இல்லம் > இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி > இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

இவனுங்க காமெடி தாங்க முடியலடா சாமி….

டேய், வாரக்கடைசியும் அதுவுமா ஏண்டா இங்கிலீஸ் படம் போட்டு உயிரை வாங்குற, தயவு செஞ்சு எதாவது தமிழ் சேனல் வையேன்?

மச்சான், நீ சாதா நாள்லியே சும்மா தூங்க மாட்ட, இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற, வழக்கமா பண்ற மாதிரி குவார்ட்டர் அடிச்சிட்டு, கமுந்தடிச்சு தூங்க வேண்டியதுதானே, அதை விட்டுட்டு என் உயிரை ஏண்டா வாங்கற?

இல்லடா, நான் இனிமே தண்ணி அதிகம் அடிக்க வேண்டாம்னு இருக்கேன், அது மட்டுமில்ல இந்த சமுதாயத்தைப் பத்தியும் கொஞ்சம் கவலைப் படலாம்னு இருக்கேன்…

அய்யய்யோ, இது எப்பருந்து?

இன்னைல இருந்துதான், இன்னிக்குதான் நீ சொன்ன இந்த வலைப்பதிவு, குழுமத்துலலாம் போய் படிச்சி பாத்தேன், அதுல எத்தனை பேரு இந்த சமூகத்தைப் பத்தி கவலைப்பட்டு என்னென்னமோ பண்றாங்க, அதான் நானும் இப்படி…

டேய், நீ தண்ணி அடிக்கறதை நிறுத்தினது கூட பெரிய விஷயமில்லை, ஆனா சமூகத்தைப் பத்தி கவலைப் படறேன்னு சொன்ன பாத்தியா, அது போதுண்டா, இன்னிக்கு நீ எந்த சானல் சொல்றியோ அதையே நானும் பாக்குறேன். சொல்லு எதைப் போடுறது?

சரி, எதாவது காமெடி வையி…
……………
……………
…………….
என்னடா எல்லாத்துலியும் பாட்டு இல்லாட்டி சீரியலே ஓடுது?உருப்படியா ஒன்னுமே இல்லியா?

மிட்னைட் மசாலாவையும், மெகா சீரியலையும் ஒன்னா பாக்குறியா?

அது எப்படிடா முடியும்?

‘மானாட மயிலாட’ வைக்கிறேன், இல்லாட்டி இதே மாதிரி நிறைய புரோகிராம் இருக்கு, பாரு…

டேய் வேணாண்டா, வாரக்கடைசி, காமெடியா எதாவது பாக்கலாம்னா கடுப்பேத்துறானுங்க…

மச்சான், காமெடி பாக்கனும்னா, காமெடி சானலேதான் பாக்கனுமா? சன் நியுஸோ இல்ல ஜெயா நியுஸோ பாரு, அது சினிமா காமெடியை விட பயங்கரமா இருக்கும்.

உண்மையாவா?

செத்துபோன எங்க மேனேஜரோட தாத்தா மேல சத்தியமா சொல்றேன்…

சரி நியுஸே வெய்யி, அதுல எது நல்லா காமெடியா இருக்கும்?

ரெண்டும் நல்ல காமெடிதான், ஒண்ணு வடிவேலு காமெடி, இன்னொன்னு கவுண்டமணி காமெடி, உனக்கு எது வேணும்னு சொல்லு

அதென்னடா வடிவேலு காமெடி, கவுண்டமணி காமெடி?

சன் நியூஸ் வந்து வடிவேலு காமெடி, ஜெயா நியூஸ் கவுண்டமணி காமெடி!!!

எப்படி?

வடிவேலு காமெடி எப்படி இருக்கும்? தான் அடி வாங்கியே மத்தவங்களை சிரிக்க வைக்கறது வடிவேலு காமெடி!!!

ஓ! அதாவது வக்கீல்கள் போராட்டத்தை நிறுத்தாட்டி, நான் ஆஸ்பித்திரிலியே உண்ணாவிரதம் இருப்பேன்னு சொன்னாங்களே அது மாதிரியா?

அதேதான்!!!

ஆனா அடிவாங்குனதுக்கப்புறம், ‘நீ ரொம்ப நல்லவன்னு’ சொல்ல நாலு பேரு கூட வேணுமே?

அதான் அவரு உண்ணாவிரதம் இருக்கறேன்னு சொன்னதுக்கப்புறம் அறிக்கை நிறைய வந்துதே?

ஆமாமா!!! கரெக்டுதான்!!!

சரி கவுண்டமணி காமெடி எப்படி?

கவுண்டமணி அடி வாங்க மாட்டாரு, ஆனா மத்தவங்களை திட்டியோ, அடிச்சோதான் காமெடி பண்ணுவாரு…

ஓ, அடிக்கடி நியுஸ்ல தலைவி அறிக்கை விடுறப்ப ‘மைனாரிட்டி திமுக’ன்னுலாம் சொல்றாங்களே அதுமாதிரி!!!

அதேதாண்டா, இப்பதான் நீ நம்ம லைனுக்கே வந்துருக்க!!!

சரி எனக்கு ஒரு சந்தேகம்?

என்ன?

இல்ல எல்லா கட்சியுமே மைனாரிட்டி மக்களை முன்னேத்துவோம், மைனாரிட்டி மக்களுக்காக போராடுவோம்னு சொல்றாங்களே, அப்படி பாத்தா கவுண்டமணி வடிவேலுவை முன்னேத்த போராடுனும்தானே?…. டேய், டேய் ஏண்டா அப்படி பாக்குற?

இன்னிக்கு ரொம்ப நேரம் வலைப்பதிவுல, குழுமத்துல இருந்தியா?

ஆமா, ஏன் கேக்குற?

உன் பேச்சுலியே தெரியுது!!!!

சரி சரி, கவுண்டமணி காமெடியே போடு…
………..
………….
…………
செய்தி: ஈழத்தமிழர்களுக்காக ‘தாயுள்ளம்’ அவர்கள் வருகிற பத்தாம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்…………..

ஹா ஹா ஹா ஹா ஹா

டேய் இதுக்கு ஏண்டா இப்படி சிரிக்கிற? அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?

இல்ல கவுண்டமணி, வடிவேலு காமெடி பண்றாரே அதை நினைச்சேன் சிரிச்சேன்…….ஹா ஹா ஹா…….. சரி, நீ எங்க கிளம்பிட்ட?

ம்ம்ம், குவார்ட்டர் வாங்கறதுக்கு!

அடக்கடவுளே, இப்பதான் நல்லவனான, அதுக்குள ஏண்டா?

இல்ல மச்சான், என் போதைக்கே நான் ஊறுகாயா இருந்துக்கறேன்!!!

?????????????????

 1. Nithil
  10:44 முப இல் மார்ச் 9, 2009

  எப்படி இது மாதிரி யோசிக்கிறீங்க… பாராட்டுக்கள்

  நித்தில்

 2. 2:40 பிப இல் மார்ச் 9, 2009

  நன்றி நித்தில்!!!

  உண்ணாவிரதம்னு செய்தி வந்தப்ப தமிழ்நாட்டுல இருந்த பெரும்பாலானோர் பயங்கரமா சிரிச்சிருப்பாங்க, அதிமுகவினர் உட்பட…

  அதோட விளைவாக கூட இருக்கலாம்…

 3. 9:57 பிப இல் மார்ச் 10, 2009

  என்னால முடியல நரேஷ்.. பக்கத்து கேபின்ல இருக்குறவன் எல்லாம் என்னன்னு கேட்டு வந்துட்டாங்க

 4. 10:03 முப இல் மார்ச் 11, 2009

  நன்றி சார்லஸ்!!!

 5. 8:02 பிப இல் மார்ச் 12, 2009

  நன்றாகவே கலாய்க்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: