இல்லம் > சினிமா > தோரணை – ஒரு சிறிய திரைப்பார்வை

தோரணை – ஒரு சிறிய திரைப்பார்வை

மச்சான் படத்துக்கு போனியே, எப்டிடா இருந்துது?……………. டேய், அதுக்கு ஏண்டா இப்புடி மொறைக்கிற?

ஓடியே போயிடு, நான் எங்க படத்துக்கு போனேன்???

இல்லடா, தோரணை போனியே அதான் கேட்டேன்

அது தோரணை இல்லைடா, ரோதணை…

டேய் விளையாடாம சொல்லுடா!!!

சத்தியமாதாண்டா சொல்றேன், அதெல்லாம் படம் இல்லை, பாடம்!!!

அவ்ளோ மோசமாவா இருந்துது???

தெரியலைடா, நான்தான் இண்டெர்வல்லியே வந்துட்டேனே …

ஏண்டா?

இல்லை!, முன்னமே வந்திருப்பேன், பைக்கை 4 வது ரோவுல, செண்டர்ல வுட்டுட்டேன், எடுக்க முடியலை, அதான் முன்னாடியே வர முடியலை!

அப்புறம், இண்டர்வல்ல மட்டும் எப்டி எடுத்த?

அதான் எல்லாருமே வண்டியை எடுத்துட்டு வூட்டுக்குப் போயிட்டாங்கள்ல, அதுக்கப்புறம் என் வண்டியை எடுக்க முடியாதா???

பி.கு.

முன்னனாச்சும் பரவாயில்லை, இந்த ஹீரோயினுங்க மட்டும்தான் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வரணும்னா ரொம்ப வெக்கப்படுவாங்க, இப்ப இந்த சிக்ஸ் பேக்னு ஒன்னு வந்ததுல இருந்து இந்த கதாநாயகர்கள் கூட ஆவூண்ணா சட்டையை கழட்டி உடம்பை காமிச்சிர்ரானுங்க….

இதுல ஆனா ஊனான்னா பஞ்ச் டயலாக் பேசிடுறாங்க… பிச்சைக்காரங்ககிட்ட ரெண்டு ரூவா கொடுத்தா கூட மவராசனா இருப்பான்னு ஆசீர்வாதம் பண்னுவாங்க, இங்க என்னான்னா நான் காசு கொடுத்து, அவனுக்கு அவனே பில்டப் கொடுத்துக்கறதை பாக்க வேண்டியதாயிருக்கு….நாட்டுல இந்த கதாநாயகர்கள் தொந்தரவு தாங்க முடியலைப்பா!!!

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:
 1. seenu
  10:24 முப இல் ஜூன் 2, 2009

  நல்லா சொன்னீங்க இந்த பசங்க தொல்லைக்கு பயந்து பாதி பேர் தியேட்டர் போரதய
  விட்டுட்டானுங்க எப்ப இந்த தமிழ் சினிமா மாறும் தெரியல

 2. 10:38 முப இல் ஜூன் 2, 2009

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

 3. sathees kannan
  5:28 பிப இல் ஜூன் 2, 2009

  \\ அதான் எல்லாருமே வண்டியை எடுத்துட்டு வூட்டுக்குப் போயிட்டாங்கள்ல, \\

  திரைப்பார்வையை ரசித்தேன்

 4. 8:34 பிப இல் ஜூன் 2, 2009

  என்ன நரேஷ்!

  தோரணை படமெல்லாம் தியேட்டருக்கு போய் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? உங்கள் மனத் திடம் வாழ்க!

  🙂

 5. 10:43 பிப இல் ஜூன் 2, 2009

  நன்றி சதீஷ் கண்ணன்…

 6. 10:45 பிப இல் ஜூன் 2, 2009

  //ன்ன நரேஷ்!

  தோரணை படமெல்லாம் தியேட்டருக்கு போய் பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? உங்கள் மனத் திடம் வாழ்க!//

  எல்லாத்துக்கும் காரணம் ஒரு மாலை நேரத்து கடுப்புதான்…..

  நீ எதை வேணா போடுடா, நான் பாக்குறேன்னுதான் போய் உக்காந்தேன், ஆனா என்னையே சாச்சுப்புட்டாங்களே!!!!

 7. Mageshwaran S
  1:30 முப இல் ஜூன் 4, 2009

  விதி வலியது!!!

 8. Mageshwaran S
  2:00 முப இல் ஜூன் 4, 2009

  –இங்க என்னான்னா நான் காசு கொடுத்து, அவனுக்கு அவனே பில்டப் கொடுத்துக்கறதை பாக்க வேண்டியதாயிருக்கு…

  🙂

 9. மகேஷ்வரன் S
  2:02 முப இல் ஜூன் 4, 2009

  ஸ்ரேயாவின் பாத்திர படைப்பை பற்றி தங்களது பதிவில் ஒன்றும் இல்லையே?.

 10. 9:29 முப இல் ஜூன் 4, 2009

  ஸ்ரேயா தானே!!!

  சும்மா சொல்லக் கூடாது, அவங்க அப்பா அம்மா, நல்லாவே படைச்சிருக்காங்க…

  ஹ்ம்ம்ம்ம்ம் (பெரு மூச்சு)

  ஆனா, சமயத்துல குழந்தையாவே மாறிடுறாங்க. ட்ரெஸ்ஸை போட மாட்டேன்னு தூக்கிப்போட்டுறதும், பாசமா கட்டி புடிச்சுக்கறதும்னு குழந்தையாவே ஆயிடுறாங்கப்பா….

 11. 12:46 முப இல் ஜூன் 11, 2009

  நன்றி

 12. 4:44 முப இல் ஜூன் 11, 2009

  எனக்கு ஏங்க நன்றி சொல்றீங்க சூர்யா???

  ஒருவேளை படம் பாக்கலம்னு யோசிட்டிருந்தப்ப, இந்த விமர்சனம்(?) உங்க முடிவை மாத்தி உங்களை காப்பாத்தி உட்டிருச்சோ….

 13. 6:04 முப இல் ஜூன் 11, 2009

  தோரனை செம ரோதனையா?

 14. 10:44 முப இல் ஜூன் 11, 2009

  முடிவை மாத்தி உங்களை காப்பாத்தி உட்டிருச்சோ//// அதே. அதெ… ஆயிரம் நன்றிகள்.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: