இல்லம் > சினிமா > “அபியும் நானும்” – திரைப் பார்வை

“அபியும் நானும்” – திரைப் பார்வை

“வாழ்க்கையில பல விஷயங்களை நாம நம்ம குழந்தைகளுக்கு சொல்லித் தர்றோம், ஆனா வாழ்க்கையையே நம்ம குழந்தைங்க நமக்கு சொல்லி தந்துராங்க இல்ல”

இது போன்ற வசனங்கள் ஏற்படுத்தும் மெல்லிய அதிர்வலைகளை, உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? அப்படியானால் “அபியும் நானும்” படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். மொக்கை படங்கள்லாம் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை விளம்பரமா வந்து வெற்றிகரமாக ஓட்டப் பட்டுக் கொண்டிருக்கையில், “அபியும் நானும்” படத்திற்கு அதிகம் விளம்பரமும், ஆர்ப்பாட்டமுமில்லாமல் கடந்த வாரம் திரைக்கு வந்தது. வெகு சீக்கிரமாக பார்த்ததாலும், எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் சென்றதால் படத்தை ரசித்துப் பார்க்க முடிந்தது.

இதுவரை தந்தை மகன், தாய் மகன் போன்றோருக்கிடையான உணர்வுகளையே காட்டி வந்த தமிழ் சினிமாவில், முதன் முறையாக தந்தை மகளுக்கிடையேயான உணர்வுகளை காட்டியிருகிறார்கள், தந்தை மகனுக்கிடையேயான உணர்வுகளை மிக சமீபத்தில் வெளி வந்த “வாரணம் ஆயிரம்”, “ஆட்டோகிராப்” போன்ற படங்கள் பிரதி பலித்துக் கொண்டிருக்கையில், “அபியும் நானும்” சற்றே வேறுபட்டு நிற்கிறது.

“ஆட்டோகிராப்” போன்ற படங்கள் மகனின் மனதிலுள்ள குற்ற உணர்ச்சியை மையமாக வைத்து, சற்றே கதைப் போக்குடன் வெளிவந்த படங்கள் எனில், “அபியும் நானும்” மிகச் சாதாரணமாக பல்வேறு நிகழ்வுகளை நம்மோடு பகிர்ந்து கொள்வது போல் அமைந்துள்ளது.

பாசமிகு தந்தையாக பிரகாஷ் ராஜ், அம்மாவாக ஐஸ்வர்யா என இருவருமே நடிப்பில் அசத்தியுள்ளனர். முதல் பாதியில் த்ரிஷாவிற்கு பள்ளியில் சேர்க்க தொடர்ந்து நடைபெறும் நகைச்சுவைக் காட்சிகளாகட்டும், பின் பாதியில், மனைவியின் உணர்வுகளை புரிந்து அவளது பெற்றோரை அழைக்கும் காட்சியிலும் சரி எல்லாவற்றிலும், இருவரும் ஜமாய்த்துள்ளனர்.

மகளாக த்ரிஷா, தனக்கு என்ன வருமோ அதை உணர்ந்து நடித்துள்ளார். துணைக் கதாபாத்திரங்களாக பிரித்விராஜ், தலைவாசல் விஜய், மனோபாலா, கணேஷ் என பலர் இருந்தாலும், ரவி சாஸ்திரி என்ற பெயரில் வரும் குமரவேலின் நடிப்பு, அவருடைய பாத்திரம் இரண்டுமே மிக அருமை. அதிலும் முக்கியமாக ஒரு குறிப்பிட்ட காட்சியில் அவர் நடிப்பு, என்னையறியாமல் என் கண்களைக் கலங்க வைத்தது.

பிரித்விராஜிடம், தனது மகளைப் பற்றியும், அவர்களது குடும்பத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் பிரகாஷ் ராஜ் பகிர்ந்து கொள்வதுதான் படமே என்றாலும், எனக்கென்னமோ அவர் நமிமிடம் கதை சொன்னது போன்ற உணர்வுதான் இருந்தது.

படத்தில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் மிக சாதாரணமானதுதான் என்றாலும், அது சொல்லப் பட்டிருக்கும் விதமும், உளவியல் ரீதியாய் நிகழும் நிகழ்வுகளை காட்டியிருப்பதும் மிக அருமை

படத்திலுள்ள அனைத்து பாத்திரங்களிலும் உள்ள நல்லதன்மை, படம் முழுக்க வரும் பாசிட்டிவ் அப்ரோச், சர்தாஜி பற்றி வரும் வசனம் என பல விஷயங்களில் மனிதர்களை நேசிக்க வேண்டியதன் அவசியத்தை ராதா மோகன் உணர்த்துகிறார். அதிலும் குறிப்பாக, மனநலம் குன்றிய பெண்ணுக்கு த்ரிஷா செய்யும் உதவி, அதை வேடிக்கை பார்ப்ப்தோடல்லாமல், வேடிக்கை செய்கின்ற சமுதாயம், அதைத் தொடர்ந்த காட்சியில் பிரகாஷ்ராஜின் நடிப்பின் போது என்னையறியாமல் என் கைகள் தட்டப்படுகின்றன.

விஜி இல்லாமல் வசனமா என்ற எண்ணத்தை,

”என் பொண்ணுக்கு தோணுன இந்த சின்ன விஷயம் எனக்கு ஏண்டா தோணலை? – ஏன்னா நாமதான் பெரியவங்களாயிட்டம்ல”

”ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும், ஒவ்வொரு அப்பாவும் பிறக்கிறான், என்ன, குழந்தைங்க சீக்கிரம் வளர்ந்துர்றாங்க, ஆனா சில அப்பாக்கள்தான் வளர மாட்டேங்குறாங்க, இல்ல கொஞ்சம் லேட்டாகுது”

”சார், நான் இப்ப வீட்டுக்கு போகனும், வீடு பக்கம்தான், ஆனா நான் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம்”

போன்ற வசனங்களும், முதல் பாதி முழுக்க வரும் நகைச்சுவை வசனங்களும், வசனங்களில் வரும் சமுக அக்கறையும் நிவர்த்தி செய்கின்றன.

சரி என்ன ரொம்ப பில்டப் கொடுக்கறேனே, படம் அவ்ளோ சூப்பரா, இதிலே குறையே இல்லியான்னு கேக்குறீங்களா?

பொதுவா த்ரிஷா, பாவனா, நயந்தாரா, நமீதா நடிக்கும் படங்களில் குறையே இருக்காது என்பது ஒரு புறமிருந்தாலும், படம் முழுக்க தெரியும் சற்றே மெலோ டிராமா பாணியும், இரண்டாம் பாதியில் சற்றே தொய்வடைந்தாற் போல் இருந்ததும், சில இடங்களில் தென்படும் அதீதமும், குறிப்பிடத்தக்க அளவில் பாடல்கள் வெற்றிகரமாக இல்லை என்பதும் படத்தின் குறை என்றே தோன்றுகிறது.

ஆனால் இவையெல்லாம் மீறி படம் முடிந்ததும், எழுந்து நின்று ஒரு முறை கை தட்ட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது பாருங்கள் அதுதான் படத்தின் மிகப் பெரிய வெற்றி என்று தோன்றுகிறது.

நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், இந்த படம் உங்களை சற்று அதிகமாகமாக பாதிக்கும் என்றே தோன்றுகிறது.

படத்தில் பிரகாஷ் ராஜ் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் ”Life is beautiful”, படம் முடிந்து வெளிவரும் போது என் மனதும் அதையே பிரதிபலித்தது

பின்குறிப்பு:
இந்த வாரம் சன் டிவி டாப் டென்னில் முதல் இடம் திண்டுக்கல் சாரதி, இரண்டாம் இடம் தெனாவட்டு என்று கொடுத்திருக்கிறார்கள். நீ இவ்ளோ பில்டப் கொடுத்த “அபியும் நானும்” ஏன் வர்லைன்னு தயவு செஞ்சு கேக்காதீங்க.

மொழி அளவு “அபியும் நானும்” ஒரு சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் “தெனாவட்டுகளுக்கு” மத்தியில் இது போல் ஒரு படத்தை கொடுத்ததற்காக கண்டிப்பாக ராதா மோகன் மற்றும் குழுவை பாராட்டியே தீர வேண்டும்.

பிரிவுகள்:சினிமா குறிச்சொற்கள்:
 1. 10:23 முப இல் திசெம்பர் 29, 2008

  //ஆனால் இவையெல்லாம் மீறி படம் முடிந்ததும், எழுந்து நின்று ஒரு முறை கை தட்ட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது பாருங்கள் அதுதான் படத்தின் மிகப் பெரிய வெற்றி என்று தோன்றுகிறது.//

  நான் பார்த்து உணர்ந்ததை எழுத நினைத்ததை தங்களின் எழுத்தில் பார்த்தேன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படம் என பிரகாஷ்ராஜ் போல நானும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொல்வேன்.

  நன்றிகளுடன்
  வெங்கடேஷ்

 2. 10:25 பிப இல் திசெம்பர் 29, 2008

  வருகைக்கு நன்றி வெங்கடேஷ்!

 3. Magesh
  3:35 பிப இல் ஜனவரி 3, 2009

  //பொதுவா த்ரிஷா, பாவனா, நயந்தாரா, நமீதா நடிக்கும் படங்களில் குறையே இருக்காது//

  சரியாக சொன்னீர்கள் நரேஷ்…

 4. 10:17 முப இல் ஜனவரி 5, 2009

  ஏன்யா மகேசு, உசிர கொடுத்து இவ்ளோ டைப் பண்ணி இருக்கேன், படத்தைப் பத்தி பெருமையா சொல்லியிருக்கேன், ஆனா அதெல்லாம் உட்டுட்டு இந்த வரிகளை பாராட்டியிருக்க பாத்தீரா, அங்கதான் நீங்க நிக்கறீங்க…..

  நன்றிஹை!!!!!

 5. vetri
  3:08 பிப இல் ஜனவரி 5, 2009

  Film is very nice and superb

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: