இல்லம் > ஈழம் > ஈழப் பிரச்சனைக்காக தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் நடத்திய (தொடர்கின்ற) உண்ணாநிலைப் போராட்டம்

ஈழப் பிரச்சனைக்காக தகவல் தொழில்நுட்பத்துறையினர் மற்றும் மாணவர்கள் நடத்திய (தொடர்கின்ற) உண்ணாநிலைப் போராட்டம்

நேற்று, சனிக்கிழமை (13.12.08) காலை 09:30 முதல் மாலை 06:00 வரையில் சென்னையில் கோயம்பேடு அருகில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டம் எதிபார்த்ததற்கும் மேற்பட்ட கவனத்தை ஈர்த்தது என்பதற்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக வைகோ மற்றும் திருமாவளவன் வருகையே சான்றாக அமைந்தது

சிறிய மனிதசங்கிலிப் போராட்டம், உண்ணாநிலைப் போராட்டமாக உருப்பெற்றதும், ஈழப் பிரச்சனை தொடர்பான போராட்டம் பல்வேறு தளங்களிலிருந்தும், பல்வேறு துறையினரும் போராட வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் போராட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையினரும், மற்ற துறையினரும் மற்றும் மாணவர்களும் இயங்க வேண்டிய தளமும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணியும்   ஆலோசிக்கப் பட்டது

போரட்டத்தில் பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான், விடுதலை ராசேந்திரன், தோழர் தியாகு, தொழர் மகேந்திரன், இலங்கை நாடளுமன்றப் எம்பி சிவாஜிலிங்கம், ஊடகவியலார் டிஸ்ஸ் மணி, பேரா.கல்யாணி, வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் அறிவுமதி, ஜெகத் கஸ்பார் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

ஈழப் பிரச்சனையில் இந்திய அரசின் போக்கை கண்டித்தும், இந்திய அரசுக்கும் நம்முடைய கோரிக்கைகளாக நம்முடைய (இந்திய மக்களின்) வரிப்பணத்தில் இருந்து இலங்கை அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி போன்றவை எழுப்பப்பட்டன.

வெறும் உணர்ச்சிப் போராட்டமாக இல்லாமல், உணர்வுப் போராட்டமாக இருக்கவும், இந்தப் போராட்டத்தில் நம்முடைய அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தை உணர்த்தவும் 30 பேர் மட்டும் இன்றும் உண்ணாவிரத்தை தொடர்ந்து கடைப் பிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இன்று ஓவியக் கண்காட்சி தொடக்கமும், காசி அனந்தன் போன்றோர் கலந்து உண்ணாநிலையை முடித்து வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர்

தோழர்கள் இன்றும் போராட்டத்தில் கலந்து கொண்டு நம்முடைய நிலைப்பாடையும், போராட்ட உணர்வையும் பதிவு செய்யலாம்

போராட்டத்தில் விவாதிக்கப் பட்டது, நிகழ்ச்சிகள் பற்றிய நீண்ட பதிவு விரைவில்………

பிரிவுகள்:ஈழம் குறிச்சொற்கள்:
 1. 11:50 முப இல் திசெம்பர் 14, 2008

  இம்முறை கலந்துக்கொள்ள முடியாமல் போனது. உங்கள் முழுப்பதிவையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் நரேஷ்

 2. வெற்றி
  11:51 முப இல் திசெம்பர் 14, 2008

  தகவல்களுக்கு மிக்க நன்றி.

  /* போராட்டத்தில் விவாதிக்கப் பட்டது, நிகழ்ச்சிகள் பற்றிய நீண்ட பதிவு விரைவில்……… */

  ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

 3. vani
  10:27 பிப இல் திசெம்பர் 14, 2008

  Thank you for your support .Lot of us have come to a conclusion that indian central govt is not going to do much to help eelam tamils.they will carry on helping srilanka with military and financial aid.This is the reality
  but that shoudn’t deter tamil nadu people from supporting eelam tamils and their political struggle to attain their self determination.
  when British govt decided to invade Iraq,one million British citizens marched to London asking their govt to stop the war.when a govt makes mistakes it the people’s democratic right to voice against their govt.It happened in London during Iraq war.American people marched against thir govt during Vietnam war.
  Therefor I am asking our brothers and sisters in tamilnadu to continue giving their oral support to eelam tamils.
  they can do it by making awareness among people in other states in India,informing them the atrocities committed by srilankan govt and sinhala army.they can inform international human rights bodies Un and other agencies and ask them to take action to stop the genocide against tamils in srilanka.
  they can write to american president elect Mr.Obama asking him to bring it he world’s attention.

 4. kumar nada
  10:08 முப இல் திசெம்பர் 15, 2008

  thanks every body givem a good support for them they easy to get a tamil elam thanks again

 5. kumar nada
  10:11 முப இல் திசெம்பர் 15, 2008

  thanks everybody giving them good support for them they’ll to easily get tamileelam thanks again

 6. ananthan
  10:14 முப இல் திசெம்பர் 15, 2008

  thanks everybody giving them good support for them they’ll to easily get tamileelam thanks again

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: