இல்லம் > அரசியல் > எல்லோரும் சுயநலப் பேய்கள்தான்…

எல்லோரும் சுயநலப் பேய்கள்தான்…

ஆரம்பித்து விட்டது தேர்தல் கூத்துகள். யார் கேவலமாக நடந்து கொள்வது என்று கட்சிகளுக்குள் கடும் போராட்டம் நடைபெறுகிறது. எததனை காலமானாலும் நாங்கள் மாறப் போவதில்லை என்று ஆரம்பத்திலேயே தங்களது முகத்தை பாஜக ‘வருண் காந்தி மூலம் வெளிப்படுத்தியது. அதை விடக் கொடுமை, ஜெயிலுக்குள் சென்று பார்த்து விட்டு வந்த மேனகா காந்தி ‘தன் மகன் மிகுந்த தைரியசாலி, அவனை நினைத்து பெருமைப் படுகிறேன் என்று கூறியது!

 

ஒரு காலத்தில் மிருகங்களின் முறையான வாழ்விற்கு கடுமையாகப் போராடியதற்காக நன்மதிப்பைப் பெற்ற இவர், மிருகங்களுக்கான அன்பைக் கூட மனிதர்களிடத்தில் செலுத்த மறுப்பதேனோ? மக்கள் வருண்காந்தியின் பேச்சை ஒத்துக் கொண்டார்களோ இல்லையோ, தாங்கள் நினைத்த புகழ் கிடைத்த திருப்தி பாஜகவிற்கு.

 

இந்தியாவின் மிகப் பெரிய முதியோர் இல்லமாக பாராளுமன்றம் காட்சி அளிக்கின்றது. என் நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர், என் மாநிலத்தின் முதல்வர் என அனைவருமே மருத்துவமனையில் இருந்து வந்த காட்சிகளையெல்லாம் மக்கள் காண வேண்டி வந்தது

 

மத்தியில் நடப்பதை விட, தமிழ் நாட்டில் நடக்கும் கூத்துகள்தான் மிகக் கொடுமை. தமிழகத்தில் வரலாற்றில் எங்கும் கண்டிராத படி, அத்தனை கட்சிகளும் ஈழ மக்களுக்காக அனுதாபம் காட்டினாலும், அங்கு போர், ஏன் முற்றுப் பெற வில்லை என்ற மர்மம் மக்கள் மனதை விட்டு நீங்கவே இல்லை.

 

நேற்றுவரை காங்கிரசுடன் கூட்டணி அமைத்த பாமக இன்று அதிமுகவுடன், ஒருவருடன் ஒருவர் கை கலப்பு வரை சென்ற விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசும் ஒரே கூட்டணி!. அணிதாவல், கொள்கை மாற்றம் என்று நம் அரசியல்வியாதிகளின் திறமையை கண்டு பச்சோந்திகள் கூட பொந்தை விட்டு வெளி வர மறுக்கின்றன. ஈழப் பிரச்சனையில் கலைஞர் ஏன், தன் எம்பிக்களையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்ல வில்லை என்று கேள்வி எழுப்பிய அதே பாமக, தனது மகனையும், அமைச்சர்களையும் பதவி விலகச் சொல்லாத அதே பாமக, இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் அவர்களை பதவி விலக வைத்திருக்கிறது. கேட்டால் கூட்டணி தர்மம் என்று வியாக்கியாணம் பேசுகிறது.

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிடும் காமெடியை திமுகவும், காங்கிரசும் அரங்கேற்றி வருகிறது. என்னதான் முதுகெலும்பு ஆபரேசன் வெற்றி என்று மருத்துவர்கள் சொன்னாலும், செய்திகள் வந்தாலும், அப்படி ஒன்றும் வெற்றி இல்லை என்பதை ஈழத் தமிழர்களுக்காக திமுக என்றும் பாடுபடும், ஈழத்தில் அமைதி ஏற்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வார்த்தைகளின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் தமிழினத் தலைவர். இதன் அடுத்த கட்ட காமெடிதான், வியாழக்கிழமை (09.04.09) அன்று கட்சி பேதமின்றி பேரணி நடத்துகிறாராம். தவிர பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், உண்மைப் பிரதமர் சோனியாவுக்கும், ஈழப் பிரச்சனை சார்பாக தந்தி கொடுத்திருக்காராம்.

 

இந்த விஷயத்தில் மட்டும் மிகச் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறார் தலைவர். இன்னமும் கிராமங்களில், எழவு செய்தியைச் சொல்ல தந்தி முறையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கையில், இப்போது தந்தி அடித்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறார். என்ன ஒரே குழப்பம் என்றால், பிரதமர்களை நடவடிக்கை எடுக்கச் சொல்லுகிறாரா, அல்லது எல்லாவற்றையும் முடித்து விட்டு எழவுக்கு வந்து சேருங்கள் என்று அழைக்கிறாரா என்றுதான் புரியவில்லை. அதற்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டு, தலைவர்தான் மிகப் பெரிய தியாகி, அவரளவு இந்த விஷயத்தில் ஒழுக்கம் வேறு யாரும் கிடையாது என்று புள்ளி விவரம் பேசும் அறிவுஜீவிகளைப் பார்க்கும் போது, படிப்பறிவுக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் கிடையாது என்ற உண்மையே மனதில் நிற்கிறது

 

தனது கட்சிக்கு, இந்திய நாட்டிலிருந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க திராணியில்லாத காங்கிரசின் கையில் அடுத்த 5 வருடங்கள் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமாய் இருக்கிறது. இலங்கையில் எம்மக்களை அழிப்பதோடில்லாமல், இந்திய நாட்டையும் தூக்கி தீவிரவாதிகளிடமும், அமெரிக்காவிடமும் அடகு வைத்து விடுவார்களோ என்ற அளவிலேயே ஆட்சி இருக்கிறது. தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கும், பொடாவிற்கும் உள்ள வித்தியாசம்தான் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இருக்கிற வித்தியாசம்

 

இவர்கள் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுவார்கள் என் நாட்டு மக்கள். சுரணை என்றால் விலை எவ்வளவு என்று கேட்பார்கள். சீக்கியர்கள் தனது தலைப்பாகைக்கு கொடுக்கும் மரியாதையை, எம்மக்கள் தனது சகோதரர்களின் தலைகளுக்கு கொடுப்பதில்லை. இவர்களுக்கு தன்மானத்தை போதிக்க கூட, அதே சீக்கியர்கள் மத்தியில் இருந்து ஒருவர் ஷூவை வீச வேண்டி இருக்கிறது.

 

யாருக்காவது அடிமையாய் இருப்பது என்றால் அவர்களுக்கு கொள்ளை விருப்பம். குவார்ட்டரும், கொஞ்சம் காசும் போதும், ஒரு சிலருக்கு, யாருக்கு ஓட்டு போடுவது என்று தீர்மானிக்க. அரசு அலுவலர்களுக்கோ, ஒழுங்காய் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தாமல், கேட்கும் போனசை கொடுக்கும் கலைஞருக்குத்தான் அவர்களது நிரந்த ஓட்டு. சில கிருத்துவ அமைப்புகளுக்கோ, மதமாரற்ற தடைச் சட்டத்தை கொண்டு வராமல் இருப்பவர்களுக்கே ஓட்டு. நடுத்தர மக்களோ, டிவிக்கு அடுத்து டிவிடி பிளேயர் கொடுத்தால் ஓட்டுப் போட ரெடியாகி விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் எல்லாரும் சுயநலப் பிசாசுகளாய் இருப்பதில் கூச்சமே அடைவதில்லை.

 

பிச்சைக்காரனிடம், பத்து ரூபாய் கொடுத்தாலே நடு ரோட்டில் பல்டி அடிப்பான். அதற்கு அடுத்தக் கட்டதிலிருப்பவனுக்கு, நூறு ரூபாய் கொடுத்தால் போதும். நடுத்தரவாசிக்கு, ஆயிரம் கொடுத்தால் போதும், அரசியல்வாதிக்கு, அவரது தலைவர் விருப்பம் என்றால் போது. ஆக மொத்தத்தில் ஈனத்தனத்தை செய்ய எல்லாருமே தயாராக இருக்கிறோம், என்ன, அதற்கான விலைதான் ஆளைப் பொறுத்து மாறுகிறது.

பிரிவுகள்:அரசியல் குறிச்சொற்கள்:,
 1. 8:08 முப இல் ஏப்ரல் 9, 2009

  சத்தியமான உண்மை. எல்லோருமே சுயநலவாதிகள் தான் 😦

 2. 12:10 பிப இல் ஏப்ரல் 9, 2009

  வருகைக்கு நன்றி பிரேம்!!!

 3. velavan
  12:57 பிப இல் ஏப்ரல் 9, 2009

  there you are.

 4. 12:59 பிப இல் ஏப்ரல் 9, 2009

  //there you are.//

  புரியலையே!!!

 5. bapaji
  2:27 பிப இல் ஏப்ரல் 9, 2009

  எல்லோரும் சுயநல பேய்கள்
  http://www.bapaji.wordpress.com

 6. 2:50 பிப இல் ஏப்ரல் 9, 2009

  வருகைக்கு நன்றி, பபாஜி! (அதென்னங்க இப்படி ஒரு பேரு?)

 7. Raja
  6:32 பிப இல் மே 22, 2009

  “என்னதான் முதுகெலும்பு ஆபரேசன் வெற்றி என்று மருத்துவர்கள் சொன்னாலும், செய்திகள் வந்தாலும், அப்படி ஒன்றும் வெற்றி இல்லை என்பதை ‘ஈழத் தமிழர்களுக்காக திமுக என்றும் பாடுபடும்’, ‘ஈழத்தில் அமைதி ஏற்பட பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற வார்த்தைகளின் மூலம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் தமிழினத் தலைவர்.” – Well said, Is it this, people used to comment “Muthukelumbu illathavan”

  “டிவிக்கு அடுத்து டிவிடி பிளேயர் கொடுத்தால் ஓட்டுப் போட ரெடியாகி விடுகிறார்கள்.” – People should realise, what the politicians are earning back by investing money – Amount or TV or what ever…

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: