சனையை தீர்க்கும் எண்ணம் இருந்தால் மட்டுமே எங்களிடம் வாருங்கள்
 • உங்களுக்கு தலைவலி நீண்ட நாட்களுக்கு இருந்தால் டாக்டரைப் போய் பாருங்கள், கணவனையோ, பாய்ஃபிரண்டையோ குறை சொல்லாதீர்கள்
 • பெரும்பான்மையான கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்று பதிலளித்தாலே சந்தோஷமாக இருக்கும்
 • ஒரு விஷயம் இரு விதங்களில் புரிந்துக் கொள்ளப்படலாம் எனில், அதில் ஒரு விதம் உங்களை கோபமோ, சோகமோ படுத்துகிறது எனில், கண்டிப்பாக நாங்கள் இன்னொரு விதத்தில்தான் சொல்லியிருப்போம்
 • நாங்கள், 6 மாதத்திற்கு முன்பு சொன்ன எந்த ஒரு விஷயமும், வார்த்தைகளும் விவாதத்தின் போது ஒத்துக்கொள்ளப் பட மாட்டாது!!! உண்மையில் எங்களது எல்லா கருத்துக்களுமே ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் (கடையில் வரும் ஆஃபர் போன்று!!!)
 • ஒன்று ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது நாங்கள் செய்த விதத்தை ஒத்துக் கொள்ளுங்கள்… மிக நல்லது என்னவென்றால், உங்களால் அந்த விஷயத்தை மிகச் சிறப்பாக செய்ய முடியும் என்றால் தயவு செய்து நீங்களே செய்து விடுங்கள்….
 • அழுகை என்பது பெரும்பாலும் ப்ளாக்மெயிலே…
 • கிரிக்கெட் மேட்சுகளின் போது ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், விளம்பர இடைவேளையின் போது தாராளமாக சொல்லுங்கள்… ஆஃப்டர் ஆல் ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள்தான்…
 • பெண்களுக்கென்றே இருக்கும் பிரத்யோகமான சில விஷயங்களை நாங்கள் விரும்பி கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஆண்களுக்கென்ற பிரத்யோகமான விஷயங்களை நீங்களும் விரும்பிக் கேளுங்கள்…
 • அவசரமாக ஒரு இடத்திற்கு போக வேண்டும் எனில், நீங்கள் எதை அணிந்து வந்தாலும் நன்றாகவே இருக்கும்,சத்தியமாக…… நீங்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம்
 • ஒரு விஷயம் வேண்டுமென்றால் நேரடியாகச் கேளுங்கள்….நுண்ணிய, மறைமுக, ஏன் நேரடி குறிப்புகளைக் கூட சில சமயம் நாங்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம்
 • நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் தோழிகளை சந்திப்பதால், உங்களுக்குள் ப்ரைவசி வேண்டும் என்பதற்காகவே நாங்கள் உங்களுடன் வர மறுக்கிறோம்…
 • காதலிக்கும் போது உங்களுக்காக அதிகம் செலவு செய்கிறோம் என்பதற்காக நாங்கள் பணம் படைத்தவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல….. அப்போது எங்களுக்கு பணம் ஒரு பொருட்டாகத் தெரியாது!
 • கல்யாணமான முதல் ஒரு வருடத்தைப் போன்றே வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்…..பிறந்த குழந்தையை எல்லாரும் கொஞ்ச மட்டுமே செய்வார்கள். நாட்கள் ஆக ஆக மட்டுமே, திட்டுவார்கள், சண்டை போடுவார்கள், கேள்வி கேட்பார்கள், முக்கியமாக, ஏதாவது வேண்டுமென்று கேட்டால் அது தேவையா என்று யோசிப்பார்கள்…
 • மாமியாருக்கும், மருமகளுக்குமிடையே சண்டை என்றால், அதை கணவனைத் தீர்த்து வைக்கச் சொல்லாதீர்கள். தீர்ப்புகள் ஒருவருக்கு சார்ந்தும், இன்னொருவருக்கும் எதிராகவும் மட்டுமே இருக்கும்….
 • பரிசாக நாங்கள் தரும் புடவையோ, பொருளோ  சுமாராகவோ, விலை குறைந்ததாகவோ இருந்தால், எங்கள் அன்பு குறைவானது என்று அர்த்தம் அல்ல
 • சில சமயங்களில் உங்களது செய்கைகளையோ, பேச்சுகளையோ புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம் அவை உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாததாக இருக்கலாம்

பி.கு:

வேற யாராவது ஏதாவது சேத்த விரும்பறீங்களா???

அப்படியே இது சீரியஸா இல்லை மொக்கையான்னும் சொல்லுங்க…..

Advertisements
பிரிவுகள்:சீரியஸ், மொக்கை குறிச்சொற்கள்:, ,
 1. Rajesh
  7:44 முப இல் ஜூன் 11, 2009

  anaithum unmai.. arumai..

 2. 8:05 முப இல் ஜூன் 11, 2009

  இந்தப் பதிவு ”பெண்கள் புரிந்து கொள்ள்வதற்காக” என்று எழுதியிருக்கிறீர்கள்.
  மனைவி புரிந்து கொள்வதற்காக என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்தானே?

 3. sam
  8:59 முப இல் ஜூன் 11, 2009

  very nice.i accept it.

 4. 10:24 முப இல் ஜூன் 11, 2009

  வருகைக்கு நன்றி சாம், ராஜேஷ்!!!

 5. 10:36 முப இல் ஜூன் 11, 2009

  லதானந்த், கருத்துக்கு நன்றி!!!

 6. 11:56 முப இல் ஜூன் 11, 2009

  ரொம்ப யோசிட்சுருக்கீங்க போல நரேஷ்.
  வாழ்த்துக்கள். இது ஒரு ரசனையான பதிவு

 7. hidha
  5:51 பிப இல் ஜூன் 11, 2009

  Superb 😉

 8. Joe
  7:32 பிப இல் ஜூன் 11, 2009

  அருமையான பதிவு.
  இன்னும் பல கருத்துகளை சேர்த்துக் கொண்டே போகலாம், ஆனாலும் அவர்கள் படிக்கப் போவதில்லை, படித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதால்…. 😉

 9. 8:10 பிப இல் ஜூன் 11, 2009

  மிகவும் நன்றாக யோசித்து இருக்கிறீர்கள். கருத்துக்கள் யதார்த்தமானவை. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

 10. Raam
  1:22 முப இல் ஜூன் 12, 2009

  IMHO Ithu Mokkai than.

  More of ramblings than understanding. This is written asif this is what most men thinks. I don’t think you can make such a confirmed statement. 🙂 I tend to agree with “lathanath” that this seems to be keeping someone/some argument in mind.

 11. 7:19 முப இல் ஜூன் 12, 2009

  நன்றி அடலேறு, ஹிதா, ஜோ, ராம்…

 12. 7:22 முப இல் ஜூன் 12, 2009

  மேக்ஸிமம் இநதியா, நான்லாம் தியரியைப் படிச்சுட்டு எக்ஸாம் எழுதியிருக்கேன்…

  நீங்க ரிசர்ச்சே பண்ணியிருப்பீங்களே???

 13. 7:23 முப இல் ஜூன் 12, 2009

  ராம், லூசுல உடுங்க, பப்ளிக்ல எல்லாத்தையும் வெளிப்படையா பேச முடியாது… :)))

  வருகைக்கு நன்றி!!!

 14. வதாஷ்
  4:51 முப இல் ஜூலை 28, 2009

  ”இன்னும் பல கருத்துகளை சேர்த்துக் கொண்டே போகலாம், ஆனாலும் அவர்கள் படிக்கப் போவதில்லை, படித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதால்…. ;-)”

  ஜோ சொன்னது சரிதான்!

  பெண்கள் படிக்க வேண்டிய பதிவும் கூட.
  ஆண்கள் பலரது மனம் இப்பதிவுக்கு ஒத்துபோகுமானால்,
  உண்மை அதுதான். எல்லா ஆண்களுக்கு உள்ள பிரச்சினை இது போல

  உண்மையான அன்பிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அதிகம்!
  ஆனால், சாதாரண அன்பை கூட புரிந்துகொள்ள மாட்டார்கள்!

 15. 9:43 முப இல் ஜூலை 28, 2009

  வாங்க வதாஷ்!!!

  ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பீங்க போல!!!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

 16. KUMAR
  11:36 முப இல் ஜூலை 31, 2009

  wov,wonderful………….

 17. thangal
  2:42 முப இல் ஓகஸ்ட் 25, 2009

  ரொம்ப யோசிட்சுருக்கீங்க,ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பீங்க போல, நீங்க சொன்னது சரிதான்!

  ” இது சீரியஷ் “

 18. 8:02 முப இல் ஓகஸ்ட் 25, 2009

  நன்றி thangal!!!

  //ரொம்ப பாதிக்கப் பட்டிருப்பீங்க போல, நீங்க சொன்னது சரிதான்!//

  அட நீங்க வேற, இறப்பின் கொடுமையை அனுபவிக்க இறந்து பார்த்திருக்க வேண்டுமா என்ன???

  குழந்தையின் சிரிப்பை ரசிக்க குழந்தையைப் பெற்றிருக்க வேண்டுமா என்ன????

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: