இல்லம் > இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி > இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி!!!

என்னடா, வாரக் கடைசில குவார்ட்டர் அடிக்கப் போகாம விஜய் படம் பாத்துட்டு வந்த மாதிரி ‘திரு’ ‘திரு’ ன்னு முழிச்சிட்டிருக்க?

டேய், வவுத்தெரிச்சலை கிளப்பாத, ஏற்கனவே குவார்ட்டர் அடிச்சிட்டுதான் வந்தேன்!

அப்புறம் ஏண்டா இப்படி உக்காந்துட்டிருக்க?

இல்லடா, ரொம்ப நாளாச்சேன்னு கொஞ்சம் நியூஸ்லாம் படிச்சேன்னா, ஒரேடியா குழம்பிட்டேன், அதான்…

அப்படி என்னாத்தைடா படிச்சு குழம்பிட்ட?

இல்லடா, கொஞ்ச நாளைக்கு முன்னால கலைஞர், யாரோ தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டதுனால, குட்டை மனப் பேராசை அப்படி இப்படின்னு என்னன்னமோ சொல்லி ஒரு கவிதை படிச்சாரு ஞாபகமிருக்கா?

ஆமா, அவரு யாரை திட்டுனாருன்னு யோசிச்சு குழம்பிட்டியாக்கும்?

அது யாரோவோவா இருந்துட்டுப் போகட்டும், என் சந்தேகம் அதைப் பத்தி இல்லை, என் சந்தேகம் என்னன்னா, ஒரு தொண்டனா இருக்கறவன், கட்சித் தலைவர் பதவிக்கு ஆசைப் படறது தப்பா என்ன? சரி அது அப்படியே தப்புன்னு வெச்சுகிட்டாலும், ஒரு முறை தலைவனாவனும்னு நினைக்கிறதே பேராசைன்னா, எப்பவும் தான் மட்டும் தலைவரா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை, இல்ல தனக்கப்புறம் தன் புள்ளைங்க மட்டும் தலைவனா இருக்கனும்னு நினைச்சா அது எவ்ளோ பெரிய பேராசை?…… ஏண்டா எதுவும் பேசமாட்டேங்குற?

அடியேய் உனக்கு சனி பக்கத்துல டபுள் காட் பெட் போட்டு படுத்துட்டு இருக்குடியேய்!!! எலக்சன் டைம்ல மக்கள் யோசிக்கவே கூடாது, அதுவும் இந்த மாதிரில்லாம் யோசிக்க அரம்பிச்சா, வீட்டுக்கு ஆட்டோதாண்டி!!!

ஏண்டா சந்தேகம் கேக்கறது தப்பா என்ன? சரி, சட்டக் கல்லூரி பிரச்சனையில, ஏண்டா போலீஸ் வேடிக்கை பாத்துட்டு இருந்தது, உள்ள போயி தடுத்துருக்கலாமேன்னு கேட்டா, அனுமதி இல்லாம போகக் கூடாதுன்னு சொன்னாங்க, ஆனா அதே கோர்ட்டுல, அனுமதி இல்லாமயே, 4000 பேரு உள்ள பூந்து போட்டு தாக்குனாங்க. இதுல காமெடி என்னான்னா, மும்பைல, தாஜ் ஹோட்டல்ல எல்லாம் தீவிரவாதிகள் பூந்து அட்டூழியம் பண்ணப்ப கூட, துணை ராணுவப்படை வந்ததுக்கு 6 மணி நேரம் பண்ணாங்கன்னு பிரச்சனை ஆச்சு, ஆனா இங்க, ஒரு மணிநேரத்துக்குள்ளியே, 4000 பேரை கொண்டு வந்துருக்காங்க அப்படின்னுல்லாம் வக்கீல் சொல்றாங்களே அப்படீன்னா இது திட்டமிட்ட தாக்குதலா இருக்கும்னு சொல்றாங்களே அதுக்கு என்ன பதில்?

ம்ம்ம், டேய், நம்ம அரசாங்கம் அவ்ளோ விரைவா செயல்படுதுன்னு அர்த்தம்டா! இதை ஏன் நீ இந்த மாதிரி பாக்க கூடாது. டேய், உன்பேரை பேரை பேசாம செந்தில்னு மாத்திக்கோ, செந்தில்தான் கவுண்டமணிகிட்ட இப்படில்லாம் சந்தேகம் கேட்டுகிட்டே இருப்பாரு………………….டேய் திடிர்னு ஏண்டா இப்படி யோசிக்கிற?

இல்ல மச்சி, நீ பேர்னு சொன்னவுடனே திடீர்னு எனக்கு ஒரு சந்தேகம்!,……. காந்தி யாரு?

என்னடா, டீக்கடையில பழைய பேப்பர் படிச்சவனாட்டம் கேக்கற?

டேய் கிண்டல் பண்ணாம சொல்டா?

காந்தி வந்து, நம்ம நாடு சுதந்திரம் அடையறதுக்கு, அஹிம்சை போராட்டத்தை எடுத்துச் சென்றதுல முக்கிய காரணமானவர். இதுல உனக்கு என்ன சந்தேகம்?

எனக்கு அவர் மேல எந்த சந்தேகமும் இல்ல, காந்தி சுதந்திரத்திற்காக பாடு பட்டது எனக்கும் தெரியும், ஆனா அதுக்காக ஒரு சிலர் அவரு பேரை பின்னாடி சேத்துகிட்டு பண்ற அழிச்சாட்டியம், பேசுற பேச்சு தாங்க முடியலைடா!

ஏண்டா, சந்திராசாமிக்கும், அரவிந்த்சாமிக்கும் சாமின்னு முடியுது. அதுக்காக ரெண்டு பேருக்கும் ஒரே கொள்கைன்னு அர்த்தமா? இதுல எல்லாம் இவ்ளோ டீப்பா யோசிக்க கூடாதுடா!

இல்லா மச்சான், இவங்க, பண்ணாத அழிச்சாட்டியம் எல்லாம் பண்ணிட்டு, ஒவ்வொரு முறையும் பேரு பின்னாடி காந்தின்னு வர்றப்ப சங்கடமா இருக்குடா, இவங்க எல்லா தப்பும் பண்ணட்டும், தயவு செஞ்சு அந்த பேருல இருந்து காந்தியை தூக்கிருங்கன்னு மனு கொடுக்கலாம்னு யோசிக்கிறேன். சரி இதுலதான் இந்தப் பிரச்சனைன்னா, ராஜீவை தப்பா பேசுனாவோ, சோனியாவை விமரிசனம் பண்ணாவோ, மன்மோகன் சிங்கை விமரிசனம் பண்ணாவோ தேசிய பாதுகப்பு சட்டதுல கலைஞர் உள்ள தூக்கி போட்டுறாரே, அதுக்கு பேசாம “கூட்டணி பாதுகாப்பு சட்டம்னு“ பேரு வைக்கலாம்ல, அதை ஏன் “தேசிய பாதுகாப்பு சட்டம்”னு சொல்லனும். தயவு செஞ்சு இது ரெண்டுக்கும் பேரு மாத்த சொல்லனும்டா!!!

நீ ரொம்ப ஓவரா பேசுற! இவ்ளோ பேசுறியே நீ ஏன் எலக்சன்ல நிக்கக் கூடாது?

இது கூட நல்ல ஐடியாதான், அதுக்கு என்னடா தகுதி வேணும்?

ஐய்யோ, அந்த கருமத்துக்கு தகுதியே வேணாண்டா! ரவுடி, கொலைகாரன், ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன், ஜெயிலுக்குப் போனவன், யாரு வேணா நிக்கலாம், சொல்லப் போனா அவங்கதான் நிக்கறாங்க!

டேய் சீரியசா சொல்லுடா…

டேய், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதிடா. இப்ப திமுகன்னா, உன் நெருங்கிய சொந்தக்காராங்கள்ல யாருக்காவது பேரு, அழகிரி, கனிமொழி, ஸ்டாலின்னு இருக்கனும். அதிமுகன்னா, நவகிரகத்தை சுத்தி வர்ற மாதிரி சுத்தி வந்து அம்மா கால்ல உழுவணும், இப்படி பல இருக்குடா!!!

சரி காங்கிரஸ் சார்பா நிக்கனும்னா?

ம்க்கும்ம், அதுக்கு நீ நிக்காமயே இருக்கலாம்!

இல்லடா, திமுக பாட்டுக்கு, 16 தொகுதின்னு அள்ளி வழங்கிடுச்சி, தொகுதிக்கு ஒரு வேட்பாளர்னு வெச்சுகிட்டா கூட, மொத்தம் 16 பேரு வேணுமே, அவ்ளோ பேரு அந்தக் கட்சில இருக்காங்களா என்ன?—————-என்னடா பதில் சொல்லாம அப்படி பாக்கற?

டேய் என் வாழ்க்கைல நான் தண்ணியே அடிச்சதில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் உன்கிட்ட பேசுனா, என்னையே தண்ணி அடிக்க வெச்சிருவ போலிருக்கு! என்னை உட்டுடு!

சரி கடைசியா ஒரு கேள்வி இருக்கு பதில் சொல்லு, எலக்சன்ல யாருக்கு ஓட்டுப் போடறது?

ம்ம்ம்ம், முதல்ல குருவி படம் நல்லாயிருந்துதா இல்லை வில்லு படம் நல்லாயிருந்துதான்னு சொல்லு, அப்புறம் அதுக்கு பதில் சொல்லுறேன்!!!

 1. 2:42 பிப இல் ஏப்ரல் 14, 2009

  உங்க ரவுசு கூட தாங்க முடியல சாமி!

  செந்தில் கவுண்டமணிக்கிட்டே கேள்வி கேட்டு அடி வாங்கினாலும் கூட அந்த கேள்விகளில் அசாதாரண அர்த்தங்கள் உள்ளே புதைந்திருக்கும். அதே போல இங்கேயும் கேள்விகள் வெளிப்பார்வைக்கு அப்பாவித் தனமாக தோன்றினாலும் உள்பொருள் அபாரம்.

  சூப்பரா எழுதிரிங்க நரேஷ்! இந்தாங்க புடிங்க! டபுள் வாழ்த்துக்கள!

 2. 7:38 பிப இல் ஏப்ரல் 14, 2009

  //சரி கடைசியா ஒரு கேள்வி இருக்கு பதில் சொல்லு, எலக்சன்ல யாருக்கு ஓட்டுப் போடறது?

  ம்ம்ம்ம், முதல்ல குருவி படம் நல்லாயிருந்துதா இல்லை வில்லு படம் நல்லாயிருந்துதான்னு சொல்லு, அப்புறம் அதுக்கு பதில் சொல்லுறேன்!!!//

  🙂
  நல்லா இருக்கு!

 3. 11:05 பிப இல் ஏப்ரல் 14, 2009

  //உங்க ரவுசு கூட தாங்க முடியல சாமி!

  செந்தில் கவுண்டமணிக்கிட்டே கேள்வி கேட்டு அடி வாங்கினாலும் கூட அந்த கேள்விகளில் அசாதாரண அர்த்தங்கள் உள்ளே புதைந்திருக்கும். அதே போல இங்கேயும் கேள்விகள் வெளிப்பார்வைக்கு அப்பாவித் தனமாக தோன்றினாலும் உள்பொருள் அபாரம்.

  சூப்பரா எழுதிரிங்க நரேஷ்! இந்தாங்க புடிங்க! டபுள் வாழ்த்துக்கள//

  நன்றிகள் மேக்ஸிமம் இந்தியா!!!

 4. 11:07 பிப இல் ஏப்ரல் 14, 2009

  //நல்லா இருக்கு!//

  தல, நம்ம கடைக்கு வந்திருக்கீங்க, நன்றி!!!

 5. 12:05 முப இல் ஏப்ரல் 15, 2009

  “16 தொகுதின்னு அள்ளி வழங்கிடுச்சி, தொகுதிக்கு ஒரு வேட்பாளர்னு வெச்சுகிட்டா கூட, மொத்தம் 16 பேரு வேணுமே, அவ்ளோ பேரு அந்தக் கட்சில இருக்காங்களா என்ன?”

  I like very much above line really nice
  :-))))))))

 6. 10:27 பிப இல் ஏப்ரல் 15, 2009

  //ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன்,//
  சூப்பருப்பு….
  அப்படியே 3 பொண்டாட்டி, 5, 6 புள்ளைகங்கன்னு போடுங்க… ஆனா அந்த பக்கம் எல்லாம் போயிடாதீங்க.

 7. 8:17 பிப இல் ஏப்ரல் 16, 2009

  kuruvi Vs villu…………… ‘kelappureenga!!

 8. 9:35 முப இல் ஏப்ரல் 17, 2009

  வருகைக்கு நன்றி புதுவை சிவா, நவநீதன், காற்றின்!!!

 9. 9:39 முப இல் ஏப்ரல் 21, 2009

  இம்புட்டு சந்தேகமா உங்களுக்கு? தாங்க முடியலடா சாமி !! அப்பறம்… ஆட்டோவெல்லாம் அந்தக் காலம், இப்பல்லாம் ஸ்கார்பியோ, சுமோதான்… எவண்டாவன்?னு கேட்டு வாயை மூடறதுக்குள்ள வீட்டு வாசலுக்கு வந்து நின்னுடும்… பாத்து சூதானமா இருந்துக்கப்பூ !!

 10. 7:54 பிப இல் மே 21, 2009

  //ஐய்யோ, அந்த கருமத்துக்கு தகுதியே வேணாண்டா! ரவுடி, கொலைகாரன், ரெண்டு பொண்டாட்டி கட்டுனவன், ஜெயிலுக்குப் போனவன், யாரு வேணா நிக்கலாம், சொல்லப் போனா அவங்கதான் நிக்கறாங்க!//

  அப்போ எனக்கும் அந்த தகுதி இல்ல!
  ஜஸ்ட்ல மிஸ் பண்ணிட்டேன்!

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: