இல்லம் > சாதனை > நேனோ – ஒரு சரித்திரத்தின் வரலாறு

நேனோ – ஒரு சரித்திரத்தின் வரலாறு

சங்கடங்களையும், தடைகளையும், பெரும்பாலும் குறை கூறியவர்களையே கண்டு வந்த அந்த பயணம், தனது வெற்றியினை மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறது. ஆம், மார்ச், 23,2009, திங்கட்கிழமை, பல தடைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட நேனோ, வெற்றிகரமாக சந்தைக்கு கொண்டுவரப்பட்டது.

உலகின் மிக குறைந்த விலையுடைய கார், தனி மனித போக்குவரத்தை பெரிதும் மாற்றியமைகக் கூடிய சக்தி கொண்டது, மக்களுக்கான கார் என்ற அடைமொழி போன்ற பல விஷயங்களுக்கு சொந்தமான நேனோ இன்று முதல் ஷோரூம்களில் காணப்பெறும்.

வழக்கமாக, இது போன்ற தொழில்நுட்ப சாதனைகளை படைத்த பல விஷயங்கள், எதிர்கொண்டிருந்த தடைகள் பல இருந்தாலும், நேனோ எதிர் கொண்ட தடைகள் மிக அதிகம் என்றே சொல்லலாம், ஏனெனில் மற்ற பொருட்கள் வெறுமனே தொழில்நுட்ப விஷயங்களிலேயே தடைகளை எதிர்கொண்டிருக்கும், ஆனா நேனோவோ, எந்தளவு தொழில்நுட்ப அரங்கில் சவால் கண்டதோ அதே அளவு அரசியல் அரங்கிலும் சவால்களை எதிர் கொண்டது (முந்தையது மனிதனின் அறிவு சார் விஷயமாக இருந்தது, பிந்தையது அறியாமை சார் விஷயமாக இருந்தது).

திங்கட் கிழமை சந்தைக்கு வந்தாலும், நேனோவுக்கான பதிவுகள் ஏப்ரல் 9 ல் ஆரம்பித்து, ஏப்ரல் 25 வரை தொடரும். பதிவுகள் செய்வதற்கான வசதி, சுமார் 1000 நகரங்களில் உள்ள 30,000 இடங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் அஃப் இந்தியா, நேனோவுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கியாக செய்ல்படும். நேனோவுக்கான பதிவு செய்ய, செலுத்த வேண்டிய தொகை வெறுமனே 2,999 ரூபாய் மட்டுமே. மீதித் தொகை, லோன் மூலம் கட்டினால் போதும்.

இது தவிர, முதல் ஒரு லட்சம் வாடிக்கயாளருக்கான, காரின் விலை இன்னும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

முதல் கட்ட கார்கள், டாட்டாவின், பாண்ட்நகர் ஆலையிலிருந்தும், புனே ஆலையிலிருந்தும் தருவிக்கப் பட்டாலும், அடுத்த கட்ட கார்கள் அனைத்தும், சிங்கூரிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்ட சாணந்த் ஆலையிலிருந்து தருவிக்கப் படும். சாணந்த் ஆலை, வருடத்திற்கு 2.50 லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டதாகவும், பின் கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் செய்யப்படும்.

நேனோ, மூன்று வெர்ஷன்களில் (இதுக்கு தமிழில் என்னப்பா?) கிடைக்கப் பெறும். ஒன்று அடிப்படை மாடலாகவும், மற்ற இரண்டும் மேம்பட்ட வசதிகள் கொண்டதாகவும் (குளிர்சாதன வசதி, பவர் விண்டோஸ் போன்றவை) கொண்டதாகவும் இருக்கும்.

காரின் பாதுகாப்பு, எமிஷன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலவிதமான சர்ச்சைகள் எழும்பினாலும், நேனோ, பிஎஸ் II, III and IV விதிகளில் தேர்வாகியுள்ளதோடு, மற்ற கார்களோடு மற்றும் சில இரு சக்கர வாகனங்களை விட குறைந்தளவு புகையே வெளிவரும் என்று இதன் சிறப்பம்சமாக கூறுகின்றனர்.

மிகச் சிறிய காரினை விட 21% அதிக இடம் கொண்டதும், 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லக்கூடியதும், யமாஹாவின் ஆர்15 அளவே விலை கொண்டது என்ற பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது என்றாலும், காரை வெளியிடும் அன்று கூட டாட்டா சர்ச்சைக்குரிய சில கேள்விகளை சந்திக்க நேர்ந்தது. நேனோ ஒரு விலையை வைத்து ஏமாற்றும் ஒரு கருவியோ அல்லது தனது ஈகோ பயணத்தின் கருவியோ அல்ல என்று மறுக்க நேரிட்டது டாட்டாவிற்கு.

சொன்ன வாக்குறுதிகளை மறந்து விடுகின்ற அரசியல்வாதிகளையே சந்தித்து வந்த நாம், ஏறக்குறைய ஆறு வருடங்களுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாயில் விலை என்று குறிப்பிட்டாலும், பல்வேறு விலையேற்றங்களுக்கு மத்தியிலும், அரசியல் காய் நக்ர்த்தல்களுக்கு இடையிலும் அதே விலையில் விற்கப் படுகிறது என்றால் அதன் சாதனையை என்னவென்று சொல்வது.

இந்தியாவிற்கு சற்று எட்டாத தூரத்திலேயே இருந்த, கார் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை A promise is a promise” வார்த்தகளின் மூலம் சொந்தமாக்கியதோடு, அடித்தட்டு மக்களின் கனவினை நனவாக்க முயற்சித்துள்ள டாட்டாவிற்கும், அவரது குழுவிற்கும் நம்முடைய வாழ்த்துக்கள் பல தெரிவித்துக்கொள்வோம்…..

பி.கு.

இந்த சமயத்தில் நேனோவின் வெற்றிப் பயணத்தை, சந்தித்த சவால்கள், அடைந்த முன்னேற்றங்கள் கொண்ட மீள்பதிவு விரைவில்….

பிரிவுகள்:சாதனை குறிச்சொற்கள்:, ,
 1. வடுவூர் குமார்
  9:49 முப இல் மார்ச் 24, 2009

  இதன் பயன்பாட்டை பார்த்து தான் இதன் தகுதியை உறுதி செய்யமுடியும்,என்ன இருந்தாலும் சொன்ன சொல்லை காப்பாற்றியதற்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம் டாடா குழுமத்திற்கு.

 2. 10:42 முப இல் மார்ச் 24, 2009

  கார் படங்களை பார்த்தேன். 1 இலட்சமென்றாலும் பார்த்துப்பார்த்து அழகாக வடிவமைத்டதிருக்கிறார்கள். லக்சரி ஸ்டைல். விலை குறைவு. ஓடத்துவங்கிய பிறகே மிகுதி தெரியும்.
  ஆனாலும் இம்முயற்கிக்கு வாழ்த்துக்கள்

 3. 1:10 பிப இல் மார்ச் 24, 2009

  வருகைக்கு நன்றி, வடுவூர் குமார், சுபாஷ்!!!

  நேனோ ஒரு மில்லியன் மக்களைச் சென்றடையும் என்று டாட்டாவால் எதிர்பார்க்கப்படுகிறது.

  விற்பனை ரீதியாக நேனோ சாதனை படைக்கிறதோ இல்லையோ, தொழில்நுட்ப ரீதியில் இது கண்டிப்பாக ஒரு மைல்கல்தான்….

 4. 7:17 பிப இல் மார்ச் 24, 2009

  நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நரேஷ்.

  என் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.

  //கார் தயாரிப்பு தொழிற்நுட்பம் இத்தனை காலம் வெளிநாட்டினருக்கே சொந்தமாக கருதப் பட்டு வந்த நிலையில், உலகிற்கே இந்த புதிய வகை (குறைந்த விலை) காரை அறிமுகப் படுத்தி இந்தியாவை தலை நிமிர செய்த நானோ காரின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே வேளையில் இந்த பெருமையை நமெக்கெல்லாம் தந்த ரத்தன் டாட்டா அவர்களுக்கும் மற்றும் இந்த கனவை நனவாக்க உதவிய நம்மூர் தொழிற் நுட்ப வல்லுனர்களுக்கும் ஒரு நன்றி கலந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வோம். //

  மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 1. 6:41 முப இல் மார்ச் 26, 2009

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: