இல்லம் > சினிமா > நான் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

நான் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

 1. நடிகைகளிடம்: நீங்க குடிக்கிற பால்ல ஆடை இருந்தா குடிப்பீங்களா இல்லை தூக்கிப் போட்டுடுவீங்களா?
 2. வில்லன்களிடம்: நல்லா பயங்கரமா உடம்பை வளத்துட்டு குச்சி மாதிரி இருக்கிற ஹீரோகிட்ட அடி வாங்கும் போது உங்க மனநிலை எப்படி இருக்கும்?
 3. நடிகர்களிடம்: ‘பஞ்ச் டயலாக் பேசும் போது வரும் சிரிப்பை எப்படி கட்டுப் படுத்துறீங்க? (சொல்லிக் கொடுத்தீங்கன்னா அதே டெக்னிக்கை, அந்த சீன் வரும் போது நாங்களும் பயன்படுத்துவோம்!!!)
 4. இசை அமைப்பாளர்களிடம்: முன்னனாச்சும் இங்கிலீசு பாட்டையோ அல்லது வேறெதோ தெரியாத பாட்டையோ யாருக்கும் தெரியாம சொந்த சரக்கு மாதிரி கொடுத்தீங்க, ஆனா இப்ப அது இல்லாம, பழைய தமிழ் பாட்டையே ரீ மிக்ஸ் பண்ணிட்டு, டைட்டில்ல இசைன்னு உங்க பேரை போட்டுக்கறீங்களே அது எப்படி?
 5. மேக்கப் மேன்களிடம்: நடிகைகளுக்கு மேக்கப் போட எவ்ளோ நேரம் செலவாகுது, எவ்ளோ பவுடர் செலவாகுது?
 6. பாடலாசிரியர்களிடம்: பொட்டிக்கடை யக்கா யக்கா மாதிரியான பாடல்களை எழுதும் போது உங்கள் சொந்தங்களை நினைச்சுப் பாத்திருக்கீங்களா?
 7. இயக்குநர்களிடம்: ஒரே ஒரு பாட்டுக்கு வர்ற நடிகைக்கும், படம் முழுக்க வர்ற நடிகைக்கும் என்ன வித்தியாசம் சார்?
 8. தமிழக அரசிடம்: என் புருஷனும் பக்கத்து வீட்டுப் பொண்ணும்”, மாமனாரின் இன்ப வெறி இதெல்லாம் தமிழ் பேருதானே. இப்டி எல்லாம் பேரு வெச்சாலும் வரி விலக்கு கொடுப்பீங்களா சார்?
 9. வெளி ஆட்களில்
  1. சுஹாசினி போன்ற திரை விமர்சகர்களிடம்: எப்ப திரை விமர்சனம் பண்ணுவீங்க?
  2. பேட்டி எடுக்கும் நிருபர்களிடம்: நடிக்க வாராட்டி என்ன ஆயிருப்பீங்க, சினிமாக்கு வராட்டி என்ன ஆயிருப்பீங்கன்னு கேக்கறீங்களே, நடிக்க வந்ததால, சினிமாக்கு வந்ததால மக்கள் என்ன ஆனாங்கன்னு என்னிக்காச்சும் கேட்டுருக்கீங்களா?
 10. மக்களிடம்: ஒரே வேலையை ரெண்டு பேர் செய்யும் போது, ஒருத்தரை மட்டும் ஹீரோன்னும், இன்னொருத்தரை வில்லன்னும் சொல்றீங்களே, அது ஏன்?
பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:,
 1. 1:43 பிப இல் பிப்ரவரி 25, 2009

  # நடிகர்களிடம்: ‘பஞ்ச்’ டயலாக் பேசும் போது வரும் சிரிப்பை எப்படி கட்டுப் படுத்துறீங்க? (சொல்லிக் கொடுத்தீங்கன்னா அதே டெக்னிக்கை, அந்த சீன் வரும் போது நாங்களும் பயன்படுத்துவோம்!!!)

  # மக்களிடம்: ஒரே வேலையை ரெண்டு பேர் செய்யும் போது, ஒருத்தரை மட்டும் ஹீரோன்னும், இன்னொருத்தரை வில்லன்னும் சொல்றீங்களே, அது ஏன்?

  ஐயோ ஐயோ முடியல சாமி :)))

 2. 1:44 பிப இல் பிப்ரவரி 25, 2009

  //ஒரே வேலையை ரெண்டு பேர் செய்யும் போது, ஒருத்தரை மட்டும் ஹீரோன்னும், இன்னொருத்தரை வில்லன்னும் சொல்றீங்களே, அது ஏன்//

  சரியா கேட்டீங்க

 3. 1:45 பிப இல் பிப்ரவரி 25, 2009

  அட அட அட..தமிழ் சினிமாக்காரங்களுக்கு வில்லங்கம் எங்கிட்டிருந்தெல்லாம் வருது?

  உங்கக்கிட்ட ஒரு கேள்வி,

  சுந்தர்.சி, நயன்தாரா, ஐஸ்வர்யா தனுஷ்… இவங்க எல்லாம் கலைக்கு என்ன சேவை செஞ்சிருக்காங்கன்னு நேற்றிலிருந்து யோசிச்சிட்டிருக்கேன்..இன்னும் பதில் தெரியலை. இவங்களுக்கு எதுக்காக ‘கலைமாமணி’ விருது கொடுக்கிறாங்க?

 4. 1:47 பிப இல் பிப்ரவரி 25, 2009

  ஹா ஹா ஹா…

  நல்லா எல்லோரையும் கவர் பண்ணி கலாய்ச்சிட்டீங்க…

 5. 1:48 பிப இல் பிப்ரவரி 25, 2009

  கலக்கல் நரேஷ்

 6. 1:49 பிப இல் பிப்ரவரி 25, 2009

  இந்த பட்து கேள்வி வரிசைல இதுதான் டாப்பு !! அதெப்பிடிங்க எல்லாத்துக்கும் ஒரு ஆப்பு வெச்சீங்க?

 7. 3:19 பிப இல் பிப்ரவரி 25, 2009

  //சுந்தர்.சி, நயன்தாரா, ஐஸ்வர்யா தனுஷ்… இவங்க எல்லாம் கலைக்கு என்ன சேவை செஞ்சிருக்காங்கன்னு நேற்றிலிருந்து யோசிச்சிட்டிருக்கேன்..இன்னும் பதில் தெரியலை. இவங்களுக்கு எதுக்காக ‘கலைமாமணி’ விருது கொடுக்கிறாங்க?//

  என்ன இப்டி கேட்டுட்டீங்க, விருது அறிவிப்பு வந்தவுடனே நயந்தாரா என்ன அறிக்கை விட்டுருக்காங்கன்னு பாத்தீங்களா? இந்த விருது இன்னும் உழைக்க வேண்டும் என்ற உற்சாகத்தை தருதாம்….

  ஐஸ்வர்யா தனுஷ் ஒரு வேளை சினிமாத் துறைல இருக்கற ஒருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டதுனால இருக்கும்…

  எப்படியோ, அரசோ, விருது கொடுக்கும் கமிட்டியோ, இல்லை சினிமாக்காரங்களோ நாம பதிவா போட்டு தாழிக்கனும்னு கங்கணம் கட்டிட்டு அலையுறாங்கப்பா…

 8. Senthilkumar
  9:31 முப இல் பிப்ரவரி 26, 2009

  //ஐஸ்வர்யா தனுஷ் ஒரு வேளை சினிமாத் துறைல இருக்கற ஒருத்தரை கல்யாணம் பண்ணிகிட்டதுனால இருக்கும்…//

  ஐசுவர்யா ஒரு சிறந்த பரத நாட்டிய கலைஞர்.
  இப்படித்தான் அரசு அவருக்கு விருது வழங்குகிறது.

  என்ன கொடுமை சார்.

 9. 1:06 பிப இல் மார்ச் 1, 2009

  வருகைக்கு நன்றி ஸ்ரீதர் கண்ணன்,அருண்மொழி வர்மன், சரவணகுமரன், முரளி கண்ணன், மகேஷ்

 10. JAILANI
  6:59 பிப இல் மார்ச் 2, 2009

  TOP TEN QUSTION NOOOOOOOOOOOOO. SUPER TEN QUESTIONS…..WELL DONE…

 11. 10:14 முப இல் மார்ச் 3, 2009

  சூப்பர் கேள்விகள். ஒவ்வொன்றும் மற்றவன்றை விஞ்சுபவையாகவே இருந்தன. நல்லாவே யோசிக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

 12. 6:06 முப இல் மார்ச் 12, 2009

  நன்றி ஜெய்லானி!!!

  மேக்‌ஷிமம் இந்தியா, வருகைக்கு நன்றி, ஆனா இப்படியே படத்தைப் பாத்தா மக்கள் யோசிக்கற சக்தியை இழந்துடுவாங்க…

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: