இல்லம் > மொக்கை > நான் ஏன் வலைப்பதிவு ஆரம்பித்தேன்…..

நான் ஏன் வலைப்பதிவு ஆரம்பித்தேன்…..

அவனவன் திடீர் திடீர்னு கட்சி ஆரம்பிக்கறாங்க, படம் எடுக்கறாங்க (நாயகனை சொல்லலீங்க), ஓடாத படத்துக்கு 150 நாள் ஓடினதா விழா எடுக்கறாங்க (பக்கமா குருவி (பா)டம் 150 நாள் ஓடினதால, விழா எடுத்ததா டெக்கான் குரோனிக்கிள்ல காலைல பார்த்தேன், ஆபிஸ் கிளம்பற நேரத்துல என்னமா வயிறு குலுங்க சிரிக்க வைக்கறாங்க?. இது பரவாயில்லை உளியின் ஓசை படம் அருமையா ஓடினதுக்காக விழா எடுத்ததா கூட கேள்விப்பட்டேன். கலைஞரோட பராசக்தி வசனம் அருமைன்னு சொன்னதுக்கான தண்டனையை இன்னும் எத்தனை காலத்துக்கு அனுபவிக்கணுமோ தெரியலை?). இப்படி எல்லாரும் அழிச்சாட்டியம் பண்ணிட்டிருக்காங்க, நீ மட்டும் ஏண்டா சும்மா இருக்கன்னு என் மனசாட்சி என்னை கேட்க, வீறு கொண்டு எழுந்ததன் விளைவுதான் என்னோட வலைப் பதிவு.
பேசாம அண்ணன் ஜேகே ரித்தீஷோட ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர் புகழ் பரப்பற மாதிரி வலைப்பதிவை வெச்சுடலாமான்னு பார்த்தா, ஏற்கனவே அவர் புகழ் நரகம் வரைக்கும் பரவியிருக்கு, இதுக்கு மேல புதுசா பரப்ப ஒன்னுமில்லங்கறதுனால, சொந்தமா ஏதாவது எழுதலாம்னு (இது ஒரு சிறந்த காமெடி!!) இந்த வலைப்பதிவை
ஆரம்பிச்சிருக்கேன். நான் வலைப்பதிவு ஆரம்பிக்கறேங்கறதே காமெடிங்கறதுனால, என்னோட வலைப்பதிவும் ஓரளவு காமெடியாதான் இருக்கும்.
பிரிவுகள்:மொக்கை குறிச்சொற்கள்:
 1. நல்லதந்தி
  8:38 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  wellcome! வாங்க!.வருக!.தருக!. பல இம்சைகளை!.எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மற்ற மொக்கைகள்!.
  பி.கு. எந்த காலத்திலேயும் இணைய பெருசுங்களோட பக்கம் கூட போயிடாதீங்க!.நமக்கு நாமே திட்டப்படி நமக்குள்ளேயே கும்மிய கொட்டி விளையாடிடலாம்! 🙂

 2. யோகு
  8:43 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  தல மோதி பார்ப்போமா??
  நீங்க ஒரு ஒப்பந்தம் ரித்தீஷோட போட்டுறுங்க..
  நம்ப ஒரு ஒப்பந்தம் போட்டுக்குவோம்.
  தினமும் 10 ஹிட். 🙂
  எப்படி வசதி?

 3. யோகு
  8:45 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  ஹையா..
  நானும் பின்னுட்டாம் போட்டாச்சு..

 4. நல்லதந்தி
  8:48 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  welcome!~ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை பொறுத்தருள்க!

 5. Varadharajan
  9:38 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  இப்பவே கண்ணு கட்டுதே 🙂

 6. 9:45 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  நன்றி வரதராஜன், நல்லதந்தி, யோகு

 7. 9:47 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  தமிழ் வலையுலகுக்கு நல்வரவு… நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள், அதைவிட அதிகமாக படியுங்கள்.. வாழ்த்துக்கள்..

 8. 9:48 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  //தல மோதி பார்ப்போமா??
  நீங்க ஒரு ஒப்பந்தம் ரித்தீஷோட போட்டுறுங்க..
  நம்ப ஒரு ஒப்பந்தம் போட்டுக்குவோம்.
  தினமும் 10 ஹிட்.
  எப்படி வசதி//

  அட நீங்க வேற யோகு, என்னதான் தலையோட அடுத்த படம் இரண்டு மொழிகளில் வருகிறது என்றாலும், கேரள ரசிகர்கள்(?) அந்தப் படத்தை மலையாளத்திலும் வெளியிட வேண்டும்னு போராட்டம் பண்ணப் போறாங்களாம்….. தலையோட புகழே புகழ்

 9. 9:49 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  மொக்கை சங்கம் அன்புடன் வரவேற்கிறது

 10. 9:49 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  //wellcome! வாங்க!.வருக!.தருக!. பல இம்சைகளை!.எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மற்ற மொக்கைகள்!.
  பி.கு. எந்த காலத்திலேயும் இணைய பெருசுங்களோட பக்கம் கூட போயிடாதீங்க!.நமக்கு நாமே திட்டப்படி நமக்குள்ளேயே கும்மிய கொட்டி விளையாடிடலாம்!//

  மொக்கை ஜோக்குக்காகவே சரோஜா படத்தை 3 தடவை பாத்தவன் நான், மொக்கையை விட்டுக் கொடுப்பனா…

 11. king...
  10:43 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  வாழ்த்துக்கள்…

 12. 9:17 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  நன்றி வெண்பூ மற்றும் king..

  உருப்புடாத்து அணிமா, அதென்னங்க அணிமா?

 13. 10:12 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  🙂

 14. நான் ஆதவன்
  12:57 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  வாங்க…வாங்க…
  நாங்களும் புதுசு தான். எல்லாரும் சேர்ந்து கலக்கலாம் வாங்க…

 15. 2:13 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  நன்றி முத்துலட்சுமி மற்றும் நான் ஆதவன்

 16. 3:54 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  #
  நரேஷ் குமர்ர் சொன்னது,

  உருப்புடாத்து அணிமா, அதென்னங்க அணிமா?////

  சும்மா ஒரு பேருக்கு தான்..
  இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியுங்களா??

 17. 8:11 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  //சும்மா ஒரு பேருக்கு தான்..
  இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியுங்களா??//

  அப்படீன்னா சரி, அது எனக்கு குருமாதான் தெரியுமா, ஒரு வேளை அது மாதிரி எதாவது இருக்குமோன்னுதான்…..

 18. 8:12 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  //சும்மா ஒரு பேருக்கு தான்..
  இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியுங்களா??//

  அப்படீன்னா சரி, அது எனக்கு குருமாதான் தெரியுமா, ஒரு வேளை அது மாதிரி எதாவது இருக்குமோன்னுதான்…..

  🙂

 19. 8:48 பிப இல் ஒக்ரோபர் 15, 2008

  நரேஷ் குமார் சொன்னது,

  //சும்மா ஒரு பேருக்கு தான்..
  இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியுங்களா??//

  அப்படீன்னா சரி, அது எனக்கு குருமாதான் தெரியுமா, ஒரு வேளை அது மாதிரி எதாவது இருக்குமோன்னுதான்…..///

  உம்.. நீங்களும் ஒரு பார்ம்ல தான் இருக்கீங்கன்னு நினைக்குறேன்..
  நடத்துங்க நடத்துங்க..
  குருமா தெரிஞ்ச உங்களுக்கு அணிமா தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது,,..
  ( அதுக்கு விளக்கம் தெரிஞ்ச சொல்லாமலா இருப்பேன் )

 20. யோகு
  7:44 பிப இல் ஒக்ரோபர் 16, 2008

  //சும்மா ஒரு பேருக்கு தான்..
  இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியுங்களா??//

  அப்படீன்னா சரி, அது எனக்கு குருமாதான் தெரியுமா, ஒரு வேளை அது மாதிரி எதாவது இருக்குமோன்னுதான்…..///

  உம்.. நீங்களும் ஒரு பார்ம்ல தான் இருக்கீங்கன்னு நினைக்குறேன்..
  நடத்துங்க நடத்துங்க..
  குருமா தெரிஞ்ச உங்களுக்கு அணிமா தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது,,..
  ( அதுக்கு விளக்கம் தெரிஞ்ச சொல்லாமலா இருப்பேன் )//

  ஏதும் இனிமா ப்ளான் வெச்சுருக்கீங்களா??
  எங்கள வச்சு காமெடீ பண்ணுலேயே??

 21. 1:44 பிப இல் ஒக்ரோபர் 20, 2008

  //ஏதும் இனிமா ப்ளான் வெச்சுருக்கீங்களா??
  எங்கள வச்சு காமெடீ பண்ணுலேயே??//

  🙂

 22. 6:10 பிப இல் ஒக்ரோபர் 25, 2008

  தல, நீங்களும் வலைப்பூ ஆரம்பிச்சாச்சா? சொல்லவே இல்லை 😦

 23. 2:40 முப இல் ஒக்ரோபர் 26, 2008

  காரணம் எதுவா இருந்தால் என்னங்க? காரணமுன்னு ஒன்னு வேணுமா என்ன?

  காரணம் தேடுறீங்க பாருங்க இதுதான்…காமெடி:-)))))

  ஜோதியில் ஐக்கியமானதுக்கு இனிய வாழ்த்து(க்)களும், பாராட்டுகளும்.

 24. 10:00 முப இல் ஒக்ரோபர் 28, 2008

  //தல, நீங்களும் வலைப்பூ ஆரம்பிச்சாச்சா? சொல்லவே இல்லை//

  நம்ம போன சந்திப்பு டைம்லதான் ஆரம்பிச்சேன், ஆனா அதுக்கப்புறம் நாம் சந்திக்கறதுக்கான வாய்ப்பும் அதிகம் கிடைக்கல. அதுக்காக நீங்க கோவிச்சுக்காதீங்க…

  அது சரி எப்படி பின்னூட்டம் போட முடியுது?

 25. 10:08 முப இல் ஒக்ரோபர் 28, 2008

  //காரணம் தேடுறீங்க பாருங்க இதுதான்…காமெடி:-)))))//

  நான் தேடுலீங்க, நாளைக்கு சமுதாயம் என்னைப் பாத்து கேட்டுட கூடாதில்லியா, அதுமட்டுமில்லாம இப்பல்லாம் இது மாதிரி அறிக்கை விடுறது, தன்னிலை விளக்கம் சொல்றது, நாமளே கேள்வி கேட்டு நாமளே பதில் சொல்லிக்கறது எல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு, அதான் (ஏண்டா பின்னூட்டம் போட்டம்னு யோசிக்கறீங்களா?!!!

  //ஜோதியில் ஐக்கியமானதுக்கு இனிய வாழ்த்து(க்)களும், பாராட்டுகளும்//

  நன்றி!!!

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: